Jump to content

வெளிநாட்டு வேலைவாய்பு முகவர்களால் விலைபேசி விற்கப்படும் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்கள் | பெரும் அதிர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இவர் மீட்கப்பட்ட மூன்றாவது தமிழ்ப் பெண்ணாவார்.

 

 

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிழையான தலையங்கம். 

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to வெளிநாட்டு வேலைவாய்பு முகவர்களால் விலைபேசி விற்கப்படும் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்கள் | பெரும் அதிர்ச்சி


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை.  ☹️
    • யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும் அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர்.  மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை. யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது.  யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான  கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர்.  "எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்". "கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார். சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை  ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார். "நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார். "என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார்.  "கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார்.  ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார்.  பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார். தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார். மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது. இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர். பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும்  நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார்,  "எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.
    • என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..  
    • குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை   நான் சிரிப்பு குறி  போட்டது  பயணச்சீட்டு கேட்டதற்கு தான்  மற்றும்படி   தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை   சரியா??    உங்கள் வாதப்படி   பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு  என்று மகள் சொல்லவில்லை  என்பது புலனகிறது   அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா??   இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள்  எவருமே கண்டிக்கவில்லை     ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன்     நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை     ஆதரித்து கருத்துகள் பதியவில்லை     யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன்  இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல??  நீங்கள் மகள்  தந்தை    என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.