Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் 

Published By: VISHNU   26 AUG, 2024 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர்.

SL-sport.png

ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார

பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

டோக்கியோ 2020 பராலிம்பிக்  F64 வகைப்படுத்தல் பிரிவு   ஈட்டி எறிதலில் (65.61 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் ஜப்பானில் இந்த வருடம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன்  (66.49   மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்த சமித்த துலான் கொடிதுவக்கு பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக பங்குபற்றுகிறார்.

ஜப்பானின் கோபே நகரில் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சமித்த துலான் தெரிவித்தார்.

'நான்கு வருடங்களுக்கு முன்னர் பராலிம்பிக்கில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் வென்றுகொடுத்தையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது பாரிஸ் பராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளேன். அதற்காக நான் கடந்த பல மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன். உலக பராமெய்வல்லுநர் போட்டியில் சாதித்தது போன்று பாரிஸிலும் சாதித்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுப்பேன்' என்றார் அவர்.

கோபே நகரில் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான  F63 வகைப்படுத்தல் பிரிவுக்கான குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, ரி44 வகைப்படுத்தல் பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திக்க கமகே (11.83 செக்.) ஆகியோரும் இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர்.

இவர்கள் மூவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்றெடுப்பார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது.

பெண்களுக்கான வு44 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தலில் ஜனனி தனஞ்சன பங்குபற்றுகிறார். அவர் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.08 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தார்.

இந்த நால்வரைவிட ஆண்களுக்கான வு46 வகைப்படுத்தல் பிரிவு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ப்ரதீப் சோமசிறி, வு42ஃ63 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் ப்ரசன்ன ஜயலத், பெண்களுக்கான ளு9 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சுயாதீன நீச்சல் போட்டியில் நவீத் ரஹீம், ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

பராலிம்பிக் வரலாற்றில் 2012இலிருந்து 2020வரை இலங்கை ஒரு தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கு46 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

ரியோ டி ஜெனெய்ரோ 2026 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இதே நிகழ்ச்சியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இம்முறை பராலிம்பிக்கில் பங்குபற்ற முடியாமல் போனது. அவருக்கு ஏற்பட்ட காய வடு முற்றாக நீங்கியுள்ளதால் எதிர்காலத்தில் பரா மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற உலக பரா மெய்வல்லுநர் சங்கம் தடைவிதித்துள்ளது.

அவரை விட ப்ரதீப் சஞ்சய (வெண்கலம் - லண்டன் 2012 பராலிம்பிக்), சமித்த துலான் கொடிதுவக்கு (வெண்கலம் - டோக்கியோ 2020 பராலிம்பிக்) ஆகியோரே பராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மற்றைய இரண்டு இலங்கையர்களாவர்.

https://www.virakesari.lk/article/192073

Edited by ஏராளன்
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
  • Thanks 1
  • ஏராளன் changed the title to பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உருவக் கேலியை கடந்து உலக அரங்கில் சாதிக்கும் தமிழக வீராங்கனை - பாராலிம்பிக்கில் சாதிப்பாரா?

நித்ய ஸ்ரீ

பட மூலாதாரம்,@07NITHYASRE/X

படக்குறிப்பு, பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 ஆகஸ்ட் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவன்.

தமிழ்நாட்டின் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன், பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக களமிறங்கவுள்ளார்.

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் 2024இல், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள் என 4,400 வீரர்/வீராங்கனைகள், 549 பதக்கங்களுக்காக 22 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

அதில் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சிவன்.

‘11 வயது முதல் பேட்மிண்டனில் ஆர்வம்’

தனது 11வது வயதில் (2016) பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய நித்ய ஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கென பாரா போட்டிகள் இருப்பதை 2019இல் தான் தெரிந்துகொண்டார்.

பாரிஸ் நகரில், நாளை (28 ஆகஸ்ட்) தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நித்ய ஸ்ரீ தொலைபேசி மூலமாக பிபிசி தமிழிடம் பேசினார்.

“அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமென அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பார்த்தபோது, எனக்கான விளையாட்டு பேட்மிண்டன்தான் என்பதை முடிவு செய்தேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.

உள்ளூரில் ஒரு பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் இணைந்து விளையாடத் தொடங்கியவர், முதலில் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்துள்ளார்.

“அப்பாவின் நண்பர் ஒருவர் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். அவர் தான் எனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, பாரா போட்டிகள் குறித்து எடுத்துக் கூறினார். அதுவரை பொழுதுபோக்காக மட்டுமே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நான், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ தங்கம் வென்றார்.

“பின்னர் வேறு சில மாநில அளவிலான போட்டிகள், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள் என கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது தான் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் நித்ய ஸ்ரீ.

நித்ய ஸ்ரீ

பட மூலாதாரம்,@07NITHYASRE/X

படக்குறிப்பு, தனது பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவுடன் நித்ய ஸ்ரீ

‘அதிகம் பேசாத, திறமையான ஒரு வீராங்கனை’

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது ‘கௌரவ் கண்ணா பேட்மிண்டன் அகாடெமி’. இதை நடத்துபவர் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா.

இந்தியாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு, 2020இல் துரோணாச்சார்யா விருதும் (விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான விருது), 2024இல் பத்ம ஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

“முதன்முதலில் நித்ய ஸ்ரீ பேட்மிண்டன் விளையாடியதைப் பார்த்தபோது, யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் மிகவும் திறமையான ஒரு வீராங்கனை என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது திறமைக்காகத் தான் இங்கு பேட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்தோம்” என்று பிபிசியிடம் கூறினார் கௌரவ் கண்ணா.

பஹ்ரைனில், 2021இல் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி தான் நித்ய ஸ்ரீ கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி.

“அப்போது நித்ய ஸ்ரீ மிகவும் பதற்றமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அது வீண் போகவும் இல்லை” என்கிறார் கௌரவ் கண்ணா.

 
நித்ய ஸ்ரீ

பட மூலாதாரம்,@07NITHYASRE/X

பஹ்ரைனில் நடைபெற்ற போட்டிகளில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார் நித்ய ஸ்ரீ.

அதன் பிறகு 2022இல் ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ‘உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில்’ பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என் மூன்று பிரிவுகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார் நித்ய ஸ்ரீ.

“2022 ஆசிய பாரா போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது, அதே ஆண்டு பெருவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் என அவரது வெற்றி தொடர்ந்தது” என்று கூறுகிறார் கௌரவ் கண்ணா.

நித்ய ஸ்ரீயின் உயரம் மற்றும் உடலமைப்பு காரணமாக, மற்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளோடு ஒப்பிடுகையில் அவருக்கு சில கூடுதல் சவால்கள் உள்ளன என்கிறார் அவர்.

“அவர் கடந்த சில மாதங்களாக கடும் முதுகு வலியால் அவதிப்படுகிறார். இருந்தும் ஒருநாள் கூட பயிற்சியைத் தவறவிட்டதில்லை. அவருக்கென பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.” என்கிறார் கௌரவ் கண்ணா.

மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு

நித்ய ஸ்ரீ

பட மூலாதாரம்,@07NITHYASRE/X

படக்குறிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பிறகு, நித்ய ஸ்ரீயைப் பாராட்டிய பிரதமர் மோதி

கடந்த ஜூலை மாதம், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 7 லட்சம் வீதம், 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்), நித்ய ஸ்ரீ சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோரே அந்த 5 பேர்.

“மத்திய மற்றும் மாநில அரசுகள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. முதல்முறையாக நித்ய ஸ்ரீ பாராலிம்பிற்கு தகுதி பெற்றுள்ளார். அவர் நிச்சயம் தங்கம் வெல்வார்” என்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா.

நித்ய ஸ்ரீ

பட மூலாதாரம்,@UDHAYSTALIN

படக்குறிப்பு, நித்ய ஸ்ரீக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  

‘உருவக் கேலிகளில் இருந்து மீண்டுவர உதவிய விளையாட்டு’

‘உருவக் கேலிகளில் இருந்து மீண்டுவர உதவிய விளையாட்டு’

பட மூலாதாரம்,@07NITHYASRE/X

உருவக் கேலிகள் என்பது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. எனது பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துவிட்டார்களே என வருத்தம் இருந்தது. அதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பதான் விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்தேன்” எனக் கூறுகிறார் நித்ய ஸ்ரீயின் தந்தை சிவன்.

தொடர்ந்து பேசிய அவர், “நித்ய ஸ்ரீ பிறந்த சில மாதங்களில் எனது மனைவி இறந்துவிட்டாள். பாட்டியின் அரவணைப்பில் தான் அவள் வளர்ந்தாள். பேட்மிண்டன் போட்டிகளில் அவளது திறமையைப் பார்த்துவிட்டு பயிற்சியாளர் கௌரவ் கண்ணன் லக்னோ வரச் சொன்னபோது, உறவினர்கள் பலரும் அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள்” என்கிறார் சிவன்.

அடுத்தடுத்து நித்ய ஸ்ரீ பெற்ற வெற்றிகளால், எதிர்ப்பு தெரிவித்த உறவினர்களே பாராட்டியதாகவும் கூறுகிறார் அவர்.

உருவக் கேலிகள், அவமானங்கள் மட்டுமல்லாது, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல்ரீதியாகவும் பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான், நித்ய ஸ்ரீ இந்த உயரத்தை அடைந்திருப்பதாகக் கூறுகிறார் சிவன்.

பாராலிம்பிக் போட்டிகளில் இப்போது பல நாடுகள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளன. போட்டிகள் கடுமையாக உள்ளன. தங்கம் வெல்ல வேண்டும் என்பதைத் தாண்டி, இறுதிவரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். சிறுவயது முதலே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடமும் அதுதான்” என்று கூறிவிட்டு தனது பேட்மிண்டன் பயிற்சியைத் தொடரச் சென்றார் நித்ய ஸ்ரீ சிவன்.

பாரிஸ் நகரில், ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நித்ய ஸ்ரீ கலந்துகொள்ளும் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறவுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சிவரஞ்சன் சோலைமலையுடனும் களமிறங்கவுள்ளார் நித்ய ஸ்ரீ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

4400 மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் இன்று ஆரம்பம்; இலங்கையிலிருந்து எண்மர் பங்கேற்பு!

28 AUG, 2024 | 03:24 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை மற்றும் அகதிகள் அணி உட்பட 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று (28) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 

இந்த வருட பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 22 வகையான விளையாட்டுக்களில் 549 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் பாரிஸிலும் பாரிஸை சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள அரங்குகளில் நடைபெறவுள்ளன. 

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் போன்றே பராலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆரம்ப விழா பிரதான விளையாட்டரங்குக்கு வெளியே இன்று இரவு நடைபெறவுள்ளது. 

ஆரம்ப விழா வைபவம் எலிசீஸ் டி லா கொன்கோட் என்ற இடத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு பராலிம்பியர்களும் அதிகாரிகளும் அவன்யூ டெஸ் சாம்ப்ஸ் என்ற இடத்திலிருந்து எலிசீஸ் டி லா கொன்கோட் என்ற இடத்திற்கு அணி வகுத்து செல்லவுள்ளனர். 

இந்த ஆரம்ப விழா வைபவத்தை 65,000 பார்வையாளர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர். 

பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா செப்டெம்பர் 8ஆம் திகதி முடிவிழாவுடன் நிறைவுபெறும். 

லண்டன் 1948 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலேயே முதன் முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. 

சக்கர இருக்கை போட்டியாளர்களுக்கே முதன்முதலில் போட்டிகள் நடத்தப்பட்டது. டொக்டர் குட்மான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இப் போட்டி ஸ்டோக் மெண்டெவில் விளையாட்டு என பெயரிடப்பட்டிருந்தது. அன்று பராலிம்பிக்கில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது. 

ஸ்டோக் மெண்டெவில் விளையாட்டு விழா 1956 ஒலிம்பிக்வரை நடத்தப்பட்டு வந்தது. 

இந்த விளையாட்டு விழாவே ரோம் 1960 பராலிம்பிக் விளையாட்டு விழாவாக பரிணமித்தது. 

முதலாவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றினர். 

அன்றிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறும் அதே ஆண்டில் பராலிம்பிக் விளையாட்டு விழாவும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் மாற்றுத்திறனாளிகள் ஆயிரக்கணக்கில் பங்குபற்றிவருகின்றனர். 

இலங்கையிலிருந்து எண்மர்

பாரிஸ் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக டோக்கியோ 2020 பராலிம்பிக் F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றுகின்றனர். 

ஜப்பானில் இந்த வருடம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பிலும்  F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான  F63 வகைப்படுத்தல் பிரிவுக்கான குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, T44 வகைப்படுத்தல் பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திக்க கமகே ஆகியோரும் இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர். 

பெண்களுக்கான T44 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தலில் ஜனனி தனஞ்சன பங்குபற்றுகிறார். இவர் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.08 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தார். 

இவர்கள்  நால்வரைவிட ஆண்களுக்கான T46 வகைப்படுத்தல் பிரிவு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ப்ரதீப் சோமசிறி, T42/63 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் ப்ரசன்ன ஜயலத், பெண்களுக்கான S9 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சுயாதீன நீச்சல் போட்டியில் நவீத் ரஹீம், ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். 

இன்று இரவு நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் இலங்கை தேசிய கொடியை சமித்த துலான் ஏந்திச் செல்லவுள்ளார்.

sri_lankan_athletes_in_paris_2024__paral

samitha-678x381.jpg

paralympics.png

paralympics...png

https://www.virakesari.lk/article/192227

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரா ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்ப்பதற்காக, 
வருகின்ற கிழமை எனது  மகளும் பாரிஸ் செல்ல இருக்கின்றார்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

பரா ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்ப்பதற்காக, 
வருகின்ற கிழமை எனது  மகளும் பாரிஸ் செல்ல இருக்கின்றார்.

எங்கள் அழகிய பாரிஸ் மாநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது . .........தங்களின் வரவு நல்வரவாகுக ......!   😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, suvy said:

எங்கள் அழகிய பாரிஸ் மாநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது . .........தங்களின் வரவு நல்வரவாகுக ......!   😂

தங்களின் இன்முகமான வரவேற்பிற்கு, நன்றி சுவியர். 🥰
நான் வரவில்லை. மகள் மட்டுமே வருகின்றார். 
 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்ற அவ்னி லேகரா, வெண்கலத்தையும் கைப்பற்றிய இந்தியா

அவ்னி லேகரா மற்றும் மோனா அகர்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அவ்னி லேகரா மற்றும் மோனா அகர்வால்
30 ஆகஸ்ட் 2024, 11:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த அவ்னி லேகரா.

பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவ்னி லேகரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதிற்காக பரிந்துரை பட்டியலில் அவ்னி இருந்தார்.

பாராலிம்பிக் போட்டியில் முதலில், கொரிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான யுன்ரி லீயை விட அவ்னி 0.8 புள்ளிகள் பின்தங்கி இருந்தார். கடைசி சுற்றில் கொரிய வீராங்கனையால் 6.8 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் அவ்னி 10.5 புள்ளிகள் எடுத்தார்.

மொத்தமாக அவ்னி 249.7 புள்ளிகளையும், யுன்ரி லீ 246.8 புள்ளிகளையும் பெற்றனர். இறுதி சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்து அவ்னி முதலிடம் பெற்றார்.

இதே போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவ்னி லேகரா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அவ்னி லேகரா (கோப்புக்காட்சி)

யார் இந்த அவ்னி லேகரா?

அவ்னி ஜெய்பூர் நகரை சேர்ந்தவர், அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார்.

10 வயதில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் சக்கர நாற்காலியில் இருந்து வருகிறார். பாராஷூட்டிங் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தது.

விபத்தினால் நடந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர, அவரது தந்தை முக்கிய பங்காற்றினார். உடல் மற்றும் மன வலிமையை மீண்டும் பெற விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டுமாறு அவர் அவ்னியை வழிநடத்தினார்.

உடலில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும், அவ்னியின் வலுவான மன தைரியத்தால், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இந்த விளையாட்டிற்கு துல்லியம், கவனம் ஆகியவை மிகவும் தேவை.

இந்தியா துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்த்ராவின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு அவ்னி துப்பாக்கி சுடும் போட்டிக்கு பயிற்சி பெற தொடங்கினார். அவரது விடாமுயற்சி மற்றும் உறுதி கொண்டு அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார்.

இதற்கு முன்னதாக அவர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c8ergjzg8gxo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பராலிம்பிக் சக்கர இருக்கை டென்னிஸ்: முதல் சுற்றில் இலங்கையின் சுரேஷ் வெற்றி

Published By: VISHNU  31 AUG, 2024 | 12:43 AM

image

(நெவில் அன்தனி)

பாரிஸ் ரோலண்ட் கெரொஸ் 9ஆம் இலக்க டென்னிஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (30)நடைபெற்ற பாரிஸ் 2024 பராலிம்பிக்கிற்கான ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் முதலாம் சுற்றில் இலங்கையின் சுரேஷ் தர்மசேன வெற்றிபெற்று இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றார்.

ஆஸ்திரிய வீரர் ஜோசெவ் ரீக்லருக்கு எதிரான முதலாம் சுற்று போட்டியில் 2 நேர் செட்களில் சுரேஷ் தர்மசேன வெற்றிபெற்று இரண்டாம் சுற்றில் பங்கபற்ற தகுதிபெற்றார்.

24 நிமிடங்கள் நீடித்த முதலாவது செட்டில் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தர்மசேன வெற்றிபெற்றார்.

இப் போட்டியில் சுரேஷ் தர்மசேன 4 - 1 என முன்னிலையில் இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம்  நிறுத்தப்பட்டு சற்றுநேரத்தின் பின்னர மீண்டும் தொடர்ந்தது.

இரண்டாவது செட்டில் முதல் 6 ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

ஆனால், அதன் பின்னர் தர்மசேன தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று 6 - 3 என வெற்றிபெற்றார். இந்த செட் 40 நிமிடங்கள் நீடித்தது.

இரண்டாம் சுற்று செப்டெம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/192438

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பராலிம்பிக் ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான்  உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்

Published By: VISHNU   03 SEP, 2024 | 02:12 AM

image

(நெவில் அன்தனி)

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து  தனது  தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்தார்.

போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

para_results.png

தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டினார்.

ஜப்பானின் கோபி விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் F64 வகைப்படுத்தில் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து  F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான  உலக சாதனை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு பராலிம்பிக்கில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

சமித்த துலான்  கொடிதுவக்கு  தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார். ஐந்தாவது முயற்சியில் உலக சாதனை நிலைநாட்டிய அவர், கடைசி முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.

இப் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி சுமித் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து  புதிய பராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவுஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/192686

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

பராலிம்பிக் ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான்  உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்

Published By: VISHNU   03 SEP, 2024 | 02:12 AM

image

(நெவில் அன்தனி)

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து  தனது  தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்தார்.

போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

para_results.png

தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டினார்.

சமித்த துலான்  கொடிதுவக்கு  தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார். ஐந்தாவது முயற்சியில் உலக சாதனை நிலைநாட்டிய அவர், கடைசி முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.

இப் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி சுமித் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து  புதிய பராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவுஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/192686

நல்ல ஒரு தகவலுக்கு நன்றி ஏராளன்.
ஆக... உலக சாதனையை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து,
தங்கம், வெள்ளி என முறியடித்து இருக்கின்றார்கள். 

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

220902%20Rigivan%20Ganeshamoorthy%20(5).

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார்.

ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

220902%20Rigivan%20Ganeshamoorthy%20(2).jfif

கணேசமூர்த்தி, ஈழத் தமிழ் பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வீழ்ச்சிக்குப் பிறகு 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந்தது,  ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அதற்கு முன் கள நிகழ்வுகளுக்குச் சென்றார். 2023 இல், அவர் ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார்.

ஒரு வருடம் கழித்து, கணேசமூர்த்தி பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானார் - அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டி மட்டுமே - மற்றும் சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றினார்.

வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார்.

220902%20Rigivan%20Ganeshamoorthy%20(4).


இத்தாலிய நிருபர்களுடனான அவரது வெற்றிக்குப் பிந்தைய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, கணேஷமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கும் "வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்" அஞ்சலி செலுத்தினார்.

https://www.tamilguardian.com/content/italian-tamil-smashes-world-record-three-times-take-gold-paralympics

 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

458110782_8361735753878773_4673596190773

பாரிஸ் பாரா ஒலிம்பிக் Badminton போட்டியில்... தமிழ் நாட்டை சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே நடந்த  Badminton போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளியும், மணிஷா வெண்கலமும் வென்றுள்ளனர்.

இம்முறை நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்... பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

jodie-grinham-makes-history-by-winning-p

சாதனை நிகழ்த்தி  பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி கிரின்ஹாம்!

பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

7 மாத கர்ப்பிணியான அவர்இ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

இதன் மூலம் விளையாட்டுத்துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளாா்.

https://athavannews.com/2024/1398066

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராலிம்பிக்: தமிழக வீராங்கனைகள் ஒரே விளையாட்டில் வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல்

துளசிமதி (இடது) மற்றும் மனிஷா (வலது)

பட மூலாதாரம்,@THULASIMATHI11/ANI

படக்குறிப்பு, பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் துளசிமதி (இடது) மற்றும் மனிஷா (வலது)
3 செப்டெம்பர் 2024

பாரிஸில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக் 2024’ போட்டிகளில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் (SU5) தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர்.

எஸ்யூ 5 (SU5) பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையான மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் (SH6) பிரிவில் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவனும் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர்களை தவிர நிதேஷ்குமார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

‘என்னுடைய சிறந்த விளையாட்டு இதுவல்ல’

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 22 வயதான துளசிமதி முருகேசன் வென்று கொடுத்தது 'பாராலிம்பிக் 2024' போட்டிகளில் இந்தியாவுக்கான நான்காவது வெள்ளிப் பதக்கம் ஆகும்.

நேற்று (02.09.2024) நடந்த எஸ்யூ5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார் துளசிமதி. எஸ்யூ5 (SU5) என்பது கைகளில் பாதிப்பு கொண்டவர்களுக்கான பாராலிம்பிக் பிரிவாகும்

இறுதிப்போட்டியில் துளசிமதி கடுமையாகப் போராடிய போதும், 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் யாங் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

போட்டிக்கு பிறகு பேசிய துளசிமதி, “வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் என்னுடைய சிறந்த விளையாட்டை நான் ஆடவில்லை என்று சற்று வருத்தமாகவும் இருக்கிறது” என்றார்.

முன்னதாக, இதே பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸை எதிர்கொண்டார் துளசிமதி முருகேசன். அதில் வெற்றி பெற்று தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் துளசிமதி.

துளசிமதி

பட மூலாதாரம்,@THULASIMATHI11

படக்குறிப்பு, துளசிமதி தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார் (கோப்புப் படம்)

துளசிமதி தனது ஐந்தாவது வயதிலிருந்து விளையாட்டில் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். கூலி தொழிலாளியின் மகளான அவர், முதலில் வீட்டருகில் உள்ள சிறு மைதானத்தில் விளையாடத் தொடங்கியுள்ளார்.

தொடக்கத்தில் தடகளப் போட்டிகளில் ஆர்வம் காட்டிய அவர், பிறகு பேட்மிண்டன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். ஆரம்ப நாட்களில் அவரது சகோதரி கிருத்திகா அவருக்கு பேட்மிண்டனில் இணையராக இருந்துள்ளார். துளசிமதி தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார்.

அவருக்கு பிறக்கும் போதே இடது கை உருமாறியும் பலவீனமாகவும் இருந்துள்ளது. இதனால் அவரால் இடது கையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இடது கை கட்டை விரலையும் துளசிமதி இழந்துள்ளார்.

சமீபத்தில் விபத்து ஒன்றில் அவர் சிக்கியதால், இடது கையை மேலும் பயன்படுத்த முடியாமல் போனது. அவரது கைகள் மரத்து போய், தசைகள் பலவீனமடைந்தன. ஒற்றைக் கையால் பேட்மிண்டன் ஆடியே இந்தியாவுக்கான பதக்கத்தை துளசிமதி வென்றுள்ளார்.

துளசிமதிக்கு, அவரது தந்தை முருகேசன் வறுமையை பொருட்படுத்தாது, தளராமல் தொடர்ந்து உறுதுணையாக இருந்துள்ளார். விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட அவரது தொடர் முயற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், பாரா விளையாட்டுகளில் துளசிமதி பயிற்சி பெறுவதற்கு உதவின. துளசிமதியின் முதல் பயிற்றுநர் அவரது தந்தையே.

2023ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் சர்வதேசப் போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனைகளை தோற்கடித்திருந்தார். இரட்டையர் SL3-SU5 பிரிவில் மானசி ஜோஷியுடன் இணைந்து பாராலிம்பிக் சாம்பியன்களாக இருந்த இந்தோனேஷிய இணையை தோற்கடித்தார்.

அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் நிதேஷ் குமாருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

துளசிமதி, 2023ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

 

‘என்னுடைய கோபத்தை எல்லாம் ஆட்டத்தில் காட்டினேன்’

மனிஷா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, மனிஷா, பேட்மிண்டன் உலக அமைப்பின் ‘2022ஆம் ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை’ பட்டம் வென்றவர் (கோப்புப் படம்)

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்- 2024 போட்டியில், பேட்மிண்டன் (எஸ்யூ5) பெண்கள் ஒற்றையர் பிரிவின் வெண்கலத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனை காத்திரன் ரோசன்க்ரென்-ஐ எதிர்கொண்ட மனிஷா ராமதாஸ், 21- 12, 21- 8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

போட்டிக்குப் பிறகு பேசிய மனிஷா, “என்னுடைய கோபத்தை எல்லாம் களத்தில் காட்டினேன். எனினும் எனக்கு இது போதாது. அடுத்த நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து எனது பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன்” என்றார்.

தமிழ்நாட்டின் திருவள்ளூரைச் சேர்ந்த 19 வயதான மனிஷா, சிறுவயதில் எர்ப்’ஸ் பால்ஸியால் (Erb's palsy- நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கைகள் செயலிழந்து போவது) பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனிஷாவின் வலது கை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

பதினொன்றாம் வயது முதல் மணிஷாவின் விளையாட்டுப் பயணம் தொடங்கியது. அவ்வப்போது ஏற்படும் தீவிர வலிகளையும் தாண்டி விளையாடி வந்த அவர் மாநில பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. 2022 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

ஜப்பானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022இல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பேட்மிண்டன் உலக அமைப்பின் ‘2022ஆம் ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை’ என்ற பட்டம் வென்றார்.

பாரா அல்லாத பேட்மிண்டன் போட்டிகளில் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்றுள்ள மனிஷா, வணிகவியல் பட்டப்படிப்பு மாணவியாக இருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல

Congratulations, Thulasimathi Murugesan, on your remarkable silver medal at the #Paralympics2024!

Your dedication, resilience, and unyielding spirit inspire millions. We are incredibly proud of you!@Thulasimathi11 pic.twitter.com/nHLnq0bJV8

— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள துளசிமதி மற்றும் மனிஷாவை பிரமர் நரேந்திர மோதியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பாராட்டியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

gwr.jpg?resize=529,336

மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில்,

மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!

தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398204

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

8 வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா

பாரா சைக்கிளிங்கில் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 8 ஆவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல விளையாட்டுகளில் புகழ்பெற்றவரான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் புதன்கிழமை 23 நிமிடங்கள் 45.20 வினாடிகளில் இலக்கை கடந்து நெதர்லாந்தின் சாண்டல் ஹெனெனைவிட 6.24 வினாடிகள் முன்னதாகவும், சீனாவின் சன் பியான்பியனைவிட 1 நிமிடம் 27.87 வினாடிகள் முன்னதாகவும் முடித்து சாதனைப் படைத்தார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் இதுவரை கோடை மற்றும் குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 1989 ஆம் ஆண்டில் உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகே பிறந்தார். செர்னோபில் உலகின் மிக மோசமான அணுசக்தி விபத்து ஏற்பட்ட இடமாகும். அணுசக்தி விபத்துக்குப் பிறகு இங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒக்ஸானா மாஸ்டர்ஸ் குழந்தையாக இருந்தபோது அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 9 வயதாக இருந்தபோது கதிர்வீச்சு பாதிப்பால் அவரது இடது முழங்காலுக்கு அருகில் துண்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 14 வயதில் வலது காலும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309010

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

457792563_845304381038252_58887781977859

நான் வெறும் மாரியப்பன்.. தந்தை பெயரை சேர்த்து அழைக்காதீர்கள்.. ட்ரெண்டாகும் தமிழக வீரரின் பேட்டி!

2016 ரியோ பாராலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மற்றும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் என்று 3 தொடர்களிலும் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இந்த நிலையில் 2016ல் மாரியப்பன் அளித்துள்ள பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர். 1.94 மீட்டர் தாண்டிய அமெரிக்காவின் ஏல்ரா தங்கப் பதக்கத்தையும், 1.88 மீட்டர் தாண்டிய இந்தியாவின் சரத் குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், 1.85 மீட்டர் தாண்டிய இந்தியாவின் மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டது.

இதன் மூலமாக 3 பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்று மூன்றிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இதன் காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ரசிகர்களும், நட்சத்திரங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவருக்கு 5 வயது இருக்கும் போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து மோதியதால், காலின் கட்டை விரல் தவிர்த்து மற்ற பகுதிகள் சிதைந்துள்ளது.

இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசத்தி வரும் மாரியப்பன் தங்கவேலு, உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார்.

இதன்பின் மாரியப்பன் தங்கவேலு அளித்த பேட்டியில், எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான். இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரை தேடி வந்து நெருக்குகிறார்கள் என்று கூறி கண்கலங்குகிறார். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்ற தந்தை, திடீரென உரிமை கோருவதாக கூறி அழுகிறார்.

சிறு வயதில் எனது தாயை எரித்து கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டியவில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது. என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

Live Tamil News - தமிழ் செய்திகள்

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராலிம்பிக்ஸ்: இந்தியா ஒலிம்பிக்கை விட இதில் அதிக பதக்கங்களை வென்றது எப்படி?

ப்ரீத்தி பால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாரா ஒலிம்பிக்கில் ப்ரீத்தி பால் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜான்வி மூலே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

செப்டம்பர் 6, 2024 அன்று, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது 27வது பதக்கத்தை வென்றது. பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும்.

இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பலரையும் இந்த வெற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனென்றால், பாராலிம்பிக் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கு 110 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியிருந்தது. இருந்தபோதிலும், இந்தியா அணியால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அதாவது மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர, ஆறு வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தனர்.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒலிம்பிக்கைவிட நான்கு மடங்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, பிரிட்டன், யுக்ரேன், நைஜீரியா போன்ற நாடுகளும் ஒலிம்பிக்கைவிட பாராலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளன.

 

இத்தகைய சூழ்நிலையில், ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில், பாராலிம்பிக் போட்டிகளில் சில நாடுகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டன என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால், இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில் இரண்டு நிகழ்வுகளிலும் போட்டிகளின் நிலை என்பது வேறு. தவிர, இதில் பங்கேற்கும் வீரர்களின் மன மற்றும் உடல் திறன்களும் வேறுபடுகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது ஒரு வீரரின் உடல் நிலை அல்லது உடலின் திறனுக்கான சோதனை என்றும், மறுபுறம் பாராலிம்பிக் போட்டிகள் என்பது ஒரு நபரின் மன உறுதியையும் தைரியத்தையும் சோதிப்பதற்கானவை என்றும் கூறப்படுகிறது.

இப்போது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்க வெற்றிகளில் இவ்வளவு வித்தியாசம் ஏன்? இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதோடு புள்ளிவிவரங்களும் ஒரு கதையைச் சொல்கின்றன.

அதிக பதக்கங்கள், குறைவான போட்டிகள்

பாராலிம்பிக்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழு

முதல் விஷயம் என்னவென்றால், ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வழங்கப்படுகின்றன மற்றும் குறைந்த நாடுகளே இதில் பங்கேற்கின்றன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 204 அணிகள் பங்கேற்று மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 தங்கப் பதக்கங்களை வென்றனர். அதேநேரம் பாராலிம்பிக்கில் 22 விளையாட்டுகளில் 549 தங்கப் பதக்கங்களுக்காக 170 அணிகள் பங்கேற்கின்றன.

இவ்வாறு இருக்க, இயற்கையாகவே பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் என இரண்டிலும் பங்கேற்கும் நாடுகளுக்கு, பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக சீனாவை எடுத்துக்கொண்டால், டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா 89 பதக்கங்களையும், டோக்கியோ பாராலிம்பிக்கில் சீனா 207 பதக்கங்களையும் வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 64 பதக்கங்களையும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாராலிம்பிக்கில் 124 பதக்கங்களையும் பிரிட்டன் வென்றிருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களையும், பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களையும் இந்தியா வென்றது. இதேபோன்ற உதாரணங்களைத்தான் பாரிஸ் பதக்க அட்டவணையிலும் காண முடிகிறது.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முன்னணியில் இருந்த சில நாடுகள், பாராலிம்பிக்கில் பின்தங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளும் அடங்கும்.

ஆனால் நைஜீரியா, யுக்ரேன், இந்தியா போன்ற நாடுகள் பாராலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட்டன. இதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பார்க்கலாம்.

 

மருத்துவ வசதிகள்

ஹர்விந்தர் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்

ஒலிம்பிக் செயல்திறன் ஒரு நாட்டின் மக்கள் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் பணக்கார நாடுகள் அதிக பதக்கங்களைப் பெறுகின்றன என்று கூற முடியாது ஆனால் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நாடுகள் ஒப்பீட்டளவில் பணக்கார நாடுகள் என்பதையும் மறுக்க முடியாது.

பாராலிம்பிக்கை பொறுத்தவரை, பணத்தைவிட முக்கியமான இரண்டு விஷயங்கள் நாட்டின் மருத்துவ வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான அதன் அணுகுமுறை.

பாராலிம்பிக்கில் அமெரிக்காவைவிட பிரிட்டனின் ஆட்டம் சிறப்பாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இந்தியாவில் மருத்துவ வசதிகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், உலகின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ வசதிகள் ஒப்பீட்டளவில் மலிவானவை.

அதாவது, பாரா-தடகள வீரர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்தவொரு மாற்றுத்திறனாளி நபரும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற அதிக வசதி வாய்ப்புகள் உள்ளளன.

 

பாரா விளையாட்டு கலாச்சாரம்

மாரியப்பன் தங்கவேலு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்

சீனா மற்றும் பிரேசிலை போலவே, இந்தியாவும் அதிக மக்கள் தொகை ஒரு கொண்ட நாடு, அதாவது வெவ்வேறு பாரா-விளையாட்டுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தாலும், செயல்திறன் சிறப்பாக இருப்பது என்பது எப்போதும் நடக்காது.

இது நாட்டின் கலாசாரம் மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதான அணுகுமுறை என்ன என்பதைப் பொறுத்தது. இதற்கு இந்தியா சிறந்த உதாரணம்.

பல நாடுகளில், மாற்றுத்திறன் உடையவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் அல்லது பரிதாபமாக நடத்தப்படுகிறார்கள். அங்கு மாற்றுத் திறனாளிகள் வீரர்களாகக் கருதப்படுவதில்லை.

இந்த விஷயத்தில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் சமீப காலமாக, சமூகத்திலும் விளையாட்டுக் கண்ணோட்டத்திலும் பெரிய மாற்றம் காணப்படுகிறது. இந்த மனப்பான்மை பாராலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டத்தில் பிரதிபலித்தது என்று சொல்லலாம்.

கடந்த 20 ஆண்டுகளில் பாரா-விளையாட்டுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், மத்திய, மாநில அளவில் வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், 2010இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், சர்வதேச பதக்கங்களை வெல்லும் வீரர்கள் மற்றும் பாரா வீரர்கள் என இரு தரப்புக்கும் ஒரே மாதிரியான ரொக்கப் பரிசுகளை வழங்கத் தொடங்கியது விளையாட்டு அமைச்சகம்.

இந்த விஷயத்தில் ஹரியாணா மிகவும் முன்னிலையில் உள்ளது. பாரா விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க ஹரியாணா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்முறை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்ற 84 வீரர்கள் கொண்ட இந்திய அணியில், 23 வீரர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பாரா விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய விருதுகள், அரசு வேலைகள் மற்றும் கௌரவங்களை வழங்குவதன் மூலம் ஹரியாணா இந்த விளையாட்டுகளை ஊக்குவித்துள்ளது மற்றும் இது பொது மக்களிடையே பாரா-விளையாட்டுகளுக்கு ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி பஞ்சாபியில் வெளியான ஒரு கட்டுரையில், பாரா விளையாட்டுத் துறையில், ஹரியாணாவின் அடிச்சுவடுகளை எவ்வாறு பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன என மூத்த பத்திரிக்கையாளர் சௌரப் துக்கல் கூறியிருந்தார்.

 

வீரர்கள் மத்தியில் விழிப்புணர்வு

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாரிஸ் பாராலிம்பிக் 2024 தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி

நாட்டில் பாரா விளையாட்டு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதில் வீரர்களுக்கு முக்கியப் பங்குள்ளது என்று கூறுகிறார் சக்கர நாற்காலி- கிரிக்கெட் வீரர் ராகுல் ராம்குடே.

"உடல் குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதிலிருந்து வெளியே வந்து தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார். அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார். விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் முழு உழைப்பையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி, தற்போது பல பாரா விளையாட்டு வீரர்கள் மற்றவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் தாங்களாகவே முன்வருகின்றனர்” என்று கூறுகிறார் அவர்.

ராகுலும் அவரது சகாக்களும் இந்தியாவில் சக்கர நாற்காலி கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடையாளப் பிரச்னையும் இங்கே முக்கியமானது. உண்மையில், ஒலிம்பிக் வீரர்களுடன் ஒப்பிடுகையில் பாராலிம்பிக் வீரர்களுக்குக் குறைவான மீடியா வெளிச்சமும், சமூகத்தின் கவனமும் கிடைக்கிறது. இதன் பொருள், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் அழுத்தமும் குறைவாகவே உள்ளது.

ஆனால் பாரா-தடகள வீரர்களுக்கு வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ளது. அதுதான் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

 

இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்

அவனி லெகரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

இருப்பினும், இந்தியாவில் பாரா-விளையாட்டுகள் மீதான அணுகுமுறை மாறிவிட்டது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, அவை எல்லாம் அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் பாரா வீரர்களும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் பயிற்சி எடுத்த தளத்தில், நீண்ட காலமாக சக்கர நாற்காலிகளுக்கான பாதை அமைக்கப்படவில்லை.

பின்னர், அவனியின் முயற்சியால், இங்கு சாய்வுதளம் கட்டப்பட்டது.

இது ஒரு இடத்தின் கதையல்ல, நாட்டில் உள்ள பல மைதானங்கள், பயிற்சி மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கழிவறைகள் போன்றவற்றின் நிலையும் இப்படித்தான் இருப்பதாகக் கூறுகிறார் ராகுல் ராம்குடே.

அவ்னியின் சாதனைகளை விவரித்த இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் சுமா ஷிரூரும் இதையே கூறியிருந்தார்.

“பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அவனியுடைய பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, தற்சார்பாக வாழ்வதுதான். ஆனால் நம் நாட்டில் அது எளிதானது அல்ல. ஏனெனில் நமது அமைப்பில் உள்ள விஷயங்கள் பாரா வீரர்களுக்கு ஆதரவாக இல்லை அல்லது சக்கர நாற்காலிகள் பயன்படுத்த ஏற்ற பொது இடங்கள் இல்லை. ஆனாலும் அவனி சுதந்திரமாக வாழ விரும்புகிறாள்,” என்று சுமா கூறுகிறார்.

பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற வெற்றியின் மிக முக்கியமான பாடம் இது. இந்தியா தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தத் திசையில் தொடர்ந்து உழைத்து, பாரா விளையாட்டுக்கான அணுகலை இன்னும் எளிதாக்க வேண்டும்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

india-flag-national-day-celibrtation.web

பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், தொடரின் இறுதி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை இதன் மூலம் பாராஒலிம்பிக்ஸ் இந்தியாவின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது.

பதக்க பட்டியலில் இந்தியா 6 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கத்துடன் 18-வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398625

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/9/2024 at 18:44, தமிழ் சிறி said:

gwr.jpg?resize=529,336

மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில்,

மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!

தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398204

வாழ்த்துக்க‌ள்.....................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.