Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பேட்மன்
  • பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், வாஷிங்டன்
  • 16 அக்டோபர் 2024, 04:38 GMT

அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் (THAAD : Terminal High-Altitude Area Defense) இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இஸ்ரேலைப் பாதுகாப்பதே அதன் இலக்கு" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார். அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 180 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட இரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கா, இஸ்ரேலில் அமெரிக்கப் படைகளை தரையிறக்க உள்ளது. எனவே இந்த செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இஸ்ரேலில் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க படைகள் உள்ளன. ஆனால் இம்முறை சுமார் 100 துருப்புகள் நிலைநிறுத்தப்பட உள்ளன. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் அதிகரித்து வரும் அமெரிக்க ஈடுபாட்டை இது குறிக்கிறது.

இரான் மீது இஸ்ரேல் இன்னும் அதன் தாக்குதலைத் தொடங்கவில்லை. பதிலடி மிகவும் "ஆபத்து நிறைந்ததாகவும், துல்லியமாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் படுகொலை செய்ததால் தான் இஸ்ரேலை தாக்கியதாக இரான் கூறியது.

`தாட்’ கவசத்தை (THAAD) இஸ்ரேலுக்கு வழங்குவதன் பின்னணி என்ன?

தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தாட் கவசம் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்)

இது இஸ்ரேலிய வான் பாதுகாப்பில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா முன்னெடுத்த திட்டமா அல்லது இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் கவலைகளை இது சுட்டிக்காட்டுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதிபர் பைடன் இரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளார். அப்படி நடந்தால் அது ஒரு தீவிரமான மோதலைத் தூண்டும் மற்றும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் கருதுகிறார்.

அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையின் பின்னணி எதுவாக இருந்தாலும், விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் பாதுகாப்பு உதவி இஸ்ரேலுக்கு எவ்வளவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

 
தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின.

தாட் கவசம் எவ்வாறு செயல்படும்?

இந்த மாத தொடக்கத்தில் இரான் பயன்படுத்திய Fattah-1 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் ஏவப்பட்டு பின்னர் தங்கள் இலக்கை நோக்கி இறங்குகின்றன. மற்ற ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களுடன் ஒப்பிடுகையில் அதன் வேகம் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூற்றுப்படி, தாட் அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக மிகவும் துல்லியமாக செயல்படும். மற்றொரு அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனமான `ரேதியோன்’ ( Raytheon) தாட் கவசத்தின் அதிநவீன ரேடாரை உருவாக்குகிறது.

இந்த கவச அமைப்பில் ஆறு டிரக் அமைப்பிலான லாஞ்சர்கள் இருக்கும். ஒவ்வொரு லாஞ்சரிலும் எட்டு இடைமறிக்கும் ஏவுகணைகள்(interceptors) உள்ளன. மேலும் இதில் பயன்படுத்தப்படும் ஒரு பேட்டரிக்கு சுமார் $1 பில்லியன் (£766m) வரை செலவாகும். அதை இயக்குவதற்கு 100 ராணுவப் பணியாளர்கள் தேவை. தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது. அதிகமாக தேவைப்படும் ஆயுதமாக இது கருதப்படுகிறது.

சவுதி அரேபியாவும் இதனை வாங்க முடிவு செய்திருக்கிறது. இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு கைமாறாக அமெரிக்காவிடம் இருந்து இதனை அதிகமாக வாங்க சவுதி விரும்பியதாகவும் தெரிய வருகிறது. ஆனால், ஹமாஸின் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் தடம் புரண்டது.

 
தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா
படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது

இரான் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் கொடுக்கப் போகும் பதிலடி

இரான் அக்டோபர் 1-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, இதில் மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோவில் ஒரு நபர் கொல்லப்பட்டார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கி உயிரிழந்தார்.

இஸ்ரேல், ஏரோ 2 மற்றும் ஏரோ 3 எக்ஸோ உட்பட அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த வான்வழி பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் சூப்பர்சோனிக் வேகத்தில் சீறிப் பாயும். பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்வெளியில் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை. இந்த பாதுகாப்பு அமைப்பின் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள், ஏரோ ஏவுகணைகள் இரானிய தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார்கள்.

அமெரிக்கா இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது,

தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எதிரி ஏவுகணைகளை இடைமறிக்கும் தாட். (சித்தரிப்புப் படம்)

அமெரிக்கா இரானிய தாக்குதலை "தோல்வியுற்றது மற்றும் பயனற்றது" என்று விவரித்தது. இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின.

F-35 போர் விமானங்களை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய விமானப்படையின் `Nevatim’ தளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடற்படை பகுப்பாய்வு மையத்தை சேர்ந்த டெக்கர் ஈவெலத் கூறுகையில், புகைப்படங்கள் 32 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை காட்டியது. F-35 போர் விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகில் சேதங்கள் இருந்தது. அவை தப்பித்தது அதிர்ஷ்டம் தான் " என்றார்.

ஏவுகணைகள் மற்றும் இடைமறிக்கும் கருவிகளின் உதிரி பாகங்களால் நேரடியாக சேதம் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய செய்தித்தாள் `Haaretz’ தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் உட்பட சில இடங்களில் நேரடி தாக்கங்கள் இருந்தன. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் மக்கள் வாழும் பகுதியில் ஒன்பது மீட்டர் ஆழமான பள்ளத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

 

தாட் கவசம் இஸ்ரேலுக்கு எவ்வாறு உதவும்?

அரசியல் ரீதியாக பார்த்தால், `தாட்’ கவசம் பற்றிய அறிவிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக பைடன் நிர்வாகம் அளிக்கும் "இரும்புக் கவச" ஆதரவை பிரதிபலிக்கிறது.

இஸ்ரேலின் புள்ளிவிபரங்களின்படி கடந்த ஆண்டு 50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

அதேசமயம் அமெரிக்காவில் நிலவும் சில அரசியல் முரண்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, இஸ்ரேலையும் அதன் எதிர்ப்பாளர்களையும் மோதலை அதிகரிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. அதற்கு பதிலாக ராஜ்ஜிய நடவடிக்கைகளை நாடுமாறு வலியுறுத்துகிறது.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்த போது, வெள்ளை மாளிகை அதன் நட்பு நாடான இஸ்ரேலின் முடிவுகளை வலுவாக ஆதரித்தது. அதே நேரத்தில் அதை ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இஸ்ரேலை பாதுகாக்க முடிவு செய்துள்ளது.

தாட், இஸ்ரேல் - இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி தளபதி அப்பாஸ் நில்ஃபோரோஷன் ஆகியோரின் மரணங்கள், லெபனான் தரைப்படை ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

11 மாத காலமாக எல்லை தாண்டிய ராக்கெட் தாக்குதல் நடத்தியதால்தான் ஹெஸ்பொலாவின் தலைமையை தாக்கி அதன் பாரிய ஏவுகணைகளை அழித்ததாக இஸ்ரேல் கூறியது.

ராணுவ அழுத்தம் மற்றும் ஹெஸ்பொலாவின் திறன்களை அழிப்பது மட்டுமே 60,000 இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்புவதை உறுதி செய்யும் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு.

இஸ்ரேலை ஆதரிப்பதற்கும், இரான் மற்றும் இரானிய ஆதரவு குழுக்களின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் "சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியா தாட் இஸ்ரேலுக்கு வழங்கப்படுகிறது" என்று அமெரிக்கா விவரிக்கிறது. இதற்கு முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, "அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இயக்க தனது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை அமெரிக்கா ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று எச்சரித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈரான் மீதான தாக்குதலுக்கான ஆயத்தங்கள் தீவிரமடையும் நிலையில், அமெரிக்காவானது இஸ்ரேலில் போர்ப் படைகளை நிலைநிறுத்துகிறது

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பானது இஸ்ரேலில் நிலைநிறுத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அக்டோபர் 7, 2023 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் இஸ்ரேல் மண்ணில் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.

de5359ec-4675-4ec9-a797-a88291c6ec32?ren
2019 பிப்ரவரி 23 அன்று டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸில், அமெரிக்க இராணுவத்தின் முனைய உயர் வளிமண்டல பகுதி பாதுகாப்பு (THAAD- Terminal High Altitude Area Defense) ஏவுதள அமைப்பை 4வது விமானப் போக்குவரத்துப் படைப்பிரிவின் சி-17 குளோப்மாஸ்டர் III விமானத்தில் ஏற்றுவதற்கு துருப்புக்கள் தயாராகின்றனர்.  [AP Photo/Staff Sgt. Cory D. Payne]

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான திட்டமிடப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலுடன் தீவிர கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேல் ‘தாக்குதல் இலக்குகளை வரையறுத்துள்ளது’ என்றும் அமெரிக்க அதிகாரிகள் NBC-க்கு தெரிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு நேர்காணலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஈரானை அமெரிக்காவின் ‘மிகப்பெரிய எதிரி’ என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்கப் போர்ப் படைகளின் நிலைநிறுத்தமானது போரில் அமெரிக்காவின் நேரடிப் பங்களிப்பின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும், பைடென் நிர்வாகமானது நிதியுதவியும் ஆயுதங்களும் வழங்கும் இஸ்ரேலுக்கு, மத்திய கிழக்கில் பெயரளவிற்கு ‘போர் நிறுத்தத்தை’ நாடும் வாஷிங்டனிலிருந்து சுயாதீனமாகச் செயல்படுவதாக பாசாங்கு செய்து வந்தது. ஆனால் மத்திய கிழக்கை ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் மறுஒழுங்கைமைப்பதற்கான போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடும் நிலையில், இந்தப் போலித்தனம் படிப்படியாக உடைந்து வருகிறது.

லெபனானுக்கு எதிரான போரில் புதிய மூலோபாயம்’ ஒன்றை விவரிக்கும் கட்டுரையில், ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது: ‘இப்போது அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தத்திற்கான தங்கள் அழைப்புகளைக் கைவிட்டுள்ளனர், சூழ்நிலைகள் மாறிவிட்டன என்று வாதிடுகின்றனர்.’ அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் மாத்யூ மில்லரின் கூற்றை அது மேற்கோள் காட்டியுள்ளது: அதாவது ‘ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்பை சீர்குலைக்க இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த ஊடுருவல்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.”

துருப்புகளின் நிலைநிறுத்தத்தை அறிவித்த பென்டகன் கூறியதாவது: ‘தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்கானது இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தும். இந்நடவடிக்கை, ஈரானின் எதிர்கால ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.”

மேலும் அது கூறியதாவது: ‘இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிப்பதற்கும், ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு படைக்குழுக்களின் தாக்குதல்களிலிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்க இராணுவம் சமீப மாதங்களில் மேற்கொண்டுள்ள விரிவான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைகிறது.”

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா ஏன் அந்த ஏவுகணை தடுப்பு அமைப்பை அனுப்புகிறது என்று கேட்கப்பட்டபோது, பைடெனின் பதில் ‘இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக’ என்பதாக இருந்தது.

தாட், அல்லது முனைய உயர் வளிமண்டல பகுதி பாதுகாப்பு (THAAD, or Terminal High Altitude Area Defense), என்பது அமெரிக்க இராணுவத்தால் இயக்கப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பாகும். ஒவ்வொரு THAAD அலகிலும் பொதுவாக ஆறு டிரக்குகள்-பொருத்தப்பட்ட ஏவுகலன்கள், ஒரு கதிரலை உணர்வி (a radar unit), மற்றும் ஒரு தாக்குதல் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அடங்கும். இது சுமார் 100 படையினரால் இயக்கப்படுகிறது.

செப்டம்பரில், மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான கூடுதல் படைகளை நியமிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இது ஏற்கனவே அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 40,000 அமெரிக்கப் படைகளுடன் சேர்த்து இன்னும் அதிகமாக இருக்கும்.

மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் தனது கட்டுக்கடங்கா வெறியாட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்ரேலானது லெபனானில் ஐ.நா. அமைதிகாப்புப் படையினரைத் தாக்குவதுடன், அங்கு தனது குண்டுவீச்சு மற்றும் பட்டினிப்போர் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், தெற்கு லெபனானில் உள்ள அதன் அமைதிகாப்புப் படையின் தளத்தின் நுழைவாயில்களை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் உடைத்துக் கொண்டு உள்நுழைந்ததாகக் கூறியுள்ளது. இப்பகுதியில் ஐ.நா. அமைதிகாப்புப் படையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்த பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. அமைதிகாப்புப் படையினரை (UNIFIL) வடக்கு நோக்கி விலக்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஐ.நா. படைகள் மீதான இத்தாக்குதல் நடந்தது. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு நெதன்யாகு அனுப்பிய அறிக்கையில், ‘ஹிஸ்புல்லாவின் பலமான பகுதிகளிலிருந்தும், போர் நடைபெறும் பகுதிகளிலிருந்தும் யுனிஃபில் (UNIFIL) படைகளை திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட உரையில், நெதன்யாகு ஐ.நா. அமைதிகாப்புப் படை ‘ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு மனித கேடயமாக’ செயல்படுவதாக குற்றம் சாட்டினார். (இஸ்ரேல் பொதுவாக தான் இலக்கு வைக்கும் பொதுமக்களை ‘மனித கேடயங்கள்’ என்று குறிப்பிடுகிறது.)”

லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை (UNIFIL) 1978 இல் உருவாக்கப்பட்டது. இது இஸ்ரேலிய படைகள் தெற்கு எல்லைக்குப் பின்வாங்குவதை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த எல்லை ‘நீலக் கோடு’ என அழைக்கப்படுகிறது. இது லெபனான், இஸ்ரேல் மற்றும் கோலான் குன்றுகளுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கிறது. இப்படையில் 10,000 துருப்புக்கள் உள்ளனர். இதில் இத்தாலியிலிருந்து 1,000 துருப்புகளும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஒவ்வொன்றிலிருந்தும் 700 துருப்புகளும் அடங்குவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமைதிகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் உட்பட சர்வதேசச் சட்டத்தை மீறும் செயலாகும். இவை போர்க்குற்றமாகக் கருதப்படலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலானது காஸாவில் இனப்படுகொலையை தீவிரப்படுத்தி வருகிறது. ஜபாலியா அகதிகள் முகாமை முற்றுகையிட்டுள்ளது. இம்முகாமில் கடந்த ஒன்பது நாட்களில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் சனிக்கிழமை X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேலிய படைகள் வட காஸாவில் மற்றொரு படுகொலையை அரங்கேற்றி வருகின்றன. ஜபாலியாவில் உள்ள மக்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் சொல்லொணாக் கொடூரமும் வக்கிரமும் நிறைந்த சூழலில் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலைத் திட்டத்தின் ‘விருப்ப நிறைவேற்றாளர்களாக’ மாறிய இஸ்ரேலியர்களால் இது நிகழ்கிறது. மேற்கத்திய நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களாலும் அவற்றின் ஆதரவுடனும் இது நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

7268529f-d25f-4f36-b774-598bdc7bd254?ren
2024, அக்டோபர் 14, திங்கட்கிழமை, காஸா பகுதியின் தெய்ர் அல் பலாஹில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் முற்றத்தில் உள்ள கூடாரங்களை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்த பின்னர், பாலஸ்தீனியர்கள் பற்றி எரியும் பேரழிவுத் தீயை அணைக்க முயற்சிக்கின்றனர்.  [AP Photo/Abdel Kareem Hana]

“ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் முஹன்னத் ஹாடி கூறியதாவது: இஸ்ரேல் திட்டமிட்டு வட காஸாவிற்குள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நுழைவதைத் தடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் 4 லட்சம் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஹாடி மேலும் எழுதியுள்ளதாவது: ‘2024 அக்டோபர் 1 முதல், இஸ்ரேலிய அதிகாரிகள் வட காஸாவுக்கான அத்தியாவசிய விநியோகங்களை படிப்படியாக நிறுத்தியுள்ளனர். எரெஸ் மற்றும் எரெஸ் மேற்கு எல்லைக் கடப்புப் புள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தெற்கிலிருந்து எந்த அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 7, 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் மக்களை இடம்பெயருமாறு வலியுறுத்தி மூன்று புதுப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.’

அவர் மேலும் கூறுகையில்: ‘கடந்த இரண்டு வாரங்களில், துண்டிக்கப்பட்ட ஜபாலியா பகுதியிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் அதிகரித்த குண்டுவீச்சு மற்றும் போர்ச்சூழலுக்கு மத்தியில் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இராணுவ முற்றுகை ஏற்றுக்கொள்ள முடியாதது. வட காஸாவில் நடைபெறும் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள் தண்ணீர் கிணறுகள், ரொட்டிக்கடைகள், மருத்துவ மையங்கள் மற்றும் தங்குமிடங்களை மூட நிர்ப்பந்தித்துள்ளன. அத்துடன் பாதுகாப்புச் சேவைகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சிகிச்சை மற்றும் தற்காலிகக் கல்வி மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.’”

https://www.wsws.org/ta/articles/2024/10/15/cadk-o15.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.