Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"ஆசிரியர்" [உலக ஆசிரியர் தினம் 2024 அக்டோபர் 5 சனிக்கிழமை / World Teachers' Day 2024 Saturday 5 October]
 

"கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் 
கடமையை புனிதமாக மதித்து அவன் 
கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல 
கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!"


"மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும்  
மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி
மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து 
மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!"


"கவிதையை கவிஞனைப் போல் வாசித்து
கணித சிக்கலை இலகுவாக போதித்து 
கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து 
கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!"


"ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி 
ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து 
ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று 
ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" 


"பெற்றோர் இருவரும் வேலைக்கு போக 
பெரிதாக கவனம் இல்லாமல் போக 
பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய 
பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!"

  
"குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி 
குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு 
குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம்
குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" 


"காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற  
காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற 
காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க   
காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!"


"மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை   
மருந்துக்கு கூட  இன்று ஒழுக்கமுமில்லை 
மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க 
மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" 


"ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும்  
ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும்   
ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும்  
ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" 


"சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும்    
சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் 
சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் 
சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!"  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

'இன்றைய ஆசிரியர் நிலை'


"கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் 
கடமையை புனிதமாக மதித்து அவன் 
கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல 
கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!"


"மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும்  
மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி
மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து 
மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!"


"கவிதையை கவிஞனைப் போல் வாசித்து
கணித சிக்கலை இலகுவாக போதித்து 
கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து 
கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!"


"ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி 
ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து 
ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று 
ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" 


"பெற்றோர் இருவரும் வேலைக்கு போக 
பெரிதாக கவனம் இல்லாமல் போக 
பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய 
பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!"  


"குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி 
குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு 
குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம்
குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" 


"காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற  
காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற 
காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க   
காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!"


"மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை   
மருந்துக்கு கூட  இன்று ஒழுக்கமுமில்லை 
மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க 
மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" 


"ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும்  
ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும்   
ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும்  
ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" 


"சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும்    
சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் 
சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் 
சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!"  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  


குறிப்பு 

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனால்

உலக ஆசிரியர் தினம் அக்டோபர்  5 ஆம் தேதி ஆகும் 

Teacher's Day is celebrated in India on September 5 to honour the contribution of teachers in our lives. Every year, Teacher's Day is celebrated in India on September 5 to commorate the birth anniversary of former President Dr Sarvepalli Radhakrishnan.

BUT

World Teacher’s Day 2022 falls on Wednesday, October 5th.

119241452_10217763058210957_8220717907115042964_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=eGb84-h9ujIQ7kNvgFM9z6z&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Ai8nqQ5c13FwQ1wet5aYu5Z&oh=00_AYChgchKrx1NQNc78ksU7nnqDeKe9NEiuV5y2-DomvlvKw&oe=6728C3B2  305267386_10221543508359848_8884164579453579568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=5lOuHcPXGNMQ7kNvgFHjg0_&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Agsf6G57FZnOVg1jBOCQKV7&oh=00_AYAyS6aBzc1Fkl_yec4rdrtxPNMWg02M5GQvjrjMxPvOrw&oe=67071F21 ஆசிரியர் தினம் 2023 | ஆசிரியராக உன்னை அர்ப்பணி! | Teachers Day 2023 -  hindutamil.in

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.