Jump to content

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ranil-1.jpg

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி  நேற்று  குருணாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் நாட்டிற்கு சோறு தரும் விவசாயிகள் வாழும் பகுதியாகும். ஆனால் இன்னும் அவர்களுக்கான நில உரிமை கிடைக்கவில்லை. இன்று இந்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கானோர் சட்டரீதியான காணி உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு உரிமையை வழங்குவதற்காகவே உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம்.

மிகவும் கடினமான காலகட்டதிலேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. ஆனாலும் நான் ஏற்றுக்கொண்டேன். பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.

இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும்.

தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம்.

நான் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியது. மேலும் பங்களாதேஷும் 200 மில்லியன் டொலர்களை வழங்கியது. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், நாம் 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரியை அதிகரிப்பது எளிதானது அல்ல. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க அதைச் செய்ய வேண்டியிருந்தது. சில தலைவர்கள் மக்களை வீதிக்கு வந்து வீடுகளை எரிக்கச் சொன்னார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது என்றார்கள். விவசாயிகளை மீண்டும் கொழும்புக்கு வருமாறு கூறினர். விவாசாயத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் கொழும்புக்கு வர முடியாது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்கினோம். அப்போதும் கூட விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளுக்கு கொழும்புக்கு வருமாறு கூறினர். விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம். பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது.

அதனாலேயே உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கி சாதாரண மக்களுக்கும் அதன் பலன்களை பெற்றுக்கொடுக்க விருப்பினோம். பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்த காணியின் உரிமை இன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சாதனையாகும்.

மற்றவர்கள் சோசலிசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான சோசலிசம். இதன் மூலம் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது. உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஜப்பான் மற்றும் தென் கொரியா. ஆனால் இரு நாடுகளிலும் குறைந்த விலைக்கு காணி வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் காணி உரிமையாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன் சமூர்த்தி வேலைத்திட்டத்தின் நன்மைகளை மூன்று மடங்கினால் உயர்த்துவதற்காக அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். வங்குரோத்து அடைந்த நாட்டிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்தினோம். அரசாங்க ஊழியர்களுக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

எதிர்வரும் வருடங்களிலும் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தலாம். இத்தோடு தனியார் துறையிலும் சம்பள உயர்வு கிட்டியது. சுற்றுலா துறையின் வருமானம் அதிகரித்தது. இன்று, நாட்டில் ஒரு நவீன சுற்றுலா வணிகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடந்த பொசன் போயாவின் போது நாடு முழுவதும் ஏராளமான தன்சல்கள் நடத்தப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. இன்று உங்களது கடின உழைப்பினால் அறுவடை செய்யப்பட்ட அறுவடையில் இருந்து இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்சல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுவே நமது பலமாகும். அதே சமயத்தில் நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இன்று இந்த குருநாகல் மாவட்டம் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. கம்பஹா மற்றும் கொழும்பிற்கு அடுத்தபடியாக குருணாகல் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். எனவே, பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இரணவில சுற்றுலா வலயத்துடன் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

அப்போது இந்த பிங்கிரிய, மாதம்பே பகுதிகள் பாரிய முன்னேற்றம் அடையும். மேலும், குளியாபிட்டியவில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது. மேலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் விரிவான திட்டமொன்று குருணாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இந்த மாகாணத்திற்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும்  எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/305369

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எப்ப பார்த்தாலும் கடன் கடன் கடன்

நாய் காலைத் தூக்கியது போல
 
எந்த நாட்டவரைக் கண்டாலும் பிச்சைப் பாத்திரம் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எப்ப பார்த்தாலும் கடன் கடன் கடன்

நாய் காலைத் தூக்கியது போல
 
எந்த நாட்டவரைக் கண்டாலும் பிச்சைப் பாத்திரம் தான்.

இலங்கையில் தற்போது 10 பெரும் செல்வந்த அரசியல்வாதிகளின் பட்டியலைப் பார்த்தோம். பிச்சைப் பாத்திரம் ஏந்தியபின்பு பத்து இருபது என்று அதற்கு மேலும் பெருகுவது உறுதி.🤔

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!!!   நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் ஆனால் கடந்த தேர்தல் காலத்தை விட முற்றிலும் மாறுபட்ட அரசியல் களம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. மேலும் தமிழரசியல்வாதிகள் என்னவெல்லாம் நாடகங்கள் காண்பித்து தங்கள் இருப்புகளை தக்கவைத்துக் கொள்ள போகிறார்கள் என்பதே தற்போது உள்ள கேள்வி. எமது அரசியல்வாதிகளின் தற்போதைய இலக்கு நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே.. இது தொடர்பாக இவர்கள் மக்களின் அபிலாஷைகளை அபிப்பிராயங்களை கேட்பதில்லை.. நாம் என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்வார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் ஒவ்வொன்றையும் இதுவரை காலமும் செய்து வருகின்றார்கள். தங்களது சுயநலத்திற்காக மக்களை ஈடுவைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியல்வாதிகளே எமது தரப்பில் தற்போது உள்ளனர். மக்கள் சார்ந்த எவ்வித தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் இவர்கள் எடுப்பதில்லை .கட்சிகளுக்கிடையே பிளவு இ தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்மை இ தலைமை பொறுப்புக்கான குடுமிபிடிச் சண்டை என அற்பத்தனமான அரசியலை செய்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தற்குறிகளை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா? என்ற விரக்தி நிலை தற்போது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. தென்னிலங்கை அரசியல் மாறிவிட்டது .தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் யதார்த்தத்தை புரிந்து தங்களின் வயது முதிர் நிலையை விளங்கிக் கொண்டு தாங்களே அரசியலில் இருந்து விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதேபோன்று தாயகம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மாறவேண்டும். இல்லையென்றால் மக்கள் மாற்றுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எமது சமுதாயத்தில் நன்கு கல்விக் கற்றுக் குழாமினர் வெளிநாடுகளுக்கு சென்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அறிவை எமக்காக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எமது தமிழ் அரசியல் கள்வர்கள் வழங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்நிலைமை மாற வேண்டும். தற்போது வந்திருக்கும் ஆட்சிமாற்றம் முற்றிலும் மாறானவொன்றாக அமைந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் இனவாதமும் மதவாதமும் இல்லாத அமைதியான ஒரு நாடு இ நாம் அனைவரும் சமமானவர்கள். ஒரே தேசத்தின் பிள்ளைகள் என்பதையே அவரது கருத்துக்கள் தெளிவுப்படுத்துகின்றன. இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் சாய்ந்து கொடுக்காத ஒரு தலைமை நாட்டிற்கு கிடைத்துள்ளார். எனவே எமது தமிழ் மக்களுக்கான நல்ல வாய்ப்பு இது. இதனை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிவரும் தமிழ் தேசிய அரசியலானது தமிழ் மக்களை முற்றிலும் அறிவுபூர்வமாகவும் அரசியல் முதிர்ச்சியுள்ளதாகவும் சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தக்கூடியதாகவும் ஒரு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க செய்யக்கூடிய வகையிலுமான இளைய சமுதாயத்தினரின் தலைமையில் அமைய வேண்டியதாகும். எமது தமிழ் அரசியல் பயணத்தின் வெற்றிக்கு சிறந்த வழி தற்போதிருக்கும் முதிர் அரசியல்வாதிகளையும் அரசியல் கள்வர்களையும் புறந்தள்ளி இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தலே ஆகும்.. இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்..! https://www.elukathir.lk/NewsMain.php?san=56370
    • இந்தியாவினால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்மை திட்டங்கள்!   | இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இரண்டு முக்கிய நன்மை திட்டங்களை அறிவித்துள்ளார். அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்ததினை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஹேரத்துடனான சந்திப்பின்போதே இந்தியாவின் நன்மைத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதன்போது,இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் தற்போதைய அபிவிருத்தி உதவிகள் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 7 தவணைகள் செலுத்தி முடிக்கப்பட்ட கடன் வரித் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக மாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான விடயமும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமாரவை வலியுறுத்தினார். இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தாடலின்போது, இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளையில் சமத்துவம், நீதி, கண்ணியம், சமாதானத்திற்கான தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாசைகளுக்கும் இந்திய அமைச்சர் மீண்டும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார். https://www.elukathir.lk/NewsMain.php?san=56389
    • இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் - ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் அயதுல்லா கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார். பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்திற்கான ஈரான் ஆதரவை உறுதி செய்தார். ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார். இஸ்ரேலை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கமேனி, தங்கள் நாட்டு மக்களைக் காக்கத் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும் என்ற அவர், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து அதன் எதிரிகளை வீழ்த்தும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார். ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார். போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும் எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும். இஸ்ரேலின் உதவியுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை அமெரிக்கா தன்வசப்படுத்த முயல்கிறது. இஸ்ரேலை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை. தங்கள் ஏதோ பெரிய நாடாக இந்த யூத தேசம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் அந்த போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும். நீண்ட காலம் தாங்காது. அது அமெரிக்கர்களின் ஆதரவினால் மட்டுமே உள்ளது” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டம் பின்வாங்காது என்று கமேனி வலியுறுத்தினார். https://ibctamil.com/article/israil-iran-war-tension-in-middle-east-1728118712
    • பொறுமையுடன் கவிதை பார்த்து உங்கள் பொன்மொழியால் ஊக்கம்தந்த எங்கள் தமிழ்சிறி அவர்களுக்கு! என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    • தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போதுள்ளவர்களும் அவ்வாறு ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாயப்பளிக்க வேண்டும். அத்தோடு, இளைஞர்களும் தானாக வந்து அரசியலை கையில் எடுத்தால் மாத்திரமே தமிழர் அரசியல் களத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். மேலும், இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபங்கு, தமிழர் அரசியல் களம், இளைஞர்களின் அரசியல் வருகை மற்றும் வயதான அரசியல்வாதிகளின் ஓய்வு தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு, https://ibctamil.com/article/the-political-arrival-of-youth-in-the-tamil-region-1728079807#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.