Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள்  மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும், அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததையும்  நேரில் பார்த்த ஒருவர், அந்த பயங்கர சம்பவத்தையும், மக்கள் கொல்லப்பட்டதை - காயமடைந்ததை பார்த்ததையும், அவ்வேளை ஏதும் செய்ய இயலாமல் தான் தவித்த அனுபவத்தையும் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

gaza_hospital_oct_202411.jpg

நான் பார்த்த மிக மோசமான காட்சி இது என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததும் அதிலிருந்து தப்புவதற்காக மக்கள் அதனை கிழித்து எறிந்ததையும் அலறியதையும் பார்த்ததாக யுவதியொருவர் தெரிவித்துள்ளார்.

தீயில் எரிந்து உயிரிழந்தவர்களை காப்பாற்ற முடியாததால் நான் கண்ணீர் விட்டு கதறியழுதேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர் அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

நால்வர் கொல்லப்பட்டனர். பெருமளவு சிறுவர்களும் பெண்களும் காயமடைந்தனர் என ஹமாஸின் மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நபரொருவர் தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ளது.

கதறல்கள், வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் தீயை அணைப்பதற்காக மக்கள் ஓடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கார் தரிப்பிடமொன்றுக்குள் காணப்பட்ட தளமொன்றிலிருந்து செயற்பட்ட ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தீப்பிடித்திருக்கலாம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அந்த பகுதியில் செயற்பட்டதாக அறியவில்லை. அது மருத்துவமனை போன்றே இயங்கியது என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதன் பணியாளர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்த மக்கள் தீயில் சிக்கி எரிந்து உயிரிழந்தார்கள் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் வெளியாகியுள்ள காட்சிகள் மனதை உலுக்குகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் பொதுமக்கள் உயிருடன் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. இஸ்ரேலுக்கு இது குறித்த எங்கள் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளோம் என சிபிஎஸ்ஸுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கவேண்டிய தேவை இஸ்ரேலுக்குள்ளது. இங்கு இடம்பெற்ற சம்பவம் மிகவும் பயங்கரமானது. ஹமாஸ் அப்பகுதியில் செயற்பட்டிருந்தாலும் கூட இது பயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர்கள் காத்திருக்கும் பிரிவுக்கு வெளியே காணப்பட்ட பல தற்காலிக கூடாரங்களை இஸ்ரேல் தாக்கியது என காசாவுக்கான எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனா ஹல்போர்ட் தெரிவித்துள்ளார். 

பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டு நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். கூடாரங்களை சுற்றி தீ பரவிக்கொண்டிருந்தது என தற்காலிக கூடாரங்களில் வசித்த தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்லா பக்கத்திலும் வெடிப்புகள் இடம்பெற்றன. அது வாயுவா அல்லது வெடிகுண்டா என நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

gaza_hos_2024_oct.jpg

நான் என் வாழ்க்கையில் பார்த்த மோசமான காட்சிகள் இவை என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இதுபோன்ற அழிவை ஒருபோதும் பார்த்ததில்லை என்றார். 

பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ள சில வீடியோக்களை படம் பிடித்த புகைப்படப் பிடிப்பாளர் அட்டியா டார்விஸ் அது மிகப் பெரும் அதிர்ச்சி. மக்கள் எரிவதை  பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நான் மிகவும் மனமுடைந்து போனேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பலர் தீயில் சிக்குண்டு எரிவதை, உயிருடன் எரியும் கோரக் காட்சியை பார்த்தோம். நாங்களும் எரியுண்டுபோவோம் என நினைத்தோம் என மருத்துவமனையில் வசிக்கும் உம் யாசெர் அப்தெல் ஹமீட் டஹெர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் அவரின் மகனும் ஒருவர். மகனது மனைவியும் குழந்தையும் காயமடைந்துள்ளனர். இவரின் 11 வயது பேரப்பிள்ளை லினாவின் காலிலும் கையிலும் குண்டுச்சிதறல்கள் உள்ளன. மக்கள் அலறுவதை நான் கேட்டேன் என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196431



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.