Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
20 SEP, 2024 | 09:48 AM
image

ரொபட் அன்டனி 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. 

நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்டுள்ள நிலையில்  இம்­முறை தேர்தல் வாக்­க­ளிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு இடாப்பு 

இம்முறை ஜனாதிபதித் தேர்­த­லா­னது 2024ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்­புக்கு அமைய நடை­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்காக ஒரு கோடியே 71 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 354 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

இந்நிலையில் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிதாக சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்­க­ளிப்பு இம்மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திக­தி­களில் நடை­பெ­ற்றன.  மேலும் கடந்த 12ஆம் திகதியும் தபால் மூலம் வாக்­க­ளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழு­வதும் 7 இலட்­சத்து 36 ஆயி­ரத்து 586 பேர் தகுதி பெற்­றிருந்தனர். அடுத்த 5 வரு­டங்­க­ளுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகின்ற, தலை­வி­தியைத் தீர்­மா­னிப்பதற்காக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிக்க செல்லுங்கள் 

வாக்காளர்கள் காலை வேளையிலேயே தமக்குரிய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபடலாம்.     தேர்தலை மிகவும் அமைதியாகவும் சுயாதீனமாகவும் நடத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர்களைப் பொறுத்தவரையில் முதலில் வாக்களிப்பதற்கு தயாராக வேண்டும்.

வாக்­காளர் இடாப்பில் பெயர் உள்­ளதா?

தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மக்கள் முதலில் 2024 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் இடாப்பில் தமது பெயர் இருக்­கின்­றதா என்­பதை பரீட்­சித்துப் பார்ப்பது அவசியம். அதனை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் இணை­­யத்­த­ளத்­துக்குள் பிர­வே­சித்து தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை சமர்ப்பிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.  அதுமட்டுமன்றி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வாக்­காளர் அட்­டையில் மக்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய இடம் போன்ற விப­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும்.  

தேசிய அடை­யாள அட்டை கட்­டாயம்

வாக்காளர்கள் வாக்­க­ளிக்க செல்லும் போது நிச்­ச­ய­மாக வாக்­காளர் அட்­டையை எடுத்துச் செல்­வது வாக்­க­ளிப்­ப­தற்கு இல­கு­வாக இருக்கும். அதே­நேரம் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு தேசிய அடை­யாள அட்டை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே மக்கள் மறக்காமல் அடையாள அட்டையை கொண்டு செல்வது அவசியமாகும். தேசிய அடை­யாள அட்­டை­யுடன் மேலும் பல ஆவ­ணங்கள் வாக்களிப்பதற்காக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தேசிய அடை­யாள அட்டை, செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்­லு­ப­டி­யா­ன­ சா­ரதி அனு­ம­திப்­பத்­திரம், ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, முதி­யோர்­க­ளுக்­காக சமூ­க­ சேவை திணைக்­களம் வழங்­கு­கின்ற அடை­யாள அட்டை, மதத் தலை­வர்­க­ளுக்­கான ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள அடை­யாள அட்டை என்­ப­ன­வற்றை பயன்­ப­டுத்­தலாம். இவை எது­வுமே இல்­லா­விடின் தேர்தல் திணைக்­க­ளத்­தி­லி­ருந்துழ பெற்ற  தற்­கா­லிக அடை­யாள அட்­டையைப் பயன்படுத்தலாம். ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அடை­யாள அட்டை இல்­லா­விடில் வாக்­க­ளிக்க முடி­யாது என்­பதை கருத்தில் கொள்­வது முக்­கியம்.

வாக்­க­ளிப்­பது எவ்­வாறு?

ஜனாதிபதித் தேர்தலில் வாக்­க­ளிக்கும் போது மக்கள் மிகவும் கவ­ன­மாக வாக்­க­ளிக்க வேண்டும். வாக்­குச்­சீட்டில் வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் அவர்களது பெயர்­க­ளுக்கு முன்னே அவர்­க­ளுக்கு குறித்­தொ­துக்­கப்­பட்ட சின்­னமும் அதற்கு அருகில் வெற்றுப் பெட்­டியும் இருக்கும். வாக்­காளர் தான் வாக்­க­ளிக்க விரும்­பு­கின்ற ஒரு­வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்க முடியும். அவ்­வாறு வாக்­க­ளிக்கும் போது 1 என்ற இலக்­கத்தை வேட்­பா­ள­ருக்கு அரு­கி­லுள்ள பெட்­டியில் இட்­டு­வாக்­க­ளிக்க வேண்டும். அல்­லது புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம்.

மேலும் 38 வேட்­பா­ளர்­களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இருப்­பதால் வாக்­காளர் தனது இரண்டாம் தெரி­வையும் மூன்றாம் தெரி­வையும் வெளிப்­ப­டுத்தும் வகையில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு விருப்­பு­ வாக்­கு­க­ளையும் அளிக்­கலாம்.

அப்­ப­டி­யாயின் தனக்கு முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளித்­து­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்ற இலக்­கத்தில் வாக்­க­ளிக்­கலாம். மேலும் மூன்று வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மாயின் முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 1 என்றும் இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 2 என்றும் மூன்­றா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு 3 என்றும் இலக்­கத்­தை­யிட்டு வாக்­க­ளிக்­கலாம்.

ஒன்­றுக்கும் மேற்­பட்ட வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­ வேண்டுமென்றால் இலக்­கங்­க­ளையே (அரபு இலக்­க­வ­ரிசை) பயன்­ப­டுத்­த­வேண்டும்.  மாறாக முத­லா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்­டு­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு இலக்­கத்தை இட்டால் அந்­த­வாக்கு நிரா­க­ரிக்­கப்­படும். ஆனால் ஒரு­வ­ருக்கு மட்டும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றால் 1 என்ற இலக்­கத்தை இட்டும் வாக்­க­ளிக்­கலாம். புள்­ளடி இட்டும் வாக்­க­ளிக்­கலாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு விருப்­பு­வாக்கின் மூலம்­வாக்­க­ளிக்க முற்­பட்டால் 1, 2, 3 என்று இலக்­கத்­தைத்தான் பயன்­ப­டுத்­த­வேண்டும்.   இதுதான் ஜனா­தி­பதி தேர்தல் வாக்­க­ளிப்பு முறை­யாகும். 

nn.jpg

எப்­போது வாக்குகள் நிரா­க­ரிக்­கப்­படும்?

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­களைத்தவிர வாக்­குச்­சீட்டில் வேறு எத­னையும் குறிப்­பிடக்கூடாது. அவ்­வாறு குறிப்­பிடும் பட்­சத்தில் அவை நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும். மேலும் ஒரு வாக்­கா­ள­ருக்கு ஒன்று என்ற இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்து விட்டு இன்­னு­மொரு வேட்­பா­ள­ருக்கு புள்­ள­டி­யிட்டால் அது நிரா­க­ரிக்­கப்­பட்டு விடும். 

அதே­போன்று ஒரு­வ­ருக்கு புள்­ளடி இட்டு விட்டு மற்­று­மொ­ரு­வ­ருக்கு இலக்­கத்தை இட்டு வாக்­க­ளித்தால் அந்த வாக்கும் நிரா­க­ரிக்­கப்­படும். எனவே வாக்­காளர் தமது வாக்கைப் பயன்­ப­டுத்தும் போது துல்­லி­ய­மாக வாக்­க­ளிக்க வேண்டும்.  விருப்பு வாக்குகளின்போது மூன்றுக்கு மேற்பட்டோருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும்.

 மேலும் இரண்டு அல்லது மூன்று என்ற இலக்கங்களை மட்டும் இட்டு வாக்களித்தாலும் நிராகரிக்கப்படும். அதாவது விருப்பு வாக்கை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் 1 என்ற இலக்கத்தை இடவேண்டும். 1 என்ற இலக்கத்தை இட்டு வாக்களிக்காமல் நேரடியாக 2 என்ற இலக்கத்தை இட்டு வாக்களித்தால் நிராகரிக்கப்படும்.  எனவே  இங்கு மிக விழிப்புடன் சரியான முறையில் வாக்களிப்பது அவசியம். 

வெற்­றி­ பெறும் வேட்­பாளர்

வாக்­க­ளிப்­புகள் முடிந்­ததும் வாக்­குகள் எண்­ணப்­பட்டு வெற்றி பெற்­றவர் தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­ப­டுவார். அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­களில் நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­குகள் கழிக்­கப்­பட்டு செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெறு­கின்­றவர் ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­ப­டுவார். ஒரு­வேளை எந்த வேட்­பா­ளரும் 50 வீத­மான வாக்­கு­களை பெறா­விடின் அதற்­கான அடுத்த கட்ட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

தவறாது வாக்களியுங்கள் 

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவசியமாகும். மக்கள் இந்த ஜனநாயக செயற்பாட்டில் பங்­கெடுத்து தமது வாக்குகளை பயன்­படுத்த வேண்டும்.

அதாவது அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யப்போகின்ற தலை­­வரை தெரிவு செய்யும் ஜனநாயக செயற்­பாட்டில் மக்கள் தவறாமல் பங்கெடுப்பது தீர்க்க­மானதாக இருக்கின்றது.

இலங்கையில் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பிலும் அந்த முறை உள்ளடக்கப்பட்டது. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இதன்று முன்னர் ஜனாதிபதித் தேர்தல்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் இம்முறை  நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பானது 9ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கானதாக அமைந்துள்ளது.

மக்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அமைதியான சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு செல்வது அவசியம். நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். முக்கியமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இம்முறை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தமது அறிக்கைகளை வெளியிடுவார்கள். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு தரப்பினரும் கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தமக்கு வேண்டிய தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது. அந்த ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

https://www.virakesari.lk/article/194152



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார்.    
    • வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM   வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின்  தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    
    • 24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM   நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை,  ஹெட்டிபொல,  கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.   எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.    
    • கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM   தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு பங்குதாரராக ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுவது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் முதற் கட்டமாக புதிய கல்வி முறைமை மறுசீரமைப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் புதிய கல்வி கொள்கையை வெற்றிகரமான முறையில் செயற்படுத்துவதற்காக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆசிரியர் - அதிபர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கலந்துரையாடலின் போது எடுத்துரைத்துள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.    
    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.