Jump to content

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதியை கலைக்கும் உத்தரவு

அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க | Ranil Accepted Defeat Of The Presidential Election

அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/ranil-accepted-defeat-of-the-presidential-election-1726961495#google_vignette

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • NPP ANURA KUMARA DISSANAYAKE   2,459,99339.44% SJB SAJITH PREMADASA   2,124,29834.06% IND16 RANIL WICKREMESINGHE   1,094,42617.55% IND9 ARIYANETHIRAN PAKKIYASELVAM   210,3793.37% SLPP NAMAL RAJAPAKSA   142,5892.29%   அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும்,  நாமல் ராஜபக்சவை பின்தள்ளி,  முன்னுக்கும்   உள்ளார்.
    • யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். #1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். #2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். #2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார். #2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். #2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு…. #2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. #2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். #2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். #ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும் 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். #அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார். #2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. #2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. உண்மை உரைகல்
    • கொழும்பில் சஜித்துக்கு அலை அடிக்கின்றது. ஆனால் அநுரவும் சில தேர்தல் தொகுதிகளை வென்றுள்ளார். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் இரண்டாவது தெரிவாக சஜித்தையே அநேகமாகப் போட்டிருப்பார்கள். ரணிலுக்குப் போட்டவர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவை எண்ணும்போது சஜித் வெல்ல வாய்ப்பிருக்கின்றது! ஜேவிபியின் வெற்றி கைநழுவிப் போனால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகலாம் என்பதால்தான் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.   Polling Division - Colombo Central BackColombo District SAJITH PREMADASA SJB   46,063 Votes 51.77% ANURA KUMARA DISSANAYAKE NPP   20,220 Votes 22.72% RANIL WICKREMESINGHE IND16   19,397 Votes 21.80% NAMAL RAJAPAKSA SLPP   1,123 Votes 1.26% DILITH JAYAWEERA SLCP   367 Votes 0.41% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9   295 Votes 0.33%   யாழ் மாவட்ட இறுதி முடிவுகள்.. அரியத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் சங்கூதிவிட்டார்கள் Jaffna Final 121,177 32.60% Sajith Premadasa  32.60% Order 116,688 31.39% Ariyanethiran Pakkiyaselvam  31.39% Order 84,558 22.75% Ranil Wickremesinghe  22.75% Order 27,086 7.29% Anura Kumara Dissanayake  7.29% Order 6,074 1.63% K.k. Piyadasa  1.63% Order 16,105 0.13%  Other      தமிழர்கள் வசிக்கும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அரியம் நாலாவது இடத்தில்!😱😱😱😱 Polling Division - Potuvil BackDigamadulla District SAJITH PREMADASA SJB   70,942 Votes 55.26% RANIL WICKREMESINGHE IND16   30,263 Votes 23.57% ANURA KUMARA DISSANAYAKE NPP   18,053 Votes 14.06% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9   4,802 Votes 3.74%
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.