Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"பூவாசம் வீசுதே" 


"பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே
பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே!  
பூவையர் கண்களும் உன்னை நாடுதே 
பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!"


"மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே 
மருண்ட விழியால் பூரிப்பு தாராயே!
மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே
மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!"


"மனம் மயக்கும் அழகு மலர்களே 
மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே!
மங்கையின் கையில் ஏன்தான் போனாய் 
மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!"


"பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து 
பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! 
பவளக் கொடியாளே உதட்டு அழகியே 
பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

462138408_10226447536477486_4753672589636449193_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=_gVlwpfexaAQ7kNvgEsOsPJ&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Ap17dLDDAe_u2vEnMgJknD2&oh=00_AYDHNgv566r3y2ub9nL0eTBkGNYkhUAjM16tHE1HOhYKJQ&oe=670595C0 461952233_10226447542677641_8453537974994026494_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=dmG2UOaY4nYQ7kNvgENZBrv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Ap17dLDDAe_u2vEnMgJknD2&oh=00_AYA8WnsG3r88vPg4Epn5WfQDoo7IAJKAXf6VMtdpJ5Fxwg&oe=670591FB


 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.