Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கௌதம் கம்பீர்: தோனியின் 'நிழலில்' 2 உலகக் கோப்பைகளை வெல்ல பங்களித்தவர் பயிற்சியாளராக சாதிக்க முடியுமா?

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஜூலை 2024, 03:26 GMT

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. தனிப்பட்ட முறையில் நீங்கள் புகழ்பெற விரும்பினால், தனியாக ஆடும் விளையாட்டில்தான் விளையாட வேண்டும்

கிரிக்கெட் விளையாட்டுக்கு கெளதம் கம்பீர் அளித்த விளக்கம் இது.

சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் என ஏராளமான ஜாம்பவான்களுடன் சேர்ந்து தனது முத்திரையை பதித்து, தாக்கத்தை ஏற்படுத்தியவர் கம்பீர்.

2008 முதல் 2011ம் ஆண்டுவரை கிரிக்கெட்டின் 3 விதமான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமை பெற்ற கிரிக்கெட் வீரராக் இருந்தார். டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 விதமான ஃபார்மெட்டிலும் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக சேவாக் ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர் என்று சொல்லப்பட்டாலும், தேவைப்படும் நேரத்தில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் போல சுவர்போன்று பேட் செய்து வலுவான இன்னிங்ஸை விளையாட முடியும் என டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்தவர் கம்பீர்தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஃபார்மெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரு இன்னிங்ஸ்கள் என்றென்றும் போற்றப்படும்.

 
கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்களை கம்பீர் சேர்த்ததும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக கம்பீர் 97 ரன்கள் சேர்த்ததும் இந்திய அணி இரு கோப்பைகளை வெல்ல முக்கியமானதாக இருந்தது.

ஆனால், கம்பீர் சொல்வதைப் போல் “பெரிய பங்களிப்பை கொண்டாடிவிட்டு பல சமயங்களில் அணிக்கு உபயோகமான சிறிய பங்களிப்பை கொண்டாட மறந்துவிடுவோம்” என தெரிவித்திருந்தார். இருமுறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல கம்பீரின் பங்களிப்பு இருந்தபோதிலும் புகழப்படாத ஹீரோவாகவே கம்பீர் கடைசிவரை இருந்தார்.

குறிப்பாக 2011 உலகக் கோப்பைத் தொடரில் கம்பீர் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்களில் ஆட்டமிழந்து மிக முக்கிய இன்னிங்ஸை ஆடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால், அதிகமாகக் கொண்டாடப்பட்டது என்னமோ மகேந்திர சிங் தோனிதான். இதை கம்பீரே பலமுறை ஆதங்கத்துடன் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் இட்ட பதிவில், “சிறந்த கேப்டனாக வர வேண்டிய கெளதம் கம்பீருக்கு அந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்கவில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்குப்பின் கெளதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ.” எனத் தெரிவித்துள்ளனர்.

 
கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்பீர் இளமைப் பருவம்

கடந்த 1981ம் ஆண்டு பஞ்சாபி இந்து காத்ரி குடும்பத்தில் டெல்லியில் பிறந்தவர் கெளதம் கம்பீர். கம்பீர் தந்தை தீபக் கம்பீர் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் செய்தார். தாய் சீமா கம்பீர். கம்பீருக்கு ஒரு இளைய சகோதரி உண்டு. தாய்வழி பாட்டனார் கடந்த 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரிலிருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தார். கம்பீர் பிறந்து 18 நாட்கள் ஆனவுடனே அவரை தாய்வழிப் தாத்தா, பாட்டி தத்தெடுத்து வளர்த்தனர். அது முதல் இப்போதுவரை கம்பீர் தனது தாத்தா, பாட்டியுடனே டெல்லியில் வசித்து வருகிறார்.

டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்த கம்பீர் பட்டப்படிப்பு கூட முடிக்கவில்லை. 10 வயதிலிருந்தே கம்பீர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் அகாடெமியைச் சேர்ந்த சஞ்சய் பரத்வாஜ்ஜிடம் கிரிக்கெட் பயிற்சியையும், குலாத்தி என்பவரிடமும் கிரிக்கெட் பயிற்சியை கம்பீர் எடுத்தார்.

முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ தரப்போட்டிகளிலும் கெளதம் கம்பீர் நீண்டகாலம் ஆடியபின்புதான் அவருக்கு இந்திய் அணியில் இடம் கிடைத்தது. முதல் தரப்போட்டிகளில் 198 ஆட்டங்களில் 15,153 ரன்களும், 43 சதங்கள், 68 அரைசதங்களையும் கம்பீர் விளாசியுள்ளார். அதேபோல லிஸ்ட் ஏ தரப்போட்டிகளில் கம்பீர் 299 போட்டிகளில் 10077 ரன்களும், 21சதங்களும, 60 அரைசதங்களையும் விளாசினார்.

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்பின்புதான் 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கம்பீர் அறிமும் செய்யப்பட்டார். 2005 முதல் 2007ம் ஆண்டுவரை ஏராளமான ஒருநாள் போட்டிகளில் கம்பீர் விளையாடி, சதங்கள், அரைசதங்கள் அடித்த போதும் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு கம்பீர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது கம்பீரை கடுமையாகப் பாதித்தது, வேதனையுடன் பேட்டிகளையும் அளித்திருந்தார்.

2007-இல் மேற்கிந்திய்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி மோசமான தோல்விகளோடு வெளியேறியது. இதன் பிறகு 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கம்பீர் இடம்பிடித்தார். இந்தத் தொடரில் கலக்கிய கம்பீர், 3 அரைசதங்கள் உள்பட 227 ரன்களை குவித்தார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 54 பந்துகளி்ல் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

2008 முதல் 2013ம் ஆண்டுவரையிலான காலம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் பொற்காலம் எனலாம். 2008ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சீரிஸ் முத்தரப்பு தொடரில் கம்பீர் சிறப்பாக ஆடி, 440 ரன்கள் குவித்தார். சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் 113 ரன்கள் குவித்தார்.

2008ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சேவாக்குடன் கம்பீர் சேர்ந்து தொடக்க வீரராகக் களமிறங்கினார். இந்தத் தொடரில் கம்பீர் இரட்டை சதம் உள்பட 463 ரன்களைக் குவித்தார். 2008 டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரன்குவிப்பில் முன்னணி வீரராக கம்பீர் இருந்தார், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கம்பீரின் அற்புதமான பேட்டிங் தொடர்ந்தது.

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு வெளியே நியூசிலாந்தில் 2009ம் ஆண்டு முதல்முறையாக கம்பீர் டெஸ்ட் தொடர் விளையாடினார். இதில் 2-ஆவது டெஸ்ட்டில் கம்பீர் அடித்த 137 ரன்கள் இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது. 11 மணிநேரம் கம்பீரின் பேட்டிங்கைப் பார்த்த கேப்டனாக இருந்த சேவாக், “டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் இந்திய அணியின் 2-ஆவது சுவர் கம்பீர்” என்று புகழாரம் சூட்டினார். ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல கம்பீரின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.

5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்களை விளாசிய இந்தியாவின் முதல் பேட்டரும், உலகளவில் பிராட்மேனுக்கு அடுத்ததாகபோல் 2-ஆவது பேட்டராக கம்பீர் பெயரெடுத்தார். 2009ம் ஆண்டு ஐசிசி சார்பில் சிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணிக்கு கேப்டனாக சில போட்டிகளில் மட்டுமே பிசிசிஐ கம்பீருக்கு வாய்ப்பு வழங்கியது. 2010ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடருக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டு 5-0 என ஒருநாள் தொடரையும் வென்று நிரூபித்து தொடர் நாயகன் விருதையும் கம்பீர் வென்றார்.

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 உலகக் கோப்பைகளில் முக்கியப் பங்களிப்பு

2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் கம்பீர் தேர்வாகினார். இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் சேவாக், சச்சின் ஆட்டமிழந்தபின் ஆங்கர் ரோல் செய்த கம்பீர், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தும், தோனியுடன் 109ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் பேட் செய்தார்.

ஆனால், உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின் தோனியின் பங்களிப்புதான், கடைசியில் அவர் அடித்த சிக்ஸர்தான் அதிகமாகப் பேசப்பட்டது.

2013ம் ஆண்டுக்குப்பின் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டு, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2018ம் ஆண்டு டிசம்பரில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்தநிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கம்பீர் அறிவித்தார்.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 9 சதங்கள் உள்பட 4,154ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உள்பட 5,238 ரன்களையும் கம்பீர் குவித்துள்ளார். 37 டி20 போட்டிகளில் 932 ரன்களையும் கம்பீர் சேர்த்துள்ளார்.

கம்பீர் எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். அதிரடிக் கருத்துக்களை தெரிவிப்பவர். 2007, 2011 உலகக் கோப்பைத் தொடரில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும், தோனியை விமர்சித்தும் கம்பீர் பேசியிருந்தார்.

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்பீருக்கு காத்திருக்கும் சவால்கள்

இந்திய அணிக்கு கேப்டன் பதவியை வழங்காத நிலையில், தற்போது தலைமைப் பயிற்சியாளர் பதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் காலத்தில் இந்திய அணி 2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026ல் டி20 உலகக் கோப்பை, 2027ல் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது.

கம்பீர் பதவிக்காலத்தில்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு புதிய கேப்டனும் பணியாற்றப் போகிறார்கள். இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு இருக்கிறது.

அணிக்குள் சாதகமான சூழலை ஏற்படுத்துவதும், வீரர்களின் திறமையை மேம்படுத்துவதும் கம்பீருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடும்.

மூத்த வீரர்களான ரோகித், விராட் கோலி போன்றவர்களை சமாளித்து, அணியை சமநிலைப்படுத்துவதும் கம்பீருக்கு பெரிய பணியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஒத்து வராததை பலர் கலாய்த்ததை பார்த்துள்ளேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலி அணியில் நீடிப்பாரா? வெற்றிக்கான 3 அம்சங்களாக கம்பீர் கூறியது என்ன?

வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 ஜூலை 2024

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடங்கிய கோலி-கம்பீர் உரசல் அன்றோடு முடியவில்லை, 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீகிலும் புகைந்தது. இப்போது தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வழிகாட்டலில் விராட் கோலி விளையாடப் போகிறார் எனும் போதே பல்வேறு ஊகங்கள் ரசிகர்கள் மனதில் ஓடத்தொடங்கின.

கோலியை எவ்வாறு கம்பீர் நடத்தப் போகிறார், அணியிலிருந்து நீக்கப் போகிறாரா, ஐபிஎல் தொடரில் தொடங்கிய உரசல் இந்திய அணியிலும் தொடருமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

வெற்றிக்கான 3 அம்சங்கள் - கம்பீர் கூறியது என்ன?

வரும் 27ம் தேதி இந்திய அணிக்கு அதிகாரபூர்வமாக தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கம்பீரின் முதல் பணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகும்.

ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவது இதுதான் முதல்முறையாகும்.

தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், ரேயான் டென் டஸ்சாடேவும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாய்ராஜ் பகதுலேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப் தொடர்கிறார். இலங்கை பயணம் முடிந்தபின் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இலங்கை தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மும்பையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணியை, தொடர் வெற்றிப் பாதையில் எவ்வாறு அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ மிகவும் எளிமையானது. இந்திய அணியின் எதிர்கால வெற்றிக்கு 3 விஷயங்கள் மிக முக்கியம். ஒன்று நம்பிக்கை, 2வது சுதந்திரம், 3வது வெற்றி ஆகியவைதான். வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிக முக்கியம், சுதந்திரம் அவசியம் என்பதை நான் நம்புகிறேன். சுதந்திரம் இருந்தால்தான் தலைமைப் பயிற்சியாளர், வீரர் என்ற இடைவெளி இருக்காது. இந்த நட்புறவுதான் நம்பிக்கையை வளர்க்கும். எப்போதுமே நான் வீரர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

அணியில் சீனியர், ஜூனியர் வீரர்கள் இருக்கும்போது பணிகளை எவ்வாறு பிரிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ வேகப்பந்துவீச்சாளர்களின் பணியை சரிவர நிர்வகிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் உடற்தகுதியுடன், விளையாடும் நிலையில் இருந்தால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆதலால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடுவார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் உறுதி செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

கோலி, ரோகித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வரும் 27-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி தொடங்குகிறது.

விராட் கோலி பற்றி கம்பீர் கூறியது என்ன?

கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் கோலியுடன் கம்பீர் உரசலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது இருவரும் ஒரே அணியில் பணியாற்றப் போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியுடனான உறவு அணியில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு கெளதம் கம்பீர் பதில் அளிக்கையில் “ நான், விராட் இருவருமே முதிர்ச்சியடைந்த தனிநபர்கள். எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். இதை பொதுத்தளத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரில் நாங்கள் இருவருமே வெவ்வேறு அணிக்காக ஆடினோம். அப்போது அந்தந்த அணிக்காக, வெற்றிக்காக உழைத்தோம், சண்டையிட்டோம், போராடினோம். ''

''ஆனால், இப்போது 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது ஒரே அணியில் இருப்பதால், இந்திய அணியின் வெற்றிதான், இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான் எங்கள் இருவரின் உயரிய குறிக்கோளாக இருக்கும்.” என்றார்.

“களத்துக்கு வெளியே விராட் கோலியுடனான என்னுடைய உறவு நல்லவிதமாக இருந்துள்ளது, அது தொடரும். எங்களுக்குள் எந்தவிதமான உறவு இருக்கிறது குறித்து தெரிவிக்க வேண்டியதில்லை. சமீபத்தில்கூட இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது இரு தனிநபர்கள் தொடர்புடையது என நான் நினைக்கிறேன்.”

“பயிற்சியாளர் குறித்த என்னுடைய அறிவிப்புக்கு முன்பும், பின்பும் நான் எத்தனை முறை கோலியுடன் பேசினேன். போட்டிகளுக்கு பின்பும், முன்பும் நான் பேசியது, எங்களைப் பற்றி குறித்த செய்திகள் தலைப்புச் செய்திகளாக மாறியது போன்றவை இப்போது எல்லாம் முக்கியமானவை அல்ல. இப்போது இருவருக்குமே முக்கியமானவை என்னவென்றால், கடினமாக உழைத்து இந்தியாவை பெருமைப்பட வைப்பதுதான். இதுதான் எங்கள் பணி. விராட் கோலி முழுமையான தொழில்முறை கிரிக்கெட் வீரர், உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அது தொடரும். இருவரும் சேர்ந்து சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்றார்.

கம்பீர், ரோகித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்துள்ளார்.

2027 உலகக் கோப்பை வரை ரோஹித், கோலி அணியில் இருப்பார்களா?

கோலி, ரோஹித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில், “ என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இன்னும் இருவரும் அதிகமாக விளையாட வேண்டியுள்ளது. இருவரும் சிறப்பாக உடற்தகுதியை வைத்திருந்தால், அவர்கள் அடுத்த 50 ஓவர்கள் உலகக் கோப்பை வரை விளையாட முடியும். ''

''2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, 2024நவம்பரில் ஆஸ்திரேலியத் தொடர் ஆகியவை இருப்பதால் நிச்சயம் இருவரும் விளையாடுவார்கள். உடற்தகுதியை பராமரித்தால் 2027 உலகக் கோப்பை வரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவர்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நான் கூற முடியாது, அவர்களைப் பொருத்தது. அவர்களால் அணியின் வெற்றிக்கு எவ்வளவு பங்களிக்க முடியுமோ அதை வழங்கலாம். இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்” என்று தெரிவித்தார்.

ஹர்திக்கிற்கு கேப்டன் பதவி மறுப்பு ஏன்?

ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்களா, ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விகளுக்கு கம்பீர் பதில் அளிக்கையில் “ ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதிப் பிரச்னைதான், சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்க தூண்டியது. சூர்யகுமார் டி20 போட்டிகளை மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.” என்றார்.

ஹர்திக், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்விக்கு கம்பீர் பதில் அளித்தார்.

கெளதம் கம்பீர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்

1. 2025 சாம்பியன்ஸ் டிராபிவரை கோலி, ரோஹித் விளையாடுவார்கள். உடற்தகுதி இருந்தால் 2027 உலகக் கோப்பைவரையிலும் விளையாடலாம்.

2. பணி மேலாண்மை விஷயத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை. குறிப்பாக பும்ராவின் பணிப்பளு நிர்வாகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சீனியர் வீரர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் தொடர்ந்து விளையாட வேண்டும்.

3. சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.

4. ஜடேஜா, ஹர்திக் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர அவர்கள் இருவரும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படவில்லை.

5. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி பிரச்னைதான், டி20 அணியின் கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவிடம் வழங்க காரணமானது.

6. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் உள்நாட்டு துலீப் டிராபியில் விளையாட வேண்டும்.

7. சுப்மான் கில்லை அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஏற்ற வீரராகப் பார்க்கிறேன். எதிர்காலக் கேப்டனாகவும் வரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2024 at 19:46, nunavilan said:

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஒத்து வராததை பலர் கலாய்த்ததை பார்த்துள்ளேன்.

இவ‌ர் ரொன்ச‌ன் பாட்டி

எப்ப‌டி தான் இவ‌ருக்கு கீழ‌ வீர‌ர்க‌ள் விளையாட‌ போகின‌மோ தெரியாது....................ராகுல் ராவிட் போல் இவ‌ரால் வீர‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை வெல்ல‌ முடியாது.....................இவ‌ர் அர‌சிய‌லில் பீஜேப்பியில் இருக்கிறார்.....................................

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2024 at 19:46, nunavilan said:

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஒத்து வராததை பலர் கலாய்த்ததை பார்த்துள்ளேன்.

ஜெய‌ல‌லிதா த‌மிழ் நாட்டில் அம்மா உண‌வ‌க‌ம் ந‌ட‌த்தின‌ மாதிரி

 

க‌ம்பீர் டெல்லியில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு 1ரூபாய்க்கு ப‌சியோட‌ வார‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ த‌ர‌மான‌ சாப்பாடு கொடுக்கிறார்

 

இவ‌ர் குடுக்கிற‌ 1ரூபாய் சாப்பாடு வேறு உண‌வ‌க‌த்தில் போய் சாப்பிட்டான் 50 ரூபாய்க்கு மேல‌ வ‌ரும்......................அந்த‌ 1 ரூபாயும் வேண்டாம‌ இல‌வ‌ச‌மாய் குடுத்தால் இன்னும் ந‌ல்லா இருக்கும்....................கோடி காசோட‌ வாழும் க‌ம்பீர் இதை ஒரு ச‌ம்முக‌ சேவை மாதிரி செய்கிறார்............................

 

இவ‌ரை போல‌ ஒவ்வொரு மானில‌த்திலும் குறைந்த‌து 5000 பேர் த‌ன்னும் இருந்தால் ம‌க்க‌ள் ப‌சியால் வாட‌ மாட்டின‌ம்

 

ஆய்வு சொல்லுது ப‌ல‌ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌மாம்...........................ஊழ‌ல் முறை கேடு செய்து அர‌சிய‌ல் வாதிக‌ள் உல‌க‌ அள‌வில் வைச்சு இருந்தால் அதுங்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை இப்ப‌டி தான் இருக்கும்...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.