Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]" / பகுதி 01
 
 
நினைவாற்றல் என்றால் என்ன என்பது பற்றி அறிய முன்பு, முதலாவதாக, எமது பண்டைய மூதாதையர்கள், இன்று உங்கள் தகவலுக்கு அல்லது செய்திகளுக்கு தமது எண்ணங்களை, பதிவுகளை எப்படி கைவிட்டு சென்றார்கள் அல்லது எப்படி அதை தமது நாகரிக வளர்ச்சியுடன் அல்லது பரிணமித்தலுடன் முன்னேற்றினார்கள் என்பது முக்கியமாகிறது. உதாரணமாக, முதலாவதாக மனிதன் குகைகளிலும் பாறைகளிலும் தனது எண்ணங்களை, செய்திகளை, செயல்பாடுகளை தனது மகிழ்வு அல்லது பொழுது போக்கிற்காகவும் மற்றும் மற்றவர்களுக்கு தனது கருத்து அல்லது செய்திகளை சொல்லுவதற்காகவும் வரைந்தான், ஆனால் அவன் வேட்டையாடும் உணவு சேர்க்கும் சமூகமாக அன்று இருந்ததால், கட்டாயம் சூழ்நிலைகள், வசதிகளுக்கு ஏற்ப அசைய வேண்டிய கட்டாயமும் இருந்ததால், அந்த வரைதல்களை அவன் போகும் இடங்களுக்கு எடுத்து செல்ல முடியாது என்பதை உணர்ந்த அவன், அதன் பின், இலைகளிலும் [உதாரணம் ஓலை] மற்றும் கற்பலகைகளிலும் [உதாரணம் சுமேரிய கற்பலகைகள்], அதை தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் காகிதத்திலும், மீண்டும் பல நூறு ஆண்டுகளுக்கு பின் அவற்றை மைக்ரோசிப்பிலும் [நுண் சில்லு] ... இப்படி அவன் இன்றைய நாகரிகத்துக்கு வளர்ச்சி அடைந்தான். இந்த நுண் சில்லுகளில் இருந்து / நுண் சில்லுகளுக்கு அனுப்ப அல்லது மீட்டெடுக்க / அறிவுறுத்த நாம் மின்சாரம், ஒளி ... போன்றவற்றை இன்று பாவிக்கிறோம். கிட்டதட்ட இவ்வாறுதான், நாம் தகவல்களைக் கற்றுக்கொண்டும் சேமிக்கவும் எம் உடலின் ஒரு பகுதியாக உள்ள மூளையை பிரத்தியேகமாக பாவிக்கிறோம்.
 
இனி நாம் கொஞ்சம் விரிவாக நினைவாற்றல் என்றால் என்ன என்று பார்ப்போமாயின், எமது ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் எல்லாம் பொதுவாக சில குறிப்பிட்ட வழிகளில் எமது மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை எமக்கு நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் [மின்னேற்றம்] தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.
 
நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கின்றன? சொல்லுங்கள் பார்ப்பம்?
 
பொதுவாக எமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. இவ்வாற்றில் சில குறுகிய கால நினைவாற்றல் எனப்படும். உதாரணமாக, இதன் தேவையை பொருட்டு, அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி அல்லது தேவை முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தான் இதை குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.
 
அது போலவே மற்றது நீண்டகால நினைவாற்றல் ஆகும். உதாரணமாக நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
 
இனி நாம், மனிதர்கள் வயது போக அல்லது நோய்வாய்ப்பட , எம் நினைவாற்றலுக்கு என்ன நடக்கிறது என பார்ப்போம். சில பல காரணங்களால், எமது நினைவுகளை சேமிக்கும் அல்லது சேமித்த நினைவுகளை மீட்டெடுக்கும் பொறிமுறைகள் தம் ஆற்றலை இழக்கின்றன அல்லது அவை நாம் எதிர்பார்த்த அளவு திறன் அற்று போகிறது. அப்படி என்றால் இதில் இருந்து நாம் விடுபட அல்லது அவை வராமல் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
 
அதற்கு முதல், பலர் மனதில் எழும் கேள்வி நினைவாற்றல் அல்லது நினைவாற்றல் இழப்பு ['மறதிநோய்'] ஒரு வரமா ? அல்லது சாபமா ?
 
சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao] ஒரு மின் பொறியாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். குன் காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக, மற்றும் இருவருடன் சேர்ந்து வழங்கப்பட்டது.
 
ஹொங்கொங் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அக்டோபர் 2009 இல் இவரை பேட்டி காணச் சென்றபோது, அவர் தன்னை மறந்தவராக, நினைவாற்றல் இழந்து இருந்தார். அவருக்கு அவரின் கண்டுபிடிப்பு பற்றியோ அல்லது தான் நிகழ்த்திய சாதனை பற்றியோ எந்த நினைவுகளும் அவரிடம் காணப்படவில்லை! அவரை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த வரமான நினைவாற்றல், இப்ப சாபமாக , நினைவாற்றல் இழப்பில் முடித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.
 
"இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று"
 
என்பது ஒரு சுவையான திரைப்பட பாடல். ஆனால் உண்மையில் எமக்கு இருப்பது ஒரே ஒரு மனம். அது காலப்போக்கில் தன் நினைவாற்றலை இழக்கிறது என்பதே உண்மையாகும்.
 
இனி நினைவாற்றலை கூர்மைப்படுத்த அல்லது அதன் இழப்பை தடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக பகுதி 02 இல் பார்ப்போம்
 
 
[மூலம்:
 
ஆங்கிலத்தில்,
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
தமிழாக்கம்:
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும்
305208257_10221539101729685_7514333476668142340_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=N-TehmCuWs0Q7kNvgEPcXlJ&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAsv8u-ov2bLAzVq0qfw6SVTWp0eGdg6ynrA-11yv2FEg&oe=66A01060 305483477_10221539103249723_3774759937856300920_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=IW6e6-6aYCwQ7kNvgFFzUAT&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCj-Z_lH2b2jqMTjP3Mp2h1K4GXTxmMlnj2GLHBdoiMfg&oe=66A0072F
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]" / பகுதி 02
 
 
நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி பொதுவாக மூப்படைவதால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றே கூறலாம். உதாரணமாக, மக்கள் முதுமையடைய அல்லது வயது போக, அவர்களின் உடலிலும், மூளை உட்பட, அதற்கு ஏற்ற மாற்றங்கள் தென்படுகின்றன. எனவே புது விடயங்களை படிக்க அல்லது உள்வாங்க சிலருக்கு, முன்னையதை விட கூடுதலான நேரம் எடுக்கலாம். மேலும் சில முன்னைய தரவுகளை, செய்திகளை அல்லது தாம் செய்ததை மறந்து விடலாம். உதாரணமாக எங்கே மூக்கு கண்ணாடி வைத்தது என்று அல்லது அது போன்ற அன்றாட செயல்களை. இது பொதுவான மறதியாகும். இதை அல்சீமர் நோய் [முதுமறதி / Alzheimer's disease] உடன் குழப்ப வேண்டாம்.
 
அல்சைமர் [முதுமறதி] என்பது மூளையை பாதிக்கும் ஒரு வகை மூளை நோயாகும். இந்த நோய் முதியவர்களிடயே பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபக சக்தி குறைகிறது மற்றும் மிகவும் பலவீனமான நினைவகத்தை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. அல்சைமர் என்பது ஒரு வகை டிமென்ஷியா [மறதி நோய் / dementia] ஆகும்.
 
நடுத்தர வயது உள்ளோர், தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் நினைவாற்றல் இழப்பிற்கு பொதுவாக உள்ளாகிறார்கள். இதை தடுக்க
உத்தரவாதமான வழி என்று ஒன்றும் இல்லை என்றாலும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன வழிமுறைகள் கையாளவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் பட்டியல் இட்டு உள்ளார்கள். அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம்.
 
 
(1) உடற் பயிற்சி அல்லது உடலால் வேலைகள் செய்தல், இரத்த ஒட்டத்தை முழு உடலுக்கும், உதாரணமாக மூளைக்கும் சேர்த்து அதிகரிக்கிறது. இது உங்க நினைவாற்றலை கூர்மைப்படுத்த கட்டாயம் உதவும்.
 
(2) எப்படி உடற் பயிற்சி உங்க உடலை திடமாக, நல்ல வடிவத்தில் வைத்திருக்கிறதோ, அவ்வாறே, மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், கட்டாயம் உங்கள் மூளையை நல்ல நிலையிலும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். - அதாவது, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும்.
 
(3) சமூக தொடர்பு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு போன்றவற்றை விரட்ட உதவுகிறது, பொதுவாக இந்த இரண்டும் நினைவாற்றல் இழப்பிற்கு காரணமானவை ஆகும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அல்லது சந்தர்ப்பத்தை நீங்களே உண்டாக்கி, நீங்கள் விரும்புபவர்களுடன், உங்கள் நண்பர்களுடன் மற்றும் எல்லோரிடமும் ஒன்றிப் பழக முயலுங்கள் - குறிப்பாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது.
 
(4) உங்கள் வீடு இரைச்சலாக இருந்தாலும் அல்லது உங்கள் குறிப்புகள் குழப்பத்தில் இருந்தாலும் [if your home is cluttered and your notes are in disarray], நீங்கள் மறப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே எப்பவும் உங்கள் பணிகள், நியமனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் போன்றவற்றை ஒரு பிரத்தியேக குறிப்பு புத்தகத்தில் - காகித அல்லது மின்னணு - பதியுங்கள் . அது மட்டும் அல்ல, அவ்வற்றை பதியும் பொழுது, வாய் மூலம் அதை திருப்பி சொல்லவும். இது நினைவாற்றலில் அதை ஒட்டிவைக்க பெரிதாக கட்டாயம் உதவும். நீங்கள் இப்ப அறிந்ததை / நிகழ்வதை பதியும் பொழுது, முன்னையதையும் ஒருக்கா பாருங்கள். மேலும் உங்கள் பணப்பை, சாவி, கண்ணாடி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ககளை வைத்து எடுப்பதற்கு ஒரு இடத்தை இயன்ற அளவு நிரந்தரமாக ஒதுக்குங்கள். கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் தக்கவைத்துக் கொள்ள அல்லது தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பும் ஒன்றில், முழு கவனத்தையும் செலுத்தி, செயற்பட்டால், கட்டாயம், பின்னொரு நேரம் அவ்வற்றை திருப்பி நினைவூட்டுவது இலகுவாக இருக்கும். அது மட்டும் அல்ல அப்படியான நிகழ்வுகளை அல்லது குறிப்புகளை, நீங்கள் அதிகம் விரும்பும் பாடலுடனோ அல்லது உங்களுக்கு பழக்கப்பட்ட கருத்துக்கள் உடனோ தொடர்பு படுத்துவதும் ஒரு நல்ல வரவேற்கத் தக்க முறையாகும்.
 
(5) ஆரோக்கிய வாழ்விற்கு உறக்கம் ஒரு முக்கியமான ஒன்றாகும். இது நினைவாற்றலுக்கும் பொருந்தும். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் [shut down] காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, உறக்கத்தின் முக்கிய பாத்திரங்களில் [vital roles] ஒன்று நினைவுகளை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நமக்கு உதவுவதாகும்..உதாரணமாக, ஒவ்வொரு நாளும் எம் மூளை பெருவாரியான தகவல்களை உள்வாங்குகிறது. அவைகளை நேரடியாக பதிவு செய்யப்படுவதை விட , இந்த உண்மைகளும் அனுபவங்களும் [facts and experiences] முதலில் சீரமைப்பு செய்யப்பட்டு சேமிக்க வேண்டும் [need to be processed and stored]. இவைகளின் பெரும் பகுதி, நாம் உறங்கும் பொழுதே நடைபெறுகிறது. எனவே வயது வந்தோர் குறைந்தது ஏழு மணித்தியாலம் தொடங்கி ஒன்பது மணித்தியாலம் வரை துயில்வது மிக நன்றாகும்.
 
(6) படுக்கைக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உறக்கத்தை சிறப்பிக்கலாம் அல்லது கெடுக்கலாம். சில குறிப்பிட்ட உணவுகள் மூளையை அமைதிப்படுத்துவதாகவும் மற்றும் உறக்கத்தை ஊக்கிவிப்பதாகவும் [calm the brain and help promote sleep] அறியப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உறக்கத்திற்கு மாலையில் சரியானவற்றை சாப்பிடுவது கட்டாயம் அவசியமாகும். உறக்கத்திற்கு முன், பெரிய அளவு உணவுகள் சாப்பிடக் கூடாது, ஏன் என்றால், இது உபாதைகள் மற்றும் அஜீரணத்திற்கு [discomfort and indigestion] வழிவகுக்கும். ஆனால், சிறிய சிற்றுண்டி பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில ஆய்வுகள், குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் [nutrients] , உறக்கத்திற்கு ஒரு அடிப்படை பங்கை வகிக்கிறது என சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு நீண்ட நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உணவில் [தக்காளி, ...] காணப்படும் லைகோபீன் [இலைக்கொப்பீன் / lycopene], கார்போஹைட்ரேட்டுகள் [ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, ... / மாசத்து / carbohydrates], வைட்டமின் சி [கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, ... / vitamin C], செலினியம் [கொட்டைகள், இறைச்சி மற்றும் மட்டி / selenium], லுடீன் / நிறமி வகை [பச்சை, இலை காய்கறிகள் / lutein / zeaxanthin ] உணவுகள் முக்கியமாகும்.
 
இரவில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதும் மற்றும் .உறங்க செல்வதற்கு முன் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றை அருந்துவதும் உறக்கமின்மைக்கு பொதுவான காரணம் ஆகும். இரவு உறங்க செல்லும் முன் இளஞ்சூடான பால், முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட கோழி, சுண்டல் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் உறக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும். அதேநேரத்தில் இத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இரவு உணவு உண்டதும் உடனடியாக உறங்கச்செல்ல வேண்டாம், அதேநேரம் பசியோடும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டும் உறங்கச் செல்லவும் கூடாது. இரண்டுமே உறக்கத்தைக் கெடுக்கும்.
 
ஆரோக்கியமான உணவு மூளைக்கும் இதயத்துக்கும் நல்லது ஆகும். அதிகமாக கூடுதலான பழங்கள், மரக்கறிகள், முழு தானிய உணவுகள் நன்மை பயக்கக் கூடியவை. அது மட்டும் அல்ல குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை தெரிந்து எடுங்கள். உதாரணமாக, மீன், பீன்ஸ் [அவரை], தோல் அற்ற வெள்ளை இறைச்சி கோழி, போன்றவை ஆகும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகளான [saturated fats] மாட்டிறைச்சி, சீஸ் [பால் கட்டி], வெண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் குடிக்கும் பானங்களும் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கூடுதலாக மது அருந்துதல், தடுமாற்றத்தையும் நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தலாம். அதே மாதிரி போதை பொருள்களும் ஆகும்.
 
இறுதியாக, நீங்கள் ஏற்கனவே மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் [உயர் கொழுப்பு], நீரிழிவு நோய், கூடிய உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்] மற்றும் காது கேளாமை [depression high blood pressure high cholesterol diabetes, obesity, and hearing loss] போன்ற குறைபாடுகளுக்கு மருத்துவர் ஆலோசனையில் இருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் உங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அப்படி என்றால் தான் உங்க நினைவாற்றல் இழப்பு பெரிதாக பாதிக்கப் படாமல் காப்பாற்ற முடியும். மேலும் ஒழுங்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, உங்கள் மருந்துகளை மதிப்பாய்வு செய்யுங்கள். பலதரப்பட்ட மருந்துகள் கூட நினைவாற்றலை பாதிக்கலாம்.
 
மனித உடலில் கொழுப்புச் சத்து என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இருக்க வேண்டிய அளவு எவ்வளவு, அதை நாம் எந்த மாதிரியான உணவுகளில் இருந்து பெறுகிறோம் என்பது தான் முக்கியம். நம்முடைய உடலில் கொழுப்புச் சத்து என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான, நமக்கு ஆற்றலை வழங்குகிற நல்ல கொழுப்பு, மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற மோசமான, ஆபத்தான கொழுப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
 
No photo description available.
[மூலம்: ஆங்கிலத்தில்,
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்,
 
 
தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தற்காலிகமாக முற்றிற்று
305654128_10221550158126088_6423925120211761180_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=c_kkdbZBKu8Q7kNvgHTVmmA&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDT5qldZsXbl72q4kUjHQQmBEnQd96ONQxH0jTAVCR4Bw&oe=66A28989 305642018_10221550160846156_6935312653893146208_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=rjucGTuQ1GEQ7kNvgFO5ONo&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCyRqocjSAWkMnBHlmdNAtflMwuFLQb3U1os3j2yB7Uaw&oe=66A29F12
 
 
 
 
 
 
  • நியானி changed the title to முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]"
  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி strength பயிற்சியாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது   

ஆய்வுகளும் இதை காட்டுவதாக சொல்கிறார்.

(gym க்கு போய்த்தான் strength பயிற்சி செய்யவேண்டும் என்பது அல்ல.) 

 

வேறு அறியப்படாத காரணங்களும் இருக்கலாம் (உ.ம். முதல் 20, 30, 40, 50 வருட வாழ்க்கையில் உருவாகிய ஒழுங்குகள், பழக்கவழக்கங்கள்). 

 

On 21/7/2024 at 10:18, kandiah Thillaivinayagalingam said:

ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

இது சரி  என்றால், வேலை தலத்தில் தொடங்க வேண்டும். Multitasking என்றதை ஓர் வேலை தகுதியாக கேட்க கூடாது. 


 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.