Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளம் வீரர்களால் சிஎஸ்கே பிரமாண்ட வெற்றி - ஓய்வு பற்றி தோனி கூறியது என்ன?

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 25 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் குஜராத் அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் மாறாமல் இருந்தாலும், பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாக 0.254 எனச் சரிந்துள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், வெற்றியுடன் சீசனை முடித்துள்ளது.

மும்பை, ஆர்சிபி முதலிடம் பிடிக்க வாய்ப்பு

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் அணியின் தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றில் 3 அணிகளில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை அணி பஞ்சாப்பை வீழ்த்திவிட்டால் 18 புள்ளிகளுடன் வலுவான நிகரரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேசமயம், பஞ்சாப் அணி மும்பையிடம் தோற்கும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடிக்கும்.

கடைசி லீக்கில் லக்னெள வென்றுவிட்டால் தற்போது 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

17 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்திவிட்டால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும், ஆர்சிபியும் கடைசி லீக்கில் வென்றுவிட்டால் 19 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் யாருக்கு முதலிடம் என்பது தெரியவரும். இவ்வாறு நடந்தால், மும்பை அணி கடைசி இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்தைப் பிடிக்கும்.

ஆக, தற்போது ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை முதலிடம் பிடிக்க ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தோற்க வேண்டும், ஆர்சிபி முதலிடம் பிடிக்க பஞ்சாப் தோற்று, ஆர்சிபி கடைசி லீக்கில் வெல்ல வேண்டும்.

ஆனால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணி இனிமேல் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.

இளம் வீரர்களின் காட்டாற்று ஆட்டம்

சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அடித்தளமிட்டது தொடக்க வீரர் மாத்ரே(34), உர்வில் படேல்(37), பிரெவிஸ் (57) ஆகியோர்தான்.

கான்வே அரைசதம் அடித்தாலும் மிகவும் மெதுவாக ஆடினார். இளம் வீரர்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களைக் குவித்துவரும்போது அனுபவ வீரர் கான்வே படுமந்தாக பேட் செய்தது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது.

ஜடேஜா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி ஆட்டமிழந்திருந்தால் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும் ஆனால் டி20 ஆடுகிறோம் என மறந்து டெஸ்ட் போட்டியைப் போன்று ஜடேஜா பேட் செய்தார். சீனியர் வீரர்கள் இருவருமே பேட்டிங்கின் ஸ்வாரஸ்யத்தையும், ரன் வேகத்தையும் மட்டுப்படுத்தினர்.

இதில் உர்வில் படேல், மாத்ரே இருவருமே சிஎஸ்கே அணியின் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை. காயத்தால் மாற்றுவீரர்களாக அணிக்குள் வந்த இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரெவிஸ் 57 ரன்கள் அடித்தார்

அம்பலமான குஜராத்தின் பலவீனம்

ஏற்கெனவே லக்னெள அணியிடம் 230 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற குஜராத்தின் பலவீனத்தை அறிந்து சிஎஸ்கே பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது.

சிஎஸ்கே விரித்த வலையில் குஜராத் பேட்டர்கள் கச்சிதமாக விழுந்தனர். இந்த ஆட்டத்தில் குஜராத் வென்றிருந்தால், அனைத்துமே தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் குஜராத் தோல்வியால், லீக் சுற்றில் போட்ட வெற்றி நடை வீணாகிப்போனது.

லீக் சுற்றில் குஜராத் அணியின் 9 வெற்றிகளுமே பெரும்பாலும் டாப்-3 பேட்டர்களால் பெறப்பட்டவை.

அது சேஸிங்காக இருந்தாலும், முதலில் பேட்டிங்காக இருந்தாலும் சுதர்சன், கில், பட்லர் ஆகிய 3 பேருமே ஆதிக்கம் செய்தனர்.

இதனால் நடுவரிசையை குஜராத் அணியால் பரிசோதித்து பார்க்க முடியவில்லை. ஆனால், பின்பகுதி லீக் போட்டிகளில் நடுவரிசை பேட்டர்கள் அணியை வழிநடத்திச் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது,அணியின் உண்மையான நிலைமை என்னவென்று அம்பலமானது.

குஜராத் அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர் சுதர்சன், கில் இருவரின் விக்கெட்டை எடுத்துவிட்டாலே அணி ஆட்டம் கண்டுவிடும், ப்ளே ஆஃப் சுற்றில் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும்.

குஜராத் அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான்.

மாத்ரே அதிரடி தொடக்கம்

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய முடிவு செய்தார். மாத்ரே, கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். கான்வே தொடக்கத்திலிருந்தே பேட்டிங் ரிதத்துக்கு வரவில்லை, மிகவும் மந்தமாக செயல்பட்டார்.

ஆனால், அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரிலே மாத்ரே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 28 ரன்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார்.

உடனடியாக பிரசித் கிருஷ்ணா பந்துவீச வரவழைக்கப்பட்டார். பிரசித் ஓவரில் வீசப்பட்ட பவுன்ஸர், கூடுதல் வேகத்துக்கு திணறிய மாத்ரே, அதே ஓவரில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உர்வில் படேல் விளாசல்

அடுத்துவந்த உர்வில் படேல், கான்வேயுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடவே பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்தது. உர்வில் படேலும் பந்துகளை வீணாக்காமல் ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயரந்தது, கோட்ஸி ஓவரில் 3 பவுண்டரிகளை உர்வில் படேல் விளாசினர். கான்வேுவும் மெல்ல ஃபார்முக்குத் திரும்பி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

ரஷித்கான் வீசிய ஓவரில் லாங்ஆன் திசையில் உர்வில்படேல் அடித்த ஷாட்டை ஷாருக்கான் கேட்ச் பிடிக்கத் தவறினார். இந்த கேட்சைபிடித்திருந்தால், உர்வில் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார்.

சாய் கிஷோர் வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசிய உர்வில் படேல், அடுத்தபந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்றார். ஆனால், சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷிவம் துபே வந்தவுடனே கிஷோர் ஓவரில் சிக்ஸர் விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 115 ரன்கள் சேர்த்தது.

ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். ஷாருக்கான் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய துபே, அதே ஓவரில் கோட்ஸிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்னில் வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 150 ரன்களை எட்டியது.

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார்.

பிரெவிஸ் மின்னல்வேக அரைசதம்

அடுத்துவந்த பிரெவிஸ், கான்வேயுடன் சேர்ந்தார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கான்வே, ரஷித்கான் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த சீசனில் கான்வே படுமந்தமாக பேட் செய்து இந்த அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தவுடன் அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று போல்டாகி 52 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா, பிரெவிஸ் களத்தில் இருந்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களுடன் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் பிரெவிஸ் அதிரடியாக 57 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்தது.

கோட்ஸீ வீசிய 17வது ஓவரில் பிரெவிஸ் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களும், அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா சிக்ஸரும், பிரேவிஸ் பவுண்டரி என 14 ரன்களும் சேர்க்கவே சிஎஸ்கே ஸ்கோர் உயர்ந்தது.

சிராஜ் வீசிய 19-வது ஓவரை குறிவைத்த பிரெவிஸ் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து, 19 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பிரசித் வீசிய கடைசி ஓவரிலும் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 23 பந்துகளில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை

குஜராத்தின் பொறுப்பற்ற பந்துவீச்சு

ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட்டோமே எதற்காக மெனக்கெட வேண்டும் என்ற ரீதியில்தான் குஜராத் அணி பந்துவீச்சு இருந்தது. 7 பந்துவீச்சாளர்களை குஜராத் அணி பயன்படுத்தியும் சிஎஸ்கே பேட்டர்களின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த 7 பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே ஓவருக்கு 5 ரன்களை வழங்கினார். மற்றவர்கள் அனைவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதமும் அர்ஷத் கான் 2 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார்.

சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை. குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் நிலையில் இப்படி மோசமான பந்துவீச்சை வைத்து எவ்வாறு டிபெண்ட் செய்யப் போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

231 சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. ஏற்கெனவே லக்னெள அணியும் இதேபோன்று 230 ரன்களுக்கு மேல் சேர்த்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் குஜராத் அணி தோற்றிருந்தது. அதை மனதில் வைத்து சுதர்சன், கில் நிதானமாகத் தொடங்கினர்.

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாய் சுதர்சன் நிதானமாகத் தொடங்கினர்

எப்போதும் இல்லாதவகையில் புதிய பந்தில் ஜடேஜாவை பந்துவீச தோனி அழைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் புதிய பந்தில் முதல் ஓவரை ஜடேஜா வீசுவது இதுதான் முதல்முறையாக இருந்தது.

கம்போஜ் கடினமான லெனத்தில் வீசியதால் சுப்மான் கில் சற்று சிரமப்பட்டு ரன்களைச் சேர்த்து சிக்ஸர் விளாசினார். ஆனால் மீண்டும் கடினமான லென்த்தில் கம்போஜ் பந்துவீச பெரிய ஷாட்டுக்கு கில் முயன்றபோது பேட்டில் எட்ஜ் எடுத்து 13 ரன்னில் கில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ருதர்போர்ட் ரன் ஏதும் சேர்க்காமல் மாத்ரேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவருக்குள் குஜராத் அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது.

குஜராத் அணி தோல்வியின் பிடிக்குள் வந்துவிட்டதை அறிந்த தோனி, பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து அருமையாகப் பயன்படுத்தினார். ஜடேஜா, துபே, நூர்அகமது என பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து குஜராத் பேட்டர்களை திணறவைத்தார் தோனி.

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

சுதர்சன், ஷாருக்கான் இணைந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினர். துபே வீசிய 10-வது ஓவரில் சுதர்சன் சிக்ஸர், பவுண்டரியும், ஷாருக்கான் சிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர்.

ஜடேஜா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் ஷாருக்கான் 19 ரன்னில் பதீரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரிலேயே சுதர்சனும் 41ரன்களில் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் குஜராத் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

ரஷித்கான், திவேட்டியா தோல்வியிலிருந்து தப்பிக்க வைக்க முயன்றனர். ஆனால் இருவராலும் பெரிய பங்களிப்பு செய்ய முடியவில்லை. நூர் அகமது பந்துவீச்சில் ரஷித்கான்(12), திவேட்டியா(14) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கோட்ஸி 5 ரன்னில் பதீரனா பந்துவீச்சில் போல்டாகினார். அர்ஷத் கான் 20 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 2 விக்கெட்டுகளை இழந்தது. 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்து, 83 ரன்களில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே தரப்பில் கம்போஜ், நூர் அகமதுதலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எப்போது ஓய்வு - தோனி பதில்

CSK vs GT, தோனி ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " இறுதியில் நல்லவெற்றி. அரங்கம் நிறைந்திருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவு ரசிகர்கள் வந்திருந்தனர். வெற்றியுடன் முடித்துள்ளோம், அனைவரின் சிறப்பான பங்களிப்பாக இருந்தது. என் ஓய்வு குறித்து முடிவு செய்ய 3 அல்லது 4 மாதங்கள் தேவைப்படும். இது தொழில்முறை கிரிக்கெட் என்பதால், முடிந்த அளவு சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். எந்த அளவு கிரிக்கெட் மீது தீராத பசி, ஆர்வத்தைப் பொருத்துதான் முடிவு செய்வேன். என் ஓய்வு குறித்து முடிவு செய்ய போதுமான நேரம் இருக்கிறது. நான் ராஞ்சிக்கு சென்று முடிவு செய்வேன். நான் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டேன் என்று சொல்லவும் இல்லை, திரும்பவும் வருவேன் என்றும் கூறவில்லை. எனக்கு முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கும்போது 6 போட்டிகளில் 4 சென்னையில் நடந்தது. சேஸிங்கின்போது 2வது இன்னிங்ஸில் நாங்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகினோம். பேட்டிங் எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. இப்போது அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர், ருதுராஜ் அடுத்த ஆண்டு வருவார், அவர் அதிகமாக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly37nwe32do

Edited by ஏராளன்

  • Replies 114
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    டூ பிலஸ்சிய‌ விட‌  தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்   40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்க

  • ஏராளன்
    ஏராளன்

    சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்க

  • ஏராளன்
    ஏராளன்

    ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளாசன் மின்னல் வேக சதம்! வரலாற்றில் அழுத்தமாக தடம் பதித்து விடைபெற்றது சன்ரைசர்ஸ்

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன்

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த பல சீசன்களாகவே பெரிய ஸ்கோர்களையும், அதிரடி வெற்றிகளையும் கிளாசன் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் நேற்றைய ஆட்டமும் முக்கிய மைல்கல்லாகும். 39 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசன் கணக்கில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார், இறுதியாக முடிக்கும்போது 269 ஸ்ட்ரைக் ரேட்டில் கிளாசன் இருந்தார்.

3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் பேட் செய்த கிளாசன் 20 பந்துகளில் அரைசதம் அடித்தனர். 19வது ஓவரில்தான் கிளாசன் 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுடன் 3வது விக்கெட்டுக்கு கிளாசன் 83 ரன்கள் சேர்த்தார்.

கிளாசன் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்துவதற்கு முன் டிராவிஸ் ஹெட் தனது வானவேடிக்கையை முடித்துவிட்டு சென்றார். 6 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த பல போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த டிராவிஸ் ஹெட் கடைசி லீக்கில் சிறப்பாக ஆட்டத்தை முடித்திருப்பது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு செல்லும்போது நம்பிக்கையளிக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஹெட்டின் ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 79ரன்கள் சேர்த்தது.

அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக், ஹெட் 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 2வது விக்கெட்டுக்கு ஹெட், கிளாசன் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும் தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாகும்.

பாவப்பட்ட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார்.

கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேலாக கொடை வள்ளலாக மாறி ரன்களை வாரிக் கொடுத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் நோர்க்கியா, அரோரா, ராணா ஆகியோர் மட்டும் 11 ஓவர்கள் வீசி 139 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் நரேன், வருண் இருவரும் 7 ஓவர்கள் வீசி 96 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஸல் 2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். ஆன்ரிச் நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வழங்கினார், வருண் 54 ரன்கள் என மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

டெல்லி மைதானம் சிறியது, இதில் அதிகவேகமாக பந்துவீசும்போது, பேட்டர்கள் வேகமாக டிபெண்ட் செய்தாலே பந்து பவுண்டரிக்கு பறந்துவிடும், சிக்ஸருக்கு லேசாக முயற்சித்து சரியான ஷாட்களை ஆடினால் எளிதாக சிக்ஸருக்கு பறந்துவிடக்கூடிய மைதானம்.

இதில் ராணா, நோர்க்கியா ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசியது பெரிய தவறாகும். அதேபோல வருண், நரேன் பந்துவீச்சில் வழக்கமான லைன் லென்த் கிடைக்காமல் திணறினர். இதனால் இருவரும் சிறிய தவறு செய்து பந்தை ஸ்லாட்டில் போட்டவுடன் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்து பறந்தது. குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் சில நேரங்களில் செயல்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது.

சுனில் நரேனால் பவுண்டரி கொடுக்காமலும் ஒரு ஓவரை வீச முடிந்தது, இருப்பினும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த அவரால் முடியவில்லை. ஆடுகளமும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக மாற்றப்பட்டிருந்ததால், பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

3-வது அதிகபட்ச ஸ்கோர்

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பாக, 2024ம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக 284 ரன்களையும், இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்களை பதிவு செய்ததும் சன்ரைசர்ஸ் அணிதான். இப்போது 3வது அதிகபட்சமாக ஸ்கோராக நேற்று டெல்லியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 278 ரன்களையும் பதிவு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் 6 இடங்களில் ஐந்தில் சன்ரைசர்ஸ் அணியே இருக்கிறது.

3வது அதிவேக சதம்

3வது இடத்தில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை கிளாசன் பெற்றார். சுனில் நரேன் பந்துவீச்சில் 10 பந்துகளில் 24 ரன்கள், வருண் பந்துவீச்சில் 12 பந்துகளில் 36 ரன்கள் என கிளாசன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

இதற்கு முன் கிறிஸ் கெயில் 30 பந்துகளிலும், வைபவ் சூர்யவம்சி 35 பந்துகளிலும் அதிவேகமாக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை.

இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்களும், ஹர்சித் ராணா 34, சுனில் நரேன் 31 ரன்களும் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். மிகப்பெரிய இலக்கு, ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டோம், இதில் வென்றாலும் பலன் இல்லை என்ற வெறுமை ஆகியவை நேற்று கொல்கத்தா பேட்டர்களிடம் தெளிவாகத் தெரிந்தது.

இதனால் எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. களத்துக்கு வருவதும், போவதுமாக பேட்டர்கள் இருந்தனர், ஹர்சித் ராணா, மணிஷ் பாண்டே தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் 20 பந்துகளுக்கும் குறைவாகவே சந்தித்து ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் உனத்கட், மலிங்கா, ஹர்ஸ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

"அற்புதமாக முடித்துள்ளோம்"

SRH vs KKR, ஹென்ரிச் கிளாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், "அற்புதமாக தொடரை முடித்துள்ளோம். இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் சில விஷயங்கள் சிறப்பாக நடந்தன. எங்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், சில போட்டிகளில் தவறுகளை சரி செய்து விளையாடவில்லை. பலமுறை பைனல் சென்றிருக்கிறோம், ஆனால் இந்த ஆண்டு எங்களால் முடியவில்லை. போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

அணியில் உள்ள சில வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதிலும், 20 வீரர்களையும் பயன்படுத்தி, வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் 6-வது இடம்

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனில் 6 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் முடித்தது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.241 என்ற அளவே இருந்தது.

கடைசி இரு போட்டிகளில் பெற்ற வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு எந்தப் பலனும் இல்லாவிட்டாலும் 2 வெற்றிகளும் முன்பே கிடைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கலாம்.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 போட்டிகள் மழையால் ரத்தால் 12 புள்ளிகளுடன் -0.305 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் முடித்துள்ளது. ரஹானே தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெரிய எதிர்பார்ப்புடன் சீசனுக்குள் வந்து, 8வது இடத்தோடு முடித்தது.

எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

இடம்: ஜெய்பூர்

நேரம்: இரவு 7.30

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

நூர் அகமது(சிஎஸ்கே) 24 விக்கெட்டுகள்(14போட்டிகள்)

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 23 விக்கெட்டுகள்(14 போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg9447x789o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன?

MI vs PBKS: முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது.

பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும்.

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப்

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.

முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?

விராட் கோலி, ஐபிஎல் 2025 , ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும்.

ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர்.

ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ்

பிரியன்ஸ் ஆர்யா, ஐபிஎல் 2025, பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது

பிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது.

அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார்.

ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.

அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது.

மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2025, ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம்

இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை.

ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார்

நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார்.

பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

'எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்'

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் "நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும்.

போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்" என்று தெரிவித்தார்.

மேலும், "எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy90pe2nzxyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LSG vs RCB: சேஸிங்கில் அதிரடி காட்டிய கோலி, ஜிதேஷ் - வீணான ரிஷப் பந்தின் சதம்

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்சிபி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா (வலது), லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த்( இடது)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்த இடங்களைப் பிடித்துள்ளன என்பது தெரிந்து, முதல் தகுதிச்சுற்றில் யார் விளையாடுவது என்பது முடிவாகியுள்ளது.

இதன்படி, லக்னெள அணியை ஆர்சிபி வென்றதையடுத்து, முதல் தகுதிச் சுற்றில் விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்று, பஞ்சாப் அணியுடன் நாளை (29ஆம்தேதி) மோதுகிறது.

எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

அதில் தோற்கும் அணிக்கு 2வது வாய்ப்பாக, எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் மோதி அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும்.

மூன்றாவது அதிகபட்ச சேஸிங்

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. 228 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். 2024இல் பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்துள்ளது.

அதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு 204 ரன்களை ஆர்சிபி சேஸ் செய்திருக்கிறது. இந்நிலையில், 228 ரன்கள் என்பது ஆர்சிபியின் 3வது அதிகபட்ச சேஸிங்காகும்.

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டத்தின் முடிவில் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி அணியினர்

ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா

ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகளில் சொந்த மைதானம் தவிர்த்து வெளி மைதானங்களில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. ஆர்சிபிக்கு இந்த சீசனில் 7 போட்டிகள் வெளி மைதானங்களில் நடந்தன. அவை அனைத்திலும் வென்றது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் விராட் கோலியின் 54 ரன்களும், கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் சேர்த்த 85 ரன்களும்தான். ஜிதேஷ் ஷர்மா 6வது வரிசைக்கும் கீழாகக் களமிறங்கி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கடந்த 2019இல் ஹர்திக் பாண்டியா எடுத்த 91 ரன்களையும், 2018இல் ரஸல் எடுத்த 88 ரன்களையும் 6வது வரிசைக்கு கீழாகக் களமிறங்கி அடித்துள்ளனர்.

கோலியின் மைல்கல்

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி

இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 8வது அரைசதம் இது. கோலி அரைசதம் அடித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. அது மட்டுமின்றி 5வது சீசனாக கோலி 600 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்துள்ளார். கே.எல்.ராகுல் 4 முறை மட்டுமே 600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக விராட் கோலி இதுவரை 9030 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக முதல்முறையாக 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் வீரராக கோலி இருக்கிறார். அடுத்ததாக மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

ரிஷப் பந்த் லக்னெள அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்தப் போட்டி தவிர்த்து ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து லக்னெள ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ஆனால், ரிஷப் பந்தின் சதம் நேற்று வெற்றியாக மாறியிருந்தால் ஏதேனும் பலன் இருந்திருக்கும்.

ஜிதேஷ் அதிரடி ஆட்டம்

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா

ஜிதேஷ் ஷர்மா களமிறங்கும்போது ஆர்சிபி அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கோலியை இழந்திருந்தது. அணி 123 ரன்களை எடுத்திருந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் சேர்க்க வேண்டியிருந்தது.

கோலி ஆட்டமிழந்த பின் மதில் மேல் பூனையாக ஆர்சிபி அணி இருந்தது. ஆனால் ஜிதேஷ் ஷர்மா களமிறங்கியவுடன் பவுண்டரியுடன் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கடைசி 7 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட்டன.

மயங்க் அகர்வாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்து சுறுசுறுப்பாக பேட் செய்து ரன்ரேட்டை உயர்த்தினார். ரூர்கே வீசிய ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர், பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து நம்பிக்கை பெற்றார்.

ஷாபாஸ் அகமது வீசிய 15வது ஓவரில் ஜிதேஷ் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்தார். மயங்க் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபியின் ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன.

ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக 22 பந்துகளில் ஜிதேஷ் அரைதம் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. ரூர்கே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை நெருங்க வைத்தார் ஜிதேஷ் ஷர்மா. ஆயுஷ் பதோனி வீசிய 19வது ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மன்கட் அவுட் - ரிஷப் பந்தின் ஸ்போர்ட்மேன்ஷிப்

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக்வேஷ் ராதி வீசிய ஓவரில் அவர் பந்துவீசும் முன்பே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த ஜித்தேஷ் ஷர்மா கிரீஸை விட்டு வெளியே சென்றார். இதைப் பார்த்த திக்வேஷ் ராதி மன்கட் ரன்அவுட் செய்து நடுவரிடம் அப்பீல் செய்தார்.

கள நடுவரும் 3வது நடுவருக்கு பரிந்துரைக்க டிவி ரீப்ளேவில் ஜிதேஷ் ஷர்மா மன்கட் அவுட்டில் ஆட்டமிழந்தார் என்பது தெரிந்தது. ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்து விடுவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் திடீரென நாட்-அவுட் என்று வந்தது.

கேப்டன் ரிஷப் பந்த் அவுட் வழங்க வேண்டாம், மன்கட் அவுட்டில் கிடைக்கும் அவுட் வேண்டாம் என்று நடுவரிடம் கூறியது அதன் பிறகே தெரிய வந்தது. இதை அறிந்ததும், ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ரிஷப் பந்தை கட்டி அணைத்து தோளில் தட்டிக்கொடுத்துச் சென்றார்.

ஒருவேளை ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்திருந்தால் ஆர்சிபி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும். ஆனால், ரிஷப் பந்த் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

கோலி, சால்ட் வலுவான தொடக்கம்

விராட் கோலி, பில் சால்ட் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து 5.4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார். விராட் கோலி 2வது ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசியதால் ரன்ரேட் எகிறியது. 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 50 ரன்களை எட்டியது.

ஆகாஷ் சிங் ஓவரில் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். சேஸிங் மாஸ்டராக விளங்கிய கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரன்ரேட் 11க்கு குறையாத வகையில் கொண்டு சென்றார்.

தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விளாசியும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தும் கோலியின் ஆட்டம் உற்சாகமாக இருந்தது.

ஆனால், பட்டிதார் 14 ரன்னில் ரூர்கே ஓவரில் ஆட்டமிழந்ததும் அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோன் கால்காப்பில் வாங்கி வெளியேறியது ஆர்சிபி அணிக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

மயங்க் அகர்வால், கோலி கூட்டணி அணியை அந்தச் சரிவிலிருந்து மீட்டு மீண்டும் வெற்றியை நோக்கி நகர்த்தினர். கோலி 54 ரன்களில் ஆவேஷ் கானின் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த், மார்ஷ் பார்ட்னர்ஷிப்

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் பில் சால்ட்

ஐபிஎல் சீசன் முழுவதும் 4வது அல்லது 5வது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் நேற்று 3வது வீரராகக் களமிறங்கி சதம் அடித்து 118 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடங்கும். அதிலும் ரிஷப் பந்த் சதம் அடித்தவுடன் மைதானத்தில் தலை குப்புற "பிரண்ட்ஃபிளிப் ஷாட்" அடித்துக் கொண்டாடினார்.

ரிஷப் பந்த் நேற்று தீர்மானத்துடன்தான் களமிறங்கினார், யஷ் தயால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், 2 பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். புவனேஷ்வர் ஓவரில் சிக்ஸர், லிவிங்ஸ்டோன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து 29 பந்துகளில் ரிஷப்பந்த் அரைசதம் அடித்தார்.

நிதானமாக ஆடிய மார்ஷ், 23 பந்துகளில் 33 ரன்களுடன் இருந்தவர், ரிஷப் பந்தின் அதிரடியைப் பார்த்து அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அரைசதம் அடித்தார்.

ரிஷப் பந்த், மார்ஷ் ஜோடி 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். மார்ஷ் 67 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பந்த் காட்டிய அதிரடி தொடர்ந்தது. 54 பந்துகளில் சதம் அடித்த அவர் மைதானத்தில் தலைகுப்புற பல்டி அடித்து தனது சதத்தைக் கொண்டாடினார்.

'என்னால் நம்ப முடியவில்லை'

வெற்றியுடன் முதல் தகுதிச்சுற்றில் ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் அடித்ததைக் கொண்டாடும் லக்னௌ அணியின் ரிஷப் பந்த்

ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பேசுகையில், "என் கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் இப்படி ஒர் ஆட்டம் ஆடுவேனா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விராட் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன்.

என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் கடைசி வரை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து சுமைகளும் என் மீது இருந்தன. விராட், குர்னால், புவி ஆகியோருடன் ஒரு கேப்டனாக ஆடும் ஆட்டம் எனக்கு உற்சாகம் அளித்தது. இந்த தருணத்தை மகிழ்ச்சியாக்க விரும்பினேன்," என்று தெரிவித்தார்.

மேலும், "சரிவிலிருந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினேன். இதே ஆட்டம் அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும், எனக்கு கேப்டன் வாய்ப்பளித்த பட்டிதாருக்கு நன்றி. நாக்-அவுட் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுவார், நாங்கள் மேட்ச் வின்னர்களாக உருவாகியுள்ளோம்," எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y84jvvxyko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் பிளேஆஃப் சுற்று எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? ஓர் அலசல்

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று ( மே29) தொடங்குகின்றன. 2 அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும், 2 அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடுகின்றன.

இந்த ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

அடுத்த மாதத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பல வெளிநாட்டு தொடர்கள் தொடங்க இருப்பதால், ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் லீக் ஆட்டங்களில் பல நேரங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருப்பது அணிகளுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இருப்பினும் அதை ஈடுகட்டும் நோக்கில் வேறு வீரர்களை அணியில் சேர்த்து ப்ளேஆஃப் சுற்றை 4 அணிகளும் எதிர்நோக்குகின்றன.

அந்த வகையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், குஜராத் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாததால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராகும்.

ப்ளே ஆஃப் சுற்று எப்படி நடக்கும்?

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, பஞ்சாப், குஜராத், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நியூ சண்டிகரில்தான் முதல் தகுதிச் சுற்றும், எலிமினேட்டர் சுற்றும் நடக்கின்றன. இதில் பஞ்சாப், ஆர்சிபி அணிகள் 19 புள்ளிகள் பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்து முதல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி, 16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் போட்டியிடும். இதில் முதல் தகுதிச் சுற்றில் மோதும் இரு அணிகளில் எந்த அணி வெல்கிறதோ அது நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும்.

எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் 2வது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் வெல்லும் அணிதான் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதாவது முதல் தகுதிச் சுற்றில் வென்ற அணியுடன் கோப்பைக்கான போராட்டத்தில் ஈடுபட முடியும். இதுதான் ப்ளே ஆஃப் சுற்று நடக்கும் முறையாகும்.

ஆர்சிபி அணி எப்படி தயாராகியுள்ளது?

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடிவரும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் போராடுகிறது. இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். "ஈசாலா கப் நமதே" என்ற கோஷம் இந்த முறை நனவாகாதா என்ற ஏக்கம் ரசிகர்கள் முகத்தில் தெரிகிறது.

கடந்த 6 சீசன்களில் 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஆர்சிபி திணறுகிறது. ஆனால் இந்த முறை ஆர்சிபி அணி சீசன் தொடக்கத்தில் இருந்து அற்புதமாக தயாராகி வந்திருக்கிறது.

பெங்களூரைத் தவிர்த்து வெளி-மைதானங்களில் நடந்த 7 போட்டிகளிலும் ஆர்சிபி வென்று சாதனை படைத்தது. வலுவான பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அற்புதமான கலவையுடன் ஆர்சிபி அணி இருக்கிறது.

பஞ்சாப் அணியுடன் இதுவரை ஐபிஎல் தொடரில் 35 முறை மோதியுள்ள ஆர்சிபி அணி 17 முறை வென்றுள்ளது, 18 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனிலும் பெங்களூருவில் பஞ்சாப் அணியிடம் தோற்ற ஆர்சிபி அணி, முலான்பூரில் வைத்து பஞ்சாப் அணியை வென்று பதிலடி கொடுத்தது.

பஞ்சாப் அணிக்கு எந்தவிதத்திலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சளைக்காத அணியாக ஆர்சிபி இருக்கிறது.

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு வீரர்கள் யார் இல்லை?

ஆர்சிபி அணியில் லீக் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல், லுங்கி இங்கிடி ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார்கள், அதேபோல காயத்தால் தேவ்தத் படிக்கலும் ஆடமாட்டார். இவர்கள் 3 பேரும் இல்லாத நிலையில் ஆர்சிபி களமிறங்குகிறது.

இதில் இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசபராபாணியும், படிக்கலுக்குப் பதிலாக மயங்க் அகர்வால், டிம் சீபர்ட் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். இதில் டிம் டேவிட் தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

இன்று நடக்கும் ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் அவருக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்கலாம். டிம் டேவிட்டுக்கு இணையாக பெரிய ஹிட்டராக லிவிங்ஸ்டோன் இருக்கமாட்டார் என்றபோதிலும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும்.

இதில் முக்கிய அம்சமாக ஹேசல்வுட் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று விளையாடுவது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால், முசாபராபாணி ஆகியோர் இருப்பது பெரிய வலிமையாகும்.

அதேபோல சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் இருப்பதும், பேட்டர்கள் வரிசையில் விராட் கோலி, பில் சால்ட், பட்டிதார், மயங்க் அகர்வால், ரோமாரியா ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் வரை நல்ல பேட்டிங் செய்யக்கூடிய வரிசை இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வென்றுவிட்டால், 2016ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு ஆர்சிபி முன்னேறும்.

பஞ்சாப் அணி பைனலுக்கு முன்னேறுமா?

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26 கோடி கொடுத்து வாங்கியது வீண்போகவில்லை என்பது அணியை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்து நிரூபித்துவிட்டார். அடுத்ததாக பைனலை எதிர்நோக்கி பஞ்சாப் அணி இருக்கிறது.

கடைசியாக 2014-ஆம் ஆண்டு பைனலுக்கு முன்னேறிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றது, அதன்பின் 10 ஆண்டுகளாக அந்த அணி பைனலுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை. இந்நிலையில் இந்த முறை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் முன்னேறியுள்ளது.

லீக் போட்டிகளில் சில வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சுவைத்து வந்த பஞ்சாப் அணி, கடைசி சுற்று லீக் போட்டிகளில் வென்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியுடன் மோதும் பஞ்சாப் அணி வென்றி பெற்றால், நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

பஞ்சாப் அணியில் லீக் போட்டிகளில் ஆடிய மார்க்கோ யான்சென், மேக்ஸ்வெல், பெர்குசன் ஆகியோர் ப்ளே ஆப் சுற்றில் ஆடமாட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, கெயில் ஜேமிஸன், மிட்ஷெல் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை இந்த சீசன் முழுவதுமே பெரும்பாலும் உள்நாட்டு வீரர்களை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வீரர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரிதாக யாரையும் ப்ளேயிங் லெவனில் கொண்டுவரவில்லை. ஆதலால், யான்சென், மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணியை பெரிதாக பாதிக்காது.

அதேசமயம், காயத்தால் ஆடாமல் இருந்த சஹல் அணிக்கு திரும்புவது பெரிய பலம். யான்சென் இல்லாத நிலையில் ஜேமிஸன் கொண்டுவரப்படலாம். இதைத் தவிர பெரிதாக பஞ்சாப் அணியில் மாற்றம் இருக்காது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பஞ்சாப் அணி ஆர்சிபி அணிக்கு வலுவான சவால் அளிக்கும்.

வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே ஓரளவுக்கு அச்சுறுத்தல் தரக் கூடியவர். மற்றவகையில் ஜேமிஸன், ஓமர்சாய் பந்துவீச்சை ஆர்சிபி வீரர்கள் எளிதாக ஆடிவிடக்கூடியவர்கள். ஆனால் சுழற்பந்துவீச்சில் ஹர்பிரித் பிரார், சஹல் ஆகியோரின் 8 ஓவர்கள் நிச்சயமாக சவாலாக இருக்கும்.

பேட்டிங்கில் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ், இங்கிலிஸ், நேஹல் வதேரா, சசாங்சிங், ஸ்டாய்னிஷ், ஓமர்சாய், ஜேமிசன் வரை சிறப்பாகவே பேட் செய்யக்கூடிய வரிசையை பஞ்சாப் வைத்துள்ளது ஆர்சிபி அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்சிபி அணியை ஒப்பிடும்போது சற்று வலிமையாக இருப்பது சாதகமான அம்சமாகும்.

குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழுமா?

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குஜராத் அணியின் சுப்மான் கில் மற்றும் ஜோஸ் பட்லர்

குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றுகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து வந்தநிலையில் கடைசி இரு போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளால் 18 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதனால் எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் ஆடி, அதில் வென்று, 2வது தகுதிச்சுற்றில் ஆடி வென்று, பைனலுக்கு முன்னேறய வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி இருக்கிறது.

குஜராத் அணிக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர், ரபாடா, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக இலங்கை வீரர் குஷால் மென்டிஸ், சனகா சேர்க்கப்பட்டுள்ளனர். பட்லர், ரபாடா, பிலிப்ஸ் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பின்னடைவுதான்.

ஏனென்றால், குஜராத் அணி லீக் போட்டிகளில் சேர்த்த ரன்களில் 73% ரன்கள் டாப்ஆர்டரில் 3 பேட்டர்கள் சேர்த்ததாகும், அதில் பட்லரும் ஒருவர். பட்லர் அணியில் இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய பலவீனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதை குஷால் மெண்டிஸ் நிரப்புவாரா என்பதும் தெரியவில்லை.

அடுத்ததாக லெக் ஸ்பின்னர் ரஷீத் கானின் மோசமான ஃபார்ம் குஜராத் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ரஷீத் கான் 14 போட்டிகளில் ஆடி இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு 9 ரன்களும் 53 பந்துவீச்சு சராசரி வைத்து மோசமாக பந்துவீசி வருகிறார். எலிமினேட்டர் சுற்றில் ரஷித் கான் எழுச்சி பெற்று பந்து வீசினால் தான் குஜராத் அணி தப்பிக்க முடியும் இல்லாவிட்டால் கடினம் தான். ரஷித் கான் தவிர்த்து சாய் கிஷோர், திவேட்டியா இருவர் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு உள்ளனர்.

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை

வேகப்பந்துவீச்சில் சிராஜ், அர்ஷத் கான், கோட்ஸி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் லீக் போட்டி தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய சிராஜ் அதன்பின் ரன்களை வாரி வழங்குவது பெரிய கவலை. வலுவான பந்துவீச்சு இல்லாததால் தான் கடைசியாக ஆடிய இரு ஆட்டங்களிலும் குஜராத் அணி, எதிரணியான சிஎஸ்கே, லக்னெள அணியை 230 ரன்கள் வரை சேர்க்க அனுமதித்தது.

குஜராத் அணியின் முக்கியமான பலவீனம் கடந்த 2 போட்டிகளிலும் அம்பலப்பட்டுவிட்டது. லீக் சுற்றுகளில் பெற்ற வெற்றிகள் பெரும்பாலும் டாப்ஆர்டரில் இருக்கும் சுதர்சன், கில், பட்லர் ஆகியோர் சேர்த்த ரன்களால் பெற்ற வெற்றியாகும். நடுவரிசை பேட்டர்களை வைத்து குஜராத் அணி பெரிதாக சோதித்துப் பார்க்கவில்லை. டாப்-ஆர்டரில் 3 பேட்டர்களே பெரும்பாலான போட்டிகளை முடித்துவிட்டனர்.

இந்தச் சூழலில் கடந்த 2 போட்டிகளிலும் நடுவரிசை பேட்டர்களை களமிறங்கி பேட் செய்யும்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எந்தஅளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. உண்மையில் குஜராத் அணியின் நடுவரிசையில் ராதர்போர்ட், ஷாருக்கான், திவேட்டியா ஆகியோர் இருந்தாலும் இவர்களின் பேட்டிங்கில் நிலைத்தன்மைஇல்லாதது பலவீனம். குஜராத் அணி ஒட்டுமொத்தத்தில் கில், சுதர்சன் இருவரின் தொடக்க பேட்டிங்கை நம்பியை இருக்கிறது.

இவர்கள் இருவரும் ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், குஜராத் அணியின் நிலைமை மதில்மேல் நிற்கும் பூனையாக மாறிவிடும்.

6-வது கோப்பையை நோக்கி மும்பை

2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் சர்மா

மும்பை அணி தோல்வியுடன் சீசனைத் தொடங்கினாலும் பும்ராவின் வருகை, ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் ஃபார்முக்கு திரும்பியபின் மும்பை அணி வலுவாக வலம் வந்தது. 16 புள்ளிகளுடன் இருந்தாலும் மும்பை அணி வைத்திருக்கும் ரன்ரேட் முதலிடத்தில் இருக்கும் அணியிடமே இல்லை. எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியுடன் மும்பை அணி மோதுகிறது.

லீக் சுற்றுகளில் குஜராத் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலுமே மும்பை அணி தோற்றுள்ளது. ஆனால் அப்போதிருந்த மும்பை அணியைவிட முற்றிலும் மாறியுள்ளது தான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறது.

மும்பை அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்றாலும் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மும்பை அணி அனைத்து அணிகளுக்கும் சாவலாகவே திகழ்கிறது. பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹர் என வகையான பந்துவீச்சாளர்கள், சான்ட்னர், கரன் சர்மா, நமன் திர் என சுழற்பந்துவீச்சாளர்களுடன் நடுப்பகுதி ஓவர்களை நகர்த்துகிறது.

மும்பை அணியில் இருந்த வெளிநாட்டு வீரர்கள் வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன், கார்பின் போஸ் ஆகியோர் இல்லாவிட்டாலும், பேர்ஸ்டோ, அசலங்கா, கிளீசன் வருகை அந்த அணிக்கு பெரிய பலம் சேர்க்கும். ரோஹித் சர்மாவுடன், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நின்றுவிட்டால் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்வது உறுதியாகும். இது தவிர சூர்யகுமார், திலக் வர்மா, அசலங்கா அல்லது பேவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், சான்ட்னர் வரை ஓரளவு நிலைத்து ஆடக்கூடிய பேட்டர்களை மும்பை அணி வைத்துள்ளது. குஜராத் அணியை ஒப்பிடும்போது, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாகவே மும்பை அணி இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபிக்கும், பஞ்சாப் அணிக்கும் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்தையும், கடைசிப் பந்துவரை பரபரப்புடன் நகரும் என நம்பலாம். ஏனென்றால் இரு அணிகளுமே தங்களிடம் இருந்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளன. உள்நாட்டு வீரர்களும் வலுவாக இருப்பதால் நிச்சயம் சவாலாக இருக்கும்.

எலிமினேட்டர் சுற்றைப் பொருத்தவரை குஜராத் அணி, மும்பை அணி இடையிலான ஆட்டத்தில் சாய் சுதர்சன், சுப்மான் கில் ஆட்டம் ரசிகர்களை ஈர்க்கலாம். மும்பை அணி முதலில் பேட் செய்து 230 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துவிட்டாலும் குஜராத் அணி திணறக்கூடும். ஆதலால், எலிமினேட்டர் போட்டி, குஜராத் அணிக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c308v0qyqn4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு சீசனில் ஆர்சிபி வெற்றிமேல் வெற்றி பெற காரணமான புதிய அணுகுமுறை

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 30 மே 2025, 03:14 GMT

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி 4வது முறையாக தகுதி பெற்றுள்ளது. முலான்பூரில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.

2009, 2011, 2016ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பைனலில் விளையாடுகிறது.

அது மட்டுமல்ல கடந்த 6 சீசன்களில் 5வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அதில் 3வது இடத்தை ஒருமுறையும் பிடித்திருந்தது. ஆனால். இந்த முறை பைனலுக்கும் முன்னேறி தன்னை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறது ஆர்சிபி அணி. நடப்பு சீசனில் ஆர்சிபி வெற்றிமேல் வெற்றி பெற காரணமான புதிய அணுகுமுறை என்ன?

ஒருதரப்பான ஆட்டம்

வலுவான அணிகள் மோதும் ப்ளே ஆஃப் சுற்று ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டம் ஏமாற்றம் அளித்திருக்கும். அதுவும், பஞ்சாப் அணி சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் சுருண்டு விடும் என்று அந்த அணி ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், சூயஷ் சர்மா, யஷ் தயால் ஆகியோரின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டாகிவிட்டது. ஐபிஎல் தடைபட்ட ஒரு இடைவெளியில் தாயகம் சென்றுவிட்டதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு வருவாரா என சந்தேகிக்கப்பட்ட ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்து பஞ்சாப் சரிவுக்கு முக்கியக் காரணமானார்.

பைனலுக்கு முன்னேறக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி, ஃபில்சால்ட் எனும் பிரம்மாஸ்திரத்தை ஏவி, 10 ஓவர்களுக்குள்ளேயே வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்சிபி தொடக்க ஆட்டக்கார்ர பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களுடனும், கேப்டன் பட்டிதர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் தோல்விக்கு காரணம் என்ன?

முலான்பூரில் நேற்று போட்டி நடந்த ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் சாதகமாக இருந்தது. அதை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கண்டுபிடித்து, ஆடுகளத்தின் தன்மையை சக பந்துவீச்சாளர்களுக்கு கடத்திவிட்டனர். பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது, பவுன்ஸரும் ஆகிறது என்பதால், அடித்துஆட முற்பட்டால் விக்கெட்டை இழந்துவிடுவார்கள் ஆதலால் லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீச வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர்.

புவனேஷ்வர் குமார் வழக்கமான ஆடுகளத்திலேயே புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர், இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்டர்களை திணறடித்துவிடுவார். அதைத்தான் நேற்றும் செய்தார். யஷ் தயால் தனது மிதவேக ஸ்விங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஹேசல்வுட் மிகவும் கடினமான லென்த்தில் பந்துவீசினார். ஏற்கெனவே ஸ்ரேயாஸ் அய்யரை 3 முறை ஆட்டமிழக்கச் செய்திருந்த ஹேசல்வுட் 4வது முறையாக நேற்றும் அவரது விக்கெட்டை எடுத்தார். ஹேசல்வுட் வீசிய 3 ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் என 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீச்சை மாற்றவில்லை. பேட்டர்கள் சிறிது கவனம் தவறினாலும் ஸ்டெம்ப் சிதறிவிடும் என்ற ரீதியில்தான் சூயஷ் சர்மாவின் கூக்ளி, பந்துவீச்சு இருந்தது. இதனால் சூயஷ் சர்மாவின் பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று தவறவிட்டவர்கள் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர்.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணிக்கு தொடர் நெருக்கடியை கொடுத்து ஆர்சிபி அணி திக்குமுக்காடச் செய்தது.

பஞ்சாப் அணியினர் லீக் போட்டிகளை அணுகியதைப் போலவே ஒரே மாதிரியான ஆட்டத்தை ஆடியது மிகப்பெரிய தவறாகும். குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதுபோன்ற ஷாட்டை ஹேசல்வுட் பந்தில் அடித்திருக்கத் தேவையில்லை. ரன்ரேட் அழுத்தம், பவர்ப்ளே ஓவர்களை கோட்டை விடுகிறோம் என்ற அழுத்தம்தான் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை பெரிய ஷாட்களை அடிக்கத் தூண்டியது. அதுமட்டுமல்ல பஞ்சாப் அணி வீரர்களை தவறு செய்யத் தூண்டி, தங்கள் வலையில் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் விழ வைத்தனர்.

உண்மையில் ஆட்டத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ஆடுகளத்தின் தன்மையை முதல் ஓவரிலேயே ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் கடைசிவரை பஞ்சாப் அணியினரால் ஆடுகளத்தை புரிந்து கொள்ள முடியாததுதான் இந்த ஆட்டத்தின் முக்கிய வேறுபாடாகும்.

17 ஆண்டுகளாக தீராத தாகம்

ஆர்சிபி அணி 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. 18 சீசன்களில் 10 முறை ப்ளே ஆஃப்சுற்றுக்கு வந்துள்ள அனுபவம் கொண்ட ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்ற முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அது மட்டுமல்ல ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் பெரிய, ஆறாத தழும்பு இருக்கிறது. 17 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத தாகம் அந்த அணியைத் துரத்தி வருகிறது.

ஒருமுறை அல்ல இருமுறை இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறி ஆர்சிபி கோப்பையை இழந்திருக்கிறது. இந்த முறை கோப்பையை வென்று 17 ஆண்டு தாகத்தை தணிக்கும் வேட்கையுடன் ஆர்சிபி வீரர்கள் இருக்கிறார்கள்.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறக்க முடியாத காயம்

2016 சீசனின் இறுதிப்போட்டியை ஆர்சிபி மறந்திருக்காது. கிறிஸ் கெயில், விராட் கோலி, டீவில்லியர்ஸ் இருந்தவரை ஆர்சிபி பக்கம் இருந்த ஆட்டம் அதன்பின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து, 9 ரன்களில் கோப்பையை இழந்தது ஆர்சிபி.

ஆர்சிபி அணி அப்போது முடிவெடுத்தது, இனிமேல் குறிப்பிட்ட சில வீரர்களை நம்பி அணி இருக்கக் கூடாது, பேட்டிங்கில் ஆழத்தை கடைசி வீரர்கள் வரை கொண்டு செல்ல தீர்மானித்தது. அதன்படியே வீரர்களை ஒவ்வொரு ஏலத்திலும் தேர்ந்தெடுத்து பரிசோசித்துப் பார்த்தது. அப்படித்தான் 2024 ஏலத்தில் வீரர்களை சரியாகத் தேர்ந்தெடுத்ததால்தான் வெளி மைதானங்களில் 7 போட்டிகளிலும் ஆர்சிபி அணியால் வெல்ல முடிந்தது.

"ஈ சாலா கப் நமதே" என்ற வாசகத்தை நனவாக்கும் நாளை நோக்கி நம்பிக்கையுடன் ஆர்சிபி நகர்ந்திருக்கிறது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2024 சீசனில் திட்டமிடல்

நவம்பரில் ஐபிஎல் ஏலம் நடப்பதற்கு முன் ஆர்சிபி அணியின் இயக்குநர் மோ போபத் தங்களது அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், மென்ட்டர் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

"வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்காதீர்கள், அவர்கள் நமது அணிக்காக எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்து தேர்ந்தெடுங்கள்" என்று அவர் அறிவுறுத்தியதாக அந்த செய்தி கூறுகிறது.

வீரர்கள் தேர்வில் கவனம்

புகழ் பெற்ற வீரர்களை கோடிக்கணக்கில் வாங்குவதைவிட, சரியான வீரர்களை, சரியான இடத்துக்கு வாங்க வேண்டும் என்ற கொள்கையை ஏலத்தின் போது ஆர்சிபி அணி கடைபிடித்தது. இதுதான் ஆர்சிபி பைனலுக்கு செல்ல வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற திட்டமிடலுக்கு அடித்தளமாக அமைந்தது.

ஆர்சிபியின் நோக்கம், திட்டம், பாதையை தெளிவாக வைத்துக் கொண்டு ஏலத்தில் களமிறங்கியது. வீரர்களின் பெயருக்கும், புகழுக்கும் கவனத்தைச் செலுத்தாமல் அவர்களின் ஸ்ட்ரைக் ரேட், சராசரி, பவுண்டரி அடிக்கும் சதவீதம், சிக்ஸர் அடிக்கும் திறமை ஆகியவற்றையும், பவர்ப்ளே, டெத்ஓவர், நடுப்பகுதியில் எவ்வாறு பந்து வீசுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஏலத்தில் பதற்றப்படாமல் பேட்டர்களையும், பவுலர்களையும் ஆர்சிபி தேர்ந்தெடுத்தது.

ஏற்கெனவே கோலி, பட்டிதார், யஷ் தயால் தக்கவைக்கப்பட்டனர். டூப்பிளசிஸுக்கு 40 வயதாகிவிட்டால் தங்களின் திட்டத்துக்கு சரிவரமாட்டார் என்பதால் அந்த அணி கழற்றிவிட்டது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சால்ட் எனும் பிரம்மாஸ்திரம்

2024 சீசனில் வில் ஜேக்ஸின் 41பந்துகளில் சதம் அடித்த ஆட்டம் ஆர்சிபியை கவர்ந்ததால் அவரை கழற்றிவிட மனமில்லை இருப்பினும் பில் சால்ட் ஏலத்தில் வந்தவுடன் ஜேக்ஸைவிட சிறந்த அதிரடி பேட்டரான சால்டை ரூ11 கோடிக்கு எடுத்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தியது ஆர்சிபி.

மென்டர் தினேஷ் கார்த்திக் ஒருமுறை கூறுகையில் " பில் சால்டின் திறமை என்னவென்றால், எந்த நல்ல ஓவரிலும், பெரிய அளவில் ரன் குவித்துவிடுவார். அதனால்தான் ரூ.11.25 கோடிக்கு அவரை வாங்கினோம்" என்று தெரிவித்தார்.

அது உண்மைதான் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக 331 ரன்கள் எடுத்து, 171 ஸ்ட்ரைக் ரேட்டிலும் சால்ட் ஆடி வருகிறார்.

மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் என உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யார் பந்துவீசினாலும் சால்டின் அதிரடி ஆட்டம் தெறிக்கவிட்டது. இந்த சீசனிலும் கோலி,-சால்ட் பார்ட்னர்ஷிப்தான் 3வது அதிகபட்ச ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. ப்ளே ஆஃப் சென்ற அணிகளில் அதிகபட்ச ரன்ரேட் வைத்திருக்கும் அணியாகவும் ஆர்சிபி இருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தத் தொடங்கியது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிக்க முடியாத கோலியும் ஆர்சிபியும்

விராட் கோலி ஆர்சிபி அணிக்காக எப்போதுமே தனது முழுமையான பங்களிப்பை வழங்கக் கூடியவர். இந்த சீசனிலும் 600 ரன்களை நோக்கி நகர்ந்துவிட்டார்.

அதிலும் கடந்த சில சீசன்களைவிட, இந்த சீசனில் அதிரடியான பேட்டிங், 170க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் என அணி நிர்வாகம் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை முழுமையாக கோலி வழங்கி வருகிறார்.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுவரிசைக்கு வீரர்கள் தேர்வு

அதேபோல தேவைப்படும் நேரத்தில் சிறந்த பேட்டிங்கை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வீரர்களை பார்த்துப் பார்த்து ஆர்சிபி தேர்ந்தெடுத்தது. ஏலத்தில் ஜிதேஷ் சர்மா, மும்பை அணி கழற்றிவிட்ட டிம் டேவிட், ரோமாரியா ஷெப்பர்ட் ஆகியோரை வாங்கி, அவர்களை நடுவரிசையில் ஆர்சிபி பயன்படுத்தியது.

இதில் டிம் டேவிட் 26 பந்துகளில் பஞ்சாபுக்கு எதிராக இந்த சீசனில் அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தினார். மும்பை அணி வில் ஜேக்ஸை வாங்கிய போது, ஆர்சிபி டிம் டேவிட்டை எடுத்துக்கொண்டது. ஜிதேஷ் சர்மாவை வாங்கி, அவருக்கு பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் தினேஷ் கார்த்திக், ஆன்டி பிளவர் இருவரும் பயிற்சி அளித்து செதுக்கினர்.

சீசனுக்கு முன்பே கேப்டனை முடிவு செய்த ஆர்சிபி

கேப்டன் யார் என்பதை முடிவுசெய்துதான் ஆர்சிபி அணி சீசனையே எதிர்கொண்டது. ரஜத் பட்டிதார்தான் அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர் என்பதை அறிந்து அவரை 2024 சீசனிலேயே அடையாளம் கண்டது ஆர்சிபி நிர்வாகம்.

ஆனால் அவரின் கேப்டன்சியை பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் வேண்டுமே என்பதற்காக காத்திருந்தனர். மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பட்டிதார் முஸ்டாக் அலி கோப்பையில் வழிநடத்தினார். மத்தியப்பிரதேச பயிற்சியாளராகவும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும் இருந்த சந்திரகாந்த் பண்டிட்டிடம் பட்டிதாரின் திறமை குறித்து இருவரும் கேட்டு அறிந்தனர். முஸ்தாக் அலித் தொடரில் 2வது அதிக ரன் குவித்த வீரராகவும் பட்டிதார் இருந்தார். இது கேப்டனாக்க கூடுதல் உத்வேகத்தை ஆர்சிபி நிர்வாகத்துக்கு அளித்தது.

பட்டிதாரை தேர்ந்தெடுக்க கோலியும் முழு ஆதரவு அளித்தார். முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக சூப்பர் ஸ்டார் வீரர் அல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டிதாரின் சாதனைகள்

கேப்டனாகப் பொறுப்பேற்ற பட்டிதார் முதல் ஆட்டத்திலேயே கொல்கத்தா அணியை 2019ம் ஆண்டுக்குப் பின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து ஆர்சிபி வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கத்தில் 2008-ஆம் ஆண்டுக்குப் பின் வீழ்த்தவும் பட்டிதார் தலைமை காரணமாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ஆர்சிபி. இவை அனைத்தும் பட்டிதார் கேப்டன்ஷிப் வந்தபின்புதான் நடந்தது.

அது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணிக்கு எதிராக ரஸலை வீழ்த்த சூயஷ் சர்மாவை பந்துவீச அழைத்தது, இதனால் 190 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 172 ரன்களில் கொல்கத்தா சுருண்டது. சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி 3 ஓவர்களில் 34 ரன்களை பந்துவீச்சாளர்களை வைத்து டிபெண்ட் செய்தது. குறிப்பாக 18வது ஓவரில் சூயஷ் சர்மாவை பந்துவீச துணிச்சலாக அழைத்ததது, யஷ் தயாலை கடைசி ஓவர் வீச வைத்தது ஆகியவை பட்டிதாரின் தீர்க்கமான முடிவுக்கு உதாரணமாக இருந்தன.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளைஞர்களுக்கு வாய்ப்பு

காயத்தால் பட்டிதார் விளையாடாத நிலையில் களத்தில் கேப்டன்ஷிப் வாய்ப்பு மற்றொரு இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஜிதேஷ் சர்மாவும் லக்னெள அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி முதல் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தார்.

ஜிதேஷ் சர்மா பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றமும், சூழலுக்கு ஏற்றபடி பேட்டிங் செய்யும் திறனும் வளர்வதற்கு பயிற்சியாளர் ஆன்டிபிளவர், மென்டர் தினேஷ் கார்த்திக் காரணம் என ஜித்தேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி மற்றொரு வீரர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது தேவ்தத் படிக்கல். 3வது வரிசையில் விளையாட சரியான வீரர் தேவை என்ற போது ஏற்கெனவே அணியில் இருந்த படிக்கலை வாங்கி மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இந்த வாய்ப்பையும் படிக்கல் சரியாகப் பயன்படுத்தி 247 ரன்கள் இந்த சீசனில் சேர்த்தார், 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதற்கு முன் படிக்கல் ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

துருப்புச்சீட்டு ஹேசல்வுட், புவி

ஆர்சிபி அணியின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ஹேசல்வுட், புவனேஷ்வர் குமாரை வாங்கியது. இருவருமே பந்தை ஸ்விங் செய்வதிலும், புதிய பந்தில் பந்துவீசுவதில் தேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கேஎல்ராகுல், வெங்கடேஷ் அய்யர் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் ஏலத்தில் போட்டி நிலவியபோதும் அதில் ஆர்சிபி கலந்து கொள்ளாமல் தனக்கான வீரருக்காக காத்திருந்தது.

ஹேசல்வுட், புவனேஷ்வர் பெயர்கள் அறிவிக்கப்பட்டதுமே களத்தில் இறங்கிய ஆர்சிபி 2 பேரையும் வாங்கியது. பவர்ப்ளேயில் சிறந்த எக்னாமி வைத்திருக்கும ஹேசல்வுட்டை முடிந்தவரை விலைகொடுத்து ஆர்சிபி வாங்கியது. அதற்கு ஏற்றபடி இதுவரை ஹேசல்வுட் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 8.44 எக்னாமி வைத்திருக்கிறார். டெத் ஓவர்களில் சராசரியாக 6 ரன் மட்டுமே ஹேசல்வுட் விட்டுக் கொடுத்துள்ளார்.

சுழற்பந்துவீச்சு மீதும் கவனம்

இது தவிர க்ருணால் பாண்டியா, ஆல்ரவுண்டர்களுக்காக லிவிங்ஸ்டோன், சூயஷ் சர்மா ஆகியோருடன் சுழற்பந்துவீச்சையும் பலப்படுத்தியது. அதிலும் க்ருணால் பாண்டியா இந்த சீசனில் 15விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு வந்தது என்பது அந்த அணியின் நீண்டகாலத் திட்டமிடலின் வெற்றிதான். ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என எந்த துறையையும் பெரிதாக குறைகூற முடியாத வகையில், எந்த சூழலையும் சமாளித்து ஆடக் கூடிய வீரர்களைக் கொண்டதாக அணியை ஆர்சிபி மாற்றியது.

RCB vs PBKS, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வீரர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணியைக் கட்டமைத்து, ப்ளேயிங் லெவனை ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்ததாக உருவாக்கி, அணியை பைனல் வரை வந்துள்ளது ஆர்சிபியின் வெற்றிகரமான திட்டமிடல்தான் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டி வரை ஆர்சிபியின் திட்டமிடல் வெற்றியாக அமைந்துவிட்டது.

ஆர்சிபி மட்டுமல்லாது, அத்துடன் இணைந்து 17 ஆண்டுகளாக ஐ.பிஎல் கோப்பையை வெல்லும் தாகத்தில் உள்ள கோலியின் கனவும் இம்முறை நிறைவேறும் என்று அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrnjv7z38vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டிய தமிழக ஜோடி: மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை'

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 31 மே 2025, 03:07 GMT

நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியையடுத்து, 2வது தகுதிச்சுற்றில் பஞ்சாப் அணியுடன் நாளை ஆமதாபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும்.

மும்பையின் கச்சிதமான திட்டம்

குஜராத் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் 230 ரன்கள் வரை சேர்த்த ஆட்டங்களில் அழுத்தம் தாங்காமல் தோல்வியைத் தழுவியது. அதிலும் முக்கிய பேட்டர் ஜாஸ் பட்லர் அணியில் இல்லை. இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்ட மும்பை அணி, தன்னுடைய இலக்கை 200 ரன்களுக்கு மேல் வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது.

மும்பை அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ (47), ரோஹித் சர்மா (81) உறுதுணையாக இருந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் கேமியோ (22) 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியது.

229 ரன்கள் என்ற நெருக்கடியான இலக்கைத் துரத்தத் தொடங்கிய குஜராத் அணி முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை இழந்தபோதே பாதி தோல்வி அடைந்துவிட்டது. சாய் சுதர்சன் மட்டும் நம்பிக்கையுடன் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றார். இதில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்(48), சாய் சுதர்சன் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது. முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், பும்ரா 14-வது ஓவரில் யார்கரில் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாகச் செய்துதான் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 16வது ஓவரில் சாய் சுதர்சன் போல்டான போது குஜராத் அணியின் ஒட்டுமொத்த போராட்டமும் முடிவுக்கு வந்தது. நம்பிக்கையும் தொலைந்தது.

ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில், பெரிய இலக்கு நிர்ணயம், சுப்மான் கில், சுதர்சன் இருவரில் ஒருவரை விரைவாக ஆட்டமிழக்க வைப்பது என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்ததுதான் மும்பை அணி களமிறங்கி ஒவ்வொன்றாக கச்சிதமாகச் செய்து முடித்தது. ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் பிரமாஸ்திரம் பும்ரா

மும்பை அணி பும்ராவின் பந்துவீச்சு இல்லாமல் இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளையும், சிரமங்களையும் சந்தித்தது. முதல் 5 லீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே மும்பை வென்றது. ஆனால், 4 போட்டிகளுக்குப் பின் பும்ரா அணிக்குள் வந்த பின் அணியின் உத்வேகமும், பந்துவீச்சில் கட்டுக்கோப்பும் வேறுவிதத்தில் இருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை வந்தது.

மும்பையின் நம்பிக்கை நாயகன் பும்ரா இல்லாத நிலையில் தீபக் சஹரைத் தான் தொடக்க பந்துவீச்சாளராக மும்பை பயன்படுத்தியது. டெத் ஓவர்களில் சத்யநாராயண ராஜூவை பயன்படுத்தியது. அந்த நேரத்தில் மும்பையின் டெத் ஓவர் 17-20 வரை ரன்ரேட் 11 ஆக இருந்தது.

ஆனால், பும்ரா அணிக்குள் திரும்பியபின், சஹர், போல்ட் பவர்ப்ளேயில் மட்டும் பயன்படுத்தப்பட்டு, ஹர்திக் நடுப்பகுதி ஓவர்களை கவனித்துக்கொண்டார்.

பந்துவீச்சு தலைமையை பும்ரா தனது துல்லியமான யார்கர், கட்டுக்கோப்பான எக்கானமி, டெத் ஓவர்களில் பந்துவீசும் பொறுப்பை ஏற்றார். பும்ரா அணிக்குள் வந்தபின் ஹர்திக் பாண்டியாவின் அழுத்தமும், பந்துவீசு்சு சுமையும் சற்று குறைந்தது.

அது மட்டுமல்ல டெத் ஓவரில் பும்ரா இல்லாமல் இருந்தபோது அணியின் ரன்ரேட் 11 ஆக இருந்தநிலையில், அவரின் வருகைக்குப் பின் 9.48 ஆகக் குறைந்தது. மும்பையின் பந்துவீச்சிலும் ஒருவிதமான கட்டுக்கோப்பு, துல்லியம், மிரட்டல் உருவானது.

அதுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடந்தது. வாஷிங்டன் சுந்தரும், சுதர்சனும் ஆட்டத்தை வேறுவிதத்தில் கொண்டு சென்றனர். ஆட்டத்தில் திருப்பம் தேவை என்ற நிலையில் பும்ராவை 14வது ஓவரை வீச அழைத்தனர். ஏற்கெனவே பும்ரா ஓவரில் இரு பவுண்டரிகளை வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார்.

ஆனால், 14வது ஓவரை பும்ரா வீசும்போது, துல்லியம் தவறாமல், கடினமான லென்த்திலும், யார்கரிலும் வீசினார். இதனால் தொடக்கத்திலிருந்தே வாஷிங்டன் ரன் சேர்க்க சிரமப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு யார்கரை துல்லியமாக பும்ரா வீச, அதை எதிர்கொள்ள முடியாத வாஷிங்டன் சுந்தர் தலைகுப்புற கீழே விழுந்து போல்டாகினார். பும்ராவின் இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஆட்டத்தை மும்பையின் கரங்களுக்கு மாற்றியது.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

போல்டின் முதல் ஓவர் விக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் டிரன்ட் போல்ட், முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குஜராத் அணியின் முக்கிய தூண்களில் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் நிலைகுலைந்துவிடும் என்ற திட்டத்துடன் போல்ட்டுக்கு முதல் ஓவர் தரப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட பணியை போல்டும் கச்சிதமாகச் செய்து முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை சாய்த்தார்.

இதன் மூலம் 33-வது முறையாக முதல் ஓவரில் போல்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். டிரன்ட் போல்டின் இந்த விக்கெட் வீழ்த்தும் திறனை சரியாகப் பயன்படுத்தி, புதிய பந்தில் அதிகமாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதாலும், போல்ட்டிற்கு முதல் ஓவரை மும்பை வழங்கியது.

அதற்கு ஏற்றபடி போல்ட் முதல் ஓவரிலேயே சுப்மான் கில்லை கால்காப்பில் வாங்க வைத்து விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து போல்ட் பந்துவீசும்போது மும்பை அணியால் எதிரணியின் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. லீக் போட்டிகளில் இதுவரை டெத் ஓவர்களில் 19 யார்கர்களை போல்ட் வீசியுள்ளார், டெத் ஓவர்களில் 2.75 எக்னாமி ரேட் வைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 53 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.29 எக்னாமி ரேட் வைத்துள்ளார்.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மாவின் அனுபவம்

ரோஹித் சர்மா மும்பை அணிக்குள் வந்தபின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்கிய போதிலும்கூட மும்பை அணிக்கு தன்னால் முடிந்த 100 சதவீத உழைப்பை வழங்கத் தவறியதில்லை.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்காக அதிகபட்ச ரன்களை சேர்த்துக் கொடுத்ததில் 2வது இடத்தில் 7ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக சேர்த்து ரோஹித் சர்மா இருக்கிறார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் ரோஹித்தின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு சில போட்டிகளில் அடித்த அரைசதத்தின் மூலம் பதில் அளித்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் அனுபவம், இதுபோன்ற பெரிய தொடர்களில், எலிமினேட்டர், ப்ளே ஆஃப் கட்டங்களில்தான் உதவுகிறது. மும்பை அணியின் திட்டத்தை கச்சிதமாக தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா செயல்படுத்தினார்.

ஒரு புறம் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடத் தயங்கியபோது, ரோஹித் சர்மா 2வது ஓவரிலிலிருந்தே பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினார். பேர்ஸ்டோ முதல் பவுண்டரி அடித்த பின்புதான் அவருக்குள் நம்பிக்கை துளிர்விட்டது. அதுவரை ரோஹித் சர்மாதான் களநாயகனாக இருந்தார். இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்த ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சுழற்பந்துவீச்சில் ரோஹித் சர்மா பலவீனமானவர் என்ற விமர்சனங்களை நேற்று உடைத்தெறிந்தார். குஜராத் சுழற்பந்துவீச்சாளர்கள் சாய் கிஷோர், ரஷீத் கான் வீசிய ஓவர்களில் ஸ்வீப் ஷாட்கள் மூலம் சிக்ஸர், பவுண்டரிகள் என 27 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா வலுவான அடித்தளத்தை தனது அனுபவத்தால் மும்பைக்கு அமைத்துக் கொடுத்தார்.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுப்பகுதி ஓவர்களில் ஸ்கையின் பலம்

மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அணியைத் தாங்கிப் பிடிக்க நடுப்பகுதியில் சூர்யகுமார் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார், தேவைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதில் வல்லவர். அணியின் இக்கட்டான நிலையில் ஆங்கர் ரோலையும், டெத் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.

இந்த ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சூர்யகுமார் அமைத்த 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் வாய்ப்புக் கொடுத்து ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 14 முறை, 25 ரன்களுக்கும் அதிகமாக சூர்யகுமார் சேர்த்து உலக சாதனையும் படைத்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் ஓர் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பு செய்த பேட்டர்களில் சூர்யகுமார்தான் முதலிடத்தில் உள்ளார். லீக் போட்டிகள் வரை 480 ரன்களை நடுப்பகுதியில் குவித்த சூர்யகுமார் 41.17% பங்களிப்பு செய்துள்ளார். சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக கிளாசன், பட்லர், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல் ராகுல் ஆகியோர் உள்ளனர்.

ஆதலால் நடுப்பகுதியில் சூர்யகுமார் யாதவ் இருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாகும். தொடக்க வீரராக இல்லாமல், நடுவரிசையில் களமிறங்கி 2023, 2025 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் ஐபிஎல் வரலாற்றிலே முதல் வீரர் சூர்யகுமார்தான்.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை'

மும்பை அணியில் 4 வீரர்கள் கேப்டன்சி அனுபவத்துடன் இருப்பது எந்த அணிக்கும் இல்லாத மிகப்பெரிய பலமாகும். எந்தவிதமான இக்கட்டான தருணங்களிலும், சிக்கலான சூழல்களிலும், 4 கேப்டன்களின் வேறுபட்ட அணுகுமுறை, ஆலோசனைகள் நிச்சயமாக சிக்கலில் இருந்து மீள வழிவகுக்கும்.

மும்பையின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் கேப்டனாக இருந்த பும்ரா ஆகியோர் இருப்பது இக்கட்டான தருணங்களில் தெளிவான ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுக்க துணை புரியும். இந்த ஆட்டத்தில் கூட வாஷிங்டன் சுந்தர், சுதர்சனைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அப்போது ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக், பும்ரா ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்ததையும் காண முடிந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் அடுத்த சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

MI vs GT, ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியை தவறவிட்ட குஜராத்

குஜராத் அணியின் தோல்வி சேஸிங்கில் எழுதப்படவில்லை, அவர்களின் பந்துவீச்சில் 2வது ஓவரிலேயே எழுதப்பட்டு, அதன்பின் 4வது ஓவரில் அழுத்தமாக எழுதப்பட்டுவிட்டது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் ரோஹித் சர்மா அடித்த ஷாட்டில் கைமேல் கிடைத்த பந்தை கோட்ஸி, பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்க தவறியபோது, கேட்ச் தவறவில்லை ஆட்டம் தவறியது.

அடுத்ததாக சிராஜ் வீசிய ஓவரில் ரோஹித் சர்மா பேட்டிலிருந்து தெறித்து சென்ற பந்தை விக்கெட் கீப்பர் மெண்டிஸ் கோட்டை விட்ட போது, தோல்வி என்பது அழுத்தமாகப் பதிவானது. இரு தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா, மும்பையின் வெற்றிக்கு அழுத்தமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c74qw1l02e3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற 'தனி ஒருவன்'

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு பைனலுக்கு பஞ்சாப் தகுதியாகி இருந்தது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கல் சேர்த்திருந்தது. 204 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தனி ஒருவன்

அதிக பரபரப்பு நெருக்கடி மிகுந்த இதுபோன்ற போட்டிகளில் 200 ரன்களை பதற்றமின்றி சேஸ் செய்வது என்பது கடினமானது. ஆனால், அந்த இலக்கை ஒற்றை மனிதராக இருந்து பவர்ப்ளே முடியு ம்போது களத்துக்கு வந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் சேர்த்த 87 ரன்களில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். மும்பை பந்துவீச்சாளர்களை ஓடவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பும்ரா யார்க்கருக்கு பதிலடி

ஐபிஎல் சீசனில் ஆபத்தான பந்துவீச்சாளராக, சர்வதேச அளவில் பேட்டர்கள் பேட் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளராக அறியப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. குஜராத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக பும்ரா இறக்கிய யார்கர் முக்கியமான உதாரணமாகும்.

அதனால் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஸ் பேட்டிங்கின் முன் பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பும்ராவின் யார்கர்களை கச்சிதமாக கையாண்ட ஸ்ரேயாஸ் அந்த யார்களை பலமுறை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். டிரன்ட் போல்ட் வேகப்பந்துவீச்சு ஸ்ரேயாஸ் அய்யருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, பவுண்டரிகளாக விளாசியதால் எப்படி பந்துவீசுவது என குழம்பினர்.

கடைசி 8 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற ரீதியில் இருந்தது. 13வது ஓவரில் டாப்ளி ஓவரில் ஸ்ரேயாஸ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய பின் பஞ்சாப்பின் வெற்றி கணினியின் கணிப்பில் 25 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. மும்பை அணியின் எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் ஸ்ரேயாஸ் விட்டுவைக்கவில்லை. அஸ்வனி குமார், பும்ரா, போல்ட், டாப்ளி, ஹர்திக் என யார் பந்துவீசிலும் பவுண்டரிகளை விளாச ஸ்ரேயாஸ் தவறவில்லை.

ஸ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த அனைத்து முயற்சிகளையும் ஸ்ரேயாஸ் தவிடுபொடியாக்கினார்

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸுக்கு துணை செய்த பேட்டர்கள்

200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஸ்ரேயாஸ் வெற்றிகரமாக எட்டியதற்கு பஞ்சாப் அணியில் ஜோஸ் இங்கிலிஸ், நேஹல் வதேரா ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு முக்கியமானதாகும். ஜோஸ் இங்கிலிஸ் சேர்த்த 21 பந்துகளில் 38 ரன்கள், பும்ரா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய நேஹல் வதேரா 29 பந்துகளில் சேர்த்த 38 ரன்களும் முக்கியமானவை. நடுவரிசையில் ஸ்ரேயாஸ், வதேரா, இங்கிலிஸ் ஆகிய 3 பேரும்தான் ஆட்டத்தை மும்பையின் கரங்களில் இருந்து கைப்பற்றி கடைசிவரை தக்கவைத்திருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன்(6), ஆர்யா(20) ரன்களி்ல் ஆட்டமிழந்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. மும்பை பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி தாக்குதல் நடத்தியதில் பஞ்சாப் ரன்ரேட் சற்று குறைந்தது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் களத்துக்கு வந்தது முதல் தனது அதிரடி ஆட்டத்தையும், தேவைப்படும் நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் பாணியை கடைபிடித்தபின் பஞ்சாப் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த கேப்டனுக்கான முன்னுதாரணம்

இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ், சஷாங் சிங் ஆட்டமிழக்காமல் இருந்து 243 ரன்கள் சேர்த்தனர். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது 97 ரன்களுடன் இருந்தார். கடைசி ஓவரை சிராஜ் வீசியபோது, சஷாங் ஸ்ட்ரைக்கில் இருந்து பவுண்டரி அடித்து, அடுத்தபந்தை தட்டிவிட்டபோது ஒரு ரன் ஓடி ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கிற்கு வந்து சதத்தை நிறைவு செய்திருக்கலாம். வழக்கமான கேப்டன்கள் இதைத்தான் செய்திருப்பரார்கள்.

ஆனால், 2 ரன்களுக்கு சஷாங்க் சிங்கை விரட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ட்ரைக்கை சஷாங்கிடம் கொடுத்து, அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் தொடரந்து 4 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோர் உயர காரணமாகினார்.

இதை சஷாங்க் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் " ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் 97 ரன்களில் இருந்த போது, நான் அடித்த ஷாட்டில் 2 ரன்கள் ஓடிவா என்றார். உண்மையில் 2 ரன்கள் கடினமானதுதான்.

ஆனால், சதத்தை பற்றி அவருக்கு கவலையில்லை அணியின் ஸ்கோர்தான் முக்கியம். பல வீரர்கள் ஸ்ட்ரைக்கை கைப்பற்றி 3 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் அப்படி செய்யவில்லை. சுயநலமில்லாமல் ஸ்ரேயாஸ் விளையாடக்கூடியவர். அணிதான் முக்கியம் என்று எப்போதுமே பேசக்கூடிய கேப்டனாக நான் ஸ்ரேயாஸை பார்க்கிறேன். இதுதான் எங்களின் கண்ணோட்டத்தை மாற்றியது, தனிநபர் சாதனைக்கான ஆட்டம் இல்லை, அணிக்கான ஆட்டம் என்று எங்களை உணரவைத்தது" எனத் தெரிவித்தார்.

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிக்கி பாண்டிங் புகழாரம்

பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் "டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸை பார்த்து வருகிறேன், பஞ்சாப் அணி பைனல் செல்லவும், கோப்பையை வெல்லவும் ஸ்ரேயாஸ் தேவை என்பதை தொடக்கத்திலேயே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன்.

சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அணியை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த கேப்டன். பிரியன்ஸ் ஆர்யாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஜோஸ் இங்கிலிஸ், பிரப்சிரம்தான் ஜோடியைத்தான் சீசனில் தொடக்கத்திலிருந்து களமிறக்க முடிவு செய்திருந்தோம்.

ஆனால், 23வயது பிரியன்ஸ் ஆர்யாவின் பேட்டிங்கை பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் களமிறங்கவைத்தார். ஆர்யாவின் அச்சமற்ற பேட்டிங் பாணி, ஷாட்கள் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

இந்த சீசனில் பஞ்சாப் அணி 7 முறை 200ரன்களைக் கடந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அணியில் இருக்கும் அன்கேப்டு வீரர்கள் பிரப்சிம்ரன், பிரயன்ஸ் ஆர்யா, சஷாங் சிங், நேஹல் வதேரா ஆகியோர்தான். ஆனால், இந்த அன்கேப்டு வீரர்களை அணிக்கு எப்படி பயன்படுத்த முடியுமே அதை ஸ்ரேயாஸ் சிறப்பாகச் செய்தார். பல போட்டிகளில் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி வலுவான ஸ்கோர் அமைத்து நடுவரிசை வீரர்களின் சுமையைக் குறைத்துள்ளனர்.

பிரப்சிம்ரன், ஆர்யா மீது ஸ்ரேயாஸ்மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்பட்டார். அவர்களும் அவரின் நம்பிக்கயை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். இளம் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி வளர்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் சிறந்தவர்" எனத் தெரிவித்தார்.

பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை அதிகமாக நம்பியிருந்து சீசனை வழிநடத்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் அதிகமான உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் சொந்த மாநில பஞ்சாப், சண்டிகர் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதை வெற்றியாகவும் பஞ்சாப் மாற்றியது. ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக அன்கேப்டுவீரர்கள் பஞ்சாப் வீரர்களே 1519 ரன்கள் சேர்த்துள்ளனர், 163 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 சராசரியும் வைத்துள்ளனர்.

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனித்துவமான கேப்டன்சி

ஐபிஎல் அணிகளில் உள்ள கேப்டன்களில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வருகிறார், இதற்கு முன் இருந்து கோப்பையையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த சீசனில் சஷாங் சிங் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இதனால் சஷாங் சிங் மனவேதனையுடனும், அழுத்தத்துடனும் இருப்பதை ஸ்ரேயாஸ் கண்டுள்ளார். அப்போது சஷாங்சிங்கிற்கு மொபைலில் மெசேஜ் செய்த ஸ்ரேயாஸ் "என்ன சஷாங் நல்லா இருக்கிறாய்தானே. மனதிற்கும் உடம்பிற்கும் ஒன்றுமில்லைதானே. லீக் போட்டிகள் அனைத்திலும் நீ களமிறங்குவாய், அதற்காக உறுதியளிக்கிறேன். நானும், ரிக்கியும், அணியும் உன்னை நம்புகிறோம், நீதான் சிறந்த ஃபினிஷர்" என்று தெரிவித்ததாக சஷாங் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சகவீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அவர்களுக்கு துணையாக இருந்து தேவையான வாய்ப்புகளை அளித்து அவர்களை அணியின் வெற்றிக்கு பயன்படுத்துவதிலும் ஸ்ரேயாஸின் கேப்டன்ஷி தனித்துவமானது.

அதேபோல, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பாக சஹலை பயன்படுத்தியது ஆகியவை ஸ்ரேயாஸின் சமயோஜிதமான கேப்டன்ஷிக்கு சிறந்த உதாரணம் என்று துணைப் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சவால்களை, நெருக்கடிகளை ரசிப்பவர்

நெருக்கடியான கட்டங்களை, சவாலான தருணங்களை, போட்டிகளை ரசிப்பதிலும், சந்திப்பதிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அலாதி விருப்பம். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தையும் அவ்வாறுதான் ஸ்ரேயாஸ் அணுகினார். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவை என்ற கட்டத்தில் அஸ்வனி குமார் ஓவரில் 3 சிக்ஸர்களை ஸ்ரேயாஸ் அனாசயமாக விளாசி பரபரப்புக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதிலிருந்து ஸ்ரேயாஸ் பேட்டிலிருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அஸ்வனி குமார் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்கள், போல்ட் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள், பும்ரா வீசிய 18வது ஓவரில் பவுண்டிரி என ரன்ரேட்டை உயர்த்தி, அஸ்வனி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்ரேயாஸ் எளிதாகவெற்றிக்கு அழைத்து வந்தார். ஆர்சிபிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆடிய ஆட்டம், ஷாட்கள் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் நேற்றையஆட்டம் பிரமிக்க வைத்தது.

அது குறித்து ஸ்ரேயாஸ் கூறுகையில் "இதுபோன்ற சவாலான, பெரிய போட்டிகளை நான் மிகவும் விரும்புவேன். மிகப்பெரிய போட்டிகளின்போதுதான், அமைதியாக இருந்து, சிறந்த முடிவுகளைப் பெறமுடியும். ஆர்சிபிக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டுமே அணியை தீர்மானித்துவிடாது. எங்களின் தோல்வியும் இந்த சீசனை தீர்மானித்துவிடாது. அனைத்து வீரர்களும் முதல் பந்திலிருந்து தீர்க்கமாக இருக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் களத்தில் விளையாடினோம். ஒவ்வொரு பேட்டரும், பந்துவீச்சாளர்களும் சிறப்பான பணியை செய்தனர்.

PBKS vs MI, ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அன்கேப்டு வீரர்களிடம் அதிகமாக அது தேவை, இது தேவை அப்படி பேட் செய் என்றெல்லாம் பேசமாட்டேன். அவர்களுக்கு ஆதரவு தேவை அதை வழங்குவேன். அவர்களின் அச்சமற்ற கிரிக்கெட்டை ஊக்குவிக்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை ஏற்கிறேன். அவர்களிடம் எந்த சூழலிலும் பேசி அவர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துகிறேன். அவர்களுக்கு அனுபவம் குறைவு என்றபோதிலும், பெரிய தருணங்களின்போது அவர்களிடமும் ஆலோசிப்பது அவர்களுக்கு பெருமயைாகவும், ஊக்கமாகவும் இருக்கிறது. அவர்களும் புதிய அனுபவத்தை பெறமுடியும். என்னைப் பொருத்தவரை அருமையான சூழல் அணிகக்குள்ளும், நிர்வாகத்திலும் நிலவுகிறது. அதனால்தான் இந்த அளவுவெற்றிகரமாக பயணிக்க முடிகிறது" எனத் தெரிவித்தார்.

வர்ணனையாளர்கள் விமர்சனம்

ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அணிகளை முடிந்தவரை பைனலுக்கு அழைத்து வந்துள்ளார். இது 3வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்று அணியை பைனலுக்கு கொண்டு வந்துள்ளார். இதற்குமுன் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து வந்திருந்தார், இப்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியும் தவறு செய்துவிட்டது, இந்திய டெஸ்ட் அணியிலும், டி20 அணியிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் அளிக்காதது பிசிசிஐ தேர்வுக்குழுவினர் செய்த மிகப்பெரிய குற்றம் என்று நேற்று வர்ணனையாளர்களே கடுமையான வார்த்தைகளால் விளாசினர்.

தொடர்ந்து 2வது முறையாக ஒரு அணியை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து வந்த பெருமையை எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தார்போல் இப்போது ஸ்ரேயாஸ் அய்யர் செய்து அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj3j28xr4pro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் வரலாற்றில் புதிய அணி சம்பியனாவது உறுதி; அந்த அதிர்ஷ்டம் பெங்களூருக்கா? பஞ்சாபுக்கா? நாளை இறுதிப் போட்டி

02 JUN, 2025 | 03:44 PM

image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக்கின் 18 வருட வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கான அதிர்ஷ்டம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கா அல்லது பஞ்சாப் கிங்ஸுக்கா என்பதற்கான விடை  நாளை இரவு கிடைக்கவுள்ளது.

shreyas_iyer_and_rajath_patidar_-_Copy__

இந்த இரண்டு அணிகள் மோதும் இறுதிப் போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது.

2009, 2011, 2016 ஆகிய வருடங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அதேவேளை, 2014இல் கிங்ஸ் இலவன் பஞ்சாப் என்ற முந்தைய பெயரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ipl_trophy.jpg...jpg

இந்த இரண்டு அணிகளும் 18 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த வருடம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 101 ஓட்டங்களுக்கு சுருட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் சுயாஷ் ஷர்மா, ஜொஷ் ஹேஸ்ல்வூட், யாஷ் தயாள் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பில் சொல்டின் ஆட்டம் இழக்காத அதிரடி அரைச் சதம் என்பன றோயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முதலாவது தகுதிகாணில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தபோதிலும் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் (இரண்டாவது தகுதிகாண்) முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட  பஞ்சாப் கிங்ஸ்   தகுதிபெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்று தனது அணி இலகவாக வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.

அவருக்கு பக்கபலமாக நெஹால் வதேரா 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷ்ரேயஸ் ஐயருடன் 4ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணிக்கு நம்பிக்கையை ஊட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு கடும் மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ப்ளே ஓவ் சுற்றுகளைத் தொடர்ந்து இப்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் வரராற்றில் 36 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் அவை இரண்டும் தலா 18 தடவைகள் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளன.

ronyal_challengers_bangalore...png

விராத் கோஹ்லி (8 அரைச் சதங்களுடன் 614 ஓட்டங்கள்), பில் சோல்ட் (4 அரைச் சதங்களுடன் 387 ஓட்டங்கள்), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (2 அரைச் சதங்களுடன் 286 ஓட்டங்கள்), தேவ்டத் படிக்கல் (2 அரைச் சதங்களுடன் 247 ஓட்டங்கள்), ஜிட்டேஷ் ஷர்மா (ஒரு அரைச் சதத்துடன் 237 ஓட்டங்கள்) ஆகியோர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வரிசையில் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

அந்த அணியின் பந்துவீச்சானது ஜொஷ் ஹேஸ்ல்வூட் (21 விக்கெட்கள்), க்ருணல் பாண்டியா (15 விக்கெட்கள்), புவ்ணேவ்வர் குமார் (15 விக்கெட்கள்), யாஷ் தயாள் (12 விக்கெட்கள்), இம்பெக்ட் வீரர் சுயாஷ் ஷர்மா (8 விக்கெட்கள்) ஆகியோரில் பெரிதும் தங்கி இருக்கிறது.

மறுபுறத்தில் ஷ்ரேயஸ் ஐயர் (6 அரைச் சதங்களுடன் 603 ஓட்டங்கள்), ப்ரம்சிம்ரன் சிங் (4 அரைச் சதங்களுடன் 523 ஓட்டங்கள்), ப்ரியான்ஷ் ஆரியா (ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 451 ஓட்டங்கள்), நெஹால் வதேரா (2 அரைச் சதங்களுடன் 354 ஓட்டங்கள்), ஷஷாங் சிங் (2 அரைச் சதங்களுடன் 289 ஓட்டங்கள்) ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முக்கிய துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

panjab_kings...png

அர்ஷ்திப் சிங் (18 விக்கெட்கள்), யுஷ்வேந்த்ர சஹால் (15 விக்கெட்கள்), ஹார்ப்ரீட் ப்ரார் (10 விக்கெட்கள்) ஆகிய மூவரே பிரதான பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.

16 விக்கெட்களைக் கைப்பற்றிய மார்க்கோ ஜென்சன், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க அணியுடன் இணைந்துகொண்டுள்ளதால் பஞ்சாப் அணிக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இரண்டு அணிகளினதும் தரவுகளை ஒப்பிடும் போது பஞ்சாப் கிங்ஸ் துடுப்பாட்டத்திலும் றோயல் செலஞ்சர்ஸ் பந்துவிச்சிலும் பலம் கொண்டவையாகத் தென்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த நிலையை நோக்கும்போது இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாக உள்ளன.

எனவே, இந்த வருட ஐபிஎல் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/216349

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RCB Vs PBKS: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் - கோப்பை யாருக்கு?

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

31 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளும் அதிகபட்சமாக இறுதிப்போட்டிவரை தான் முன்னேறியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆதலால், இரு அணிகளுக்கும் 18 ஆண்டுகால காத்திருப்பு நனவாகப்போகிறதா, அல்லது கனவாகவே இருக்கப் போகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.

ஆர்சிபி அணி கடந்த 2009, 2011, 2016 ஆகிய 3 சீசன்களில் பைனலுக்கு முன்னேறி தோல்வியடைந்து 4வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறியபின் 10 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஈ சாலா கப் நமதே- இந்த ஆண்டாவது நனவாகுமா?

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில், இரு அணிகளும் அதிகபட்சமாக இறுதிப்போட்டிவரை தான் முன்னேறியுள்ளன.

ஆர்சிபி ரசிகர்களும், அணியினரும் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். "ஈ சாலா கப் நமதே" என்ற வாசகம் இந்த ஆண்டாவது நனவாகுமா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆர்சிபியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு இருக்கும் ஃபார்ம், அர்ப்பணிப்பு, பேட்டிங்கில் உற்சாகம் ஆகியவை எந்த சீசனிலும் இல்லாத அளவு இருப்பதால் கோப்பையை ஆர்சிபி அணிக்காக வென்றுகொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ஆர்சிபி அணியும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமகலவையில் வீரர்களைக் கொண்டிருப்பது கூடுதல் சாதகமான அம்சமாகும். 8-வது வரிசை பேட்டர்கள் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை ஆர்சிபி அணி வைத்திருக்கிறது.

அதேபோல, ஹேசல்வுட், யஷ் தயால், புவி ஆகியோரின் வேகப்பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது. சுழற்பந்துவீச்சில் சூயஷ் சர்மா, க்ருனால் பாண்டியா இருவரும் சிறப்பாக செயல்படுவதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தசைப்பிடிப்பால் கடந்த 2 போட்டிகளில் களமிறங்காத டிம் டேவிட் இன்று விளையாடுவார் எனத் தெரிகிறது.

முதல் தகுசிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எளிதாக சுருட்டி வீழ்த்திய ஆர்சிபி அணி மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஷ்ரேயாஸ் அய்யரை 4 முறை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், இன்று இருவருக்கும் இடையிலான ஆட்டம் சவாலாக இருக்கும். ஹேசல்வுட் பந்துவீச்சில் 22 பந்துகளைச் சந்தித்த ஷ்ரேயாஸ் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறை ஆட்டமிழந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதேபோல அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் ஸ்விங் செய்யும்போது, அதை ஆர்சிபி வீரர் பில் சால்ட் எவ்வாறு சமாளித்து ஆடுவார் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை அதிரடியான தொடக்கம், கேப்டன் ஷ்ரேயாஸின் ஆகச்சிறந்த ஆட்டம் ஆர்சிபிக்கு பெரிய சவாலாக அமையும். பஞ்சாப் அணியும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் ஆர்சிபிக்கு இணையாக சமபலத்துடன் இருக்கிறது. பஞ்சாப் அணியில் யுவேந்திர சஹலுக்கு கையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவருக்குப் பதிலாக ஹர்பிரித் பிரார் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

ஆடுகளம் எப்படி?

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,நரேந்திர மோதி மைதானம்

நரேந்திர மோதி மைதானத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆடுகளத்தில் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆடுகளம் செம்மண், கரிசல் மண் கலந்து வடிவமைக்கப்பட்ட ஆடுகளமாகும். பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளமாகவும், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இந்த சீசனில் இதே ஆடுகளத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்காக நிர்ணயித்தால்தான் தப்பிக்க முடியும்.

அதிகாலை 3 மணிக்குவந்த பில் சால்ட்

ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்து கிடைத்ததால் அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் ஆமதாபாத் விமானநிலையத்தில் சால்ட் வந்திறங்கினார். கடந்த சில நாட்களாக பயிற்சியில் பங்கேற்காமல் நேரடியாக போட்டியில் சால்ட் பங்கேற்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8jgkp383v0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்சிபி-யின் 18 ஆண்டுகள் கனவு நனவாக வித்திட்ட பில் சால்டின் அற்புத கேட்ச்

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"ஈசாலா கப் நம்தே"

இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது.

ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார்.

இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது.

கோலி மகிழ்ச்சியில் "என் இளமைக் காலம், உச்சபட்ச காலம், அனுபவம் அனைத்தையும் ஆர்சிபி அணிக்காக அர்ப்பணித்துள்ளேன்" என்று தெரிவிக்கும் போது இந்த வெற்றியின் மகத்துவம் புரிந்திருக்கும்.

பஞ்சாப் பேட்டர்களுக்கு கடிவாளமிட்ட ஆர்சிபி

காணொளிக் குறிப்பு

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் உள்ள 6வது ஆடுகளத்தில் சர்வசாதாரணமாக முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை கடந்துவிடும். அந்த வகையில் ஆர்சிபி அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பானது. அந்த 190 ரன்களையும் டிபெண்ட் செய்து பஞ்சாப் அணியை 184 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் உழைப்பு அதைவிட பாராட்டுதலுக்குரியது.

குறிப்பாக ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் குர்னல் பாண்டியா, யஷ் தயால், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சு இறுதிப்போட்டியில் ஆகச் சிறந்ததாக இருந்தது. இந்த 3 வீரர்களும் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம் பெற்று இருந்ததால், அதில் கிடைத்த அனுபவங்களை ஆர்சிபிக்காக அள்ளிக் கொடுத்தனர்.

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் குர்னல் பாண்டியா ஐபிஎல் இறுதிப்போட்டியில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோது, பைனலில் சிறப்பாகப் பந்து வீசியதற்காக குர்னல் பாண்டியா முதன்முதலில் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் இந்த விருது அவருக்கு இரண்டாவதாகும்.

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியும் வெற்றியை விடாது துரத்தி வந்தது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது, அதன் ஓட்டத்திற்குக் கடிவாளமிட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் இரு பந்துகள் டாட் பந்துகளாக மாறிய உடனே ஆர்சிபியின் வெற்றி கணிதரீதியாக உறுதியானது.

கடைசி ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைத்த சஷாங் சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணியை கடைசிக் கட்டம் வரை அழைத்து வந்தும் பயனில்லாமல் பஞ்சாப் 6 ரன்களில் தோற்றது. சஷாங் சிங் 30 பந்துகளில் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலியும் 18ஆம் எண்ணும்

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்சிபி கோப்பை வென்ற மகிழ்ச்சியில் விராட் கோலி

மைதானத்தில் அனைவரின் பார்வையும் 18ஆம் எண் அச்சடிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்த நபர் மீதுதான் குவிந்திருந்தது. 18வது சீசனில்தான் ஆர்சிபி அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது, கோலியின் ஜெர்ஸியிலும் 18. ஆகவே 18வது சீசன்தான் ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமாக மாறியிருக்கிறது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பைனலில் கோலி சேர்த்த 77 ரன்கள் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவுக்கு இந்தப் போட்டியில் அவர் சேர்த்த 43 ரன்களும் முக்கியமானது.

விராட் கோலியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகளை அதிகமாக வீசினர். ஷார்ட் பிட்ச் பந்துகளையும், ஷார்ட் பவுன்ஸர்களையும் அதிகமாக வீசி கோலியின் ரன்சேர்ப்புக்கு கடினமான தடைகளை அமைத்தனர்.

ஆனால், அவர் அதையும் மீறி அவ்வப்போது ஃபுல்ஷாட்களை அடித்து ரன்களை சேர்த்தார். பில் சால்ட், அகர்வால், பட்டிதாருடன் சேர்ந்து 131 ரன்கள் வரை கோலி சேர்த்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானத்தது. ரன் சேர்க்க வேண்டும் என்ற கோலியின் தீர்க்கமான எண்ணம்தான் ஆர்சிபி ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருந்தது. கோலி ஆட்டமிழந்த பிறகுதான் பஞ்சாப் அணி விக்கெட் வீழ்த்தும் வேகத்தை அதிகப்படுத்தியது.

இந்த சீசனில் மட்டும் கோலி, 15 போட்டிகளில் ஆடி 657 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 அரைசதங்களும் அடங்கும்.

குர்னல் பாண்டியாவின் அனுபவம்

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணி 3 சாம்பியன் பட்டங்களை வென்ற போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை குர்னல் பாண்டியாவுக்கு இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்தார்

மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றபோது, அந்த அணியில் குர்னல் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அதில் கிடைத்த அனுபவம், பந்துவீச்சு ஆகியவற்றைத்தான் இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்துள்ளார்.

குர்னல் பாண்டியா சுழற்பந்துவீச்சாளர் என்றபோதிலும், களத்தில் இவர் வீசும் பந்து பெரிதாக டர்ன் ஆகாது. ஏனென்றால், குர்னல் பாண்டியா சராசரியாக 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதால், பந்தில் டர்ன் இருக்காது.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இறுதிப் போட்டியில் குர்னல் பாண்டியா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து 80 முதல் 85 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால், அவரால் ரன்கள் கொடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்து.

பேட்டர்கள் பெரிய ஷாட்களை குர்னல் பந்தவீச்சில் அடிப்பதும் கடினமாக இருந்தது. அவ்வாறு ஷாட் சரியாக கிடைக்கவில்லையெனில், அது கேட்சாகவும் மாறிவிடும் நிலை இருந்தது. 4 ஓவர்களை வீசிய குர்னல் பாண்டியா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் இருந்தற்கு இணையாக பஞ்சாப் அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என நெருக்கடியின்றி இருந்தது.

ஆனால் குர்னல் பாண்டியாவுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுப்பட்டதும், வழக்கமான பந்துவீச்சை வீசாமல் பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தை மாற்றி அமைத்தும் பந்துவீசி குர்னல் பாண்டியா, பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார்.

குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சை சரியாகக் கணிக்க முடியததால்தான், பிரப்சிம்ரன் தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டை இழந்தார். ஜோஷ் இங்லிஸ் செட்டில் ஆகி அடிக்கத் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டையும் குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

குர்னல் பாண்டியா எடுத்த 2 விக்கெட்டுகளும் வீசிய 4 ஓவர்களும் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 12 டாட் பந்துகளையும் குர்னல் பாண்டியா வீசித் தனது பந்துவீச்சைத் துல்லியமாக்கினார்.

ஆட்டத்தைப் புரட்டிப்போட்ட புவியின் அனுபவம்

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புவனேஷ்வர் குமார் வீழ்த்திய இரண்டு பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபி வெற்றி பெறப் பெரிதும் உதவியது

ஆர்சிபி அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு புவனேஷ்வர் குமாரின் கடைசிக் கட்ட பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது. புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் வைடு பந்தை அடித்து, வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஷ் புவியின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தவுடன், அடுத்த பந்தில் தேர்டுமேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

புவி ஒரே ஓவரில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

ஜிதேஷின் கேமியோ

ஜிதேஷ் ஷர்மா 10 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷின் இந்த கேமியோ, ஆர்சிபி ரன்ரேட்டை சட்டென உயர்த்தியது.

ஜிதேஷ் ஷர்மா வரும்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஜேமிஸன், ஓமர்சாய், வைசாக் ஆகியோர் ஆர்சிபி பேட்டர்களுக்கு ஸ்லோவர் பந்துகளையும், ஆஃப் கட்டர்களையும், ஸ்லோ பவுன்சரையும் வீசித் திணற வைத்தனர். ஆனால், ஜிதேஷ் வந்தவுடன் கார்டு லென்த்தில் பந்து வீசியவர்களின் பந்துவீச்சை "ரூம் கொடுத்தும்", ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் எனத் தேர்ந்தெடுத்தும் அடித்ததால் ரன்ரேட் உயர்ந்தது.

ஜிதேஷ் அடித்த 24 ரன்கள், ஆர்சிபி அணி 190 ரன்களை எட்டுவதற்கு முக்கிய உதவியாக இருந்தது. ஆர்சிபி அணியில் ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்காவிட்டாலும்கூட ஜிதேஷ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடியதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஹேசல்வுட் வருகை

IPL 2025 Final RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பில் சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது

ஆர்சிபி அணிக்குள் ப்ளே ஆஃப் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுகிறார் என்ற செய்தியே ஆர்சிபி அணிக்குப் பெரிய உற்சாகத்தையும், கூடுதல் பலத்தையும் உண்டாக்கியது.

இதனால்தான் முதல் தகுசிச் சுற்றில் ஸ்ரேயாஸ் பேட் செய்ய வந்தவுடன் ஹேசல்வுட்டுக்கு பந்துவீச வாய்ப்பளித்து விரைவாக வீழ்த்த முடிந்தது.

இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தி 54 ரன்களை வாரி வழங்கினாலும் ஹேசல்வுட் அணிக்குள் இருந்ததே சக பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.

பில்சால்ட் பிடித்த கேட்ச்

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவருமே அதிரடியான தொடக்கத்தை அளித்து வெற்றியை நோக்கி அணியை விரைவுபடுத்தினர். இதனால் இருவரையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி அணி திணறியது.

ஹேசல்வுட் ஓவரில் பிரயன்ஸ் ஆர்யா தூக்கி அடித்த பந்து டீப் ஸ்குயர் லெக்திசையில் சிக்ஸருக்குப் பறக்கவே அங்கிருந்த சால்ட் அருமையாக கேட்ச் பிடித்தார்.

அந்த கேட்சை பிடித்த பிறகு நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் அவர் செல்லவே பந்தை மேலே தூக்கி வீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார். சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது, மற்ற வீரர்களுக்கும் அது கடத்தப்பட்டது.

இறுதியாக 18 ஆண்டுகள் காத்திருப்பும் ஏக்கமும் முடிவுக்கு வந்து ஆர்சிபி ரசிகர்களின் கனவு நனவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gkddpk7r4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி

401658.jpg

இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி.

இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே.

ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள்.

இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும்.

பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன.

சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது.

ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை.

ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்!

https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_3.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்சிபி வெற்றியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு என்ன? - நாக் அவுட் பலவீனத்தை சரி செய்தது எப்படி?

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மோகன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்கள் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். தோனியின் நிழலில் இருந்ததாலும், ஃபார்ம் போன்ற காரணங்களாலும் இந்தியா கிரிக்கெட்டில் சீராக அவரால் சோபிக்க முடியவில்லை. ஆனாலும் நிடாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட அவரின் கடைசி பந்து சிக்ஸர் வீடியோ யூ-ட்யூப் உள்ளவரை ரீப்ளே செய்யப்பட்டு கொண்டே இருக்கும்.

தற்போது ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாமிடம் பிடித்த ஆர்சிபி குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியை வென்று மகுடம் சூடியது. இதில் அந்த அணியின் பேட்டிங் கோச் மற்றும் மென்டரான தினேஷ் கார்த்தின் பங்கு முக்கியமானது.

அணியில் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியது தொடங்கி வலுவான மிடில், லோயர் ஆர்டர் மற்றும் பவுலிங் கூட்டணியை உருவாக்கியது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு வெளியில் தெரியவில்லை என்றாலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தினேஷ் கார்த்திக்

சோக்கர் (Choker) என்ற பட்டம் ஏன்?

சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு 'சோக்கர் (Choker)' என்கிற பட்டம் உண்டு. எவ்வளவு வலுவான அணியாக இருந்தாலும், எத்தனை மேட்ச் வின்னர்களைக் கொண்டிருந்தாலும் 'நாக் அவுட்' போன்ற முக்கியமான மற்றும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சொதப்பி விடுவார்கள் என்கிற வரலாறு அந்த அணிக்கு உண்டு.

ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஆர்சிபி தான் சோக்கர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, பஞ்சாப் மற்றும் புதிய அணியான லக்னௌ கூட இந்தத் தொடர் வரை கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இந்த பட்டம்? இந்தத் தொடருக்கு முன்பு வரை பெங்களூரு அணி 2009, 2011, 2016 என மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

18 வருட ஐபிஎல் வரலாற்றில் பெரும்பாலான சீசன்களில் பல ஸ்டார் வீரர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதிலும், குறிப்பாக 2016ம் ஆண்டில் கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், வாட்சன், ஸ்டெய்ன், கோலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தபோதிலும் ஃபைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆர்சிபி. அதற்கு அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே காரணமாக இருந்தது.

டாப் 3 பிம்பத்தை மாற்றிய தினேஷ் கார்த்திக்

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான்.

ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஒரு கட்டத்தில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி என்றும் மற்றொரு கட்டத்தில் டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என்கிற மூவர் கூட்டணியைச் சார்ந்தே ஆர்சிபி அணி இருந்துள்ளது. மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் ஆர்சிபி அணி சொதப்பும் என்கிற பிம்பம் தினேஷ் கார்த்திக்கின் வருகைக்குப் பின் தான் மாறியது.

2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் விளையாடி இருந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அந்த சீசனுக்கு தினேஷ் கார்த்திக்கின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. தோனியைப் போல விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் என்பது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான காம்போ. ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். அந்தப் பணியை சிறப்பாக செய்தும் காட்டினார். 2022 ஐபிஎல் பெர்ஃபார்மன்ஸைத் தொடர்ந்து 2022 டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார்.

ஃபினிஷராக பரிணமித்த தினேஷ்

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் இந்தப் புதிய ரோலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார். மாறி வரும் விளையாட்டு சூழ்நிலைகளுக்கு தங்களது விளையாட்டு அணுகுமுறைகளை மாற்றியமைத்த வீரர்கள் வெகு சிலரே, அதில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக்

2022 முதல் 2024 வரை பெங்களூரு அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி என்பது டாப் ஆர்டரை மட்டுமே நம்பி இருக்கும் அணி என்கிற பிம்பத்தை மாற்றியமைத்ததில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிய பங்கு உண்டு. ஃபினிஷராக 35 போட்டிகளில் 197 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 607 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக்.

கடந்த ஐந்து வருடங்களில் 2023 தவிர்த்து 4 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2024-ல் சிஎஸ்கே அணியை வென்று ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது பெங்களூரு. எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சுழற்சிக்கு முன்பான பெங்களூரு அணியின் ரிடென்ஷன் பட்டியலில் முன்னணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருந்தது. ஆனால் கரியர் ஃபார்மின் உச்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக். பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு பேட்டிங் கோச் மற்றும் மென்டராக இணைந்தார்.

கோப்பை என்கிற இலக்கு

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐபிஎல் கோப்பை

பெங்களூரு அணிக்கு மென்டராக இணைந்ததுமே கோப்பையை வெல்வது தான் குறி என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் தினேஷ் கார்த்திக், "ஆர்சிபிக்கு வரும் எவருக்கும் ஒரே குறிக்கோள் தான் இருக்கும். அது கோப்பையை வெல்வது தான். அதோடு எங்கள் ரசிகர்களையும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தினேஷ் கார்த்திக் 2013ம் ஆண்டு கோப்பை வென்ற மும்பை அணியின் ஒரு அங்கமாக இருந்தார். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா சென்னை அணியிடம் தோற்றது. பெங்களூரு அணியில் விளையாடிய மூன்று வருடங்களில் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பயிற்சியாளராக அதை வென்றாக வேண்டும் என்கிற தீர்மானத்துடன் தான் தனது பணியைத் தொடங்கினார்.

தெளிவான ஏல செயல்திட்டம் - ஆல்ரவுண்டர்களும் சாம்பியன் பவுலர்களும்

ஆர்சிபி அணியைப் பொருத்தவரை விராட் கோலியைத் தவிர்த்து அதன் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைத்து, ஒரு கலவையான அணியை உருவாக்க வேண்டும் என ஏலத்தின் முன்பு திட்டமிடப்பட்டது.

அதற்கு ஏற்றார் போலவே ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயால் என மூவரை மட்டுமே ரீட்டெய்ன் செய்திருந்தது. அப்போதே ரஜத் பட்டிதார் தான் கேப்டனுக்கான வாய்ப்பு என்பது தெளிவானது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் டெப்த் ஓவர்களுக்கு என மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு இந்திய பவர்பிளே பவுலர் மற்றும் ஒரு மிஸ்டரி ஸ்பின்னரைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்சிபி அணி தீர்மானித்தது.

2025 தொடருக்கான ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களின் செயல்திட்டம் பற்றிய விவாதத்தை ஆர்சிபி தனது யூ-ட்யூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதில் பில் சால்ட், லியம் லிவ்விங்ஸ்டோன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரோமாரியோ ஷெபர்ட் ஆகியோரை குறிவைப்பதாக ஆர்சிபி பயிற்சியாளர் குழு முடிவு செய்திருந்தது. அவ்வாறே ஏலத்தில் ஆர்சிபி தீர்மானித்த அனைத்து வீரர்களையும் எடுத்தது.

இத்துடன் ஜோஷ் ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், சுயஷ் சர்மா மற்றும் குருனால் பாண்டியாவும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆர்சிபி எதிர்பார்த்ததைப் போலவே ஒரு அணியை அமைத்தது.

ஜித்தேஷ் ஷர்மா எனும் துருப்புச் சீட்டு

இதில் முக்கியமான தேர்வாக அமைந்தது ஜித்தேஷ் ஷர்மா. ரூ.1 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த ஜித்தேஷ் ஷர்மா போட்டிபோட்டு பெங்களூரு அணியால் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். விக்கெட் கீப்பர், ஃபினிஷர் காம்பினேஷனை கச்சிதமாக அமைத்தது.

பெங்களூருவில் தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஜித்தேஷ் ஷர்மாவைக் கொண்டு அவரே நிரப்பினார். ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டபோது ஜிதேஷ் ஷர்மா ஒரு அரை சதம் கூட அடித்திருக்கவில்லை. ஆனால் அவரின் பவர் ஹிட்டிங் திறமையில் அணி நம்பிக்கை வைத்தது. அவரை அணிக்கு அழைத்து வந்ததில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது.

இந்தத் தொடரில் அவருக்கு பெரிதாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஜத் பட்டிதார் விளையாடாத ஆட்டங்களில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால் அணிக்கு தேவைப்பட்டபோது ஜொலித்தார் ஜித்தேஷ் ஷர்மா.

லயம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, ரோமாரியோ ஷெப்பர்ட் என்கிற வலுவான ஆல்ரவுண்டர் கூட்டணியை உருவாக்கியது பெங்களூரு. அதே போல் அதன் கோர் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், சுயஷ் சர்மா என அனைவருமே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் விளையாடியுள்ளனர். ப்ளே ஆப் சுற்றுக்குத் தேவையான பிக் மேட்ச் ப்ளேயர்ஸ் காம்பினேஷனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமைந்தது.

ஆர்சிபி, ஐபிஎல், தினேஷ் கார்த்திக், RCB vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜித்தேஷ் ஷர்மா

கடைசி லீக் ஆட்டம், முதல் 2 இடங்களைப் பிடிக்க கட்டாயம் வெல்ல வேண்டுமென்ற நிலை. முதலில் ஆடிய லக்னௌ அணி வெற்றி பெற 227 என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் 204 தான். அதுவும் 2010ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக வந்தது. அசாத்தியமான இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணி 19வது ஓவரில் 8 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களின் அதிகபட்ச சேஸையும் பதிவு செய்தது.

இறுதிப் போட்டியிலும் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி தடுமாறிய நிலையில் உள்ளே வந்த ஜித்தேஷ் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் கேமியோ ஆடினார். ஆர்சிபி 190 என்கிற சவாலான இலக்கை நிர்ணயிக்க இது முக்கிய பங்கு வகித்தது. இறுதியில் பஞ்சாப்புக்கும் பெங்களூருவுக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 6 ரன்களே.

ஏல செயல்திட்டம் தொடங்கி அணியில் யாருக்கு என்ன ரோல் என வரையறுத்து கொடுத்தது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்கு உள்ளது. தனது இரண்டாவது கோப்பையை இம்முறை பயிற்சியாளராக வென்ற தினேஷ் கார்த்திக், பெங்களூருவுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றிக்கனியை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தத் தொடர் முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது ஆர்சிபி அணி. ஐபிஎல் எனும் மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தில் ஆர்சிபியின் ஆதிக்க காலம் தொடங்கியுள்ளதன் அறிகுறியாகவும் இதைப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2qwz4wqwwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய் சுதர்ஷன்

401385.jpg

இந்த 2025 ஐ.பி.எல்லில் மட்டுமல்ல இதுவரையிலான ஒட்டுமொத்த ஐ.பி.எல் பருவங்களிலுமே தோன்றிய மட்டையாளர்களில் ஆகச்சிறந்தவர் சாய் சுதர்ஷன்தான். இவ்வாண்டு 156 ஸ்டிரைக் ரேட்டில் 759 ரன்கள். ஸ்டிரைக் ரேட்டோ இந்த ரன்களோ கூட அல்ல, வேறொன்றுதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஷ்ரேயாஸ் ஐயரையோ அபிஷேக் ஷர்மாவையோ போல பெரிய சிக்ஸர்கள் அடிப்பவர் அல்ல. ஆனால் எந்த ஆட்டத்திலும் அவர் ஆட்டச்சூழலாலோ பந்துவீச்சாளர்களாலோ ஆதிக்கம் செய்யப்படவில்லை, எதுவுமே அவரை நிலைகுலைய வைக்கவில்லை. ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை எந்த ரிஸ்கும் இன்றி அவர் எடுப்பதையும் வேகவீச்சையும் சுழலையும் பிசிறின்றி ஆடுவதையும் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் திறமையைப் பார்ப்பதைப் போல இருந்தது. வேகவீச்சை ஆடும்போது அவர் சில நுண் வினாடிகள் முன்பே தயாராக இருக்கிறார் - அனேகமாக எந்த விதப் பந்தையும் கணிப்பதில் அவருக்குப் பிழையேற்பட்டு நான் பார்க்கவில்லை. இசை நடத்துநர் ஒருவர் பெரிய வாத்திய கோஷ்டியை தன் சுண்டு விரல் அசைவில் கட்டுப்படுத்தி பிரம்மாண்ட இசையனுபவத்தை கட்டியெழுப்பி நம்மை மயக்கி நிறுத்துவதைப் போல எதிரணியின் கள அமைப்பு, பந்து வீச்சு, திட்டங்கள் எல்லாவற்றையும் சுதர்ஷன் தனி ஆளாக நடத்துவதாகத் தோன்றுகிறது.

மிகப்பெரிய ஸ்கோர்களை அவர் துரத்திப் போகும்போதும் சற்றும் அவசரமோ குழப்பமோ இல்லை. மும்பைக்கு எதிராக 228 எனும் இலக்கை சரியான துணை வீரர் இன்றி அவர் எடுத்துச் சென்று (தோல்வியுற்றாலும்) 163 ஸ்டிரைக் ரேட்டில் 80 அடித்ததைப் பார்த்தபோது வாவ் என்றிருந்தது. ஏதோ ஒரு போட்டியில் 200 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் / சதம் அடிப்பது பெரிய விசயமில்லை, எல்லா போட்டிகளிலும் எதிரணியை அடித்து துவம்சம் பண்ணுவது, அவுட் பண்ணுவதற்கு சிறு பழுதும் கொடுக்காமல் ஆடுவது கிட்டத்தட்ட மேதமையைதான்.

சாய் சுதர்ஷனின் வளர்ச்சியின் அடுத்த கட்டம் இன்னும் சில சிக்ஸர்களைக் கூடுதலாக அடிக்கப் பழகுவதுதான் என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கென்னவோ அவர் சிக்ஸர்களையும் ரிஸ்க் இன்றி அடிக்கத் தொடங்குவார் எனத் தோன்றுகிறது.

அப்படி நிகழாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஐ.பி.எல்லின் தரத்தை அவரளவுக்கு பலமடங்கு மேலே உயர்த்துகிற இன்னொரு வீரர் வரலாற்றிலேயே இல்லை. இதை நான் கெய்ல், ஜெயசூர்யா, சேவாக், டிவில்லியர்ஸ் துவங்கி பல்வேறு ஐ.பி.எல் அதிசூர பராக்கிரமசாலிகளைப் பார்த்த பிறகே சொல்கிறேன். கில்லை இப்போது இந்தியாவில் ஆடும் ஒருநாள் மட்டையாளர்களில் தலைசிறந்த திறமையாளர் என்கிறார்கள். ஆனால் பல போட்டிகளில் சுதர்ஷன் கில்லுடன் ஆடும்போது டெக்னிக்கலாகவே கில்லைவிட மேலாகத் தெரிகிறார். இதனால்தான் அவர் ஐ.பி.எல் பார்க்கும் நமது அனுபவத்தையே மகத்தானதாக்குகிறார் என்று சொல்கிறேன்.

https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_78.html

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிவால்ட் பிரிவிஸ்-க்காக விதிகளை மீறியதா சிஎஸ்கே? - அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம்

டிவால்ட் பிரிவிஸ்

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மழைவிட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல் ஐபிஎல் சீசன் முடிந்தாலும், சிஎஸ்கே குறித்த சில பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை விழிப்பிலே வைத்திருக்கிறது.

குறிப்பாக சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் எந்தெந்த வீரர்களை அணியில் தக்கவைக்கப் போகிறார்கள், தோனி விளையாடுவாரா, எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறார்கள் என்ற கணிப்புகளை, ஊகங்களை முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தெரிவித்து சிஎஸ்கே பரபரப்புக்கு உயிர்கொடுத்து வருகிறார்கள்.

அதில் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோவில், " சிஎஸ்கே அணி சில வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பரிமாற்றம் செய்வது குறித்து பேசி வருகிறது. அதில் கேப்டன் சஞ்சு சாம்ஸனை சிஎஸ்கே பக்கம் இழுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட சிலரை வழங்கவும் பேச்சு நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி குறித்த பரபரப்பை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அஸ்வின் வீசிய அணுகுண்டு

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் பிரிவிஸை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது குறித்து பேசியதுதான் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி, அது கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில் " சிஎஸ்கே அணி நிர்வாகம் பாதி சீசனின் போது காயமடைந்த குர்ஜப்நீத் சிங்கிற்குப் பதிலாக தென் ஆப்ரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸை தங்கள் அணியில் சேர்ப்பது குறித்து அணுகியது.

பிரிவிஸிடம் நடத்தப்பட்ட பேரத்தின் முடிவில் அவரின் அடிப்படை விலையைவிட சிஎஸ்கே அணி கூடுதல் பணம் வழங்கியிருக்கலாம். ஏனென்றால், அந்த நேரத்தில் பிரிவிஸை சேர்க்க பல அணிகளும் அவருடன் பேரத்தில் இருந்தன.

இதிலிருந்து முந்திக்கொண்டு அவரை வாங்க வேண்டும் என்ற நோக்கில் குர்ஜப்நீத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.20 கோடி விலையைவிட கூடுதலாக சிஎஸ்கே அணி கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரிவிஸின் கடந்த ஐபிஎல் சீசன் ஆகச்சிறந்ததாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் பிரிவிஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்போது அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தில் ஒரு அணிகூட பிரிவிஸை சீண்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் ஏலமாகாத வீரர்கள் பட்டியில் பிரிவிஸ் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தார்.

ஆனால், பிரிவிஸின் கடந்த கால கிரிக்கெட் புள்ளிவிவரங்களை அறிந்தபின்புதான் பல்வேறு அணிகள் சீசனின் இடைப்பகுதியில் அவரை அணியில் சேர்க்க போட்டிபோட்டன, அவருக்கான கிராக்கியும் அதிகரித்தது.

ஆகாஷ் சோப்ராவின் விளக்கம்

பிரிவிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.2.20 கோடிக்கும் அல்லது அஸ்வின் கூற்றுப்படி அதற்கு அதிகமான விலையிலும் சிஎஸ்கே அணி வாங்கியது சரியானதா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார்

ஆகாஷ் சோப்ரா அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் காயம் காரணமாக ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரை ஓர் அணி சேர்க்கும் பட்சத்தில் அவருக்கு "ப்ரோ ரேட்டா"(pro rata basis) அடிப்படையில்தான் ஊதியம் வழங்க வேண்டும். அதாவது மீதமுள்ள போட்டிகளை கணக்கிட்டு மாற்று வீரருக்கு ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இருக்கையில் பிரவிஸுக்கு அவரின் அடிப்படை விலையில் பாதியான ரூ.37.50 லட்சத்தைதான் அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்.

காயமடைந்த குர்ஜப்நீத்துக்கு பதிலாக சேர்க்கப்பட்டதால் அவருக்கான ஏலத்தொகை ரூ.2.20 கோடியிலிருந்து பாதியைத்தான் பிரிவிஸுக்கு நிர்ணயித்து மீதமுள்ள சீசனில் இருக்கும் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும்.

2025 ஐபிஎல், டி20, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா பேட்டர், ஜூனியர் ஏபிடி என அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ்

விதிகள் மீறப்பட்டதா?

பிரிவிஸ் அடிப்படை விலையில் இருந்து கூடுதலாக பணத்தை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரினார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். பிரிவிஸுக்கு கூடுதலாக பணம் வழங்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா, அதிகாரபூர்வமாக அவரால் பெற முடியுமா.

சில நேரத்தில் ஐபிஎல் அணியிடம் இருக்கும் பர்ஸின் கையிருப்பு பண அ்ளவை மீறமுடியுமா, அந்த விதிமுறை மீறலை, ஓட்டைகளைத்தான் அஸ்வின் குறிப்பிட்டாரா. ஒருவேளை அதிகமான பணத்தை சிஎஸ்கே நிர்வாகம் பிரிவிஸுக்கு வழங்கினாலும் அது அடுத்த சீசனுக்கானதாக இருக்கலாம். ஏதேனும் விதிகளில் ஓட்டை இருந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்தியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

சிஎஸ்கே விளக்கம் என்ன?

2025 ஐபிஎல், டி20, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்நிலையில் அஸ்வினின் குற்றச்சாட்டுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக திடீரென விளக்கம் அளித்து அஸ்வின் கூற்றை மறுத்துள்ளது. அதில் ஐபிஎல் விதிப்படி அனைத்து விதிகளை முறைப்படி பின்பற்றிதான், காயமடைந்த வீரருக்கு மாற்று வீரராக டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் கொண்டு வந்தோம் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே அணி அளித்த விளக்கத்தில் " ஐபிஎல் தொடரில் இருக்கும் விதிகளின் படிதான் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்றுவீரராக டிவால்ட் பிரிவிஸ் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் விதி 6.6ன் படி மாற்றுவீரர் விதி முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.

2025 டாடா ஐபிஎல் சீசனில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முறைப்படி சிஎஸ்கே நிர்வாகம் பின்பற்றிதான் டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் சேர்த்தது, அவரை ஒப்பந்தம் செய்தது.

மாற்று வீரரை சேர்க்கும் ஐபிஎல் விதி 6.1 அல்லது 6.2ல் குறிப்பிட்டபடி, சீசனில் வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகமாக இல்லாதவாறு, காயமடைந்த வீரருக்கு எந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த ஊதியத்தைதான் மாற்று வீரருக்கு வழங்கினோம்.

அதாவது குர்ஜப்நீத்துக்கு 2025 சீசனில் ரூ.2.20 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, அது தான் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டிவால்ட் பிரிவிஸுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொகையைவிட கூடுதலாக சிஎஸ்கே நிர்வாகம் வழங்கவில்லை" என விளக்கம் அளித்தது.

ஐபிஎல் விதிகள் கூறுவதென்ன?

டிவால்ட் பிரிவிஸ்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து விளையாட முடியாத சூழல் நிலவும்போது மாற்றுவீரரை அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்ய ஐபிஎல் விதி அனுமதிக்கிறது.

ஆனால், மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடியவருக்கும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது

இதன்படி, மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வீரர் ஒருவர் அந்த சீசனில் உள்ள பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்(RAAP) பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்த வீரரைத்தான் ஓர் அணி மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த மாற்று வீரர் ஐபிஎல் சீசன்முழுமைக்கும் வேறு எந்த போட்டித் தொடரிலும் விளையாடாமல் இருப்பாரா, அல்லது எப்போது வேறு தொடர்களில் விளையாடச் செல்வார், அவருக்கான ஒப்பந்த ஊதியம், முழு சீசனிலும் விளையாட நேர்ந்தால் அதற்கான தொகை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மாற்று வீரரின் வீரர் ஒப்பந்தம் விதிமுறைகளின்படி நீட்டிக்கப்பட்டால், அடுத்த சீசனுக்கான வீரருக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை, நடப்பு சீசனுக்கான ஊதிய உச்சவரம்பிற்கும் அதிகமாக வழங்கப்படலாம். எப்படியாகினும் அணியில் வீரர்கள் எண்ணிக்கை 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர் அந்த அணிக்காக ஏற்கெனவே போட்டியில் பங்கேற்றிருந்த போதிலும், சீசனின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அவருக்கு மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

ஆனால், அந்த சீசனில் 12 லீக் போட்டிக்கு முன்பாகவே காயம் அல்லது உடல்நலக்குறைவு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

பிசிசிஐ அமைப்பால் நியமிக்கப்பட்ட மருத்துவர், அந்த குறிப்பிட்டவீரரின் உடல்நிலையை பரிசோதித்து காயம் ஏற்பட்டதையும், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும்.

தொடர்ந்து அந்த வீரரால் விளையாட முடியாது என்று சான்றளித்தபின்புதான் மாற்றுவீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க முடியும்.

ஐபிஎல் விதி பிரிவு 6.6ல் குறிப்பிட்டுள்ளபடி, "மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கான ஊதியம் என்பது காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு அந்த சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தைவிட விட அதிகமாக இருக்கக்கூடாது."

விதி 6.7ல் குறிப்பிட்டுள்ளபடி "ஒரு சீசனில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கான ஊதியம் அவர் அணியில் சேர்க்கப்படும் முன், எத்தனை போட்டிகளை அந்த அணி விளையாடி முடித்துள்ளது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்றார்போல் ஊதியம் குறைக்கப்படும்."

உதாரணமாக சிஎஸ்கே அணி பிரிவிஸை அணியில் சேர்க்கும் முன் 5 போட்டிகளில் பங்கேற்றிருந்தால், மீதமுள்ள லீக் போட்டிகளை மட்டும் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

விதி 6.8ன் கீழ் " மாற்று வீரரை ஒரு அணி ஒப்பந்தம் செய்வதற்கு முன், அந்த அணி நிர்வாகம் அது தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பிசிசிஐ-க்கு அனுப்பி வைக்க வேண்டும். பிசிசிஐ ஒப்புதல் அளித்தப்பின்புதான் மாற்றுவீரருடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2pgv0y346o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.