Jump to content

அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் என்ற சாதனை வில்சன் வசமானது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
06 JUL, 2024 | 02:32 PM
image

(நெவில் அன்தனி)

அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது. 

ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இளம் குறுந்தூர ஓட்ட வீரரான குவின்சி வில்சன், அமெரிக்க 4 x 400 மீற்றர் தொடர் அணியில் இடம்பெற்றுள்ளார். 

அமெரிக்க மெய்வல்லுநர் குழாத்தில் இளம் வீரர் வில்சன் பெயரிடப்பட்டுள்ளதை அவரது பயிற்றுநர் ஜோ லீ உறுதிசெய்தார். இதனை வில்சனும் உறுதிசெய்துள்ளார். 

'ஒலிம்பிக்கிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என அறியக்கிடைத்ததும் நான் பேரானந்தம் அடைந்தேன்' என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வில்சன் தெரிவித்தார். 

'ஒலிம்பிக் அணியில் பெயரிடப்பட்டுள்ளேன் என அறிந்ததும் நான் பரவசமடைந்தேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் வீட்டைச் சுற்றி ஓட ஆரம்பித்தேன். இளம் பராயத்தில் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள். அந்த வகையில் என்னைப் பொறுத்த மட்டில் இது பொன்னான தருணமாகும்' என்றார் அவர். 

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர் என்ற பெருமையை மேரிலாண்ட், பொட்டோமக் புல்லிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் கனிஷ்ட மாணவரான குவின்சி வில்சன் பெறுகிறார். 

ஒலிம்பிக்கில் பங்குபற்றவேண்டும் என்ற ஆர்வம் ரியோ 2016 விளையாட்டுப் போட்டியின் போது வில்சனுக்கு ஏற்பட்டது. மேலும் அவர் தனது 8ஆவது வயதில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

'ஜஸ்டின் கெட்லினும் யுசெய்ன் போல்ட்டும் நேருக்கு நேர் போட்டியிட்டதை நான் பார்த்தபோது நானும் ஒரு நாள் அதில் (ஒலிம்பிக்) பங்குபற்றுவேன் என்று எண்ணியதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்' என வில்சன் கூறினார்.

'அதைப்பற்றி நான் எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் கூறினேன். இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது' என அவர் குறிப்பிட்டார். 

கடந்த வாரம் நடைபெற்ற மூன்று வெவ்வேறு 400 மீற்றர் திறன்காண் போட்டிகளை 45 செக்கன்களுக்குள் பதிவுசெய்த குவின்டன் வில்சன், 42 வருடங்கள் நீடித்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாதனையை முறியடித்தார்.

400 மீற்றர் அரை இறுதிப் போட்டியை 44.59 செக்கன்களில் ஓடி முடித்தன் மூலம் வில்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார்.  1982இல் டெரல் ரொபின்சனால் நிலைநாட்டப்பட்ட சாதனையை முயறிடித்தே புதிய சாதனையை வில்சன் நிலைநாட்டினார். 

'நான் எனது மெய்வல்லுநர் வாழ்க்கையில் இந்தளவு மகிழ்ச்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. இதற்காக நான் கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் உழைத்தேன். இந்த சாதனையை முறியடிக்க 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. நான் அந்த சாதனையை 3 தினங்களுக்குள் இரண்டு தடவைகள் முறியடித்ததையிட்டு பெருமை அடைகிறேன்' என அவர் மேலும் கூறினார். 

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகளில் குவின்சி வில்சன் ஈடுபடவுள்ளார். அத்துடன் லண்டனில் அல்லது மியாமியில் நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்ற திட்டமிட்டுள்ளார். 

'எனது ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக நான் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். மைதானத்தில் உள்ள ஒவ்வொரு சுவடுகளிலும் ஓடிப் பழகவுள்ளேன். நான் எந்த சுவட்டில்  ஓடுவேன் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது சுவடுகளிலா ஓடுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்' என வில்சன் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். 

அமெரிக்காவின் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெறுவதன் மூலம் மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அணியில் இடம்பிடித்த வீரர் என்ற சாதனையை 16 வயதான வில்சன் நிலைநாட்டியுள்ளார். 

பாரிஸில் 124 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா அத்தியாயத்தில் அமெரிக்க அணியில் தனது 17ஆவது வயதில் பங்குபற்றிய ஆர்த்தர் நியூட்டனை விஞ்சி மிக இளவயதில் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் அமெரிக்க வீரர் என்ற சாதனையை குவின்சி வில்சன் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

குவின்சி வில்சன் ரூபத்தில் புதிய போல்ட் வந்துவிட்டாரா என்பதற்கு பாரிஸ் ஒலிம்பிக்தான் பதில் கூறப்போகிறது. ஆனால், அவரது பிரசன்னம் அமெரிக்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குவின்சி வில்சன் தனக்கென ஒரு பெயரைப் பொறிப்பார் என நம்புவோமாக!

Quincy_Wilson_2.jpg

https://www.virakesari.lk/article/187828

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தெல்லிப்பழை சிறுவர், மகளிர் இல்ல விவகாரம் குறைபாடுகளை நிவர்த்திக்குக் ஆளுநர் நேற்று அதிரடி உத்தரவு உதயனின் செய்தி மீளவும் உறுதிசெய்யப்பட்டது!!! யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில், ஆளுநரின் அபயம் குழுவினருக்கு அண்மையில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் குறைபாடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்திக்குமாறு ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான ஆளுநர் அலுவலக அறிக்கை, வட மாகாண இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  வடமாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் வரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது அறிவிப்புகளை  www.np.gov.lk என்ற வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் - என்றுள்ளது. ஆசிரியர் குறிப்பு: ஆளுநரின் குறித்த அறிவிப்பு மூலம், 'தெல்லிப்பழை மகளிர், சிறுவர் இல்லங்களை மூட உத்தரவிடவில்லை' என்று பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆளுநர் உத்தரவிட்ட செய்தி அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இணையத்தில் இப்போதும் இருக்கிறது. எனவே அதுவே உண்மையான தகவல் என்பதையே ஆளுநர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லமொன்றில், மாணவிகள் குளிக்கும், உடைமாற்றும் பகுதிக்கு மேலாக சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், இன்னொரு சிறுவர் இல்லம் அனுமதியற்று இயங்கி வருகின்றமை தொடர்பிலும் உதயனின் ஜூலை 4ஆம் திகதிய பதிப்பில் செய்தியொன்று அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆளுநர் அலுவலகத்தின் செய்தியறிக்கைகள் வெளிப்படுத்தப்படும், www.np.gov.lk இணையத்தளத்தில் ஜூலை 4ஆம் திகதி 'யாழ்ப்பாணம் தெல்லிப் பழைப்பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை' என்ற தலைப்பில் ஆளுநரின் உத்தரவு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் வழக்கம்போல இந்தச் செய்தி குறித்த இணையத்தில் பதிவேற்றப்பட முன்னதாக ஜூலை 3 ஆம் திகதியே ஊடகங்களுக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ 'வட்ஸப்' குழுமத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. 'மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி. கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. 'அபயம்' பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது' என்பதாக ஆளுநர் அலுவலகத்தின் அந்தச் செய்தியறிக்கை அமைந்திருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு மேலதிக புலனாய்வுத் தேடல்களின் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் உதயனின் ஜூலை 4 ஆம் திகதிய செய்தி அமைந்திருந்தது. ஆனால், உதயன் வெளிப்படுத்திய செய்தி தவறு என்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கையில், ஆளுநரின் நேற்றைய அறிக்கையானது உதயனின் செய்தியின் உண்மைத் தன்மையை மீளவும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதை உதயன் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். வாசகர்கள் www.np.gov.lk என்ற தளத்துக்குச்செல்வதன்மூலம், உதயனின் முன்னைய செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பிலும், ஆளுநரின் நேற்றைய உத்தரவு தொடர்பிலும் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். (   https://newuthayan.com/article/தெல்லிப்பழை_சிறுவர்,_மகளிர்_இல்ல_விவகாரம்;
    • பட மூலாதாரம்,JOAN MONFORT/AP படக்குறிப்பு,2007இல் லியோனல் மெஸ்ஸியுடன் குழந்தையாக லமைன் யமால் கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ரோஸ் மற்றும் ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி நியூஸ் 11 ஜூலை 2024, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு முறையும், காலத்திற்கும் நினைவில் நிற்கும் வகையில், யூரோ கால்பந்து தொடரில் ஒரு கோல் அடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு அந்த ஒரு கோல் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்படும், விவாதிக்கப்படும். அந்தக் காணொளி பலமுறை பகிரப்படும். 1988 யூரோ போட்டிகளில் மார்கோ வான் பாஸ்டனின் பறந்து வளைந்த ('Angled volley') கோல், யூரோ 1996இல் பால் கேஸ்கோயின் சிறப்பான ஆட்டம் மற்றும் போட்டியை அவர் முடித்த விதம், அதே போட்டியில் கரேல் போபோர்ஸ்கியின் கோல் போன்றவையும் இத்தகைய தருணங்களில் அடங்கும். யூரோ 2024-இன் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக, பிரான்ஸுக்கு எதிராக லமைன் யமால் அடித்த கோலும் இந்த காலத்திற்கும் நினைவில் நிற்கும் கோல்களின் பட்டியலில் சேர்க்கப்படலாம். ஸ்பெயின் 1-0 என பின்தங்கிய நிலையில், யமால் அடித்த ஒரு அற்புதமான கோல் அவரை கால்பந்தின் வரலாற்று புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. ஸ்பெயின் அணி பிரான்சை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு போட்டிக்குச் சென்றதன் பின்னால் ஒரு ஹீரோவாக எழுச்சி பெற்றுள்ளார் யமால். பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, 2007ஆம் ஆண்டு பார்சிலோனாவில், ஒரு தொண்டு நிறுவனத்தின் காலண்டர் போட்டோஷூட்டிற்காக ஒரு குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அந்தக் குழந்தை தான் லமைன் யமால். மெஸ்ஸியுடன் குழந்தையாக யமால் இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லமைன் யமால் '16 வயது ஹீரோ' யூரோ போட்டியின் வரலாற்றில் கோல் அடித்த மிகவும் இளமையான கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 16 வயதான யமால். தனது ஆட்டத்தின் மூலம் இந்த போட்டியைப் பார்த்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். "ஒரு கால்பந்து சூப்பர் ஸ்டார் பிறந்துவிட்டார்" என்று முன்னாள் இங்கிலாந்து ஸ்ட்ரைக்கர் கேரி லினேக்கர் பிபிசியிடம் கூறினார். "இது இந்த போட்டியின் முக்கியமான தருணம், ஏன் மொத்த 2024 ஐரோப்பிய கால்பந்து தொடரில் இதை அற்புதமான தருணம் என்றே கூறலாம்" என்று கூறினார். "இதை நம்ப முடியவில்லை" என்று முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஆலன் ஷீரர் விவரித்தார். "நாங்கள் இந்த தொடர் முழுவதும் அவரைப் பற்றி பேசி வந்தோம். இவ்வளவு சிறிய வயதில் அபாரமான சாதனையைப் படைத்துள்ளார்" என்கிறார். அலையன்ஸ் அரங்கிற்குள் நேரடியாக போட்டியைப் பார்த்தவர்களுக்கும், உலகம் முழுவதும் இருந்து டிஜிட்டல் திரையில் கண்ட ரசிகர்களுக்கும் ஸ்லோ மோஷனில் அந்த கோல் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அந்த கோல் அடிக்கப்பட்ட நேரம் காரணமாக தான் அது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது. இந்த அரையிறுதியில் 1-0 என்ற கணக்கில் போராடிக் கொண்டிருந்தது ஸ்பெயின் அணி. ஆனால் மிகவும் பதற்றமான அந்த தருணத்தை சிரமமின்றி கையாண்டார் யமால். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அடிக்கப்பட்ட நேரம் காரணமாகத்தான் யமாலின் கோல் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது. இந்த முக்கியமான போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஆடுகளத்தில் தனது அணி வீரர்களுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார் யமால். யமாலின் கோலைப் பற்றி ஸ்பெயின் அணியின் முகாமையாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே கூறுகையில், "ஒரு கால்பந்து மேதையின் பண்புகளை அவரிடம் கண்டோம்." என்றார். "நாங்கள் அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும், அவர் இதே பணிவுடன் விளையாடி, தனது கால்பந்து பயணத்தில் மேலும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உண்மையைச் சொன்னால் அவரைப் பார்க்க மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் போல் தெரிகிறது." என்று கூறினார். மேலும், "அவர் ஸ்பெயின் அணியில் இருப்பது எங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. நாங்கள் அவரை நம்புகிறோம், அடுத்து பல ஆண்டுகளுக்கு அவர் இதே போல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்." என்று கூறினார் ஸ்பெயின் அணியின் முகாமையாளர் லூயிஸ்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"தேசிய அணிக்காக இறுதிப் போட்டியில் ஆட வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது" என்று கூறினார் யமால். இறுதிப்போட்டிக்கான கனவு ஆட்டத்திற்குப் பிறகு நள்ளிரவு 12.15 மணிக்கு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் யமால் இருந்தார். "தேசிய அணிக்காக இறுதிப் போட்டியில் ஆட வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது" என்று கூறினார் யமால். ஆடுகளத்தில் தான் கொண்டிருந்த அதே தன்னம்பிக்கையுடன் செய்தியாளர் சந்திப்பில் கூடியிருந்த ஊடகங்களை எதிர்கொண்டார் யமால். இப்போது அவரது கவனம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று பெர்லினில் நடைபெறும் இறுதிப் போட்டியின் மீது உள்ளது. எந்த அணியை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் உண்மையில் அதை பற்றி கவலைப்படவில்லை. இறுதிப் போட்டி என்று வரும்போது சிறப்பாக விளையாட வேண்டும். எந்த அணியாக இருந்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்." என்று கூறினார் யமால்.   மெஸ்ஸியுடனான புகைப்படம் பட மூலாதாரம்,JOAN MONFORT/AP படக்குறிப்பு,2007இல் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் யமாலின் அம்மாவும் உடன் இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக யமாலின் தந்தை, "இரு கால்பந்து ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2007இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அந்தப் புகைப்படத்தில் மெஸ்ஸி, குழந்தை யமாலைக் கைகளில் ஏந்திக் கொண்டிருந்தார். அப்போது 20 வயதான மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் கால்பந்து வீரராக இருந்தார். யுனிசெஃப் (Unicef) காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் எனும் புகைப்பட நிபுணர் எடுத்த புகைப்படம் அது. "மெஸ்ஸி அப்போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். குழந்தையை எப்படி ஏந்த வேண்டும் என்று கூட அவருக்கு அப்போது தெரியவில்லை." என்கிறார் ஜோவான் மான்ஃபோர்ட். மெஸ்ஸியைப் போலவே யமாலும் பார்சிலோனாவுக்காக விளையாடத் தொடங்கினார், அங்கு அவர் கிளப்பின் இளம் தொடக்க வீரராக இருந்தார். சில நாட்களுக்கு முன் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கிய போது தான் அந்தப் புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது யமால் என்பதை தான் உணர்ந்ததாக மான்ஃபோர்ட் கூறினார். "இதுபோன்ற வைரலான ஒரு புகைப்படத்தை நான் எடுத்துள்ளேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், இது மிகவும் இனிமையான ஒரு உணர்வு." என்று கூறுகிறார் ஜோவான் மான்ஃபோர்ட். https://www.bbc.com/tamil/articles/cxr2n44rwxko
    • தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!  மாவை சேனாதிராசா தெரிவிப்பு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படுவதற்குச் செல்வம் அடைக்கலநாதன் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனத்தாம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வழமைபோன்று நாடாளுமன்றக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் எந்த வகையிலும் பிரிவுக்கும், குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில் ஒற்றுமையாக இந்த விடயத்தில் தீர்மானிக்க வேண்டுமென்ற கருத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதற்கமைய நாடாளுமன்றக் குழுவினர் பொருத்தமான, இணக்கமானதொரு தீர்மானத்தை எடுப்பார்கள் - என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)     https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சியின்_நாடாளுமன்றக்_குழுத்தலைமைக்கு_இணக்கத்தின்_அடிப்படையில்_முடிவு!!
    • Published By: VISHNU   10 JUL, 2024 | 10:56 PM   தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி  இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார். காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய - ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார். அமரபுர மகா நிகாய - ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் உபசம்பத நிகழ்வுகள் இலங்கை அமரபுர நிகாயாவின் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகாநாயக்க தேரர் தலைமையில் இன்று முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதோடு 98 பேர் இதன்போது துறவரத்தை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.  600இற்கும் மேற்பட்ட விகாரைகளில் இருக்கும் 4000 இற்கும் மேற்பட்ட பிக்குகள்  அமரபுர ஆரியவன்ச சத்தம்ம பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்கு ஒரு முறை உபசம்பதா நிகழ்வு நடத்தப்படும்.  காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பரிவேனாவின் அதிபதி வண கினிகல பெதெஸ சுதம்ம தேரர், உபசம்பதா நிகழ்விற்காக வௌியிடப்பட்ட நினைவுப் புத்தகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ''துறவற வரலாற்றில் உபசம்பத நிகழ்வு முக்கியமானதாகும். அந்த விழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே முன்பிருந்தே இதற்காக அரச அனுசரணை வழங்கப்படுகிறது. இன்றைய உபசம்பதா நிகழ்வும் அரசாங்க அனுசரணையுடன் நடைபெறுகிறது.  இலங்கையில் உபசம்பதா நிகழ்வு இல்லாத காலமும் இருந்தது.  அப்போது, பிக்குகளின் தலையீட்டுடன் சியம் நிக்காயவில் முதலாவது உபசம்பதா நிகழ்வு அரச அனுசரணையுடன் நடத்தப்பட்டது.  மீண்டும் அந்த முறைமை இல்லாது போயிருந்த வேளையில் மியன்மாரின் உதவியுடன் அமரபுர நிக்காயவில் ஆரம்பிக்கப்பட்டது.  அன்றிலிருந்து அரச அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. ஆங்கிலேயர் தென் பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் துறவறத்தையும் சாசனத்தையும் பேணிக்காக்க ஆற்றிய சேவை அளப்பரியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்டகாலமாக பேணப்பட்ட இறக்குமதி பொருளாதாரக் கொள்கையினால் அந்த நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மற்றைய அனைத்து தேரவாத பௌத்த நாடுகளும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன. எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது'' என ஜனாதிபதி தெரிவித்தார். நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  ''ஒழுக்கம் இல்லாவிட்டால் சாசனம் அழிந்துவிடும் என்பது போல ஒழுக்கம் இல்லாத நாடும் சரிந்துவிடும்.  அதனால் புத்த தர்மத்தின் முன்னுதாரணம் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமானதாக காணப்படுகிறது.  இலங்கையில் உபசம்பதா இல்லாத காலத்தில் தாய்லாந்தில் இருந்து அதனை கொண்டு வருவதற்காக இந்நாட்டு பிக்குகள் மூன்று தடவை தாய்லாந்து செல்ல வேண்டியிருந்தது. பல இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த உபசம்பதா முறைமையை பாதுகாக்க மகா சங்கத்தினர் பாடுபட்டனர்.'' என்று தெரிவித்தார். வண. கந்துனே அஸ்ஸாஜி மகா நாயக்க தேரர், அமரபுர நிக்காய - ஆரியவங்ச சத்தம்ம பீடத்தின் மகாநாயக்கர் குருநாகல் ரிதிகம ரப்படகல்ல விகாரையின் விகாராதிபதி  எகொடமுல்லே அமரமொழி மகா நாயக்க தேரர்,  வண. வல்பொல விமலஞான அனுநாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, கயந்த கருணாதிலக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/188170
    • https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02LFJBXofdGbUQKwyPW44pUxPSRm1zMVu9s2JRTZSQfwxxqib8XFjygjJFcHTi1LJxl&id=1454932539   How to start World War 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.