Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.

அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும்.

பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று 02 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் – 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413, அவசர இலக்கம் – 1911, தொலைநகல் – 0112 784422

https://thinakkural.lk/article/308871

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா? வினாக்களுக்கு புள்ளிகளை வழங்குவதா? - விசாரணைகளின் பின் தீர்மானம் என்கிறார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Published By: DIGITAL DESK 7  19 SEP, 2024 | 06:43 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினா பத்திரத்தில் மூன்று வினாக்களை நீக்கிவிட்டு அதற்கான புள்ளிகளை வழங்குவதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம் இடம்பெறும் விசாரணைகளின் பின்னரே எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதா என தேடிப்பார்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் தற்போது பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  முதலாம் பகுதி வினாப்பத்திரம் என தெரிவித்து, போலி வினா பத்திரம் ஒன்று சமூகவலைத்தலங்களில் பிரசுரமாகியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாகவே  ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வினாப்பத்திரம் தயாரித்த குழுவை அழைத்து, குறித்த போலி வினா பத்திரம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், குறித்த போலி வினா பத்திரத்தில், நிச்சயிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரத்தில் இருந்த 3 வினாக்களுக்கு நிகரான வகையிலான 3வினாக்கள் மாத்திரம் இருந்ததாக அவர்களால் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் குறித்த மூன்று வினாக்களையும் நீக்கிவிட்டு, பதிப்பீடு செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 

என்றாலும் நேற்று புதன்கிழமை (19) புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்துக்கு முன்னால் முன்னெடுத்த ஆர்ப்பட்டத்தைத்தொடர்ந்து, ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை முன்னெடுப்பதா அல்லது பரீட்சையை மீண்டும் நடத்துவதா என்ற இறுதித் தீர்மானம், தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194117

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

28 SEP, 2024 | 05:50 PM
image
 

வினாத்தாள் சர்ச்சை நிலவும் சூழ்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஹரினி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளைக் கருத்தில் கொண்டு இக்குழுவால் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195009

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் சித்திகளை வழங்குவதே சிறந்த மாற்றாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா?  தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க கல்விக்கு பொறுப்பான பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பொருத்தமான தெரிவு

அதன்படி, மீண்டும் தேர்வை நடத்துவது, 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மன நிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு | Solution To Examination Grd 05 Scholarship Problem

பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் பரீட்சைக்கு முன்னர் கசிந்த மூன்று வினாக்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாகக் கருதி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பரிந்துரைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு இதன் போது அறிவித்துள்ளது.

Gallery

https://ibctamil.com/article/solution-to-examination-grd-05-scholarship-problem-1727615269

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது ; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

image

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, சமூக ஊடகங்களில் கசிந்ததாக கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/196252

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

https://thinakkural.lk/article/312289

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.