Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 7   04 SEP, 2024 | 05:42 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர்.

எமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருந்து வரும் தடைகள் தொடர்பில் சுற்றுலா பயணிகள் தங்களின் முகப்புத்தகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் கெளரவத்துக்கு பாதிப்பாகும்.

விசா விநியோகத்தில் இடம்பெற்றுவரும் பாரிய மோசடி தொடர்பில் உயர் நீதிமன்றில் நாங்கள் தொடுத்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. என்றாலும் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது இன்னும் அந்த முறைப்படியே விசா விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

அதேநேரம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாமல் இருப்பதற்கான நியாயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் ஆரம்பித்த இந்த விடயத்தை எப்படியாவு தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவரை உதாசீனம்  செய்து செயற்படுவதனாலே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகும். அதனால் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். எனவே விசா விநியாேகம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/192850

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:

விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர்.

எனது குடும்ப நண்பரெருவர் சென்றகிழமை இலங்கை போயிருந்தார்.

விசா பிரச்சனை பற்றி கேட்டபோது ஒரு மைல் நீளத்துக்கு வரிசையில் நின்றதாகவும் நிறையநேரம் எடுத்ததாகவும் முழு கெட்ட வார்த்தையால் இலங்கை அரசை திட்டித் தீர்த்தார்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.