Jump to content

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா கடும் ஆர்வம் - ஜனாதிபதி ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:47 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாக உளள்ளது. எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலும் அடுத்தப்படியாக  மாகாண சபை தேர்தலும் நடைப்பெறும். இலங்கையின் தேர்தல் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் பங்களதேசத்தின் நிலைமைகளின் பின்னர் இலங்கையின் அரசியல் ஸ்தீர நிலைமை குறித்து டெல்லி அக்கறையுடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப்பெறுவது உறுதியான விடயமாகும். எனவே பிளான் ' பி ' குறித்து பேச வேண்டிய தேவையில்லை.  சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்காலத்தில் என்றோவொரு நாள் ஜனாதிபதியாவார்கள். ஆனால் இம்முறை சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனாதிபதி முறைமை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது மற்றும் 13 ஆவது திருத்தம் போன்றவை குறித்து பேசி காலத்தை வீணடித்துள்ளோமே தவிர நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து யாரும் அவதானம் செலுத்த வில்லை. எனவே தான் எனது இலக்கை பொருளாதாரத்திற்குள் வைத்துள்ளேன். அதனை மையமாக கொண்டே கொள்கைகளை வகுத்துள்ளேன்.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த யாரும் அதனை செய்ய வில்லை. இந்த கதிரையில் அமர்ந்த யாரும் அதனை செய்ய மாட்டார்கள் என்று ஜே.ஆர். ஜயவர்தன அன்று எனக்கு கூறியமை இன்றும் நினைவில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்திய தேர்தலாகவே சனிக்கிழமை இடம்பெற கூடிய ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது. சிறந்த பொருளாதார கொள்கையுடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியம் குறித்து சிந்திக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது எனது நிலைப்பாடாகும். ஆனால் ஏனைய வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதா ? இல்லையா ? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட வரைபுக்குள் உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு இடைவெளியை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பில்லியனாகும். இதனை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் எமது மொத்த தேசிய வருமானத்திற்கு அமைவாக 5 வீதத்தை கடனாக பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அனுமதியளிக்கிறது.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வரவு - செலவு திட்டம் குறித்து பேச வில்லை. இருப்பினும் அவர்களது தேர்தல் வி ஞ்ஞாபணத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியின் வரவு - செலவு திட்டத்தை கணிப்பிட்டால் வரவு - செலுவு திட்ட இடைவெளி 4 பில்லியன் டொலர்களாகும். இத்தொகையினை மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், 11.2 வீதமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறும் வகையிலேயே இந்த எண்ணிக்கை உள்ளது. மீறி செயல்பட்டால் நாணய நிதியத்திலிருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதன் பின்னர் ஏற்பட கூடிய நாட்டின் பொருளாதார நிலைகள் டொலர் ஒன்றின் பெறுமதியை 500 ரூபாவுக்கு கொண்டு செல்லும். எனவே இது குறித்து விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் யாரும் வருவதில்லை.  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் அமையப்பெறும் புதிய ஆட்சி இதுவரையில் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெளிவாக கூறியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவோ சஜித் பிரேமதாசவோ சர்வதேச நாணய நிதியத்துடன் தேர்தல் விஞ்ஞாபணத்தில் குறிப்பிட்டுள்ள விடங்கள் குறித்து பேச வில்லை என்பதே உண்மை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

பெறுமதி வரிசேர் வரியை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் என்றால், இன்றிலிருந்தே மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை சேமித்து வைக்க வேண்டும். எனவே தற்போதைய பொருளாதார திட்டங்களில் இருந்து விலக இயலாது.

இன்னும் இரு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை அவர்களுக்கு கூற வேண்டும்.

ஊழல் ஒழிப்பு திட்டம்

ஊழலை ஒழிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குறித்து 400 கோப்புகள் உள்ளன. அவற்றை விசாரிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று மோடிகள் ஊடாக சம்பாதித்த சொத்துக்களை அரச உடைமையாக்குவதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்புக்கான 5 ஆண்டுகால திட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

இவற்றை புதிய சட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும், புதிய சட்டங்களை நடைமுறைபடுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம்.

ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் சட்டங்கள் குறித்து பேசாது திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றனர். வரவு - செலவு திட்டத்திற்கு தேவையான நிதியை திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் பெற்றுக்கொள்வதாக இருவருமே கூறுகின்றனர். அது சாத்தியமான விடயமல்ல.

ஏனெனில்  சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்து அவர்களிடம் மோடி செய்து பெற்றக்கொண்ட சொத்துக்களை பெற்றுக்கொள்ள குறைந்தது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சுமார் 10 வருடம் ஆகலாம். அது வரைக்கும் வரவு - செலவு திட்டம் இல்லாது எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்.

மக்களை ஏமாற்ற கற்பணை கதைகளை கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை அவர்கள் பேசுவதில்லை. புதிய சட்டங்களை நிறைவேற்றி திருடர்களை பிடிக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள்

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதாக அனுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்க முடியாது.

உதாரணமாக இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து வெளியில் வந்தால், அந்த நாடு இலங்கையுடன் சினம் கொள்ளும். நாடு  அநாவசியமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதில் சிறந்த விடயம் யாதெனில் அனுரவோ சஜித்தோ அதிகாரத்திற்கு வர போவதில்லை.

குறைப்பாடுகள் இருந்தால் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் தனித்து தீர்மானங்களை எடுக்க கூடாது.  கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

ஜப்பான் இலகு ரயில் திட்டத்திற்கான நிதி இலங்கைக்கு கிடைக்காமல் போனது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான திட்டங்களை நிறுத்தினால் பாதிக்கப்பட போவது நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கைக்கு இல்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட உத்தேசித்துள்ளோம்.

மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் எவ்விதமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில அதிகார போட்டி நிலை பிராந்தியத்தில் உள்ளது.

எவ்வாறாயினும் அந்த நாடுகளுடன் நீண்ட காலமாக இராஜதந்திர நிலையில் தொடர்புகளை பேணி வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.

https://www.virakesari.lk/article/193977

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.

இறையாண்மை புல்லரிக்கின்றது ...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கடும் ஆர்வம்??

என்னை வெல்ல வையுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கொடுத்த காசை கடுமையாக கேட்கும் ,...?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சினை மாடுகளுக்கு… பாதுகாப்பு உறை பாவிப்பதில்லைத்தானே….. 🤣
    • ஓம்  வேற ஒரு பாதுகாப்பு உறைகளும் தேவைப்படாது.🤪 அதை புட்டின் அனுமதிக்கவும் மாட்டார். 
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.   பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர்.   படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.   நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.   இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.   நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.   இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.   இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்!     Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல் | Sector 36 Hindi Movie Review in tamil - hindutamil.in
    • ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A  யில் நிற்கிறன். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.