Jump to content

வடக்கு மாகாண ஆளுநர் நியமனமும் JVP/NPP இன் தேர்தல் வியூகமும் இரண்டல்ல


Recommended Posts

 
வடக்கு மாகாண ஆளுநர் நியமனமும் JVP/NPP இன் தேர்தல் வியூகமும் இரண்டல்ல; இதை JVP/NPP யாழ் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் அண்மைய காணொளியில் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் கால மனநிலையைத்தான் JVP/NPP இந்தப் பொதுத்தேர்தலிலும் கொண்டிருக்கிறது.
தொங்கு பாராளுமன்றம் அமைகிற பொழுது யார் யாருடன் உடன்பட்டுப் போகலாம் என்பதையே இராமலிங்கம் சந்திரசேகர் அக்காணொளியில் விளக்கியிருந்தார்.
வடக்கு ஆளுநராக NPP அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் நாகலிங்கம் வேதநாயகன், தமிழரசுக்கட்சி சார்பு நிலையையும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டவர்.
இவரது நியமனத்தில் உள்ள அரசியலைச் சொல்கிற சில பதிவுகளில் முன்னைய ஆட்சியின் பங்குதாரர்களின் நெருக்குவாரத்தில் விருப்பு ஒய்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதென்பது யாழ்மைய எதார்த்த அரசியலாக இருந்ததில் மறுப்பதற்கில்லை.
முன்னைய ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டிருந்த வடக்கு ஆளுநர்கள், ஆட்சியாளர்களின் யாழ்மைய தம்முடைய அரசியல் குத்தகைக்காரர்களின் மனவிருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டிருந்தது. இது பெரும் கூட்டு ஊழலுக்கு வழி செய்ததான கருத்து உண்டு.
JVP/NPP க்குப் பலமான கட்டுமானமும் வாக்குகளும் இல்லாதினால் பெருவாரியாக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் என்கிற நம்பிக்கையை வைத்திருக்கும் கனவான் அரசியல்வாதிகளான தமிழரசுக்கட்சியைப் பலப்படுத்த/வலுப்படுத்த மறைமுகமாக நகர்த்தப்பட்ட அரசியல் காய் நகர்த்தலே வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நியமனமாகும்.
குத்துமதிப்பாகத் தமிழரசுக்கட்சிக்குள் மட்டுமல்லாது தமிழ்த்தேசியத் தலைமையை சம்பந்தனுக்குப் பின்னாடி சுமத்திரன் நெருங்கியிருப்பதையே தமிழரசுக்கட்சிக்குள் அகவயமாக முன்னெடுக்கப்படும் களையெடுப்பாகும்.
கிட்டதட்ட தமிழரசுக்கட்சி சுமத்திரனின் சுற்றி வழைப்புக்குள் இருக்கிறது. இந்த சுமத்திரனின் ஊடறுப்புத் தாக்குதலுக்கான பக்க பலத்தை JVP/NPP/அநுரா அரசு, வழமையான ஆளுங்கட்சிகளைப்போலவே வழங்குகிறது?
 
462006983_2010825209387778_7480824639631
 
 
462137963_2010825296054436_4671813397278
 
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.