Jump to content

வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்... சிலரின்  பழக்க தோசத்தை மாத்துறது கஸ்ரம் என்றாலும், முயற்சிப்பதில் தவறு இல்லை. 😂
நெடுக... முதுகு முட்ட, அழுக்குடன் இருப்பதும்... அவர்களுக்கு அரிப்பாக.. இருக்கும்தானே...  🤣

அது தான் தமிழில் சொல் உண்டே. தோல் தடித்து விட்டது என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அது தான் தமிழில் சொல் உண்டே. தோல் தடித்து விட்டது என்று?

அப்படி போடுங்க. 👍🏽

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் - அனுரகுமாரவிற்கு சாதகமான நிலை - கருத்துக்கணிப்பு

27 AUG, 2024 | 11:52 AM
image
 

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்காவிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

NF_01_20240827_E.png

அனுரகுமார திசநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கான சாதகநிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது,சஜி;த் பிரேமதாசவிற்கான சாதகநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனஇன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/192106

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன்  ஐ.பி.சி. கருத்துக் கணிப்பின் படி...
அரியநேந்திரனின்  இன்றைய நிலையை அறியத் தரவும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

@ஏராளன்  ஐ.பி.சி. கருத்துக் கணிப்பின் படி...
அரியநேந்திரனின்  இன்றைய நிலையை அறியத் தரவும். 🙂

அண்ணை 27/06/24தற்போதைய நிலை.

ibc-ele.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2024 at 17:48, ஏராளன் said:

ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.

ibc-elec.jpg

 

###########    ###############   #############   ############

 

2 minutes ago, ஏராளன் said:

அண்ணை 27/06/24தற்போதைய நிலை.

ibc-ele.jpg

இரண்டு நாளில்.... அரியம் பின் தங்கி விட்டார்.
அவர் தனது பிரச்சாரத்தை முடுக்கி விட வேணும். 💪

நாலாவது இடத்தில் இருந்த சஜித்,  இரண்டாவது இடம்.
மூன்றாவது இடத்தில் இருந்த அனுரா, நான்காவது இடம்.

நாமலுக்கு கஸ்ரகாலம்... மேலை எழும்ப முடியாமல் இருக்கு.
எல்லாம்... தகப்பனும், சித்தப்பனும் செய்த பாவம்.. பெடியனைப்  போட்டு சிப்பிலி ஆட்டுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sri-lankan-police-officers-stand-outside

🛑  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்? 

🛑  2, 3 ஆம் விருப்பு வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கு, செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டும். 
சிலவேளை எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத சந்தர்ப்பத்தில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றிய பதிவே இது.  
வேட்பாளர் எவரேனும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் ஜனாதிபதி தேர்தல் மறுபடியும் நடத்தப்படுமா என்ற கேள்வி சிலருக்கு இருக்கலாம். அவ்வாறு நடக்காது. ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதற்குரிய வழிமுறைகள் உள்ளன.

🛑  ஜனாதிபதி தேர்தலில் ரவி, ராஜா, ரோஜா, பூஜா மற்றும் அமல் உட்பட 39 பேர் போட்டியிடுகின்றனர் என வைத்துக்கொள்வோம். 
செல்லுபடியான மொத்த வாக்குகளில் (அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழித்துவருவது) 
ரவி – 45 %  
ராஜா – 40 % 
ரோஜா – 05 %
பூஜா – 03 %
அமல் - 02 % 
வாக்குகளையும் பெற்றுள்ளனர் என எடுத்துக்கொள்வோம். 
அந்த வகையில் முதல் சுற்றில் எவரும் 50 % +1   வாக்குகளை பெறாததால் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டே வெற்றி நிர்ணயிக்கப்படும். 

🛑  தேர்தலில் முதல் இரு இடங்களைப்பிடித்த ரவி, ராஜா ஆகியோரை தவிர ஏனைய 37 பேரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.   

🛑  அதேபோல ரவி, ராஜா ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகளிலுள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.  ஏனைய 37 வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளே கருத்திற்கொள்ளப்படும். அந்த  வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அந்த வாக்கும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 
(அதாவது 1 அல்ல புள்ளடி இடப்பட்டிருந்தால்)  

🛑  பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆம் விருப்பு வாக்கை ரவி என்பவருக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவி என்பவருக்கும், அவ்வாறு இல்லாது 2 ஆவது விருப்பு வாக்கை ராஜா என்பவருக்கு வழங்கியிருந்தால் அந்த வாக்கு ராஜா என்பவருக்கும் வழங்கப்படும். 
பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆவது விருப்பு வாக்கை அமல் என்பவருக்கு வழங்கி இருந்தால், 3 ஆவது விருப்பு வாக்கு கவனத்தில் கொள்ளப்படும். மூன்றாவது விருப்பு வாக்கை ரவிக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவிக்கு வழங்கப்படும். மாறாக 3ஆவது விருப்பு வாக்கை ராஜாவுக்கு வழங்கி இருந்தால் அது ராஜாவுக்கு வழங்கப்படும்.    
இவ்வாறு 37 வேட்பாளர்களினதும் 2 ஆம் 3 ஆம் வாக்குகள் கவனத்தில்கொள்ளப்பட்டு எண்ணப்பட்ட பிறகு, 

🛑  ரவி  47  சதவீத வாக்குகளையும்,  ராஜா  43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர் என வைத்துக்கொள்வோம். இருவர் பெற்ற வாக்குகளையும் கூட்டி, அதில் 50  வீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றியாளராகக் கருதப்படும்.
அதாவது (47% +  43% ) 90 சதவீத வாக்குகளில் 45 சதவீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றிபெறுவார்.  அந்தவகையில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற ரவி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

🛑  சிலவேளை 2ஆவது வாக்கெண்ணும் பணியின்போது ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கப்பெற்றால் அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார்.    

🛑  ஏனைய 37 வேட்பாளர்களுக்கு முதல் வாக்கை பயன்படுத்திய வாக்காளர்கள், ரவி மற்றும் ராஜா ஆகியோருக்கு   2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தி இருக்காவிட்டாலும் ரவியே வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார். 

🛑  2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ரவி மற்றும் ராஜா ஆகியோர் சமனான வாக்குகளைப் பெற்றிருந்தால் திருவுளச் சீட்டுமூலம் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

ஆர்.சனத்  Malaravan Uthayaseelan

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.