Jump to content

அதிர்ஷ்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

9-4.gif  

 

ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...

இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது...

சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....

குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது...

வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்...

அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது...

வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது..

வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக் காட்டியது...

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...

என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...

இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...

இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...

அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்...

அவனுக்கு வந்த டோக்கன் எண் 999

அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...

பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும்போது... எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது..

அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப் பந்தயம் நினைவுக்கு வந்தது...

நேராக குதிரைப் பந்தயம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்..

வாயில் எண் 9 வழியாக உள் நுழைந்தான்....

அங்கிருந்த முகவரை சந்தித்தான்...
ஐயா மொத்தம் எத்தனை பந்தயங்கள் நடக்க இருக்கிறது... மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்றால் நான் 9-வது போட்டியில் பங்கெடுத்துக் கொள்கிறேன்....

பந்தயமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன் என்று மொத்தப் பணத்தையும் கட்டினான்...

எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது ‌பந்தயம் வந்தவுடன் தானும் கலந்து கொண்டான்...

போட்டி துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண் கொண்ட குரையின் மீது தன் மொத்தப் பணத்தையும் கட்டினான்....

இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போட்டியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன் நம்பினான்...

அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தயம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்... என கேட்டார்...

அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று...

போட்டி துவங்கியது...

குதிரைகள் சீறிப் பாய்ந்து ஓடின...

பந்தயம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்....

போட்டி முடிந்தது....

இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....😜😝😜😝

பழமையும் புதுமையும்

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.