Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

லோர்ட்ஸ் அரங்கில் ஜூன் 11 இலிருந்து 15 வரை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி

Published By: VISHNU   03 SEP, 2024 | 06:41 PM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2025 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஜனவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இரண்டு வருட சுழற்சி பருவ காலத்தைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளை 69 போட்டிகளைக் கொண்ட 27 டெஸ்ட் தொடர்கள் தீர்மானிக்கும்.

தற்போதைய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா முதல் இடத்திலும் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

நியூஸிலாந்தும் பங்களாதேஷும் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன.

அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை நியூஸிலாந்து 2019இல் வென்றதுடன் இரண்டாவது அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா 2023இல் சம்பியனானது.

அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா இரண்டாம் இடத்துடன் திருப்தி அடைந்தது.

https://www.virakesari.lk/article/192780

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான திகதி மற்றும் மைதானத்தை அறிவித்தது ஐ.சி.சி

ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2025 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் இறுதி நாளில் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஜூன் 16 ஆம் திகதி “ரிசர்வ் டே” வாக கருதப்பட்டு போட்டி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் -2025 இறுதிப் போட்டி முதல்முறையாக இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்டனில் நடந்த அதேவேளை, தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில்,2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முறையே வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தன.

உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. தற்போதைய தரவரிசையின் படி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து 4 வது இடத்திலும் உள்ளது.

இலங்கை 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6வது இடத்திலும், பங்களாதேஷ் 7வது இடத்திலும் உள்ளது.

அதேநேரம், ஒட்டுமொத்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி அதில் 29 போட்டிகளில் வெற்றிபெற்று அதிக வெற்றிகளை பெற்ற அணியாக சாதனை படைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் கலண்டரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/308955

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத்தையா முர‌ளி த‌ர‌ன் சொல்வ‌து போல் ரெஸ் கிரிக்கேட்டுக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌வேற்ப்பும் இல்லை வீர‌ர்க‌ளுக்கும் பெரிய‌ ஆர்வ‌ம் இல்லை.............................

இதில் ரெஸ் ச‌ம்பிய‌ன் போட்டி வேர‌ 

சும்மா பொழுது போகாட்டி ஸ்கோர‌ பார்ப்ப‌தோடு ச‌ரி.............................



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.