Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

அனைத்துக் கிளைப்பொறுப்பாளர்கள்> உபகட்டமைப்புப் பொறுப்பாளர்கள்>

செயற்பாட்டாளர்களிற்கும்!
வணக்கம்
தமிழ்த்தேசியச் செயற்பாடுகளிலிருந்து ரகுபதி நீக்கப்பட்டுள்ளார்.


தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால்
உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளையின்
துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவர் தொடர்பான
உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில்
பரப்பிவருகிறார்.

ஏற்கனவே கடந்த 2023 மாவீரர்நாளில்> தேசியத்தலைவரைச்
சந்தித்தோமென்று கூறும் விடுதலைப்போராட்டத்தினைச் சிதைக்கும் குழுவொன்று>
தேசியத்தலைவரின் மகள் துவாரகா என்றுகூறி போலியாக ஒரு பெண்ணை
அறிமுகப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. அதன் பின்னர்> இதுவொரு
போலி நாடகமென எமது மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள்.

இக்குழுவின்
குறிக்கோள் யாதெனில்> தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத்
தொடர்பகத்தையும் அதன் ஆளுகையின் கீழ் இயங்கும் கிளைகளையும்
சிதைத்தழிப்பதேயாகும். இதன்மூலம்> விடுதலைப்போராட்டச் சிந்தனையை மக்கள்
மனங்களிலிருந்து அகற்றுவதாகும். இக்குழுவிலிருந்த பலர் உண்மை புரிந்து
வெளியேறியுள்ள நிலையில்> புதிதாக ரகுபதியும் வேறு சிலரும்
உள்வாங்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றை
உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவரைச்
சந்தித்ததாகவும் ஆரத்தழுவியதாகவும் அவருடன் உணவருந்தியதாகவும் போன்ற
கற்பனைக்கதைகளை உருவாக்கிக் கதைத்துவருகிறார். இயக்கத்தின் நிர்வாக
ஒழுங்குகளை மீறி> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரின் ஒப்புதலின்றிப் பயணங்களை
மேற்கொண்டு> தேசியத்தலைவரின் சிந்தனையைப் புறந்தள்ளி> தமிழீழ
விடுதலைப் போராட்டத்தினை வேரறுக்கும் குழுவொன்றினைச் சந்தித்து
உரையாடி> தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கெதிரான தரப்புகளோடு
இணைந்து மக்களைக் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார்.


இவ்வாறாக> அனைத்துலகத் தொடர்பகத்திற்கும்> சுவிஸ் கிளைக்கும் தெரியாமல்
உள்ளகப் பயன்பாட்டிற்கு மட்டுமானது.
தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு> தமிழீழத் தேசியத்தலைவரின்
வீரப்பண்புகளையும் விடுதலைப்புலிகளின் மரபுவழிவந்த நிர்வாகப்
பொறிமுறையையும் முற்றாக நிராகரித்து> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரும்
அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளரும் இனி நானே என்றும் இதனைத்
தேசியத்தலைவர் அவர்களே சொன்னதாகவும் கிளைப்பொறுப்பைத்
தனதாக்கிக்கொண்டார்.

இவ்வாறாக> தமிழீழத் தேசியத்தலைவரின் கட்டமைப்பு
சார்ந்த நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளைமீது மக்கள் வைத்துள்ள
நம்பிக்கைக்கு எதிராகச் செயற்பட்ட சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர்
வி. ரகுபதி அவர்களை> அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட
அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும்
செயற்பாடுகளிலிருந்தும் நீக்கம் செய்கிறோம். எனவே> ரகுபதி அவர்களுடனான
சகல தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன்
கேட்டுக்கொள்கின்றோம்

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.