Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்"
 
 
"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்
எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை
எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை
என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !"
 
"நேரம் போகாத சில நாட்கள்
நேசம் கிடைக்காத சில உறவுகள்
நேரார் தூற்றும் சில வசைகள்
நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !"
 
"வெறுப்பு மனதில் குடி கொள்ள
வெளிச்சம் மெல்ல விலகிப் போக
வெறுமை தனிமை என்னை வாட்ட
வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !"
 
"அல்லும் பகலும் என்னை சுற்றி
அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து
அரை குறையாய் பசிக்கு உண்டு
அக்கினியில் போட்ட விறகு ஆனேன் !"
 
"உலகத்தில் பரந்து வாழும் பலரின்
உண்மை இல்லா பற்றில் பாசத்தில்
உடன்பாட்டிற்கு நான் வர முடியாமல்
உணக்கம் தரையில் விதை ஆனேன் !"
 
"முற்றிலும் திட்ட மிட்ட செயல்களாலும்
முழக்க மிட்ட கொள்கை வழிகளாலும்
முடிந்த அளவு மற்றவனை தாழ்த்தும்
முக மூடி மனிதர்களால் விரக்தியானேன் !"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
நேரார் - enemies, foes, பகைவர்
நேசகன் - Washer-man; வண்ணான்
உணக்கம் - dry or withered state, உலர்ந்ததன்மை
 
No photo description available.
 
 
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.