Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது போதையில் சிறை சென்று உண்ணாவிரதிகளை சந்தித்தார்களா தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள்?

Featured Replies

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கு கூட்டுதாபனத்துக்கு பேட்டி வழங்கிய உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக பேசிய மனோ என்னும் உறவு சொன்னார் அதிலும் கிசோர் எம்பி அவர்கள் மோசமாக நடந்ததாகவும் உண்ணாவிரதிகளின் மனநிலையை குழப்பும் விதமாக கருத்துகளை சொன்னதாகவும் அவர் சொன்னார் அண்மைகாலமாக கிசோர் எம்பி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் கவனிக்கதக்கது

பேட்டியை கேட்க இங்கே அழுத்துங்கள்

Edited by ஈழவன்85

கைதிகள் அரசாங்கத்தின் பிடியில்இருப்பவர்கள். அவர்களை வெருட்டி துன்புறுத்தி தந்திரமாக பலவிதமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படலாம். இதில் நாமது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும். கைதியை பிறகு குற்றம் சொல்லிப் பயனில்லை.

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் அன்று சிறைக்கு சென்ற உண்ணாவிரதிகளில் கிசோரினை மட்டும் இப்படி ஏன் குற்றம் சாட்டுகின்றார்கள் குறுக்ஸ் அந்த நபர் அனைத்தையும் ஒளிவு மறைவில்லாமல் சொல்கின்றார் என நினைகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் அன்று சிறைக்கு சென்ற உண்ணாவிரதிகளில் கிசோரினை மட்டும் இப்படி ஏன் குற்றம் சாட்டுகின்றார்கள் குறுக்ஸ் அந்த நபர் அனைத்தையும் ஒளிவு மறைவில்லாமல் சொல்கின்றார் என நினைகின்றேன்

எல்லோரையும் கூட்டமா குற்றம் சொன்னால் எடுபடாது. வீக் பொய்ன்ற் உள்ள ஒருவர் மீது குற்றம் சுமத்துவது இலகுவாக எடுபடும்.

நீங்கள் ஜயப்டுவது போல் உண்மையகவும் இருக்கலாம்.

அவதானமும் பொறுமையும் முக்கியம் எனநினைக்கிறேன்.

சிறீலங்காவில கைது செய்யப்படாமல் வெளியில் இருக்கிறவர்களே தமது அடையாளங்களைச் சொல்லிய படி சுதந்திரமாக கதைபதற்கு பயப்பிடுகினம். தொலைபேசியில கதைக்கப் பயபடுகினம். தமிழ் அரசியல்வாதிகளிற்கு பாராளமன்ற உறுப்பினர்களிற்கு அவர்களது பிரபல்யம் மற்றும் அங்கத்துவங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நிலையில் கைதி ஒருவர் சுதந்திரமாக கதைக்கிறார் என்பது எப்படி முடியும்? குழப்பங்களை உருவாக்கி பிரித்தாழுவது ஓரங்கட்டுவது தான் வழமையான தந்திரம்.

கிசோர் மீது முன்னர் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் போல் ஆடம்பரமானவர் பொறுப்பற்றவர் தண்ணியடிச்சுப் போட்டு கூத்தாடுகிறார் என்றால் அவரிற்கு அவர் செய்வதில் கொள்கைகளில் நம்பிக்கை இழந்துவிட்டார் என்று அல்லவா அர்த்தம். அப்படிப்பட்ட ஒருவரை சிறீலங்காவோ அல்லது மாற்றுக்கருத்துகளை ஊக்குவிக்கும் அண்டை நாட்டு ஜனநாயகவாதிகளோ பயன்படுத்தாது விடுவார்களா?

தமிழர் தரப்பில் உள்ள ஊழல்கள் நிறைந்தவர்களை எப்பவாவது இவர்கள் இனங்காட்டியிருக்கிறார்களா? மாறாக அவர்கள் தானே சிறந்த தமிழ்த்தலைவர்கள் எண்டு தூக்கிப்பிடிக்கிறார்கள்.

மாமனிதர் ரவிராஜ் இன் படத்தை கூசாமல் சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு தனது புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்தில் போட்டது. சில வாரங்களிற்கு முன்னர் அத்தாஸ் மகிந்தவோடு முறுகியிருந்து ரென்சனில ஒண்டை மாறி வெளியில விட்டுட்டார்.

கிசோர் செஞ்சிலுவைச் சங்கத்தில் வேலை செய்தவர் சிறையில் இருந்தவர் வவுனியா வின் பாராளமன்ற உறுப்பினர். எதிர்காலத்தில் வன்னிப்பகுதி இராணுவ நடவடிக்கை உருவாக்கக் கூடிய மனித அவலங்களை வெளிக் கொண்டுவரக் கூடிய காத்திரமான பல சர்வதேச தரப்பின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு குரல் அவர்.

கிசோர் மீது இப்படி செய்திகளை ஒரு குறித்த காலத்திற்கு பரப்பி விட்டு அவருக்கு ஒன்றைச் செய்து போண்டு புலிகளில் பழிபோடுவார்கள். பிறகு டிபிஎஸ் எழுதுவார் நல்ல பிள்ளை போல் அப்பிடியும் இருக்கலாம் இப்பிடியும் இருக்கலாம் புலிகளின் வரலாற்றில் உப்பிடி நடந்திருக்கு. புலி ஆதரவு ஊடகங்கள் கூட குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது என்று.

கிசோர் கூறியது ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை!

தற்போது உள்ள நிலையில் புலி என அடையளமிடப்பட்டவர்கள் உள்ளே இருப்பதுதான் பாதுகாப்பு. யாழ்பாணத்தில் குடும்பம் குடும்பமாக சென்று சிறைக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். வெலிக்கடையை விட அங்கு வசதிகள் குறைவாகத்தான் இருக்கும். மேலும் அவரே சொல்கிறார் வெளியில் சென்ற இருவர் உயிருடன் இல்லை என்று.

இந்தமுறை தமிழ் கைதிகளின் போராட்டம் பலனளித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் இம்முறை அவர்களின் கோரிக்கை வருகைதரக் கோருவது மட்டுமே. அத்துடன் கோரிக்கை விடுத்தது ஒரு அரசியல்வாதி அல்லாத மனிதாபிமானமுள்ளவரிடம். இதுவே மாறாக இன்று இனவாத இராணுவமமதை பிடித்தாடும் அரசு இயந்திரத்திற்கு உருவேற்றி மீண்டும் ஒரு 83 இனை போல் கலையாடி ஒரு மனிதவேட்டையை நடத்தியிருந்தால் இந்தக் கைதிகளின் கொலைகள் ஒரு மாதத்திற்கு மட்டுமே ஊடகங்களில் வந்திருக்கும். அரசாங்கமும் சகட்டிற்கு 7 பேர் மீது குற்றம்சாட்டி ஒரு வழக்கை தாக்கல் செய்யும், பின்னர் 3 ஆண்டுகளில் அதுவும் போதிய சாட்சியமின்றி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

இன்றைய நிலையில் தமிழ்மக்களுக்கு உள்ள ஒரே வழி ஆயுதமேந்தி தங்களை பாதுகாத்துக் கொள்வது அல்லது காலைக் கழுவி வாழ்வது மட்டுமே. நெஞ்சு நிமிர்பவர்கள், முதுகெலும்பு உறுத்துவபர்கள் மாந்தம் வெளியிடப்படும் காணமற் போனோர் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பற்றிய அறிக்கையில் வெறும் எண்ணிக்கைகளாக மட்டுமே அமைய முடியும்.

இன்னிலையில் உழைப்பதற்கு வேறு பல மார்க்கங்கள் இருந்தும், உயிரைப் பணயம் வைத்து சிங்கத்தின் கோட்டைக்குள் நின்று மக்களுக்காக சதிராடுபவர்கள் மது அருந்தினாலும் காலில் விழுந்து வணங்கத்தக்கவர்கள்.

(காவலில் வாடும் மனோ அவர்களின் உணர்வுகள், துன்பங்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய நிலையில் சகிப்புத்தன்மையும் புத்திசாலித்தனமும்தான் வாழ்வை மீட்டுத்தரும்!)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இங்கிருந்து செய்திகளைக் களவெடுக்கின்றார்கள் போலுள்ளது.

Security forces foil a Tiger attempt to assassinate TNA MP and put the blame on the Army.

(13th October 2007 23:20S.L.T)

Security Forces have been able to foil an attempt made by the Tigers organization to assassinate a Tamil National Alliance parliamentarian and pass the accountability to the armed forces.

They had thus planned to assassinate Wanni District parliamentarian Mr. S. Krishor.

http://www.lankatruth.com/full_story/2007/...20071013_07.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கைதிக்கு சிறைச்சாலையில் இருந்து தொலைபேசி பேசுகின்ற அனுமதி எப்படி வழங்கப்படுகின்றது? அதுவும் வானொலி ஒன்றுக்கு சுதந்திரமாக அனுமதிப்பார்களா?

இப்படியான அரசின் குற்றச்சாட்டுகளுக்கு கிசோர் வெளிப்படையாக பதில் அளிக்கவேண்டும். அது தான் அவருடைய உண்மைத் தன்மைக்கு வெளிப்படாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.