Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   27 AUG, 2024 | 11:02 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார்.

2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார்.

சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார்.

தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை பரப்பச் செய்வதும் பிரபல்யம் அடையச் செய்வதுமே தனது நோக்கம் என ஜெய் ஷா குறிப்பிட்டார்.

குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டை இணைப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பு உருவாவதாக அவர் கூறினார்.

'சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பிரேரிக்கப்பட்டமைக்காக தாழ்மை அடைகிறேன்' என்றார் ஷா.

'கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்கும் பொருட்டு ஐசிசி குழுவினருடனும் உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற அர்ப்புணிப்புடன் இருக்கிறேன். பல கிரிக்கெட் வடிவங்களின் சமநிலையைப் பேணுவதற்கும்  மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் பிரதான நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான ஒரு முக்கிய கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு கிரிக்கெட்டை முழுமைப்படுத்தி பிரபலமாக்குவதே எங்கள் குறிக்கோள்' என்றார்.

https://www.virakesari.lk/article/192170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை” - ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா உறுதி

28 AUG, 2024 | 02:25 PM
image
 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: டி20 கிரிக்கெட் பார்மெட் அனைவருக்கும் உற்சாகம் தருகின்ற வடிவமாக இருக்கலாம். இருந்தாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அது சார்ந்து இருக்கும்.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது வரலாறாக இருக்கும்.

ஐசிசி-க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும். இதில் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பேற்று கொள்கிறார்.

மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா.

https://www.virakesari.lk/article/192226

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு - இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருமென முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் நம்புவது ஏன்?

ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் (கோப்பு படம்)
3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் சாம்பியன்ஸ் டிராபி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இந்த விவாதத்தின் மையமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. அட்டவணைப்படி 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை, பாகிஸ்தான் அணியும் ஐசிசி போட்டிகளைத் தவிர வேறு எந்த தொடரிலும் விளையாட இந்தியாவுக்கு வரவில்லை.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்த இருந்த போது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று கூறி, ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ பிடிவாதம் பிடித்ததால் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

ஹைபிரிட் மாடலின் கீழ், சில போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன. இந்திய அணி கலந்துகொண்ட போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன. இதன் மூலம், ஆசிய கோப்பையை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தது, ஆனால் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது.

ஜெய் ஷா குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவியை வகிக்கும் ஐந்தாவது இந்தியர் ஆவார். இவருக்கு முன், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரஷீத் லத்தீஃப், ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் டாக்டர். நௌமன் நியாஸின் யூடியூப் சேனலில் பேசிய ரஷீத் லத்தீஃப், "ஜெய் ஷா இப்போதுதான் வந்துள்ளார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை எதிர்க்கவில்லை என்றுதான் அர்த்தம்."

"இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் வந்தால் அதில் ஜெய் ஷாவுக்கு பெரிய பங்கு இருக்கும்." என்று கூறினார்.

"கிரிக்கெட்டின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். என் கருத்து தவறாகவும் இருக்கலாம். பிசிசிஐ என்றாலும் சரி அல்லது உலக கிரிக்கெட் என்றாலும் சரி, கிரிக்கெட் துறைக்கு ஏற்ற நபர்தான் என்பதை ஜெய் ஷா நிரூபித்துள்ளார்." என்கிறார் ரஷீத் லத்தீஃப்.

ஜெய் ஷா ஐசிசி தலைவரானதன் மூலம், 'சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வருவதற்கு ஒருவகையில் பாதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது' என்று ரஷித் லத்தீஃப் கருதுகிறார்.

ரஷித் லத்தீஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் வந்தால் அதில் ஜெய் ஷாவுக்கு பெரிய பங்கு இருக்கும் என்று ரஷித் லத்தீஃப் கருதுகிறார்

ஆனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாகவே உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி விஷயத்தில், இந்திய அரசு என்ன கேட்டாலும் செய்வோம். இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே எங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்." என்றார்.

மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, தனது யூடியூப் சேனலில், “ஜெய் ஷா பிசிசிஐயில் இருந்தபோது, அந்த வாரியத்தை மட்டுமே கவனித்து வந்ததார். இப்போது மற்ற நாட்டு வாரியங்களையும் அவர் அனுசரித்து செல்ல வேண்டியது இருக்கும்” என்று கூறினார்.

"ஜெய் ஷாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் பிசிசிஐ அமைப்பை வெற்றிகரமாக நடத்தியது போலவே, ஐசிசியிலும் செய்ய முடியுமா? அவரது முதல் சவாலே சாம்பியன்ஸ் டிராபி தான்." என்று பாசித் அலி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது (சாம்பியன்ஸ் டிராபி) பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. பிசிசிஐ செயலாளர் என்ற முறையில் ‘பாகிஸ்தானுக்கு செல்ல எங்கள் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை’ என்று முன்னர் அவர் கூறலாம். ஆனால் இப்போது நிலைமை வேறு.”

“அவரது தந்தையும் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர். மொத்த போர்டுமே ஜெய் ஷாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், இப்போது அவர் இரு தரப்பையும் கருத்தில் கொள்வார்.” என்று கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் ஷகீல் கான் கட்டாக், "ஐசிசியின் பொறுப்பையும் ஜெய் ஷா பெற்றுள்ளார். இப்போது நாம் (பாகிஸ்தான் அணி) என்ன செய்ய வேண்டும்? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல வேண்டுமா அல்லது பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த தயாராக வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 
கௌதம் கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்

இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எக்ஸ் தள பக்கத்தில், "வாழ்த்துகள் ஜெய் ஷா பாய்! உங்கள் சிறந்த தலைமையின் கீழ் உலக கிரிக்கெட் வேகமாக முன்னேறும் என்பதை நான் அறிவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எக்ஸ் தள பக்கத்தில், "இளைய ஐசிசி தலைவருக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். நீங்கள் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

பேட்ஸ்மேன் ஷுப்மான் கில், "ஐசிசியின் தலைவரானதற்கு வாழ்த்துகள்" என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "ஜெய் ஷா தனது 35 வயதில் போட்டியின்றி ஐசிசி தலைவராக ஆனதற்கு வாழ்த்துகள். கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஜெய் ஷா தொடர்ந்து பணியாற்றுவார் என்று கிரிக்கெட் சமூகம் உறுதியாக நம்பலாம்." என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
ஜெய் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய் ஷாவின் பிசிசிஐ பதவிக்காலம் 2025 வரை உள்ளது

35 வயதான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இளம் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜெய் ஷா இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி தலைவராக, ஜெய் ஷாவின் பதவிக்காலம் டிசம்பர் 1, 2024 முதல் தொடங்கும்.

ஐசிசியின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லேயின் பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவர் பதவியை வகித்துள்ளார்.

மூன்றாவது முறையாக ஐசிசி தலைவர் தேர்தலில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பரப்புவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜெய் ஷா அக்டோபர் 2019இல் பிசிசிஐயின் செயலாளராக பொறுப்பேற்றார். அவர் மீண்டும் 2022இல் பிசிசிஐ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெய் ஷாவின் பிசிசிஐ பதவிக்காலம் 2025 வரை உள்ளது. ஆனால் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றவுடன், பிசிசிஐ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய  உள்துறை அமைச்சர்  அமித் ஷாவின், மகனை எதிர்த்து போட்டியிட்டு விட்டு 
உயிருடன் அங்கு யாரும் இருக்க முடியுமா? 
ஆனால்... ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் என்று உருட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ICC என்றால் International Cricket Council என்ற விளக்கம் போய், அது Indian Cricket Council என்று மாறி விட்டது என்ற கதை சில காலமாகவே போய்க் கொண்டிருக்கின்றது. உலக கிரிக்கட்டே இந்தியாவின் சட்டைப்பைக்குள் உள்ளது.

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் தலையீட்டாலேயே கிரிக்கட் அழிந்தது என்பார்கள். இந்தியாவில் அமித்ஷா குடும்பமே கிரிக்கட்டை கட்டுப்படுத்துகின்றது. ஆனால் அவர்கள் அதிகமாக வென்று கொண்டிருப்பதால், அத்துடன் ஆட்சியிலும் இருப்பதால், எவரும் அவர்களைக் குறை சொல்வதில்லை.  

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவர் பதவியை ஏற்றார் இந்தியாவின் ஜெய் ஷா

01 DEC, 2024 | 02:51 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய தலைவராக ஏகமனதானத் தெரிவான இந்தியாவின் ஜெய் ஷாவின் பதவிக் காலம் இன்று  டிசம்பர் 1ஆம் திகதி  ஆரம்பமானது.

லொஸ் ஏஞசிலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் மூலம் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து முக்கிய கவனம் செலுத்துவதே தனது குறிக்கோள் என ஷா தெரிவித்தார்.

அத்துடன் கிரிக்கெட் விளையாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஷாவின் பயணம் இந்தியாவின் ஒரு மாவட்டத்திலும் மாநிலத்திலும் 2009இல் ஆரம்பமானது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் (ஜிசிஏ) பணியாற்றிய அவர் விரைவாக பதவிகளில் உயர்வு பெற்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராக 2019ஆம் ஆண்டு தெரிவான ஷா, அப் பதவிக்கு மிக இளவயதில் தெரிவானவர் என்ற பெருமையைப் பெற்றார்.

கௌரவ செயலாராக ஐபிஎல் கிரிக்கெட்டுக்கென சாதனை மிகு மிகப் பெரிய தொகைக்கு ஊடக உரிமை ஒப்பந்தத்தை ஏற்படுத்திய அவர்,  மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட், புதிய அதிநவீன மேம்பாட்டு நிலையம், டெஸ்ட் கிரிக்கெட் ஊக்குவிப்புத் திட்டம் உட்பட இன்னும் பல விடயங்களை ஆரம்பித்தார்.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விடயங்கள் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டில் ஷா மிக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஐசிசி தலைவராக பதவியேற்ற ஜெய் ஷா கருத்து தெரிவிக்கையில், 'ஐசிசி தலைவர் பதவியில்  எனது பணியை ஆரம்பப்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் இந்த முக்கியமான பணியை ஏற்பதற்கு என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவளித்த ஐசிசி பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் சபைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

'லொஸ் ஏஞ்சிலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு  நாங்கள் தயாராகும் இவ் வேளையில், முன்னரை விட  சகல அம்சங்களை உள்ளடக்கிய விளையாட்டாக  கிரிக்கெட்டை பிரபல்யம் அடையச் செய்ய முயற்சிப்பதால், இந்தத் தருணம் கிரிக்கெட்டிற்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைகிறது.

'மூவகை கிரிக்கெட்களிலும் சகவாழ்வை ஏற்படுத்துதல், பெண்களின் கிரிக்கெட் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்ற விடயங்களில் நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். சமகால மற்றும் புதிய இரசிகர்களின் ஈடுபாட்டுடன் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை உலககெங்கும் உள்ள நமது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகச் சிறந்த வளங்கள் மற்றும் தளங்கள் உறுதி செய்யப்படுகிறது.

'கடந்த நான்கு வருடங்களாக இப் பதவியில் தலைமை தாங்கியதற்காக கிரெக் பார்க்லேவுக்கும், அவரது பதவிக் காலத்தில் ஈட்டப்பட்ட மைல்கற்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். உலக அரங்கில் விளையாட்டின் வரம்பையும் பரிணாமத்தையும் நிலையாக விரிவுபடுத்த ஐசிசி அணியினருடனும் உறுப்பு நாடுகளுடனும் நான் நெருக்கமாக பணியாற்ற தயாராக இருக்கிறேன்' என்றார்.

https://www.virakesari.lk/article/200152

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.