Jump to content

மனதை ஒருநிலைப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் - இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
03 JUL, 2024 | 05:08 PM
image

வ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் (Guy Regev Rosenberg) தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை வந்த அவரை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

7034f1f2-601c-4ace-ac97-a8f324ae455e.jpg

இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுவதாகவும், அந்த வகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் விரும்புவதாகவும் விசேடமாக இந்து மற்றும் பௌத்த மதங்களின் தியான வழிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அவர் எம்மோடு பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன.

"தியானமும் தியான பயிற்சிகளும் உடற்பயிற்சியும் மனிதனின் பழக்கவழக்கங்களை சிறந்தனவாக மாற்றுகின்றன. தியானங்களில் ஈடுபடும் யோகிகளிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் அதேபோன்று பௌத்த துறவிகளிடமிருந்தும் தியானம் மற்றும் தியானங்களை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டேன். நான் இதில் பட்டம் பெற்றவன் அல்ல" என்கிறார்.

"கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தியானத்தில் ஈடுபடுவதற்கான நுணுக்கங்களை அறிந்துகொண்டுள்ளேன். பரபரப்பான இந்த உலகில் பொதுவாக மக்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் நேரத்தைப் போக்குகின்றனர். அதனால் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் இருப்பதனால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற சமயங்களில் தியானம் போன்ற செயன்முறைகளை நாம் அன்றாட வாழ்வில் முன்னெடுப்பதன் மூலம் பதற்றத்திலிருந்து விடுதலையை பெற முடியும்" என்கிறார் கையி.

"நமது எல்லா செயற்பாடுகளுக்கும் மனம்தான் காரணம். அதனால்தான் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு தனியான பயிற்சிகள் உள்ளன. அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் பதற்றமில்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது எனது கருத்து. இது எந்த துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்களுக்கு ஆலேசனைகளையும் பயிற்சிகளையும் கொடுக்கும் பணியினைதான் நான் செய்து வருகின்றேன்.

மன அழுத்தத்துடன் இருக்கும் விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நான் ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன்.

எனது நாட்டில் மாத்திரம் அல்லாது ஏனைய பல நாடுகளுக்கும் சென்று, இதனை நான் செய்து வருகின்றேன். அதன் அடிப்படையிலேயே இலங்கை பயணமும் அமைந்துள்ளது. இலங்கையுடன் எனக்கு நீண்டகால தொடர்பு இருக்கிறது. பல தடவைகள் இலங்கை வந்துள்ளேன். இலங்கை எனக்கு மிகவும் பிடித்த நாடு" என்றார் கையி.

"இந்து மதமும் பௌத்த தர்மமும் மிகவும் பிடித்தமானது. பல தடவைகள் சித்தர்கள் மற்றும் யோகிகளை சந்தித்துள்ளதுடன் அவர்களிடமிருந்து தியானம் குறித்த பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்" எனவும் கூறுகிறார் கையி. 

"மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை தீர்ப்பதற்கு இந்து மதத்தில் தியானம் உட்பட பல்‍வேறு விடயங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை.

இலங்கையில் எப்போதும் இல்லாதவாறு தற்போது பல சோதனைகள் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள அனைவரும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் இஸ்ரேலில் பிறந்தாலும் இலங்கையையே எனது வீடாக உணர்கின்றேன். சிரிப்பு என்பது இலங்கையர்களுடன் ஒட்டிப் பிறந்ததொரு கொடையாகும். அதை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டும்" என்றார் கையி.

"ஒவ்வொரு 10 விநாடிகளுக்கும் ஒரு முறை எமது கைத்தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பல்வேறு புதிய தகவல்கள் வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக்கில் யார் தகவல்களை பகிர்கிறார்கள் என பார்க்கின்றோம்.

தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்கனவே நம் வாழ்க்கையைப் பாதித்துவிட்டன. அவை நம்மை அடிமையாக்குவதற்காக காத்திருக்கின்றன. ஆனால், நாம் அவற்றுக்கு அடிமையாக வேண்டுமா, இல்லையா என்பதை நம் மனம்தான் தீர்மானிக்கும். 

புத்த பகவான் கூறியது போன்று எமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவது, உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவது... மற்றையது, உங்கள் மனது உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பது...

எந்த வகையான தொழில்நுட்ப சாதனங்களால் நாம் திசைதிருப்பப்பட்டாலும், நம் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்க முடியும். நமக்குத் தேவையானதை வடிகட்டவும், மீதமுள்ளவற்றை நிராகரிக்கவும் மனதின் மூலம் தான் முடியும்" என்கிறார் கையி.

நம்மில் பலரை தொழில்நுட்ப யுகம் ஆக்கிரமித்து முற்றுகையிட்டுள்ளது. நமக்கான வரம்புகளையும் வரையறைகளையும் முடிவுகளையும் நாம் எடுக்காத வரை, தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்துவிடும்" என எச்சரிக்கிறார் கையி.

"உங்களுக்கு சிறிது காலம்தான் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கும் வரை மக்கள் தங்களை பாதிக்கும் விடயங்களை புறக்கணிக்கின்றனர். இது உங்கள் மனதுக்கும் பொருந்தும். நீங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மனதுக்கும் விதிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் கையி.

"நான் காலையில் எழுந்தவுடன் எனது தொலைபேசியை பார்க்கப் போவதில்லை அல்லது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எனது குறுஞ்செய்திகளையோ, சட்களையோ அல்லது செய்திகளையோ பார்க்கப் போவதில்லை போன்ற கட்டுப்பாடுகளை நீங்கள் உங்கள் மனதுக்கு விதிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மனம் மென்பொருளை பதிவேற்றம் செய்ய முடியாத பழைய கணினியைப் போலாகிவிடும்" என்றார் கையி.

முக்கியமாக, "இந்து மற்றும் பௌத்த மத போதனைகளை நடைமுறைப்படுத்த இலங்கையர்களுக்கு இந்த சவாலான காலகட்டம் மிகவும் பொருத்தமானது" என்றும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/187609

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்]   இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள் இரண்டையும் கிழே பார்ப்போம்.     ”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?”     வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது? தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய் தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய் துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய் துதைது – அடுத்த பூவுக்குச் சென்று அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய் தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?     "காக்கைகா காகூகை, கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க — கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா"     காக்கைக்கு -காக்காவிற்கு ஆகா கூகை -ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது. கோக்கு -கோ என்றால் அரசன். கூ -பூமி, அவன் நாடு, காக்கை - காப்பது அரசாள்வது கொக்கொக்க -கொக்கைப் போன்று கைக் கை - விரோதிகளை வென்று கா - காப்பது.     இதை ஒரு ஒழுங்கில் சொன்னால், காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. இரண்டிற்கும் நட்பு கிடையாது. காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும்.   ஒரு அரசனுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும். மீன்களை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து, அவனை வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்பது இதன் பொருள் ஆகும்.        
    • அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே  7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும். 
    • திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களாக நான்கு விடயங்களை பாலசிங்கம் தனது புத்தகமான போரும் சமாதானமும் என்பதில் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது காரணம் இந்திய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரி. "இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்த அடிப்படை அறிவினை அவர் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இரண்டிலும் நிலவிவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அறிவும் அவரிடம் இருக்கவில்லை. சிக்கலானதும் , கடிணமானதுமான இனச்சிக்கலுக்கு உடனடியான இலகுத் தீர்வுகளை வழங்கமுடியும் என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்" என்று பாலசிங்கம் கூறுகிறார். பண்டாரி தொடர்பான தொண்டைமானின் அவதானிப்பும் இதனையே கூறியிருந்தது. நான் முன்னர் கூறியதுபோல, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து ரொமேஷ் பண்டாரிக்கு அடிப்படை அறிவெதுவும் கிடையாது என்று தொண்டைமான் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். பேச்சுக்களின் தோல்விக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது இந்திய உளவுத்துறையும், அதிகாரிகளும் ஆகும். தமிழ்ப் போராளிகளுடனான அவர்களின் தொடர்பாடல்களின்போது ஆண்டான் -  அடிமை மனநிலையே அவர்களிடம் காணப்பட்டது. "நாம் சொல்வதன்படி கேட்டு நடவுங்கள், அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்" என்பதே அவர்களின் எச்சரிக்கையாக இருந்து வந்தது. அவர்கள் வெளிப்படையாகவே இந்திய நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்ததை தமது செயற்பாடுகளில் காட்டிவந்தார்கள் . தமிழர்களின் நலன்கள் குறித்த சிறிதளவு கரிசணையும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மூன்றாவது காரணம் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறை. பேச்சுவார்த்தையில் ஜெயவர்த்தன கலந்துகொண்டதன் ஒற்றை நோக்கமே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டிருக்கிறேன், ஆனால் தமிழர்கள்தான் விட்டுக்கொடுப்பின்றிப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று உலகிற்கும், இந்தியாவிற்கும் காட்டுவதுதான். பேச்சுவார்த்தைக்காக தான் தேர்ந்தெடுத்த சிங்களப் பிரதிநிதிகள், அப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் காட்டிய கடும்போக்கு, பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த தீர்வு ஆகியன‌ சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட ஏதுவான களநிலையினை உருவாக்கிக் கொள்வதற்காக அவர் ஏற்படுத்திய நாடகம் என்றால் அது மிகையில்லை. இவற்றுள் மிகவும் முக்கியமான காரணி என்னவெனில் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமக்கென்று தனியான இலட்சியம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அவ்விலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையும் இந்தியாவும், இலங்கையும் உணரத் தவறியமைதான். தனது தேசிய நலன்களுக்காக பேச்சுவார்த்தையினையும், போராளிகளையும் இந்தியா பாவிக்க விரும்பியது. இந்தியாவிற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் பகைமையினை உருவாக்கி, அதன்மூலம் தமிழர்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிட இப்பேச்சுவார்த்தை நாடகத்தை இலங்கையரசு பாவிக்க விரும்பியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த போதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் அது முக்கியமான திருப்புமுனையாக மாறியது. முதன்முறையாக இந்தியாவும், இலங்கையும் தமிழீழ மக்களின் அரசியல்த் தலைமைத்துவம் ஜனநாயக அரசியல்வாதிகளிடமிருந்து போராளித் தலைமைகளுக்கு மாறியிருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தன. மேலும், ஆயுதப் போராட்டத்தினையும் மறைமுகமாக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அங்கீகாரத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தன்மை உருவாக வழியேற்படுத்தப்பட்டிருந்தது. அடுத்ததாக, திம்புப் பேச்சுக்களின் ஊடாக, தமிழீழத்திற்கு மாற்றான தீர்விற்கான அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன.  இறுதியாக, தமிழ் மக்களின் எந்தத் தீர்விலும் பிரபாகரனே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்கிற நிலையினையும் இப்பேசுவார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.
    • தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது.  சைவ சமயத்தை முன் நிறுத்தி  மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும்.  ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே.   சரி விடயத்துக்கு வருகிறேன் இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப்  பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள். கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது.  “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு  ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’  என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல. ‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள்.   ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார். ‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மன சாட்சி…’   சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.
    • பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.