Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அயூப், ஷக்கீல் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டன

Published By: VISHNU   21 AUG, 2024 | 11:07 PM

image

(நெவில் அன்தனி)

பங்களதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2108_bang_celebrate_vs_pak.png

இன்று காலை பெய்த மழை காரணமாக சுமார் நான்கரை மணித்தியாலங்கள் தாமதித்தே போட்டி தொடங்கியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் முதல் 3 விக்கெட்களை 16 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அப்துல்லா ஷபிக் (2), அணித் தலைவர் ஷான் மசூத் (6), முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் (0) ஆகிய மூவரும் 9 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த சய்ம் அயூப், சவூத் ஷக்கீல் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.

தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயூப் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கன்னிச் அரைச் சதத்தைப் பூர்ததிசெய்து 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சவூத் ஷக்கீல், மொஹம்மத் ரிஸ்வான் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டனர்.

சவூத் ஷக்கில் 57 ஓட்டங்களுடனும் மொஹம்மத் ரிஸ்வான் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹசன் மஹ்மூத் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/191668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷக்கீல், ரிஸ்வான் அபார சதங்கள் குவிக்க, பாகிஸ்தான் பலமான நிலையை அடைந்தது

Published By: VISHNU   22 AUG, 2024 | 11:11 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகியோர் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 240 ஓட்டங்களின் உதவியுடன் பாகிஸ்தான் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று பலமான நிலையை அடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

சவூத் ஷக்கீல், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி  அபார  சதங்கள் குவித்தனர்.

அவர்களில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சவூத் ஷக்கீல் 261 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களைப் பெற்றார். 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷக்கீல் குவித்த 3ஆவது சதம் இதுவாகும்.

ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் ஆக்ரோஷத்துடனும் கிட்டத்தட்ட முழுநாளும் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ரிஸ்வான் 239 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இது அவரது 3ஆவது டெஸ்ட சதமாக அமைந்ததுடன் அவர் பெற்ற 171 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் எண்ணிக்கையாக பதிவானது.

ஷக்கீல் ஆட்டம் இழந்த பின்னர் 6ஆவது விக்கெட்டில் அகா சல்மானுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிஸ்வான், பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் ஷஹீன் ஷா அப்றிடியுடன் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அகா கான் 19 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு கடைசி ஒரு மணி நேரத்தைத் தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஷாத்மன் இஸ்லாம் 12 ஓட்டங்களுடனும் ஸக்கிர் ஹசன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

https://www.virakesari.lk/article/191740

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் டெஸ்ட்; பங்களாதேஷ் தரப்பில் நால்வர் அரைச் சதம் குவிப்பு

Published By: VISHNU   23 AUG, 2024 | 07:50 PM

image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (22)  பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸை 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது  நிறுத்திக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், நான்கு துடுப்பாட்ட வீரர்கள் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு சிறப்பான பதில் அளித்துள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து பங்களாதேஷ், ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருக்கிறது.

பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய 7 பேரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் நால்வர் அரைச் சதங்களைக் குவித்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இப்படித்தான் துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை அரைச் சதங்கள் குவித்த நால்வரும் உணர்த்தினர்.

ஆரம்ப வீரர் ஸக்கிர் ஹசன் (12), அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (16) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (53 - 2 விக்.)

ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் ஷத்மான் இஸ்லாம், 3ஆவது  விக்கெட்டில் மொமினுள் ஹக்குடன் 394 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில்  முஷ்பிக்குர் ரஹிமுடன்  52 ஓட்டங்களையும் பகிர்ந்து பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டார்.

ஷத்மான் இஸ்லாம் 183 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 93 ஓட்டங்களையும் மொமினுள் ஹக் 76 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

அடுத்து களம் புகுந்த முன்னாள் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (218 - 5 விக்.)

இந் நிலையில் ஜோடி சேர்ந்த அனுபவசாலிகளான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டனர்.

முஷ்பிக்குர் ரஹிம் 122 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 55 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 58 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 52 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் குரம் ஷாஹ்ஸாத் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/191833

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் ரெஸ் கிரிக்கேட்டில் வ‌ங்கிளாதேஸ் அடிச்ச‌ பெரிய‌ ஸ்கோர் என்றால் இந்த‌ ரெஸ்ரில் தான்🙏🥰..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஷ்பிக்குர் ரஹிம் பெற்ற அபார சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் 565 ஓட்டங்கள் குவிப்பு

24 AUG, 2024 | 08:49 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் முன்னிலை அடைந்துள்ளது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 565 ஓட்டங்களைக் குவித்தது.

55 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த முஷ்பிக்குர் ரஹிம் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 341 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 191 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனிடையே லிட்டன் தாஸுடன் 6ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிம் 114 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து மெஹிதி ஹசன் ராசாவுடன் 8ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 196 ஓட்டங்களை  முஷ்பிக்குர் ரஹிம்  பகிர்ந்தார்.

இது டெஸ்ட் போட்டி ஒன்றில் எந்த ஒரு அணிக்கும் எதிராக 8ஆவது விக்கெட்டில் பங்களாதேஷ் சார்பாக பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.

இதே ஜோடியினர் ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 144 ஓட்டங்களே இந்த விக்கட்டுக்கான முந்தைய அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

இன்று காலை தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த லிட்டன் தாஸ் தனது எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் களம் நுழைந்த மெஹதி ஹசன் ராசா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்வரிசையில் ஷொரிபுல் இஸ்லாம் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நசீம் ஷா 93 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி, குரம் ஷாஹ்ஸாத், மொஹமத் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 117 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க 94 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.

அப்துல்லா ஷபிக் 12 ஓட்டங்களுடனும் சய்ம் அயூப் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 448 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

https://www.virakesari.lk/article/191896

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ் 10விக்கேட்டால் வெற்றி

 

பாக்கிஸ்தான் ப‌டு தோல்வி😁.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி வரலாறு படைத்தது பங்களாதேஷ்

25 AUG, 2024 | 03:44 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ்  10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

முதலாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும்  இரண்டாவது இன்னிங்ஸில்  பாகிஸ்தான்  146 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.

30 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  பங்களாதேஷ் 30 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

download.png

இந்த வெற்றியில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த 191 ஓட்டங்கள், ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக், லிட்டன் தாஸ் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள்,  மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம் என்பன பிரதான பங்காற்றின.

download__1_.png

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: 448 - 6 விக். டிக்ளயார்ட் (மொஹம்மத் ரிஸ்வான் 171, சவூத் ஷக்கீல் 141, சய்ம் அயூப் 56, ஹசன் மஹ்முத் 70 - 2 விக்., ஷொரிபுல் இஸ்லாம் 77 - 2 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 565 (முஷ்பிக்குர் ரஹிம் 191, ஷத்மான் இஸ்லாம் 93, மெஹிதி ஹசன் மிராஸ் 77, லிட்டன் தாஸ் 55, மொமினுள் ஹக் 50, நசீம் ஷா 93 - 3 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 88 - 2 விக்., மொஹம்மத் அலி 88 - 2 விக்., குரம் ஷாஹ்ஸாத் 90 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (மொஹம்மத் ரிஸ்வான் 51, அப்துல்லா ஷபிக் 37, மெஹிதி ஹசன் மிராஸ் 21 - 4 விக்., ஷக்கிப் அல் ஹசன் 44 - 3 விக்.)

பங்களாதேஷ் (வெற்றி இலக்கு 30 ஓட்டங்கள்) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் (ஸக்கிர் ஹசன் 15 ஆ.இ., ஷத்மான் இஸ்லாம் 9 ஆ.இ.)

https://www.virakesari.lk/article/191938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷுடனான இரண்டாவது டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்றிடி இல்லை

Published By: VISHNU  29 AUG, 2024 | 07:46 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் பங்களாதேஷுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஷஹீன் ஷா அப்றிடியை பாகிஸ்தான் அணி இணைத்துக்கொள்ளவில்லை.

வேகப்பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் சுழல்பந்துவீச்சாளர் அப்ரார் அஹ்மதை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

அப் போட்டியில் பங்களாதேஷின் சுழல்பந்துவீச்சாளர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் (21 - 4 விக்.), ஷக்கிப் அல் ஹசன் (44 3 விக்.) ஆகிய இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை திக்குமுக்காடவைத்ததை அடுத்து பிரதான சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக்கொள்ளதது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாகிஸ்தான் அணி புரிந்துகொண்டது.

முதலாவது போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறுவதால் சுழல்பந்துவீச்சாளர் ஒருவரை  பாகிஸ்தான்  இணைத்துக்கொண்டுள்ளது.

6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 38 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அப்ரார், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் துரும்புச் சீட்டாக இருப்பார் என நம்பப்டுகிறது.

மறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 14ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ், இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது.

முதலாவது போட்டியில் முஷ்பிக்குர் ரஹிம் குவித்த 191 ஓட்டங்கள், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுள் ஹக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம் (77 ஒட்டங்கள், 4 விக்கெட்கள்) என்பன பங்களாதேஷை வெற்றிபெறச் செய்தன.

அவர்கள் அனைவரும் பங்களாதேஷுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சிக்கவுள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பங்களாதேஷ் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிப்பதால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

அணிகள்

பாகிஸ்தான்: ஷான் மசூத் (தலைவர்), சவூத் ஷக்கீல், அப்ரார் அஹ்மத், அத்துல்லா ஷபிக், பாபர் அஸாம், குரம் ஷாஹ்ஸாத், மிர் ஹம்ஸா, மொஹமத் அலி, மொஹம்மத் ரிஸ்வான், நசீம் ஷா, சய்ம் அயூப், சல்மான் அலி அகா.

பங்களாதேஷ்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், மொமினுள் ஹக், முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ராஸா, ஸசன் மஹ்முத், ஷொரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.

https://www.virakesari.lk/article/192343

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையினால் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது

30 AUG, 2024 | 03:21 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விளையாடப்படாமல் கைவிடப்பட்டது.

இன்று காலை பெய்த தொடர் மழை காரணமாக மைதானத்தின் எல்லைக்கோடு பகுதிகளில் நீர் நிறைந்திருந்ததால் போட்டியை நடத்த முடியாது என மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.

இப் போட்டிக்கான நாணய சுழற்சி பாகிஸ்தான் நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழை தொடர்ந்ததால் நாணய சுழற்சி பிற்போடப்பட்டது.

எவ்வாறாயினும் நண்பகல் 12.00 மணிக்கு மழை தொடர்ந்ததாலும் மைதானத்தின் எல்லைக் கோட்டருகே மழை நீர் தேங்கியிருந்ததாலும்  முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில்  முன்னிலையில் இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் ஈட்டிய  முதலாவது வெற்றி இதுவாகும்.

download.png

https://www.virakesari.lk/article/192406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் வெற்றியை அண்மித்துள்ள பங்களாதேஷ்

Published By: VISHNU   02 SEP, 2024 | 07:01 PM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தொடரிலும் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷுக்கு மேலும் 143 தேவைப்படுகிறது. 

0209_nhid_rana.png

முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது,

இந்தப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

0209_liton_das.png

ஸக்கிர் ஹசன் 31 ஓட்டங்களுடனும் ஷத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

0209_mehidy_hasan_miraz.png

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 274 ஓட்டங்களே ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

0209_khurram_shahzad.png

போட்டியின் ஆரம்ப நாள் ஆட்டம் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானபோது பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டது.

மெஹிதி ஹசன் மிராஸ் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றி பாகிஸ்தானை சிரமத்தில் ஆழ்த்தினர்.

இருப்பினும் சய்ம் அயூப் (58), அணித் தலைவர் ஷான் மசூத் (57), சலமான் அகா (54) ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது.

ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.

ஆனால் லிட்டன் தாஸ் தனி ஒருவராக 138 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

42ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லிட்டன் தாஸ் குவித்த நான்காவது டெஸ்ட் சதம் இதுவாகும்.

முதல் டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த   மெஹிதி ஹசன் மிராஸ் 78 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 165 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குரம் ஷாஹ்ஸாத் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹம்மத் ரிஸ்வான் (43), சல்மான் அகா (47 ஆ.இ.) ஆகிய இருவரே 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நஹித் ரானா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/192681

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை சகல துறைகளிலும் விஞ்சி 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது

03 SEP, 2024 | 04:35 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் கடைசி நாளான இன்று (03) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்டெக்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தானை பங்களாதேஷ் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சகலதுறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியை சுவைத்தது.

இப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 4ஆம் நாளனான நேற்று மாலை தொடங்கிய பாகிஸ்தான், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை பங்களாதேஷ் தொடர்ந்தபோது, ஆரம்ப வீரர்களான ஸக்கிர் ஹசன் (40), ஷத்மான் இஸ்லாம் (24) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (70 - 2 விக்.)

எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ (38), மொமினுள் ஹக் (34), முஷ்பிக்குர் ரஹிம் (22 ஆ.இ.), ஷக்கிப் அல் ஹசன் (21 ஆ.இ.) ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷின் வெற்றியை உறுதி செய்தனர்.

பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர்கள் பத்து விக்கெட்களையும் பகிர்ந்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் 10  விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது இதுவே முதல் தடவையாகும். 

தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 24 வயதான ஹசன் மஹ்முத் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 274 (சய்ம் அயூப் 58, ஷான் மசூத் 57, சல்மான் அகா 54, மெஹிதி ஹசன் மிராஸ் 61 - 5 விக்., தஸ்கின் அஹ்மத் 57 - 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (லிட்டன் தாஸ் 138, மெஹிதி ஹசன் மிராஸ் 78, குரம் ஷாஹ்ஸாத் 90 - 6 விக்., சல்மான் அகா 13 - 2 விக்., மிர் ஹம்ஸா 50 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (சல்மான் அகா 47 ஆ.இ., மொஹம்மத் ரிஸ்வான் 43, ஹசன் மஹ்முத் 43 - 5 விக்., நஹித் ரானா 44 - 4 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 185 ஓட்டங்கள்) 185 - 4 விக். (ஸக்கிர் ஹசன் 40, நஜ்முல் ஹசன் ஷன்டோ 34)

ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ்: தொடர்நாயகன்: மெஹிதி ஹசன் மிராஸ். 

hkjh.jpg

https://www.virakesari.lk/article/192762

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை வ‌ந்தும் 

ரெஸ் தொட‌ரை வ‌ங்கிளாதேஸ் வென்ற‌து பாராட்ட‌ த‌க்க‌து...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.