Jump to content

உத்தியோகபூர்வமாக பிரிட்டனின் பிரதமரானார் கெய்ர் ஸ்டர்மெர்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
05 JUL, 2024 | 05:08 PM
image

தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகியுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராகியுள்ளார்.

இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களிற்கு உரையாற்றுவார்.

முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர்  ரிசி சுனாக்  பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

https://www.virakesari.lk/article/187773

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் கியர் ஸ்டாமர் யார்?

கியர் ஸ்டாமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,“உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்பவர் கியர் ஸ்டாமர்.
5 ஜூலை 2024, 05:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 ஜூலை 2024, 06:34 GMT

கியர் ஸ்டாமர் பற்றிய முக்கியத் தகவல்கள்

  • வயது : 61
  • கல்வி : ரெய்கேட் கிராமர் பள்ளி, லீட்ஸ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம்.
  • குடும்பம் : பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியிட சிக்கல்களுக்கான மனநல ஆலோசகரான விக்டோரியா அலெக்ஸாண்டரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
  • நாடாளுமன்ற தொகுதி : 2015ம் ஆண்டு முதல் ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ்
 

கியர் ஸ்டாமர் யார்?

தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்பவர். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார்.

அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் செவிலியராக பணிபுரிந்தார். அவரது தாய் ‘ஸ்டில்ஸ்’ என்ற உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே உடலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் பேசவும் நடக்காமலும் போய்விட்டது.

கியர் ஸ்டாமர் பயின்று வந்த ரெய்கேட் கிராமர் பள்ளி, அவர் அங்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் நிர்வாகத்துக்கு மாறிவிட்டது. அவருக்கு 16 வயது ஆகும் வரை உள்ளூர் நிர்வாகம்தான் அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தியது.

பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு செல்லும் தனது குடும்பத்தின் முதல் நபரானார் கியர் ஸ்டாமர். லீட்ஸ் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், பின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார்.

1987-இல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் (வழக்கறிஞர்). மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகி வந்தார். கரீபியன், ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

1990களின் இரண்டாவது பாதியில், 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக கட்டணமின்றி வாதாடினார். 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்கள் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் .

2008-ல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்-ல் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்பை பெற்றார்.

 
கியர் ஸ்டாமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு சென்ற தனது குடும்பத்தின் முதல் நபர் கியர் ஸ்டாமர்.

அவர் அதிகாரத்தை நெருங்கியது எப்படி?

அவர் 2015-இல் வடக்கு லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு நெருக்கமாக இருந்த கியர் ஸ்டாமர், அவரது நிழல் அமைச்சரவையில் பிரெக்சிட் அமைச்சராக இருந்தார். இரண்டாவது முறையாக பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்களின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார்.

அப்போது உரையாற்றிய அவர், தொழிலாளர் கட்சியை, “நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புதிய சகாப்தத்துக்கு இட்டுச் செல்வேன்” என்று உறுதி அளித்தார்.

 

கியர் ஸ்டாமர் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் என்ன?

கியர் ஸ்டாமர் வழங்கியுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

சுகாதாரம் : ஒவ்வொரு வாரமும் 40 ஆயிரம் கூடுதல் பார்வை நேரங்களை (Appointments) அளித்து தேசிய சுகாதார சேவையின் காத்திருப்பு நேரத்தை குறைப்பது (பிரிட்டனில் மருத்துவரை காண்பதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்).

குடியேற்றம்: எல்லைப் பாதுகாப்புக் கவுன்சில் அமைத்து, சிறிய படகுகள் மூலம் எல்லை தாண்டி மக்களை கடத்தும் குழுக்களை தடுப்பது.

வீட்டு வசதி : திட்டமிடல் சட்டங்களை திருத்தி, புதிதாக 15 லட்சம் வீடுகளை கட்டுவது. புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு, சில முன்னுரிமைகள் வழங்குவது.

கல்வி : தனியார் பள்ளிகளுக்கு வரி செலுத்தாக் காலத்தை ரத்து செய்து விட்டு, 6500 ஆசிரியர்களை புதிதாக பணியமர்த்துவது.

 

தனது கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியாக, பல்கலைகழக கட்டணத்தை ரத்து செய்வது, எரிசக்தி மற்றும் தண்ணீர் நிறுவனங்களை தேசியமாக்குவது என்ற வாக்குறுதிகளை கைவிட்டார்.

அவரது கட்சியில் இடதுசாரி கருத்துள்ளவர்கள், அவர் துரோகம் செய்து விட்டதாக விமர்சித்தனர்.

கடைசியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சிக்கு 205 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.