Jump to content

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதியை கலைக்கும் உத்தரவு

அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க | Ranil Accepted Defeat Of The Presidential Election

அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/ranil-accepted-defeat-of-the-presidential-election-1726961495#google_vignette

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அத்தனைபேரும் இனி அனுராவுக்கு தூது அனுப்புவார்களா அல்லது தொலைபேசி எடுத்து நேரடியாக வாழ்த்து சொல்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தோல்வியின் எதிரொலி - மனைவியுடன் வெளியேறிய ரணில்
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://ibctamil.com/article/ranil-wickremesinghe-leaves-official-residence-1726994260

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்தரப்பின் ஒருசாரரால் கொண்டுவரப்பட்ட  பொதுவேட்பாளர் விடையத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது இதில் இந்தியாவின் நேரடி கைத்தடியாக இருக்கும் மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேமச்சந்திரனது பிரசன்னம் இருக்கும்போதே அவதானித்த ஒன்றுதான். எனினும் யாழ் கருத்துக் களத்தில் வேறு ஒரு திரியில் "பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது வரலாற்றுப்பிழை" எனக்குறிப்பிட்டிருந்ததாக நினைவு. வடக்குக் கிழக்கிலிருந்து வரும் தேர்தல் முடிவு நிலைகளின்படி அரியனேந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள், தெற்கின் ஏனைய முண்ணணி வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கில் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையைவிடக் குறைவு என்பது புலப்படுகிறது. இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் வடக்குக் கிழக்கின் தமிழ் மக்கள் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வைக்கும் கோரிக்கை எதுவும் மக்களின் ஆதரவுடன் இல்லாதது என சிங்களத்தரப்பு, இந்தியா, சர்வதேசம் ஆகியன நேரடியாகக் கூறாதுவிடினும் அதை எடுகோளாக வைத்தே அரசியல் காய்களை நகர்த்தும். இக்கட்டான சூழலில் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதுபோல் பாவனை செய்தாலும் மேலும் மேலும் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி தமிழர் கோரிக்கைகளை மலினப்படுத்துவதற்கான முன்னேற்பாடே பொதுவேட்பாளர். காலம் காலமாக அதிகாரத்தில் வருபவர்கள் இரன்டு முக்கிய கட்சியிலிருந்து வந்தாலும் அவர்கள் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி அவர்களது கோரிக்கைகளைச் சிறுக்கச்செய்யும் மூலோபாயத்துடன் நடந்துகொண்டது வரலாறு. இதன்மூலம் சிங்களத் தலைமைகளில் எவரும் தமிழர்க்கான உரிமை விடையத்தில் ஒரேமாதிரியான கொள்கையுடயவர்கள் என உலகம் அறிந்தாலும் தமிலர் தரப்பின் மீதான பிரித்தாளுகையின் காரணமான பலயீனம் எம்மை உய்யவிடாது. மாறாக இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து இன்னுமொரு தரப்பு அதிகாரத்தில் வந்தாலும் அத்தரப்பும் எமக்கான உரிமைபற்றி கவனத்தில் எடுக்காது என்பதை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பமாக ஜே வி பியின் அனுரகுமார தேர்தலில் வந்துள்ளார். ஆனால் அப்படியான் ஒரு நல்ல வாய்ப்பையும் தமிழர்தரப்பு இல்லாதொழித்து சயித் அல்லது ரணில் எனும் தெரிவிலிருந்து மாறாது மாறி மாறி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண் அல்லிப்போட்டது மட்டுமன்றி, "அரகலயவைத்" தொடர்ந்து ராஜபக்சேக்களைச் சிங்களவர்களது கோபத்திலிருந்து தப்பவைத்த ரனில் மேலிருந்த கோபத்தின் வெளிப்பாட்டின் காரணமாக முண்ணணிப்போட்டியாளராக வந்த அனுரவைத் தொற்கடிக்கக் காரணமாகி, சிங்கள இனம் இத்தீவில் வாலும் இன்னுமொரு இனம் எனினும் அவர்களது அபிலாசைகளிலும் மண் அல்லிப்போட்டுவிட்டார்கள்.  கூடிய விரைவில்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுவெளியில் நாம் இப்போது விமர்சிக்கும் தமில் அரசியல்வாதிகளை அகற்றி தமில் மக்கள் ஜனநாயக முறையில் தங்களது பிரதிநிதிகளை தேர்வுசெய்து நாடாளுமன்றம் அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்கிறது. ராஜபக்சேக்களது அரசியலை முறியடித்து அவர்களைக் களத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய பழிவாங்கும் சந்தர்ப்பம் தமிழர்க்கு இருந்தும் அதைக் கோட்டைவிட்டுவிட்டதும் இத்தேர்தல்மூலம் நடந்துள்ளது. ரணில் அல்லது சஜித் யாராவது பதவிக்கு வரவேண்டுமென்பது தமிழர்களது அடிப்படைப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நல்நோக்கத்துக்காக இல்லை, மாறாக குறுகியகாலநலஙளுக்கானதேயாகும். இங்கு புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் எவ்வளவு குத்திமுறிந்தாலும் அவர்களது நடைமுரை அரசியலை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே நியாயமானதும் நிதர்சனமானதுமாகும். எனினும் தொலைபேசிக்கும் கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாத வாக்களர்களையும் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை பியதாசாவே நினைத்துக் கவலைப்படுவார். எம்மால் எழுத்துக்களில் மீது விரல்களால் குத்தி எமது ஆதங்கத்தை மட்டும் தெரிவிக்கலாம். தீர்மானம் செய்யவேண்டியவர்கள் அவர்கள்,  நாம் அவர்களிலிருந்து விலத்தியிருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி. எமது வளம்பெற்ற வாழ்க்கைக்கு உதிரம் சொரிந்த மாவீரநினைவேந்தலுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயக அரசியல் தமிலர் விடிவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய உதவி. ஆகவே இது ஒன்றும் பெருய விடையம் இல்லை. 
    • வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.
    • முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலையாட்டாவிட்டால் துரோகி என்று கூறுவது வழமையான செயற்பாடுதானே விசுகர். நீங்கள் அரியத்தாருக்கு கண்ணுக்குப் புலப்படாத விலையுயர்ந்த  ஆடையை அணிவித்து, நகர்வலம் வருவீர்கள்.  நான் அதைப் பார்த்து சிரிக்கிறேன். அது உங்களைக் கோபப்படுத்துகிறது.  மக்கள் நிராகரித்த  பின்னரும் அதை ஏற்க மறுப்பது பாஸிசமாகும். 
    • ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது.  மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை.   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.