Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க"
 
 
பெரும்பாலான இலங்கை வாழ் மக்கள் சனிக்கிழமை 21 / 09 / 2024 அன்று தமக்குப்பிடித்த ஒரு தலைவரை ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கின்றனர்.
 
கூட்டாச்சி இல்லாமல், தனியாட்சி அதிகாரமிக்க வராய்த் இலங்கை நாட்டுக்குப் பல சிறப்பு அதிகாரங் களுடன் அநுர குமார திசாநாயக்க தலைவரா கியுள்ளார்.
 
சிவப்புச் சித்தாந்த சிந்தனையில் ஊறியவர்
சிறப்பாய்ப் படிப்பிலே பட்டம் பெற்றவர்
இளவயது மற்றும் ஆழுமை ஆற்றல் கொண்டவர்.
 
படிப்படியாகப் பதவிகளில் அங்கம் வகித்து சிகரமாய் அதிபர் பதவியில் 23 / 09 / 2024 அன்று ஏறி அமர்ந்துள்ளார்.
 
இலங்கையின் ஒரு மூத்த குடிகளான தமிழரின் உள்ளத்தில் இன்று எழும் கேள்வியும் எதிர்பார்ப்பும் ஒன்று இரண்டு அல்ல, அவை எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக இதயத்தை வாட்டும் கவலைகளே?
 
தமிழ் சிறைக்கைதிகளுக்கு
விடுதலை விடிவு வருமா?
 
குற்றக் கறை படிந்தவர்கள்
சிறையுள்ளே செல்வாரோ?
 
காணாமல் போனோர்
கண் முன்னே வருவாரோ?
 
தமிழர் நிலங்களின்
அபகரிப்பு முடிவுக்கு வருமோ?
 
லஞ்சம் ஊழல்கள் குறையுமோ?
பாதாளக் குழுக்கள் மற்றும்
ஆவா குழுக்கள் அடங்குமோ?
 
வாள் வெட்டுகள், துப்பாக்கி சூடு மற்றும் பாலியல் வன்செயல் குறையுமோ?
 
கஞ்சாப் போதைப் பாவனை தடுக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு இளைஞர்கள் ஒழுங்கு படுத்தப்படுமோ ?
 
தமிழர் பாரம்பரிய நிலங்களில் அல்லது முற்றும் முழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலங்களில் அத்துமீறும் அல்லது அடாவடித்தனம் புரியும் புத்தர் சிலைகள் நிறுவுதல் நிறைவு காணுமோ?
 
தமிழ் பேசும் மக்களின் இந்த முக்கிய பிரச்சனைகளைத் தவிர , தாமும் ஒரு இலங்கையன், மூத்த குடியோன் என்ற ரீதியில் அவனின் பொதுவான ஏக்கம்
 
தேய்பிறையான இலங்கை தேசத்தின் பொருளாதாரம்
வளர்பிறை காணுமோ?
 
ரூபாய் நாணயம் பெறுமதி ஏறுமோ?
 
ராக்கெட் போல் ஏறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்குமோ?
 
உள்ளூர் விவசாயங்கள் உச்சம் தொடுமோ?
 
அச்சமின்றிய வாழ்வு வாய்க்குமோ?
 
பஞ்சம் பசி மாறுமோ?
 
வருங்கால சந்ததிகள் வாழ வளமான நாடாய் மாறுமோ?
 
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பழைய வரலாறு கூறும் செய்தி அவை
 
சிங்கள மக்களோ சிறப்பாய்த் தமக்கு நல்லது என்ன செய்வாரென்ற ஆர்வத்தோடும்
தமிழ் மக்களோ தமக்கு ஏதாவது கெடுதல் செய்வாரோ என்ற அச்சத்தோடும், பழைய அல்லது இன்றைய நினைவில் இருக்கின்றார்கள்! அது மாறுமோ?
 
அநுர குமார திசாநாயக்க பதவியை
அணுகும் முறையைக் காணப் பல கண்கள் காத்திருக்க
அவரோ ஐந்து விரல்களை ஆதவனாய் விரித்துக் காட்டி
 
உங்கள் எல்லோரினதும் வாழ்க்கையை இன, மத பேதமின்றி உதயவனாய் ஒளிமயமானதாக்குவேன் என்கிறார்.
 
அநுர குமார திசாநாயக்காவிற்க்கும் பல எதிர்பார்ப்புகளுடன் வாழும் இலங்கை முழு மக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
 
சிறப்பான மற்றும் பாரபட்சம் அற்ற நேர்மையான ஆட்சியை, இனங்களை மொழி, சமயம், சாதி அடிப்படையில் பிரிக்காமல், வெறுக்காமல் எல்லோரும் இலங்கையர் என்பதை ஏற்று, சரிசமமாக ஊழல் அற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு!
 
சுருக்கமாக நாம் எதிர்பார்ப்பது
 
அநுர குமார திசாநாயக்கவும் அவரது NPPயும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் அவர்கள் உறுதியளித்தபடி இலங்கையில் எதிர்காலத்தில் உடனடி மாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே!
 
1. Paye Tax from 36% to 24%.
 
2. VAT will be exempt for Food items, Health sector services & educational books.
 
3. One vehicle per minister/MP.
 
4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians.
 
5. Cut down on unnecessary government expenditure.
 
6. No family / Friends will be accommodated on overseas tours.
 
7. All tours are on assigned targets.
 
8. Only 25 ministries.
 
9. Cut down prices on electricity & fuel.
 
10. Low interest rates
 
11. Development bank for the start of new small & medium scale industries.
 
12. A 3 bench special court to hear fraud cases.
 
13. Presidents budget cut down by 50%.
 
14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians.
 
15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences.
 
16. New laws to prevent MP's from switching the party they were elected to.
 
17. New Investments (local & overseas Srilankans may ready to invest).
 
18. No additional benefits for politicians over citizens.
 
19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc.
 
20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems
etc) & services (job opportunities),
 
21. Promoting tourism.
 
22. Restoring the oil refinery.
 
23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned.
 
24. New technology for the fisheries industry to enhance the yield (Fishermen to receive directions for fishing areas)
 
25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs.
 
26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a minimum cost.
 
27. Facilitate for Eco based tourism.
 
28. Plans to capture IT market.
 
29. Changes in the education policies to facilitate the economy.
 
30. Secure Food, Heath & Education as fundamentals for the citizens through adequate funding.
 
இதற்கெல்லாம் நிதி எங்கே என்று பொதுவாக மக்கள் கேட்கலாம்?
 
தேவையற்ற செலவுகள் மற்றும் விரயங்களை நிறுத்துவதன் மூலமும் எந்த வேறுபாடும் இன்றி எல்லா வரி செலுத்த தகுதியானவர்களிடம் வரிகளை வசூலிப்பதும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடும் மற்றும் அவர்களை வேறுபாடு காட்டாமல் ஊக்கிவிப்பது மூலமும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலமும், அவர்களை இங்கு வர ஊக்குவிப்பது மூலமும் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியை ஊக்கிவிப்பது மூலமும் இவை சாத்தியமாகலாம்?
 
இவை எல்லாவற்றிற்கும் நீதியான சரிசமமான வலுவான ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்!
 
 
யார் இந்த அநுர குமார திசாநாயக்க? அவர் கடந்து வந்த பாதை என்ன?
 
முழுப் பெயர் – திஸ்ஸநாயக முடியான்செலகே அநுர குமார திசாநாயக்க [Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka].
பிறப்பு – 1968.11.24.
 
பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.
ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.
உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.
 
குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.
 
1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.
அரசியல் வாழ்க்கை!
 
1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
 
1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
 
1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.
 
2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
 
2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.
 
2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
 
2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.
 
2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.
 
2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்.
 
1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநர் றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
 
அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.
 
2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.
 
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.
 
ஜேவிபி கட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி தேசிய மக்கள் கட்சியை நிறுவி இன்று அக்கட்சியினூடாக இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவானார்.
461253308_10226320393658995_920941321863  461128627_10226320396059055_2857533788928061782_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=9nXRY75gS_IQ7kNvgFmHy5F&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AezImM3RRJFDDpF3IVmou_s&oh=00_AYBR-_0jkAPo9J87uZy11MvPm4HjwOFgMi-K1Dc_LBMZyQ&oe=66F6FC9B
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்விகள்.

அடுத்த தேர்தலும் வருகிறபடியால் அதிரடியாக எதுவும் செய்யமாட்டார் என எண்ணுகிறேன்.

உங்கள் பல்கலைக் காலத்தில் இவர்கள் உச்சம் பெற்றிருந்தார்கள்.

நேரம் கிடைக்கும் போது அதன் அனுபவத்தையும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நியாயமான கேள்விகள்.

அடுத்த தேர்தலும் வருகிறபடியால் அதிரடியாக எதுவும் செய்யமாட்டார் என எண்ணுகிறேன்.

உங்கள் பல்கலைக் காலத்தில் இவர்கள் உச்சம் பெற்றிருந்தார்கள்.

நேரம் கிடைக்கும் போது அதன் அனுபவத்தையும் எழுதுங்கள்.

ஒன்று மட்டும் உண்மை  1971 இலோ அல்லது ரோகண விஜயவீர உயிருடன் இருக்கும் வரை இன துவேசம் அவர்களிடம் இருக்கவில்லை. 

ஆனால் அதன் பின் அது அவர்களுக்கிடையிலும் புகுந்துள்ளது என்பதுக்கு விமல் வீரவன்ச கட்டாயம் ஒரு உதாரணம்.     

மேலும் சுனாமி காலத்தில் கட்சி நடந்த விதம் மற்றும் வடக்கு கிழக்கு பிரித்தது இன்னும் ஒரு உதாரணம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.