Jump to content

தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவாளர்களிடையே தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள்!

தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம்  எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு  712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில்  6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  கூறினார்.

https://athavannews.com/2024/1400450

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகலாம் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3   21 SEP, 2024 | 04:28 PM

image
 

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதலில் தபால் மூல வாக்கு முடிவுகளா அல்லது பதிவு வாக்கு முடிவுகளா வெளியாகும் என்பது  வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமானதுடன் 4 மணிளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/194292

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

459837621_8296328490443516_3752738845383

தேர்தல் முடிவுகள்  வரமுன்பே... அனுரவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக,  கேக் தயார் நிலையில் உள்ளது. 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

459837621_8296328490443516_3752738845383

தேர்தல் முடிவுகள்  வரமுன்பே... அனுரவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக,  கேக் தயார் நிலையில் உள்ளது. 🙂

எந்த வெதுப்பகம் என்று தெரிந்தால் வேறு யாராவது ஜனாதிபதியாக வந்தால் மூடுவிழா கொண்டாடடாமில்ல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

samam-2.jpg?resize=397,239&ssl=1

இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்.

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக பிரதேச மட்டத்திலான தேர்தல் பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.

அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றது. தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீட்டியாகொட பகுதியில் வாக்காளர் ஒருவர் நிழற்படம் எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அட்டையினை தம்வசம் எடுத்துவந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வாக்காளர் ஒருவர்  வாக்குஅட்டையினை கிழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1400510

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-2.jpg?resize=750,375

யாழில் வாக்கெண்ணும் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்.

வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் பேரூந்துகள் மூலம் பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது.

அதேவேளை நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக வாக்குப்பெட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400500

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.