Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாகம் - 01

சம்பந்தரின் சாவின் செய்திக் கனதியைக் கூட சர்வதேச மட்டத்தில் தவிடு பொடியாக்கி தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகரும் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள்.

கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சின் நியமனத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்படுகின்றார்.

அதுவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையை கவனிப்பதற்காக பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் மாகாண சபை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு

அந்த வகையில் நாடு முழுவதும் காணப்பட்ட ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு வைத்திய அதிகாரிகளாக 12 பேரினையும் மற்றும் சில பதவிகளுக்கு சிலரையும் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் தற்காலிக இணைப்பாக நியமித்து அனுப்பிவைக்கின்றார்.
 
இந்த நியமனக் கடிதத்துடன் இராமநாதன் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் கடமையேற்கின்றார்.

அவரது கடமையேற்பு சந்தர்ப்பத்தினை கையளிக்க வேண்டிய பொறுப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உரிய கடமைகளாக காணப்பட்டன. காரணம் முறையான நியமனத்தில் ஒரு வைத்திய அத்தியட்சகர் அற்றவிடத்து அவ்வைத்தியசாலையும், அதன் ஆளணி நிர்வாக செயற்பாடுகளும் முறையே நேரடி அறிக்கையிடும் அதிகாரியான மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கிட்டிய நிர்வாக அலுவலகமான பிராந்திய சுகாதாரப்பணிப்பாளருக்கும் உரிய கடமைகள் ஆகும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

 

சாவகச்சேரி வைத்தியசாலையில் மத்திய அமைச்சில் இருந்து ஒரு வைத்திய அத்தியட்சகர் நியமனம் அனுப்பிவைக்கப்படும்போது அதனை உரிய வகையில் மாகாண சுகாதார அமைச்சும் திணைக்களமும் பிராந்திய அலுவலகமும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கையளிக்கவில்லை என்பது வெளிப்படையான தவறாகின்றது.

வைத்தியசாலைக்குரிய பௌதீக வளங்கள் வினைத்திறனான பிரயோகமின்மை, அத்தியாவசிய தேவைகள் கவனிப்பாரற்று இருந்தமை, சேவையை வினைத்திறனுடையதாகும் பணிகள் இடம்பெறாமை முதலிய பல விடயங்கள் புதிய வைத்திய அத்தியட்சகரால் இனங்காணப்பட்டு 20 க்கு மேற்பட்ட கோரிக்கை கடிதங்கள் மத்திய அமைச்சு வரைக்கும் அனுப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஆக்கபூர்வமானவைகளாகவே பார்க்கப்பட வேண்டியிருந்தது.

வைத்தியசாலை குறைபாடுகள் 

மாகாண நிர்வாகத்தில் கண்காணிப்பில் இருந்த வைத்தியசாலையில் காணப்பட்ட குறைபாடுகள் வெளியே செல்லும் போது அதனை பரிபாலனம் செய்தவர்களது தகமையீனம் என்ற கருத்து பொதுவெளியில் உருவாக ஆரம்பித்தது. அது உண்மையான நிலையாகவும் காணப்பட்டது. இதனை மாகாண நிர்வாம் இரசிக்கவில்லை.

இதன் ஒருபடி மேற்சென்ற புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்களது கடமைகள், கடமை நேரங்கள், விடுமுறைகள் முதலியவற்றை கடுமையாக இறுக்கமாக்க ஆரம்பிக்கின்றார். இங்கே தான் ஆரம்பிக்கின்றது பிரச்சினையின் மூலவேர்.

பௌதீக வளங்களிலும் ஏனைய விடயங்கள் பணியாளர்களது விடயங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது கரிசனை கொள்ளாத வைத்தியர்கள் குழாம் தங்களது விடயங்களில் நெருக்கடிகள் உருவாகும்போது அதற்கு எதிர்வினையாற்ற முற்படுகின்றார்கள்.

தென்பகுதி வைத்தியர்கள் மாதத்தில் மூன்றில் ஒரு நாட்கள் மாத்திரமே பணியாற்றுவது, குறித்த வைத்தியசாலையில் இருக்கும் பொது வைத்திய நிபுணர் 11.30 மணிக்கு பின்னர் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவது, ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு குறித்த தனியார் வைத்தியசாலையை நாடுமாறு நோயாளர்களை நிர்ப்பந்திப்பது போன்ற பல விடயங்கள் வைத்தியர்களது சுய கடமை ஒழுக்கத்தில் மீறப்பட்டவைகளாக இனங்கண்டு உறுதிப்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை வைத்தியசாலைக்குரிய நேரடி நிர்வாக அதிகாரியான வைத்திய அத்தியட்சகர் மேற்கொண்டிருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

வைத்திய அத்தியட்சகரை தவறாக சித்தரித்த விடயங்கள்

இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மக்கள் போராட்டத்தில் ஊடகங்களுக்கு மக்களால் உறுதிசெய்யப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்திலேயே பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்களுக்கும் இந்த சமூகத்திற்கும் இருக்கும் நல்உறவுகள் மற்றும் அறிமுகங்களை பிரயோகித்து புதிய வைத்திய அத்தியட்சகரிற்கு நெருக்கடிகளை உருவாக்கி பிரயோகிக்க முனைகின்றார்கள்.

அந்த சந்தர்ப்பத்திலேயே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கம் என்பன இவ்வைத்தியர்களது ஏதுதலிலும் தமது இருப்பையும், நியாயத்தினையும் தக்கவைப்பதற்காக வைத்திய அத்தியட்சகரை தவறானவராக சித்தரிக்க பல விடயங்களை அரங்கேற்றுகின்றார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

இவை அனைத்தும் அவர் பணிக்கு வந்து 03 நாட்களுக்கும் இடம்பெறுகின்றன. நியமனம் பெற்று வந்த வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் மற்றும் செயலாளர், நோயாளர் நலன்புரி சங்க பொருளாளர், உப செயலாளர் மற்றும் தென்மராட்சியின் பிரபல அச்சக உரிமையாளர் ஆகியோர் வடமாகாண பிரதம செயலாளரை சந்தித்து முறைப்பாட்டினை முன்வைக்கின்றார்கள்.

அதற்கு பதிலளித்த பிரதம செயலாளர் வைத்தியசாலையின் செயற்பாடுகளில் மருந்து வழங்கல்களில் மற்றும் நோயாளர்களுக்குரிய சேவைகள் கிடைக்கவில்லையாயின் தனக்கு முறைப்பாடு மேற்கொள்ளும்படியும், இவ்வாறான பொருத்தமற்ற முறைப்பாடுகளுடன் பொது அமைப்புக்கள் என கூறிக்கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை இடையூறு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் எனவும் கடிந்து அனுப்பிவைத்திருந்தார்.

வைத்தியர்களின் செயற்பாடுகள்

 

அன்றைய தினமே தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவராகவும், நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளராகவும் இருக்கும் தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருடன் சந்தித்து தங்களுக்கு எதிராக பிரதம செயலாளரிடம் முறையிடுமாறு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்குரிய பொது வைத்திய நிபுணரான பெண் வைத்தியர் தங்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்து, நோயாளர் நலன்புரி சங்க நிதியில் ஐந்து இலட்சங்களை உங்களது வேலைகளுக்காக எங்களால் வழங்க முடியும் எனவும் தெரிவித்து கலந்துரையாடி வெளியேறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மூன்று நாட்களில் பிரதம செயலாளரிடம் சென்ற குறித்த குழுவினரும் இன்னும் சிலரும் வடக்கு மாகாண ஆளுநருக்கு இவ் வைத்திய அத்தியட்சகர் தொடர்பான முறைப்பாட்டினை முன்னளித்திருக்கின்றார்கள். அவரும் இது எனது அதிகாரத்திற்கு உட்பட்ட நியமனம் இல்லை எனவும், இது தொடர்பில் சேவை வழங்கல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவ்வாறு இருப்பின் தனக்கு அறியத்தருமாறும் இக்குழுவினை அனுப்பிவைத்திருந்தார்.

இதுவரை வைத்தியசாலைக்குள் இருக்கும் சில வைத்தியர்கள் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் நியாயப்படுத்த பொது மட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்புரி சங்கங்களையே கையாண்டுகொண்டிருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் 17.5 மில்லியன் உபகரண உதவி செய்யப்பட்டதாகவும் அவை பாவனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் இன்னும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக செயலாளரின் ஒப்பந்தத்துடன் சமூக ஊடகங்களில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna 

நிதி உதவி

இந்த இடத்தில் 17.5 மில்லியன் நிதி உதவி என்பது தொடர்பில் ஆராய்கையில் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதனை பற்றி அறியவேண்டிய அவசியம் எல்லோருக்கும் உருவாகின்றது.

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது 2019 ஆம் ஆண்டு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் சமூக சேவைகள் சிலவற்றை வழங்குவதினை நோக்கங்களாக கொண்டு சாவகச்சேரி பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டதொரு அமைப்பாகும்.

இது சட்டபூர்வமாக உள்நாட்டு நிதியீட்டங்களில் நன்கொடைகளை திரட்டி பிரதேசத்து மக்களது வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்ட அதிகார வரம்புடையதொரு அமைப்பாகும்.

2019 காலப் பகுதிகளில் தென்மராட்சியின் அரசியல் மையப் புள்ளிகளாக தங்களை உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் காண்பித்த நபர்கள் தங்களது பொதுப்பணிகள் மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு சட்டரீதியற்று இயங்கிய அமைப்பினை 2019 பதிவு செய்ததன் ஊடாக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என வெளிப்படுத்திக்கொள்கின்றார்கள்.

இந்த அமைப்பு அன்றைய காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிடியிலேயே இருந்திருந்தது. அதன் பதிவுகள் பின்னாட்களில் இடம்பெற்றிருந்தாலும் இவ் அமைப்பின் பெயராலேயே தமிழ் காங்கிரஸ் சாவகச்சேரி நகரசபையில் கணிசமான பலத்தினை அந்த காலத்தில் பெற்றிருந்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

உள்நாட்டு போர்

 

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் தொடர்பில் மிக முக்கியமான இன்னொரு விடயமும் இருக்கின்றது. 2009 உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் பிரித்தானியா வாழ் தென்மாரட்சி வைத்தியர் ஒருவர் தனது நிபுணத்துவம் சாராத முதலீடுகளில் ஈட்டும் இலாபங்களை பிரித்தானியாவில் வெள்ளையடிப்பதற்காக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒரு அறக்கட்டளையை பிரித்தானியாவில் பதிவு செய்கின்றார்.

இதன்பின்னர் 2019 காலப்பகுதியில் சாவகச்சேரியில் தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒன்றை அரசியல் அபிமானிகளது ஆதரவுடன் ஒரு சமூக சேவைகள் சங்கமாக பதிவு செய்யப்படுகின்றது. தொடர்ந்து தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது இரண்டும் ஒரே அலகுதான் என சர்வதேசத்திலும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாகாண சபையால் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

 

இதில் பாதி நிதிக்கு கட்டடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டடம் அமைக்கப்படுகின்றது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றது.

இவ்விடத்தில் தொடர்ச்சியை நிறுத்தி சாவகச்சேரி வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்காமைக்கான அடிப்படைக் காரணம் குறித்த ஒதுக்க நிதியானது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் ஆகியோரது திட்டமிட்ட செயற்பாட்டினால் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றியமைத்ததே முதன்மைக் காரணம் என்பதை ஆணித்தரமாக அழுத்திக்கொண்டு, சம நேரத்தில் இவ் வைத்தியசாலையின் குறித்த பிரிவுக்குரிய ஆளணி உருவாக்க கோரிக்கையை மாகாண சுகாதார வைத்திய அதிகாரியான கேதீஸ்வரன் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைத்து முன்னளிக்காத நிலையிலேயே இன்று வரை சாவகச்சேரி வைத்தியசாலை தரம் இரண்டு பீ வகை ஆதார வைத்தியசாலையாக இன்றுவரை தொடர்கின்றது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு விஸ்தரிப்பு சந்தர்ப்பத்தில் சரியாக இதய சுத்தியுடன் நேர்மையாக கடமையாற்றியிருப்பின் இன்று சாவகச்சேரி வைத்தியசாலை ஏ தர வைத்தியசாலையாக உரிய ஆளணியுடன் தரமுயர்த்தப்பட்டிருக்கும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி

 

அக்காலகட்டத்தில் தென்மராட்சியை சேர்ந்த ஒரு வைத்தியரே வைத்திய அத்தியட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார்.இந்த காலத்திலேயே ஊழல்கள் வளர ஆரம்பித்தன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டியுள்ளது.

குறித்த வைத்திய அத்தியட்சகரது காலத்திலேயே நோயாளர் காவு வண்டியில் தனது காணிகளில் தேங்காய் ஏற்றுவது, வைத்தியசாலை தளபாடங்களை திருடியது, கட்டுமான பொருட்களை திருடியது, பிணக் கூறாய்விற்று கொத்துறொட்டியும், கொக்க கோலா ஒன்றரை லீட்டரும் ஆயிரம் ரூபாவும் என பிறாண்ட் ஆகியிருந்தது. அங்கே ஆரம்பிக்கின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி. உள்நாட்டு யுத்த காலங்களிலும் அதனை அண்மித்த காலங்களிலும் கடவுள்களாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், வைத்தியர்களும் மக்களால் பார்க்கப்பட்டதற்கு இன்னும் சான்றாக வைத்தியசாலை முகப்பில் கடவுளுக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு நகரும் காலகட்டத்தில் பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்திகழக தலைவர் வைத்தியரும் சுகாதார வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரனும் மிகவும் உற்ற நண்பர்கள்.

இச்சந்தர்ப்பத்திலேயே சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனால் முன்மொழியப்பட்ட கோரிக்கையாக சாவகச்சேரி வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை இயங்கவைப்பதற்கு என புலம்பெயர் சமூகங்களில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் நிதி சேகரிக்க ஆரம்பிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே பல்வேறு நாடுகளில் தென்மராட்சி அபிவிருத்திக்கு என கூறிக்கொண்டு பெரும் தொகையான நிதியானது சேகரிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

உச்ச வரி

இவ்வகையில் அனுப்பிவைக்கப்பட்ட பெரும் தொகை நிதிகளும் பிரித்தானியா வாழ் உச்சவரி செலுத்தும் நபர்களால் வைத்தியரின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது. அவ்வாறு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும்போது உச்ச வரி செலுத்துனராக காண்பிக்கப்பட்டு தங்களது பணம் அல்லாத பணத்தினை நன்கொடையளித்தவர்களது ஆண்டுவரிப்புரள்வு 12.5 சதவிகிதத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றது.

இவ்வாறு பல மில்லியன் ரூபாக்கள் நன்கொடையளிக்கப்பட்டும் வரிவிலக்களிக்கப்பட்டும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற பிரித்தானிய அறக்கட்டளைக்கு கிடைக்கின்றது.

இதில் தொடர்பற்ற பலர் நன்கொடையாளர்களாக காண்பிக்கப்படுவதுடன் நன்கொடை வழங்கிய உண்மையான நபர் கூட அதனை தன்னுடைய நன்கொடை என அடையாளப்படுத்தும் அளவிற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஒரு பெறுவனவுச் சிட்டடையை ஏனும் வழங்கவில்லை.

ஒரு வகையில் சொல்வதென்றால் மன ஆறுதலுக்கும், திருப்திக்கும் நன்கொடையளித்தவர்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதனை அறிந்தவர், உணர்ந்தவர் சிலர் அறியாமல் உணராமல் இன்னும் இருப்பவர் பலர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

 

இவ்வகையில் பிரித்தானியாவில் திரண்ட நிதியை இலங்கைக்கு வழங்கும் முன்னர் உலகில் மிக சிறப்பானதொரு தொண்டமைப்பினை பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் தேடுகின்றார். அவரது நட்பு வட்டங்கள் ஊடாக அவுஸ்திரேலியா றொட்றிக் கழகத்தினை அறிந்து அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றார்.

அந்த அமைப்பு தனது செயற்திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில துறை நன்கொடைகளுக்கு கிடைக்கும் நன்கொடைத் தொகையின் ஒரு மடங்கினை தங்களது அமைப்பினால் ஒரு வரப்பிரசாதமாக பயனாளிக்கு வழங்கும் தகைமை உடையது.

அந்த அடிப்படையிலேயே கணக்கு அறிக்கையில் 17.5 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் அவுஸ்திரேலிய றொட்றி கழகத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

 

இதற்காக பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலிய றொட்றி கழகத்திற்கு வழங்கப்பட்ட தொகையான இலங்கை ரூபாக்களில் 8.75 மில்லியன் ரூபாக்களாக அமைய வேண்டும்.

இவ் 8.75 மில்லியன் இலங்கை ரூபாக்களுள் பிரித்தானிய நன்கொடை 100 சதவிகிதம்இ 12.5 சதவீத வரிவிலக்களிப்பு மற்றும் பிரித்தானிய அறக்கட்டளை அனுகூலம் 25 சதவீதம் என்பன அடங்கியுள்ளன.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! | Chavakachcheri Hospital Issue Dr Archchuna

இக்கணிப்பின் அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட்ட உண்மைத்தொகையானது 6.363 மில்லியன் இலங்கை ரூபாக்கள் (இன்றைய நாணய மதிப்பில் இலங்கிலாந்தின் 16,317 பவுண்ஸ்கள்) மாத்திரமே ஆகும்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்ட பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்திக் கழக அறக்கட்டளைத் தலைவர் கேதீஸ்வரனுக்கும், யாழ் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்திக்கும் பல வரப்பிரசாதங்கள், பயண ஒழுங்குகள் உட்பட்ட பல விடயங்களை தனது அறக்கட்டளையால் வழங்கி திருப்திப்படுத்தி வைத்திருக்கின்றார்.

தொடரும்....

https://tamilwin.com/article/chavakachcheri-hospital-issue-dr-archchuna-1720835635?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!

பாகம் - 02

யாழ் வைத்தியத்துறையில் மாத்திரமல்ல  இலங்கை முழுவதிலும் பாரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டுள்ள வைத்திய காலநிதி அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய தேடல்களை மேற்கொண்டபோதுஇ பல அதிர்ச்சிகரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. மருத்துவத்துறையை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற ஏராளமான சீர்கேடுகள்இ முறைகேடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்கள், குற்றச்சாட்டுக்கள்இ சந்தேகங்கள் போன்றனவற்றின் தொகுப்பு இது: 

தங்கமுட்டையிடும் வாத்து

ஏக காலத்தில் உள்ளூர் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் என்பதன் தங்கமுட்டையிடும் வாத்து என்ற தத்துவத்தினை அப்போதைய தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் குறிப்பாக மறைந்த ஒரு சாவகச்சேரி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தவிர வேறு யாருக்கும் இதன் விளைவுகளும் விபரங்களும் தெரியாது இருந்துள்ளனர்.

இன்று தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை வைத்திருப்பவர்கள் நகரசபை ஆட்சியில் காத்திரமான இடங்களைப் பெறமுடியும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு உடைய சில பிரமுகர்கள் மல்லுக்கட்டி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்திற்குள் நுழைந்திருக்கின்றார்கள்.

 

தற்போது நகர சபையை கைப்பற்ற வேண்டும் என்ற மமதையில் தமிழரசுக் கட்சியானது தனது வேட்பாளர் பெருமக்களையும் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வேட்பாளராக தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவர் தலைமையில் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

அவர்களது துரதிஸ்டம் தேர்தல் பின்சென்று விட்டது, இந்த ஊழல் முன்வந்து விட்டது. இது அவர்களது அரசியல் கனவில் நிச்சயம் மண் அள்ளிப்போடும் என்பது தவிர்க்க முடியாதது.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகமானது உத்தியோக பற்றுடைய வகையில் தனது கணக்கிற்குள் உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது றோட்டறிக் கழகம் வழங்கிய நன்கொடைச் சாதனங்களுக்கு சொந்தங்கொண்டாடிக்கொண்டு அவை இயங்கவில்லை எனவும், அதற்கான சூழல் இல்லை எனவும் வைத்தியசாலை புதிய அத்தியட்சகர் தொடர்பில் பல விமர்சனங்களை தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் முன்வைக்கின்றது.

அபிவிருத்தி கழக நிலைப்பாடுகள்

 

அதன் விளைவே வைத்தியரது செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிலைப்பாடுகளை பெறுநர் முகவரி அற்ற கடிதமாகவும் கையொப்பம் இட்டவரது பெயர், பதவி அற்ற கடிதமாகவும் வைத்திய அத்தியட்சகரை மலினப்படுததும் ஒரு ஆவணமாக வைத்திய அத்தியட்சகரது முகநூலில் அணைக்கப்பட்டிருந்தது.

ஒரு பொது அமைப்பின் செயற்பாடு என்ன? சமூகத்தில் அதன் நோக்கம் என்ன? சமூகம் நோக்கிய அமைப்பின் தேவை என்ன? அதன் நிர்வாக ஒழுங்குகள் என்ன? என்பவற்றை அறிந்திராத ஒரு கட்டமைப்பே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதை இச்சிரத்தையல்லாத நடைமுறைகள் அனைத்தும் நிறுவி நிற்கின்றன.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்திய அத்தியட்சகருக்கு கடமை உத்தரவு இடும் அதிகாரம் உடைய வகையில் செயற்பட ஆரம்பிக்கும் போது வைத்திய அத்தியட்சகர் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பகிர ஆரம்பிக்கின்றார்.

உண்மையில் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்தினர் இது விடயம் தொடர்பில் கிலி கொள்ள தேவையிருக்கவில்லை, காரணம் அவர்களிடம் யாரும் நன்கொடையை வழங்கவும் இல்லை அவர்கள் யாருக்கும் நன்கொடைகள் வழங்கவும் இல்லை, அது தொடர்பில் அவர்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது.

இது எவையும் முறையாக கணக்கு வழக்கிற்குள் இலங்கையில் அகப்படவில்லை இவற்றுக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரிக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை.

திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சை

மாறாக வைத்தியர் அருச்சுணா வெளியிட்ட காணொளியில் சத்திரசிகிச்சைக் கூட செயற்படுநிலை மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக கழக நன்கொடை பொருட்களது நிலை தொடர்பான அறிவித்தலைக் கண்டு பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்தி கழக அறக்கட்டளைத் தலைவர் வைத்தியர் கடும் குழப்பம் அடைகின்றார்.

2024 ம் ஆண்டு இவ்வருடம் அவுஸ்திரேலிய றோட்டறிக் கழகத்தின் பிரதிநிகள் இருவரும்,  இலங்கை றோட்டறிக் கழகத்தினரும் இணைந்து செயற்திட்ட இறுதிப்பாடுகள் மற்றும் இயங்குநிலை தொடர்பிலான இறுதி அறிக்கைக்கான அவதானத்திற்காக கள விஜயத்தினை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மேற்கொள்கின்றார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

இச்சந்தர்ப்பத்தில் வெலவெலத்துப்போன பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் உடனடியாக அப்போது வைத்தியசாலையில் அத்தியட்சகராக இருந்த வைத்தியர் குமாரவேள் அவர்களைத் தொடர்புகொண்டு உடனடியாக இந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக்கூடம் இயங்குவதை போன்றதொரு ஏற்பாட்டினை மேற்கொண்டு ஆய்வுக்கு வருபவர்களுக்கு அதனை இயங்கு நிலையில் உள்ளது என்ற தோரணையில் அறிக்கையிட அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் வண்ணம் மன்றாட்டமாக வேண்டிக்கொள்கின்றார்.

உடனடியாகவே வைத்தியசாலை சத்திரசிகிச்சைக்கூடம் தயாராகின்றது. சத்திரசிகிச்சைக்கு உட்படும் நோயாளியைத் தவிர ஏனைய விடயங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றது.

இந்த செக்கனில் நோயாளி உள்ளீர்க்கப்பட்டாலும் சத்திரசிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக உணரவைப்பதற்காக உள்ளிருந்த வைத்தியர்கள் தாதியர்கள் முகக் கவசம் கூட அணிந்து தயார்நிலையில் நோயாளிக்காக காத்திருப்பதுபோல் களவிஜயக் காரருக்காக காத்திருக்கவைக்கப்பட்டனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

முகக்கவசம் அணிவிக்கபட்டது, கிருமித் தொற்றுக்காக அல்ல களவிஜயகாரருக்கு காண்பிக்கப்பட்ட போலி ஆளணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுவிடக்கூடாது என்ற உத்திக்காக ஏற்பாடுகள் என்பது பின்நாட்களில் தான் தெரியவந்தது.

இவ்வாறு திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சையை நாடகமாக நிகழ்த்திக்காட்டிய பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் இவ்விடயம் தற்போது வெளிவருவது தனக்கு ஆபத்து என உணர்ந்து தற்போதைய சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருடன் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் எவ்வதிதத்திலும் கருத்து மோதலிலோ சேறு பூசலிலோ முற்படவேண்டாம். அமைதி காத்து நடவுங்கள் என அறிவுறுத்தி பல சூம் கூட்டங்களையும் வைத்தியர் மேற்கொண்டிருந்தார்.

புனிதராக்கும் பணி

இதில் ஒரு சாரார் பிரித்தானியாவில் இருந்து நிதி கிடைக்காவிட்டால் இங்கே நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் அமைதியாக அவரது கருத்தை செவிமடுத்து அவரைப் புனிதராக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இன்னும் ஒரு சாரார் வைத்தியசாலைக்குள் இருக்கும் ஏனைய வைத்தியர்கள் குறிப்பாக பொது வைத்திய நிபுணரது ஆலோசனைக்கு அமைவாக பொது மக்களது எண்ணக் கருத்துக்களை பிரதிபலிப்பது போன்றதொரு அழுத்தத்தினை தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஊடாக வைத்திய அத்தியட்சகர் மீது பிரயோகித்தர்கள்.

இவைஅனைத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் எடுபடவில்லை. வைத்திய அத்தியட்சகர் தனது செயற்பாடு மக்கள் வரவேற்பை பெற்றுக்கொள்கின்றது என்பதையும் தனது நியாயமான செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கின்றார்கள்.

மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்றவிடயத்தினை அறிந்து தனது நிர்வாகப் படிமுறைகளை தாண்டியும் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

நிர்வாக சிக்கல்கள்

இவ்வாறு நாட்கள் நகர நகர உள்ளக சிக்கல்கள் வலுத்தவண்ணம் முன்னகர்கின்றது. 03.07.2024 மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவை நியமித்து ஒரு கடித்துடன் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றார்.

ஏற்கனவே மத்திய அரசால் பெயர் குறித்து பதவியில் ஒருவர் உள்ள நிலையில் மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து நிர்வாக சிக்கல்கள் ஒன்றினை தனக்கு இல்லாத அதிகாரத்தினை அமுல்ப்படுத்தி உருவாக்கியிருக்கின்றார்.

இதனை மேற்கொள்ளுமாறு எந்தவொரு உத்தியோகப்பற்றுடைய அறிவுறுத்தல்களும் மத்திய அரசில் இருந்து மாகாண சபைக்கு அத் திகதிவரை உத்தியோகபற்றுடையவகையில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கவில்லை.

மத்திய சுகாதார அமைச்சின் வைத்திய அத்தியட்சகர் குறித்த கடிதத்திற்கு அமைவாக மாகாண பணிப்பாளரது வைத்திய அத்தியட்சகருக்கு கடமைகளை கையளிக்க முடியாது என்றும், தனக்கு நியமனம் வழங்கிய மத்திய அரசினால் அந் நியமனம் மீளப்பெற்று அல்லது மாற்றத்திற்கு உட்பட்டால் மாத்திரமே தான் அதனை கவனத்தில் கொள்வேன் எனவும் இவர்களைத் திருப்பி அனுப்பிவைக்கின்றார்.

தவறான அதிகாரப்பிரயோகத்தினால் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பத்திற்குள் கொண்டுசென்றது மாகாண சுகாதார வேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவே.

நிர்வாக ரீதியாக மாகாணம் மற்றும் மத்திய அரசு மோதலை தனக்குரிய அதிகாரக் கையளிப்பு அற்ற நிலையில் தவறாக பிரயோகித்து திட்டமிட்ட முறையில் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் செயற்பாடுகளுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே அழைத்துச் சென்றிருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் மறுநாள் 04 ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலைக்குரிய கடமை வைத்தியர்கள் அனைவரும் கடமையை புறக்கணித்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அறிக்கையிடுகின்றார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

 

அவர்கள் அனைவரும் விடுதி கண்காணிப்பு,  வெளியக நோயளர் பிரிவு மற்றும் கிரமமான சிகிச்சைக்குரிய நோயாளர்கள் அனைவருக்குமுரிய சேவைகள் அனைத்தையும் முடக்கிவிடுகின்றார்கள். குறித்த தினத்திலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தனியான வைத்திய அத்தியட்சகரால் கவனிக்கப்படுகின்றது.

விடயம் அடுத்த நிலைக்கு சென்று பணிப்பகிஸ்கரிப்புக்கள் தொடரும் நிலையிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்ப்பாண தொழிற்சங்க நிர்வாகத்தினர் சிலர் மறுதினம் சாவகச்சேரி வைத்திய சாலைக்குள் சென்று அங்கே ஒரு குழுக்கலந்துரையாடலை மேற்கொள்கின்றார்கள்.

இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர்,  மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் உட்பட ஒரு தொழிற்சங்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது.

ஒரு அலுவலக வளாகத்தினுள் தொழிற்சங்க நிமித்தம் பிற அங்கத்தவர்கள் கலந்துகொள்வதாயின் குறித்த நிறுவனத் தலைவரது அனுமதிபெற்றே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தவிர அன்றைய தினம் குறித்த தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது கடமைகளில் முறையாக விடுப்பு பெற்றே கலந்துகொண்டிருக்க வேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகள் பதிவு

தனது வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்தறிய சென்ற வைத்திய அத்தியட்சகர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.மாவட்ட பிரதிநிதி சட்டவைத்திய அதிகாரி மயூரன் அவர்களால் தாக்கப்பட்டு அவரது பணமும் கையடக்க தொலைபேசியும் மாகாணப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனையவர்கள் முன்னிலையில் பறித்தெடுக்கப்படுகின்றது.

இவ்விடயம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 | Background Chavakachcheri Hospital Controversies

இதில் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒரு முறைப்பாடும் வெளியில் இருந்து வருகை தந்தவர்கள் இரண்டு முறைப்பாடும் மேற்கொண்டுள்ளனர்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் நிர்வாக கட்டமைப்புக்கு உட்பட்டு வைத்திய அத்தியட்சகருக்கு மாத்திரமே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் தகுதி இருந்திருக்கின்றது.

ஏனைய இருவரும் பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்வதாயின் சில அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ள முடியும்.

சமநிலையற்ற நீதியின் ஆரம்பம்

அந்த வகையில் எவையும் இடம்பெறவில்லை. காரணம் மாகாண சுகாதார வைத்தியப் பணிப்பாளர் ஒரு சகோதர மொழிக்குரியவர் என்பதால் ஏனைய இரு முறைப்பாடுகளும் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

குறைந்தபட்சம் கடமையில் உள்ள ஒருவர் மீது அவரது வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் கடமைக்கு பங்கம் விளைவித்தல் என்பன உறுதிசெய்யப்பட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றததில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

இங்கே அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் பொலிஸாரல் மேற்கொள்ளப்படவில்லை.பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளனர் என்பது மிகவும் உறுதியாகின்றது.

தொடரும்..... 

https://tamilwin.com/article/background-chavakachcheri-hospital-controversies-1721005850

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/7/2024 at 20:00, ஏராளன் said:

தவறான அதிகாரப்பிரயோகத்தினால் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பத்திற்குள் கொண்டுசென்றது மாகாண சுகாதார வேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவே.

ம் ..... தங்களது சுயநலத்திற்காக சிங்களத்துக்கு தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, வரவேற்பளித்து உள்ளதையும் இழந்து நிற்கிறோம், படித்த கூட்டம் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் வேலை...... ஒவ்வொரு துறையாக அவர்களிடம் நாமே கையளித்துவிட்டு பிறகு குத்தி முறியிறது.  எனக்கு ஏற்கெனவே தெரியும், சிங்களத்தை நம்பி அர்ஜுனா பேட்டி கொடுக்கிறார் முதுகிலே குத்து வாங்கப்போகிறார் என்பது. சிங்களத்தால் எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும் எங்களது சுயநலம் மாறாது, புத்தியும் வராது. இதுக்குள்ள தோத்துப்போன அரசியல் புழுக்கள் வேற நுழைந்து அரசியல் செய்து தம்மை பிரபல்யப்படுத்த பிரயத்தனம் எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!

பாகம் - 03

தொடர்ந்து 05ஆம் திகதியும் வைத்தியர்கள் கடமைக்கு சமூகம் தரவில்லை, பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்துகின்றார்கள். தங்களது பணி பகிஸ்கரிப்பினை தொழிற்சங்க நடவடிக்கை என அர்த்தப்படுத்துகின்றார்கள்.

 

ஒரு தொழிற்சங்க நடவடிக்கை

ஒரு தொழிற்சங்க நடவடிக்கையானது தொழில் வழங்குனருக்கும் தொழில் புரிபவருக்கும் இடையேயானதொரு சமரசப் புள்ளியே ஆகும். இங்கே வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக வைத்தியர்கள் பகிஸ்கரிக்கின்றார்கள்.

இது முதலில் மேலதிகாரிக்கு கட்டுப்படாது சேவை வழங்கலைக் குழப்பத்திற்கு உட்படுத்தியமை, மக்களது அத்தியாவசிய சேவையை வழங்காமை, அரச நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற விடயங்களின் கீழ் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டுமே தவிர அதனை ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாக கருதவேண்டிய அவசியம் இல்லை.

தனி மனித முரண்நிலை

இது ஒரு தனி மனித முரண்நிலைத் தீர்மானமே அன்றி தொழிற்சங்க நடவடிக்கையாக அமையாது. அவ்வாறு இதனை தொழிற்சங்க நடவடிக்கையாக கருதுவதாயின் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு என சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் இருந்து அது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதனை தொழிற்சங்க நடவடிக்கை எனலாம், இங்கே சாவகச்சேரி வைத்திய சாலையைத் தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கடமையாற்றியிருக்கின்றார்கள்.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 | Chavakachcheri Hospital Controversy

ஆகையால் இது நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத வைத்தியர்கள் தனிப்பட்ட முறையில் பணியை தவிர்த்து பொதுமக்களது சேவையை முடிக்கியதாகவே கருதப்பட வேண்டும்.

மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளராக 14.07.2016 தொடக்கம் 04.09.2022 வரைக்கும் கடமையாற்றிய கேதீஸ்வரனுக்கு இவைகள் தொடர்பில் விடயதான தெளிவு இல்லை என யாரும் கூறிவிடவோ இத் தவறிலிருந்து விடுபட்டுக்கொள்ளவோ முடியாது.

 

இவ்வாறான நிலையில் 04ஆம் திகதி பிராந்திய வைத்திய அதிகாரிக்கு குறித்த வைத்தியர்கள் அறிக்ககையிட்டதும் இத்துடன் தொடர்பற்ற வேறு வைத்தியர்களை அனுப்பியேனும் குறித்த வைத்தியசாலையின் இயல்பு நிலையை தக்கவைக்கவேண்டிய கடமை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்குரியது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 | Chavakachcheri Hospital Controversy

அவர் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் 04ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து வந்த 05 தினங்களும் மேற்கொண்டு எந்த வைத்தியரையும் கடமைக்கு அனுப்பிவைக்கவில்லை அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் முனைப்புக்காட்டப்பட்டது என்பதனை எண்பிக்கமுடியவில்லை.

இது ஒரு நிர்வாக ரீதியாக பாரதூரமான குற்றமாகும் இதனை தவிர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் பிராந்திய வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்படவில்லை. அன்றையதினம் தொழிற்சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பிராந்திய வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பத்திரண ஆகியோர் கருத்துரைக்கின்றார்கள்.

தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டியமை

நிர்வாக பதவிகளில் கடமையாற்றுபவர்கள் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் சேவைகள் முடங்காதவாறு வினையாற்றவேண்டும். மாறாக அதனை ஊக்குவிப்பதோ அங்கீகரிப்பதோ அவர்களை பணியிடை நீக்கம் செய்வதற்கு உகந்ததொரு தண்டிக்கவேண்டியதொரு குற்றச்சாட்டாக அமையும்.

மறு வகையில் இத் தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டி வைத்தியசாலையை செயற்பட முடியாது முடக்கிய குற்றச்சாட்டுக்கு வைத்தியர்கள், பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி ஆகியோருடன் மாகாண பணிப்பாளரும் அடங்குகின்றார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 | Chavakachcheri Hospital Controversy

இப் பிரச்சினை தொடர்பில் இவ்இரு அதிகாரிகளும் பல ஊடக சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஊடக சந்திப்பினை அனுமதி பெற்றுக்கொள்ளாது மேற்கொள்ள முடியாது.

அவ்வாறு மேற்கொள்வதாயின் பிரதம செயலாளரது எழுத்து மூல அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குறித்த அனுமதிகள் முறையாக பெறப்பட்டிருக்கவில்லை, இவ் விடயத்தின் பாரதூரம் காரணமாக எதிர்வரும் நாட்களில் முற்திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினைப் பெற்று கோவைப்படுத்தி வைத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கைதுக் கோரிக்கை

தொடர்ச்சியாக 05ஆம் தினமான ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியசாலைச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை, மாலை நேரத்தில் மத்திய அரசின் திகதி மற்றும் கையொப்பம் அற்ற ஒரு கடிதத்துடன் பதவியை விட்டு செல்லுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு நேரில் சென்று அழுத்தம் தெரிவிக்கின்றார்.

குறித்த கடித்தினை வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுக்கின்றார். உடனடியான மாகாண பணிப்பாளர் தான் மேற்கொண்ட பழைய பொலிஸ் முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த வைத்திய அத்தியட்சகரைக் கைதுசெய்து வைத்தியசாலை வளாகத்திற்கு வெளியே கொண்டுசெல்லுமாறு பொலிஸாரிடம் கோருகின்றார்.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 | Chavakachcheri Hospital Controversy

சகோதர இனத்தவர்களான மாகாண பணிப்பாளரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைதுக்கு முற்படுகின்றார்கள். அத் தகவலை மக்கள் அறிகின்றார்கள் அப்போதிருந்தே மக்களால் முற்றுகைப்போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

மறுநாள் மத்திய அரசின் சுகாதார அமைச்சின் அத்தியட்சகர் நியமனத்திற்குரிய மேலதிகச் செயலாளரது கடிதம் வைத்திய அத்தியட்சகருக்கு  அனுப்பிவைக்கப்படுகின்றது. வைத்திய அத்தியட்சகர்  வெளியேறும் தருணத்தில் பொலிஸாரினால் கைது செய்ய வேண்டும் என பொலிஸ் முறைப்பாட்டாளர்களான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, அரசமருத்துவ அதிகாரிகள் தொழிற்சங்கம் மற்றும் மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோர் முனைகின்றார்கள்.

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03 | Chavakachcheri Hospital Controversy

இவை அனைத்தும் மக்கள் திரட்சிக்கு முன்னால் செயலற்று போகவே வைத்திய அத்தியட்சகர் வெளியேறுகின்றார். மாகாணப் பணிப்பாளர் வைத்தியசாலையின் கவனிப்பு பணிகளை பாரமேற்கின்றார். குறித்த மாகாண வைத்தியசாலைக்கு ஒருபொருத்தமானவரை தற்காலிகமாக நியமிக்க பரிந்துரைக்கும்வண்ணம் மத்திய சுகாதர அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் ஒருவரால் கோரப்படுகின்றது.

அதற்கு அமைவாக மாகாண வைத்திய பணிப்பாளரால் வைத்தியர் ரஜீவ் முன்மொழியப்படுகின்றார். அவரது கடமையைக் கவனித்தலுக்கான நியமனத்தினை மத்திய அரசு வழங்கி பணிக்கமர்த்தியிருக்கின்றது.

வகைதொகையின்றி திரண்ட மக்கள் மத்தியில் பின்வரும் கேள்விகள் விடைக்காக காத்திருக்கின்றன.

  1. தமது தனிப்பட்ட வகையில் பணியை பகிஸ்கரித்த வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
  2. பணிப்பகிஸ்கரிப்பிற்கு மாற்று ஒழுங்கு மேற்கொள்ளாத பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  3. தனக்கு பகிரப்படாத அதிகாரத்தினை வைத்து மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து குழப்பங்களை உருவாக்கிய மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  4. மாகாணப்பணிப்பாளர் மத்திய அரசின் நியமனத்தினை மீறி சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்போது அவருடன் வைத்திய அத்தியட்சகர்களாக நியமனம் பெற்ற 11 ஏனைய வைத்திய அத்தியட்சகர்களது நிலை சவாலுக்கு உட்பட்டதா?
  5. வைத்தியசாலை 05 நாட்கள் சேவை வழங்காமைக்கு மாகாண நிர்வாகம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  6. வைத்திய சாலை நேரங்களில் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  7. வைத்தியர்களை தவறான வழிநடாத்திய சிரேஸ்ட வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  8. கடமைக்கு சமூகம் தராத 05 தினங்களுக்கும் குறித்த வைத்தியர்களது விடுமுறைகள் சம்பளமற்ற விடுமுறைகளாக  கருதப்படுமா?
  9. சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடும் வைத்தியர் அருச்சுணா மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  10. வைத்திய சாலையில் காணப்படும் நன்கொடைகளை பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர்கள் அவற்றை அரச நடைமுறைகளுக்கு அமைவாக பெற்றுக்கொண்டார்களா? அதற்குரிய அனுமதிகளை உரிய அலகுகளில் இருந்து பெற்றிருந்தார்களா?
  11. பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையே செயற்திட்ட உடன்படிக்கை உள்ளதா? அதனை தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் வெளிப்படுத்த முடியுமா?
  12. பிரித்தானியா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் தனியாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களை குற்றம்சாட்ட முடியுமா?
  13. தனக்கு கிடைக்கும் நன்கொடைகளைத் தாண்டி குறித்த வைத்திய சாலைச் செயற்திட்டத்திற்கு என நிதி சேகரித்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரித்தானியா அவற்றை உரிய பயனாளிக்கு வழங்காது தங்களுடைய கணக்கில் பேணுவதனை நன்கொடையளித்த பெருமக்கள் அனுமதிக்கின்றார்களா?
  14. இயங்காத ஒரு சத்திரசிகிச்சை கூடத்தினை இயங்குகின்றது என்ற வகையில் அவுஸ்ரேலிய றொட்றிக் கழகத்திற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழக சாவகச்சேரி நிர்வாகத்தினரும், பிரித்தானிய நிர்வாகத்தினரும் காண்பித்தது நேர்மையான விடயமாகுமா?
  15. பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஆதரவு அளித்து காணொளி பதிவுகளையும் கூட்டங்களையும் நடாத்தி நிதி திரட்ட நம்பிக்கையை வழங்கிய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்தி உரிய அனுமதிகளை பெற்றதன் அடிப்படையிலேயே இவற்றை மேற்கொண்டிருந்தார்கள்?
  16. தொழிற்சங்க பிரதிநிதியாக வைத்தியர் மயூரன் சாவகச்சேரி வைத்தியாலை வைத்திய அத்தியட்சகரை தாக்கியமைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
  17. மாகாண மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகள் தங்கள் கடமை தொடர்பில் தனியாக பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ள முடியுமா?
  18. பிரித்தானியாவில் திரட்டப்பட்ட நிதி தொடர்பில் அரச நிறுவனங்கள் பொறுப்பு கூற முடியுமா?
  19. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவிடம் இருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை செயற்திட்டத்திற்கென திரட்டிய மொத்த நிதி எவ்வளவு? அதனை எவ்வகையில் உறுதிசெய்வது?
  20. அதில் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள் உட்பட மிகுதியாக எவ்வளவு தொகை காணப்படுகின்றது? எங்கே காணப்படுகின்றது? எப்போது எவ்வகையில் வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும்? அதற்குரிய உத்தரவாதத்தினை யாரால் வழங்கமுடியும்?
  21. பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை என்ன காரணத்திற்காக பிரித்தானிய அறக்கட்டளை ஆணையகம் அலுகூலம் பெற முடியாத அமைப்பாக முன்னைய ஆண்டுகளில் பிரகடனம் செய்தது? அதில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன? இங்கே நிதிச் சலவையாக்கல் நடைமுறைகள் இடம்பெற்றுள்ளனவா? 
  22. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியும், தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவும் தனிப்பட்ட வெவ்வேறு நோக்கங்களை உடைய சங்கமும் அறக்கட்டளையும் ஒன்றையொன்று எவ்வகையில் சார்ந்திருக்கின்றன? இவர்களுக்கிடையேயான ஒப்பந்தம் என்ன? அதனை  இலங்கை அரசு அங்கீகரித்திருக்கின்றதா?
  23. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்வதை சமூக வேவைகள் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி அங்கீகரிக்கின்றதா?
  24. இவ்விரு அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கும்  இலங்கை அரசின்கீழாகவா அல்லது பிரித்தானிய அரசின் கீழாகவா நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?
  25. இவர்களது முறையான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த கணக்கறிக்கைகளை சட்டவலுவுடையதாக பகிரங்கமாக வெளிப்படுத்தமுடியுமா?
  26. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் செயற்பாடுகள் அரசியல் சார்ந்தும் பக்கச்சார்பு உடையதாகவும் மேற்கொள்ளும் விடயங்கள் நிர்வாகங்களது முடிவில் மேற்கொள்ளப்படுகின்றனவா அல்லது ஒரு சிலரது கைகளில் தங்கியுள்ளனவா?
  27. தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் தனது கணக்குகளின் ஊடாக வழங்காத பொருட்களை தாங்கள் வழங்கியதாக காண்பிப்பது சட்டவலுவுடையதா? அதனை காரணம் காட்டி நிர்வாக செயற்பாடுகளை சீரழிப்பது ஏற்புடையதா?
  28. தென்மராட்சி அபிவிருத்தி கழகங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் உள்வாங்கப்படுமா? 
  29. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்தியசாலை நிர்வாகத்தில் தலையிட முடியுமா?
  30. தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்திற்கும் தமிழ் காங்கிரசிற்கும் இருந்த தொடர்பு என்ன?
  31. தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
  32. வைத்தியசாலையில் முறையாக செயலாற்றுகைக் கணக்காய்வுகள் உடனடியாக இடம்பெறுமா?
  33. பொது வெளியில் இவ்வளவு பிரச்சினைகளும் வெளியாகிய பின்னர் இன்றுவரை மாகாணத்தின் மற்றும் மத்திய அரசின் ஆய்வுக்குழுகள் களஆய்வினை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன?

இக் கட்டுரையானது இக்குழப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் ஆகிய தரப்புக்களிடம் ஆழமாக திரட்டிய தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு பாகம் பாகமாக வெளியிடப்பட்டது.

சிற்சில விடயங்கள் நீதிமன்ற படிகளில் தீர்வைநாடும்போது வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டபின்னர் வழக்கு விபரங்கள், வெளிவந்த பிரச்சினைகள், தீர்க்கப்பட்ட விடயங்கள், தீராத குறைகள், தப்பித்த வழிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இத்தொடர் முடிவுக்கு வரும். அதுவரை, தற்காலிகமாக முற்றுப்பெறுகின்றது.

https://tamilwin.com/article/chavakachcheri-hospital-controversy-1721265717



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.