Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத நட்ட நடு வயலில் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர்!

நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக சாலைகளை கட்ட முடியாமல் போய்விட்டது. போனால் போகட்டும் என்று கிடைத்த கொஞ்ச நிலத்தில் ஒரு பாலத்தை கட்டி விட்டனர் அம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ..........🫣.

https://minnambalam.com/india-news/35-ft-bridge-built-in-open-field-in-araria-bihar-without-road-access-dm-seeks-report/

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, ரசோதரன் said:

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத நட்ட நடு வயலில் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர்!

நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக சாலைகளை கட்ட முடியாமல் போய்விட்டது. போனால் போகட்டும் என்று கிடைத்த கொஞ்ச நிலத்தில் ஒரு பாலத்தை கட்டி விட்டனர் அம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ..........🫣.

https://minnambalam.com/india-news/35-ft-bridge-built-in-open-field-in-araria-bihar-without-road-access-dm-seeks-report/

 

spacer.png

போக்குவரத்து முக்கியம் இல்லை உழைப்பு தான் முக்கியம்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

போக்குவரத்து முக்கியம் இல்லை உழைப்பு தான் முக்கியம்   

🤣........

வீதிகளுக்கு பொறுப்பாக ஒரு பிரிவு இருக்கும். பாலங்களுக்கு பொறுப்பாக இன்னொரு பிரிவு இருக்கும். நீங்கள் சொல்வது போல, அவரவர் அவரவர் சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்திருக்கின்றார்கள் போல....... இவர்கள் எல்லோருக்கும் மேல் ஒரு நிர்வாகமும், தலைமைப் பொறியியலாளரும் இருக்க வேண்டுமே, அவர்கள் மனதுகளில் என்ன இருந்ததோ........... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, ரசோதரன் said:

🤣........

வீதிகளுக்கு பொறுப்பாக ஒரு பிரிவு இருக்கும். பாலங்களுக்கு பொறுப்பாக இன்னொரு பிரிவு இருக்கும். நீங்கள் சொல்வது போல, அவரவர் அவரவர் சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்திருக்கின்றார்கள் போல....... இவர்கள் எல்லோருக்கும் மேல் ஒரு நிர்வாகமும், தலைமைப் பொறியியலாளரும் இருக்க வேண்டுமே, அவர்கள் மனதுகளில் என்ன இருந்ததோ........... 

இதில் ஏன் பலம் கட்டினார்கள்?? கடல் ஏரி குளம் நதிகள்   உண்டா?? அல்லது வேறு தெருக்களின் மையமாக உள்ளாதா.??    எதுவும் இல்லை   ....எனவே… தான்   உழைப்பு தான் காரணம் என்று சொன்னேன்   ??? 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

இதில் ஏன் பலம் கட்டினார்கள்?? கடல் ஏரி குளம் நதிகள்   உண்டா?? அல்லது வேறு தெருக்களின் மையமாக உள்ளாதா.??    எதுவும் இல்லை   ....எனவே… தான்   உழைப்பு தான் காரணம் என்று சொன்னேன்   ??? 🤣🤣🤣

🤣..........

தேங்கும் நீரை ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அனுப்புவதற்காக என்று இன்னொரு செய்தியில் இருந்தது. வீதி கட்டும் திட்டத்துடன், வாய்க்கால் கட்டும் திட்டம் ஒன்றும் இருந்திருக்கும் போல.

விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் மற்றும் வேறு ஒரு குழாய் அமைக்கும் திட்டம் என்று சமீப வருடங்களில் விவசாயிகளால் சில போராட்டங்கள் நடத்தப்பட்டன.......... 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎
    • கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது.  இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
    • புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?  புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?  டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.   தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.  இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 
    • அந்தக் கஞ்சி பழங்கஞ்சியா அல்லது புதுக் கஞ்சியா? உந்தக் க்ஞ்சியில் வெளுத்த  உடுப்பு போட்டு நீற்றாக அயன் செய்ய முடியுமா?  😁
    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.