Jump to content

"ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter."


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter."


"பயங்கரவாதி" என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்றாலும் பலவேளைகளில் சரியான அர்த்தம் இல்லாமலும் பாவிக்கப்படுவதால், அது ஒரு தெளிவான அர்த்தத்தை இன்று இழந்துவிட்டது. "பயங்கரவாத" செயலை வன்முறையின் பயன்பாடு என்று வரையறுப்போம், அங்கு ஒருவர் அநியாயமான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறார். ஒரு அரச இராணுவ நடவடிக்கையின் பொழுது பாவிக்கப்படும்  வன்முறைகள், அப்பாவி பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்களாம் என்று நியாயமாக  எதிர்பார்க்கப்படவில்லை. எனவே, அரச இராணுவ நடவடிக்கைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன. ஒன்று நியாயமான அரச இராணுவ நடவடிக்கை மற்றது அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகள். அதேபோல், கொரில்லா இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கொரில்லா பயங்கரவாத நடவடிக்கைகள் இரண்டும் இருக்கலாம்.


உதாரணமாக, ஒரு நாடு தனது குண்டு வீச்சு விமானங்களை மற்றொரு தேசத்தின் நீர் அமைப்பு அல்லது பிற குடிமக்களின் உள்கட்டமைப்பை அழிக்க அனுப்பினால், இது ஒரு அரசு பயங்கரவாதச் செயலாகும், ஏனெனில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஒரு நாடு தனது குண்டுவீச்சுகளை அதன் எதிரியின் இராணுவ விமானநிலையங்களைத் தாக்க அனுப்பினால், அது ஒரு அரச இராணுவ நடவடிக்கையாக இருக்கும்.


இதேபோல் ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர போராடும் ஒரு குழு, ஒரு வணிக தொகுதியை அல்லது பிற குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தகர்க்க தற்கொலை குண்டுதாரியை அனுப்பினால், இது ஒரு கொரில்லா பயங்கரவாதச் செயலாகும். மாறாக, அத்தகைய குழு இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்காக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு சிறிய படகு ஒன்றை அனுப்பினால், அது ஒரு கெரில்லா இராணுவ நடவடிக்கையாகும். 


ஒரு கெரில்லா குழு, இராணுவ விமானநிலையத்தைத் தாக்கினால் கூட, தளத்தில் இருக்கும் சில பொதுமக்கள் கொல்லப்படலாம் என்று சிலர் சரியாகச் சுட்டிக்காட்டலாம், அது உண்மைதான்.


அதேபோல, ஒரு கெரில்லா குழு ஒரு இராணுவக் கப்பலை வெடிக்கச் செய்யும் பொழுது, கப்பலில் இருக்கும் சில பொதுமக்களையும் கொல்லக்கூடும். எனவே, எல்லா வரையறைகளையும் போலவே, இங்கு நாம் ஒரு தீர்மானம் எடுக்கும் பொழுது கொஞ்சம் பொது அறிவும்  பயன்படுத்தப்பட வேண்டும்.


உதாரணமாக, ஒரு மனிதன் தன் சொந்த வீட்டில் இருக்கிறான், ஆயுதம் ஏந்திய ஒருவன் உள்ளே அனுமதி இன்றி நுழைந்தான், அவன் தற்பாதுகாப்புக்காக தன்னால் தேவையானவற்றை முயல்கிறான், ஊடுருவியவன் அவனை சுட்டுக் கொன்றான், அங்கிருந்த பெண்களை வயது வேறுபாடின்றி பலாத்காரம் செய்தான். அதன் பின்,  அவனுடைய சொத்துக்களை எடுத்துச் சென்றதுடன் அவனுடைய வீட்டிற்கும் தீ வைத்தான். இப்போது சொல்லுங்கள் சுதந்திரப் போராட்ட வீரர் யார்? தீவிரவாதி யார்? இங்கே, வீட்டுச் சொந்தக்காரனும் பெண்ணையும் உடைமையையும் பாதுகாக்க முயன்றவனும், ஊடுருவும் நபரை தடுத்தவனும் உண்மையில் சுதந்திரப் போராட்ட வீரன் ஆகும். அதேபோல, வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்து, ஆணைக் கொன்று, பெண்ணைப் பலாத்காரம் செய்து, சொத்தை எடுத்துச் சென்றவனே பயங்கரவாதி ஆகும்.


செப்டம்பர் 11 அன்று மன்ஹாட்டன் மற்றும் பென்டகன் மீதான கமிக்காசே [kamikaze / தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும்] விமானிகள் தாக்குதல்கள் சுமார் 3,000 பேரைக் கொன்ற பிறகு, அமெரிக்கா பல்வேறு தொடர்பற்ற குழுக்களின் பட்டியலை மீண்டும் பயங்கரவாத குழுவாக வலியுறுத்தியது. " இந்த அமெரிக்காவின் அவசரமான குறுகிய வரையறை அரசியல் சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டங்களுக்கும்,  பயங்கரவாத வன்முறைக்கும் இடையிலான வேறுபாடுகளை அழித்துவிட்டது என்று சொல்லலாம். 


"நோபல் பரிசு வென்ற யாசர் அராபத், 1973ல் சூடானில் அமெரிக்கத் தூதர் கிளியோ நோயல் [Cleo Noel] படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது பாலஸ்தீன விடுதலை நிறுவனம், போரில் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் ஒரு குடைக் குழுவுமாகும். 


நெல்சன் மண்டேலா மற்றொரு நோபல் பரிசு வென்றவர். மதிய உணவு கவுண்டர்களில் அமர்ந்ததற்காக ராபன் தீவில் [Robben Island] ஆயுள் தண்டனை பெறவில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பயங்கரவாதத்தை திட்டமிட்டதற்காகவே ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.


செப்டம்பர் 11 க்குப் பிறகு, சார்பு இல்லாத அரசியல் தன்மை அல்லது அரசியல் நேர்மை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது, பயங்கரவாதிகளுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராளிகளாக இருக்கும் துணிச்சலான விடுதலைப் போராளிகளுக்கும் இடையே எங்கு கோடு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும் இன்று கடினமாகப் போய்விட்டது. 


உலகின் பல நாடுகள் நீண்ட விடுதலைக்கான போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளதுடன் மேலும் பயங்கரவாதிக்கும் சுதந்திரப் போராட்ட வீரருக்கும் உள்ள வித்தியாசம் முற்றிலும் ஒரு உணர்வின் விடயம் என்று பல பண்டிதர்கள் இன்று வலியுறுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நம் ஆள் போரில் கொல்லும் போது, அவன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனாகிறான்; அதே மாதிரி, நமது எதிரி அதே வேலை செய்யும் போது, அவன் ஒரு பயங்கரவாதி ஆகிறான். அதாவது, இதே போன்ற செயல்கள் யார் யார் முத்திரை குத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு முத்திரைகளைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை. 9/11 க்குப் பிறகு, வன்முறை பிரிவினைவாதிகளுக்கு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களிடம் இருந்து அவர்களின்  அனுதாபத்தை இழந்துவிட்டன. எனவே சுருக்கமாக கூறின் ஒரு பயங்கரவாதி அல்லது அவனின் இயக்கம் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதில் வெற்றி பெறும் வரை பயங்கரவாதியாகவே தொடர்கிறான், என்றாலும் அதே நேரத்தில், அவன் வெற்றிக் கொள்ளும் பொழுது  அவன் ஒரு சுதந்திரப் போராளி என்று போற்றப்படுகிறான் என்பதே உண்மை. உதாரணம் ஆங் சான் சூகியும் தலாய் லாமாவும் [Aung San Suu Kyi and the Dalai Lama] பயங்கரவாதிகள் அல்ல என்பதை உலகம் மிகத் தெளிவாக இன்று ஒப்புக்கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 


ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம், ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன் மற்றும் பிரான்சிஸ் மரியன் [George Washington, Benjamin Franklin,Thomas Jefferson and Francis Marion] ஆகியோரையும் அதே தூரிகையால் தூற்றியது ஒரு வரலாற்று உதாரணம் ஆகும். உண்மையில், 1776 இல், அமெரிக்கப் புரட்சியின் ஐம்பத்தாறு தலைவர்களும் அதேவாறு முத்திரை குத்தப்பட்டனர், மேலும் பிரிட்டன் அவர்களை உயிருடனோ அல்லது உயிரற்று பிடிக்க விரும்பியது. அவர்களின் குற்றம்: அவர்கள் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர் என்பதே ஆகும். 


பகத் சிங் [Bhagat Singh] இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறந்த உண்மையான சிப்பாய் மற்றும் அவனது தாய்நாட்டின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக அவன் பயமின்றி உக்கிரமாக  போராடினான், உண்மையில் இது எந்தவொரு உண்மையின் குடிமகனின் அடிப்படை உரிமையும் [fundamental right of every citizen of any country] ஆகும்.  


இருப்பினும், பயங்கரவாதத்தின் நவீன வரையறையை கண்டிப்பாகப், உறுதியாக  பயன்படுத்தினால், பகத் சிங்கும் ஒரு பயங்கரவாதியாக இருப்பான், அதே போல், சுபாஷ் சந்தர் போஸ் & மகாத்மா காந்தியும் கூட பயங்கரவாதிகளே. என்றாலும் அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது மனித வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வும் அல்ல. அதுமட்டும் அல்ல, பிராமணிய ரிக் வேதமும் மற்றும் சில புராண கதைகளும் இதற்கு இன்னும் ஒரு உதாரணமாகும். 


“வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்” / மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6


இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும். / மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 


மேலும் ஒரு அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது மனித வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வு அல்ல என்பது மிக தெளிவாக, கிருஸ்துக்கு முற்பட்ட ரிக் வேதத்தில் மேலே பார்த்தோம். அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஜேக்கபின் எதிர்ப்பு குழுக்களுக்கு [French Anti-Jacobin groups] எதிராக முதன் முதலில் அப்படியான ஒன்று பயன்படுத்தப்பட்டதிலிருந்து, எதிர்ப்பாளர்களில் சிலர் எந்த வன்முறைச் செயல்களையும் செய்யாவிட்டாலும் கூட, அதிருப்தியாளர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது பல உலக நாடுகளில் மிகவும் பொதுவானதாகிவிட்டது என்பதை அறிய முடிகிறது.


உதாரணமாக நாஜி மூன்றாம் ரைச் [The Nazi Third Reich] தனது எதிர்ப்பாளர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்தது; அதேபோல, ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர இயக்கம் பயங்கரவாதம் என்று அன்று வரையறுக்கப் பட்டது; தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக உரிமைக்காக  சமத்துவத்திற்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப் பட்டனர்.


உதாரணமாக பெண்களின் வாக்குரிமை, அடிமைத்தனம், காலனித்துவத்தின் முடிவு என எதுவாக எடுத்துக் கொண்டாலும், மனித வரலாற்றில் எந்தவிதமான முக்கியத்துவம் வாய்ந்த சமூக மாற்றமும் எந்த வன்முறையும் இன்றி நிகழ்ந்ததில்லை என்ற உண்மையை இந்தச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எனோ எதோ என்று கவனிக்கவில்லை. இந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது இந்த இயக்கங்கள் அனைத்தும் 'பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும்.


மேலும் அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கூட 'பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் அன்று இல்லை என்றால் இன்னும் பெண்களின் வாக்குரிமை, அடிமைத்தனம், காலனித்துவத்தின் முடிவு ஒன்றுமே நடந்து இருக்காது.


உண்மையில்  விமானத்தைக் கடத்துவது, அல்லது வங்கியை பணயம் வைப்பது, அல்லது டோக்கியோவின் சுரங்கப்பாதைகளில் ‘பயோ-கேஸ்’ [‘bio-gas’] பயன்படுத்தும் மதவாதிகள், கட்டாயம்  ‘பயங்கரவாதத்தின்’ வெளிப்படையான செயல்கள் ஆகும். எனவே  அவை போன்றவற்றைக் கடுமையாக கையாள வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  


அதேபோன்று, குடிமக்கள் மீது குண்டுகளை வீசி, அவர்களின்  பாதுகாப்புப் படைகளை அல்லது உரிமைக்கான போராட்ட வீரர்களை  சித்திரவதை செய்வது, பெண்களை பாலியல் வல்லுறவு அல்லது மானபங்கம் செய்வது மற்றும் தண்டனையின்றி வேண்டு என்று மிலேச்சத்தனமான கொல்லுவது அல்லது வலிந்து காணாமல் ஆக்குவது போன்ற செயல்களை செய்யும், செய்த அந்த ஆட்சிகளும் ‘பயங்கரவாதத்திற்காக’ தண்டிக்கப்பட வேண்டும். 


ஆனாலும் அது நடைபெறுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியே. உதாரணம் இலங்கை அரசு இன்னும் தமிழ் ஆயுத குழுக்களுக்கு எதிரான பல தசாப்த கால உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து, இலங்கை தனது 22 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய இராணுவத்தை பராமரித்து வருகிறது மட்டும் அல்ல, அவை வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதுடன், அது இன்னும் ஐக்கிய நாடு சபையின் 'பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் மொத்த மனித உரிமை மீறல்களில் பாதுகாப்புப் படைகளின் பங்கை ஒப்புக் கொள்ள வேண்டும்' என்ற தீர்மானத்தை ஒப்புக் கொள்ளாமலும் அதற்கு ஒரு தீர்வை உள்நாட்டில் கூட காணாமலும் இழுத்தடிப்பதைக் கூறலாம்.

"மனதில் உறுதி கொண்ட மக்களை
சினந்து குருதி கொள்ள நினைப்பதும்
ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும்
மானமாய் வாழ விடாது தடுப்பதும்
தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும்
வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும்
ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும்
இனப் படுகொலை! இனப்  படுகொலை!"


"விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை
படுகொலை  செய்து குழியில் புதைப்பதும்
நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும்
ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும்
வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும்
மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும்
கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும்
படுகொலை!அது  இனப்  படுகொலை!!"


"கலை வளர்க்க தடை போட்டு
அலை அலையாய் ஆமி போட்டு
விலை பேசி சிலரை வாங்கி
உலை வைக்கும் மந்தரை கெடுத்து
சிலை சிலையாய் மக்களை மாற்றி
இலை துளிராது  வேரையே வெட்டி
தலை நிமிரா நெருக்களை கொடுத்து
கொலை செய்வது  இனப் படுகொலை!!!" 


"இன்று என் வாழ்வின் பெருமைமிகு நாள்.  அடிமைப்பட்ட மக்களுக்கு, விடுதலைப் படையின் முதல் சிப்பாய் என்பதை விட பெரிய பெருமை, உயர்ந்த மரியாதை எதுவும் இருக்க முடியாது. ஆனால் இந்த மரியாதையை அதற்கேற்ப பொறுப்புடன் உள்ளது என்பதை நான் ஆழமாக உணர்ந்திருக்கிறேன். இருளிலும் சூரிய ஒளியிலும், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் வெற்றியிலும் நான் உங்களுடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.


தற்போதைக்கு, பசி, தாகம், ஏழ்மை, கட்டாய அணிவகுப்பு மற்றும் மரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. ஆனால் வாழ்விலும் மரணத்திலும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்தால், நான் உறுதியாக நம்புவது போல், நான் உங்களை வெற்றிக்கும் சுதந்திரத்திற்கும் அழைத்துச் செல்வேன். இந்தியாவை சுதந்திரமாகப் பார்க்க நம்மில் யார் வாழ்ந்தாலும் பரவாயில்லை. இந்தியா சுதந்திரமாக இருந்தால் போதும், அவளை விடுதலை செய்ய நம் அனைத்தையும் கொடுப்போம். கடவுள் இப்போது நம் இராணுவத்தை ஆசீர்வதித்து, வரவிருக்கும் போரில் எங்களுக்கு வெற்றியைத் தரட்டும்."-- சுபாஷ் சந்திர போஸ் ஜூலை 5, 1943 அன்று சிங்கப்பூரில் நடந்த ஐஎன்ஏ [இந்திய தேசிய ராணுவம் / INA] அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த பிறகு பேசிய பேச்சே இது. இது உண்மையான சுதந்திர வீரனை படம் பிடித்துக் காட்டுகிறது! பயங்கரவாதியை அல்ல !!


நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


Terrorist" is a word used so often and so loosely that it has lost a clear meaning. Let's define a "terrorist" action as the use of violence where one would reasonably expect harm to innocent civilians.This is to be distinguished from a "military" action, where the use of violence is not reasonably expected to harm innocent civilians. Hence, we can have both state military actions and state terrorist actions. Likewise, there can be both guerrilla military actions and guerrilla terrorist actions.


If a country sends its bombers to destroy the water system or other civilian infrastructure of another nation, this would be a state act of terrorism,because harm to civilians would reasonably be expected to result. On the other hand,if a country sends its bombers to attack military airfields of its enemy, that would be a state military action.


Similarly: if a group fighting to overthrow a government or end an occupation by a foreign power sends a suicide bomber to blow up a shopping centre or other civilian infrastructure,this would be a guerrilla act of terrorism.In contrast, if such a group sends a small boat filled with explosives to blow up a military vessel, that would be a guerrilla military action.


Some may correctly point out that even striking a military airfield may kill some civilians who happen to be on the base,and that is true. But similarly,a guerrilla group blowing up a military vessel may also kill some civilians who happen to be on board. As with all definitions,a bit of common sense has to be applied.


Let say, A man is in his own home,an armed intruder enters, he tries to defend,the intruder shoots him,rape his females and walk away with his property and set his home on fire. Now who is the freedom fighter and who is the terrorist. The freedom fighter is the man who owns the home,protect the female and property and fend off the intruder. The terrorist is the man who enters the home, kill the man, rape the females and walk away with the property.


After kamikaze assaults on Manhattan and the Pentagon on September 11 killed about 3,000 people, the U.S. reiterated its list of various unrelated groups which Washington described as terrorist organizations. "This narrow definition has erased the distinctions between genuine struggles for political independence and terrorist violence.


"Nobel Prize winner Yasser Arafat has been charged in the cold-blooded assassination of U.S. Ambassador Cleo Noel in the Sudan in 1973. His PLO is an umbrella group embracing organizations for whom the weapon of choice in the war against Israel is terror.


Nelson Mandela, another Nobel Peace Prize winner, did not get life imprisonment on Robben Island for sitting in at lunch counters, but for plotting terror to overthrow the regime.


Though political correctness seems to be on the wane after September 11, It is hard, we are then told, to know exactly where the line exists between terrorists and the brave would-be liberators of oppressed people–freedom fighters.


Besides, many nations in the world have come into existence after lengthy struggles for liberation. Many pundits assert that the difference between a terrorist and a freedom fighter is purely a matter of perception.


When our guy kills in battle, he’s a freedom fighter; when our enemy does, he is a terrorist. Similar acts get different labels depending on who is doing the labeling. Post-9/11, governments across the world lost sympathy for violent separatist movements. In short, a terrorist is a terrorist right up till he succeeds in creating an independent country, at which point he is hailed as a freedom fighter. The world very clearly acknowledges that Aung San Suu Kyi and the Dalai Lama are not terrorists but are agitating for legitimate causes.


The government of the United Kingdom, had also smeared George Washington, Benjamin Franklin,Thomas Jefferson and Francis Marion, with the same brush. In fact, back in 1776,all fifty-six leaders of the American Revolution were branded, and Britain wanted them ‘dead or alive.’ Their crime: they signed the American Declaration of Independence.


Bhagat Singh was a great soldier of India's freedom struggle and his fight was to restore the freedom of his mother land, which is the fundamental right of every citizen of any country.


However, if the modern definition of terrorism were to be strictly applied, Bhagat Singh too would be a terrorist,Similarly, Subhash Chandra Bose & Mahatma Gandhi too.


Branding those who challenge authority, as ‘terrorists’ is not a new phenomenon in human history. Ever since its first usage against the French Anti-Jacobin groups in the eighteenth century,it had become increasingly more common for states to brand dissidents as ‘terrorists’, even when some of the dissidents had not committed any acts of violence.


The Nazi Third Reich called its dissenters terrorists; to the British the Indian Freedom Movement was terrorism; to the Apartheid regime of South Africa those who fought for equality as human beings were terrorists.


The framers of this piece of legislation have tragically overlooked the fact that no social change of any significance has ever taken place in human history without some violence – be it the women’s right to vote, the end of slavery,or the end of colonialism.


If this law was in place then all these movements would have been labeled as ‘terrorism’, and the leaders, and even their supporters, would have been charged as ‘terrorists.’


Some, such as hijacking a plane, or holding up a bank, or cultists using ‘bio-gas’ in the subways of Tokyo, are obvious acts of ‘terrorism’ and should be dealt as such. Similarly, those regimes that bomb civilians and direct their security forces to torture, rape and kill with impunity, should also be punished for ‘terrorism.’


"I have said that today is the proudest day of my life.For an enslaved people,there can be no greater pride,no higher honour, than to be the first Soldier in the Army of Liberation.


But this honour carries with it a corresponding responsibility and I am deeply conscious of it. I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory. For the present, I can offer you nothing except hunger, thirst, privation, forced marches and death. But if you follow me in life and in death, as I am confident you will, I shall lead you to victory and freedom.It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free. May God now bless our Army and grant us victory in the coming fight." -- Subhas Chandra Bose After reviewing INA parade at Singapore on July the 5th, 1943.


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

464198276_10226647340272456_8442939477002701518_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=CZ3DGqtE-yQQ7kNvgEBhaAu&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ACm_FHWi3bP8jIr4mXU54jh&oh=00_AYBpOtrlAhhXI1k2hG6BovjJ3naJ99MFFkvwgRew3aT8HA&oe=671BB8C4

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன். ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டெட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வாய்ந்த கணினி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மலிவாகச் செய்யக்கூடிய ஒரு செயல்முறை இல்லை. இதைப் பயன்படுத்த நானோ, அல்லது நேற்று என்னுடன் பேசிய யாருமே இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை. இந்தச் செயலியை உலகம் முழுவதும் 300 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியென்றால், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? வணிகக் கணக்குகளின் மூலம் வருமானம் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ உள்ளதால் இது சாத்தியம் ஆகிறது. என்னுடையது போன்ற தனிநபர் வாட்ஸ்ஆப் கணக்குகள் இலவசமானவை. ஏனெனில், என்னைப்போன்ற தனி நபர்களுடன் பேச விரும்பும் வணிகக் கணக்குகளிடமிருந்து வாட்ஸ்ஆப் கட்டணம் வசூலிக்கிறது. கடந்த ஆண்டு முதல், இந்த நிறுவனங்கள் இலவசமாக வாட்ஸ்ஆப் சேனல்களைத் துவங்கி, அவற்றுக்கு ‘சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்குச்’ செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு குறைவாக இருந்தாலும், இந்தியாவின் பெங்களூரு போன்ற நகரங்களில் பேருந்துப் பயணச்சீட்டு, பேருந்தில் விருப்பப்பட்ட இருக்கை என எல்லாவற்றையுமே வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.   பட மூலாதாரம்,META படக்குறிப்பு, மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன் ‘அனைத்தும் ஒரே Chat-இல்’ “ஒரு வாட்ஸ்ஆப் சாட்டின் (chat) மூலம் ஒரு வணிக நிறுவனமும் அதன் வாடிக்கையாளரும் அவர்களுக்குத் தேவையான வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன். “அதாவது, உங்களுக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் துவங்கவோ, பணம் செலுத்தவோ, ஒரு சாட்-ஐ விட்டு வெளியே செல்லாமலேயே செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அவரவர் வாழ்க்கையின் மற்ற உரையாடல்களை கவனித்துக் கொள்ளலாம்,” என்கிறார். "ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்பவர்களுக்கு நேரடியாக தனிப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மட்டுமே பல கோடி டாலர்களை இந்தச் செயலி ஈட்டுகிறது," என்கிறார் நிகிலா ஸ்ரீநிவாசன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும் சிக்னல், ஸ்னாப்சாட் ஆகியவை என்ன செய்கின்றன? மற்ற மெசேஜிங் செயலிகள் வேறு வழிகளில் செயல்படுகின்றன. உதாரணமாக ‘சிக்னல்’ செயலியின் பாதுகாப்பு வழிமுறைகள் பெரிதும் அறியப்பட்டவை. இவை தொழில்முறையில் நேர்த்தியானவை. ஆனால் இது லாப நோக்கமற்ற அமைப்பு. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து எந்தக் நிதியும் பெறுவதில்லை என்று கூறுகிறது.(ஆனால், டெலிகிராம் செயலி முதலீட்டார்களிடம் இருந்து வரும் நிதியை எதிர்பார்த்து இருக்கிறது.) மாறாக, சிக்னல் செயலி நன்கொடைகளின் மூலம் செயல்படுகிறது. இதில், 2018-ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்-இன் துணை நிறுவனர்களில் ஒருவரான ரையன் ஆக்டன் வழங்கிய 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 420 கோடி ரூபாய்) நிதியும் அடங்கும். “எங்களது நோக்கமே, சிக்னலின் மீது அக்கறை உள்ள சிறிய நன்கொடையாளர்கள் கொடுக்கும் பங்களிப்புகளைக் கொண்டு முழுமையாகச் செயல்படுவதே,” என்று கடந்த ஆண்டு தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டார் சிக்னல் நிறுவனத்தின் தலைவர் மெரிடித் விட்டேக்கர். கேம் விளையாடும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசெஜிங் செயலி ‘டிஸ்கார்ட்’. இதை இலவசமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் சிறப்பம்சங்களைப் பெற, சில ‘கேம்’களை விளையாடப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் இது ‘நைட்ரோ’ (Nitro) என்னும் சந்தா வசதியையும் வழங்குகிறது. இதில் மாதம் 9.99 டாலர்களைச் செலுத்தி (இந்திய மதிப்பில் சுமார் 840 ரூபாய்) உயர் தர வீடியோக்களையும், நமக்கேற்ற எமோஜிக்களையும் பெறலாம். ‘ஸ்னாப்சாட்’ செயலியின் நிறுவனமான ‘ஸ்னாப்’, இந்த வழிமுறைகளில் பலவற்றை ஒருசேரப் பயன்படுத்துகிறது. இதில் விளம்பரங்கள் உள்ளன, இதற்கு 1.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் (ஆகஸ்ட் 2024-இன் படி). மேலும் இது மெய்நிகர் கண்ணாடிகளை (augmented reality glasses) ஸ்னாப்சாட் ஸ்பேக்டகல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இதனிடம் மேலும் ஒரு தந்திரம் உள்ளது. ஃபோர்ப்ஸ் வலைதளத்தின் அறிக்கைபடி 2016-2023 ஆண்டுகளில், இந்த நிறுவனம் கிட்டதட்ட 300 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய்) வட்டியின் மூலம் மட்டுமே சம்பாதித்துள்ளது. ஆனால், இதன் முக்கிய வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 33,600 கோடி ரூபாய்) ஈட்டுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) உள்ளது விளம்பரங்கள் எப்படி அனுப்பப் படுகின்றன? பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமான எலிமெண்ட் அதனுடைய பாதுகாக்கப்பட்டத் தகவல் பரிமாற்றச் செயலியைப் பயன்படுத்த அரசாங்கங்களிடமும், பெரிய நிறுவனங்களிடமும் பணம் வசூலிக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்கள் தனிப்பட்ட சர்வர்களில் பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகள் முன் துவங்கப்பட இந்த நிறுவனம், தற்பொழுது ‘பல கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது’ என்றும் ‘லாபம் அடையும் நிலையை நெருங்குகிறது’ என்றும் அதன் இணை நிறுவனர் மேத்தியூ ஹாஜ்சன் என்னிடம் கூறினார். விளம்பரங்கள் மூலமே ஒரு வெற்றிகரமான தகவல் பரிமாற்று செயலியை இயக்க முடியும் என்று அவர் நம்புகிறார். “பெரும்பாலான மெசேஜிங் செயலிகளில் ஒருவர் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று ஆராய்ந்த பிறகே அவர்களுக்கு ஏற்றார் போல விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன,” என்கிறார் அவர். ‘என்கிரிப்ஷன்’ பாதுகாப்பு, அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பது ஆகியவை இருந்தாலும், இந்தச் செயலிகள் பயனர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களது மெசேஜ்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது தரவுகளை (டேட்டா) வைத்தே விளம்பரங்களை விற்கலாம். “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள்தான் விற்கப்படுகிறீர்கள்,” என்கிறார் ஹாட்சன். https://www.bbc.com/tamil/articles/ce9jklp74evo
    • இலங்கை தமிழ் அரசு கட்சி தனி நபரின் கம்பனியாக மாறிவிட்டது - கே.வி.தவராசா  ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், 16 ஆண்டுகள் தமிழரசு கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் ஆஜராகியுள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறியிருக்கிறது. அந்த நபர் இவ்வாறு சர்வாதிகாரம் மிக்க நிலையில் செயற்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் காரணமாக உள்ளனர். கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கிறார்.  கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தமிழ் தேசியம் தான் எமது தமிழ் அரசு கட்சியின் தாரக மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை. கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன்.  நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர், பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகுகிறார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார். ஆனால், அவருக்கான பதவி மறுக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் அவர்கள் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும்போது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.  https://www.virakesari.lk/article/196778
    • இந்தியாவை நாறடிக்காமல் விடமாட்டானுக. 🤣
    • ""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது.  பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை.  "குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "? 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.