Jump to content

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? ஓர் அலசல்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை என்ன?- ஓர் அலசல்

மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தீப் ராய்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுக்கமாக இருந்த இந்தியா - சீனா உறவுகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது இளகியது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர்.

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரு தலைவர்களும், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை வரவேற்றனர்.

'எல்லையில் அமைதியைப் பேணுவதே' முன்னுரிமை என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என மோதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

"இரு நாட்டு மக்களும் மற்றும் உலக மக்களும் நமது சந்திப்பை மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர், பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்" என்று ஷி ஜின்பிங் கூறினார்.

 
 

2020-ஆம் ஆண்டில், கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவுகள் நீடித்து வந்தன.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைப்பதற்காக மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) குறித்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை திங்கட்கிழமை அன்று இந்தியா அறிவித்தது.

சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் எனும் செய்தித்தாள், "இது இந்தியா- சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான முக்கியமான வாய்ப்பு, இதனை வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

இந்தியா- சீனா உறவுகளை நெருக்கமாகக் கவனித்து வரும் ஆய்வாளர்கள், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய படி என்று கருதுகின்றனர்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு எவ்வளவு முக்கியமானது?

கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கசப்பாக இருந்த நிலையில், இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ஒரு வாரத்துக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சந்திப்பு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. லடாக் எல்லையில் ராணுவ விலகல் குறித்து இரு நாடுகளும் அறிவித்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

லடாக் எல்லையில் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்திருந்தால், எல்லையில் வீரர்கள் இரு தரப்பில் நின்று கொண்டிருக்கும் போது சந்திப்பு நடக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கும். இதை வைத்து பார்க்கும்போது இதுவொரு முக்கிய சந்திப்பு” என்றார்.

சில ஆய்வாளர்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தையும், சீனாவை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டுவந்ததையும் இந்தியாவின் 'பெரிய வெற்றியாக' பார்க்கின்றனர்.

புது டெல்லியை தளமாகக் கொண்ட ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி. பண்ட், "இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மிகவும் முக்கியமானது", என்கிறார்.

"இது இந்தியாவின் பெரிய வெற்றி. இந்தியா நான்கு ஆண்டுகளாக ஒரு பெரிய சக்திக்கு எதிராக நின்று, எல்லையில் சூழ்நிலை இயல்பாகும் வரை மற்ற விவகாரங்களில் இயல்பு நிலை இருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறியது. சமீபத்திய ஒப்பந்தத்தில் சீனா இதை ஏற்றுக்கொண்டது" என பிபிசியிடம் கூறினார்

"பரஸ்பர மரியாதை இல்லாவிட்டால் பரஸ்பர உறவுகள் முன்னேற முடியாது என பிரதமர் மோதி கூறியுள்ளார். நிச்சயமாக ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சீனா தனது அணுகுமுறையை ஓரளவு மாற்றிக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இந்தச் சந்திப்பிலிருந்து வெளிப்படும் செய்தி இதுதான் என நான் நினைக்கிறேன்" என்கிறார்

எனினும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், ''இந்தச் சந்திப்பின் மூலம் சில எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும், ஆனால் இதன் மூலம் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று புரிந்துகொள்ளக்கூடாது." என்கிறார்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,X/NARENDRAMODI

படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இரு நாட்டு உறவில் பொருளாதார அழுத்தங்களின் பங்கு

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இது பொருளாதார நலன்களை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என்றாலும், உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதில் இரு தரப்பினருக்கும் பொருளாதார நலன்கள் உள்ளன.

வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கியமான விவகாரமாக இருந்து வருகிறது.

ராஜன் குமார் கூறுகையில், "நாம் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா விரும்புகிறது." என்றார்.

2023ல் இரு நாடுகளுக்கிடையே 136 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இது மட்டுமல்ல, அமெரிக்காவை முந்தி சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது.

ஆனால் கடந்த சில காலமாக சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது. மறுபுறம், பதற்றம் காரணமாக இந்தியாவில் சீனாவின் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு பெருமளவிலான மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "இரு நாடுகளும் பொருளாதார உறவுகள் இயல்பாக இருக்க வேண்டும் என விரும்பின. வர்த்தகம் தொடர்ந்தாலும், சீன முதலீட்டில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கியது. இதனால் சீனாவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாகிவிட்டது."

அவரது கூற்றுப்படி, "முதலீடு குறைந்தது மட்டுமல்லாமல், முக்கியமான உள்கட்டமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்தும் சீனா வெளியேறியது. 2020க்கு முன்பு, சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே இந்தியாவில் 5ஜி விரிவாக்கத்தில் பங்கேற்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் சர்ச்சைக்குப் பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லை"

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம்

தற்போது சீனாவின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை என்றும், இந்தியா போன்ற சந்தைகளில் தொடர்ந்து இடம்பெற அது நிச்சயமாக விரும்பும் என்றும் பேராசிரியர் பண்ட் கூறுகிறார்.

ஆனால் அரசின் நிலைப்பாட்டால் இந்திய தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "அரசாங்கத்தின் நிலைப்பாட்டால், இந்திய தொழில்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. சீனாவுடனான உறவுகள் சற்று இயல்பானால் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்று இந்திய தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது" என்றார்.

அதாவது, உறவுகள் இயல்பானால் இரு தரப்பினரின் வணிகமும் மீண்டும் சீராகும் என்ற விருப்பம் இரு தரப்பிலும் இருந்து வருகிறது.

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராகியுள்ளது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப மற்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தடுப்பை உருவாக்க விரும்புகிறது என்றும் கூறுகிறார்.

ஷி ஜின்பிங் மற்றும் மோதி இடையேயான சந்திப்புக்குப் பிறகு, சீனா தனது அறிக்கையில், "பல சக்திவாய்ந்த நாடுகளை கொண்ட பலதுருவ உலகம்" பற்றி பேசியுள்ளது என்றாலும், எந்தவொரு ராணுவக் குழுவிலும் சேராது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

பேராசிரியர் பண்ட் கூறுகிறார், "பல துருவ உலகம் என்றுதான் சீனா பேசுகிறது. ஏனென்றால் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. ஆனால் சீனா பல துருவ ஆசியா பற்றி பேசவில்லை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவை இரண்டாம் சக்தியாக மாற்ற அது தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளது."

"சீனாவின் அணுகுமுறை மூர்க்கதனமாக இருந்தால், அது இந்தியாவுடனான உறவுகளை மதிக்கவில்லை என்றால், இந்தியா மற்ற நாடுகளுடன் உறவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். இந்தியாவுடன் எத்தகைய உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது சீனாவைப் பொறுத்தது" என்றும் அவர் கூறினார்.

 
மோதி -ஷி ஜின்பிங், இந்தியா - சீனா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் மோதி மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்துகொண்டனர்.

மற்ற பிரச்னைகளில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள சர்ச்சை மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பற்றியது மட்டுமில்லை.

“இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் பேராசிரியர் பண்ட்.

உண்மையில், சீனா இந்தியப் பகுதிக்கும், அருணாச்சல பிரதேசத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது.

பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாகப் பார்க்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. பாகிஸ்தானை பயன்படுத்தி அல்லது இந்தியப் பெருங்கடலில் இருதரப்பு சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அல்லது இந்தியாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சேர அனுமதிக்காமல் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சீனா இந்தியாவை இரண்டாம் நிலையில் உள்ள நாடாக முன்னிறுத்த முயன்றது” என்றார்.

மேற்கொண்டு பேசிய அவர், “இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது என்றோ அல்லது சீனாவின் தரப்பில் ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவோ இந்தியா எந்த மாயையையும் கொண்டிருக்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.

அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துவது குறித்து ராஜன் குமார் எச்சரிக்கிறார். அவர், “அருணாச்சல பிரதேசத்திற்கும் பூட்டானுக்கும் இடையே நடக்கும் ரோந்து எப்போதும் மோதலாகவே இருக்கும் என்பதால், எல்லைப் பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனா தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் உள்கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது,” என்று கூறினார்.

“தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது, அது நீண்டதூரம் செல்லக்கூடும்,” என்றும் முனைவர் ராஜன் குமார் கூறுகிறார்.

மேலும் பேராசிரியர் பண்ட் கூறுவது போல், “மெய்யான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் குறைந்ததால், இரு நாடுகளுக்கும் தேவைப்படும் வர்த்தகத்திலும் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்”.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஆட்சி வந்த பின்னர் இந்திய அரசு பெருமளவில் military logistic முதலீடு செய்வதுடன் அதன் படைப்பலத்தினை அதிகரித்து வருகின்றது, ஆயினும் போர் என வந்தால் இந்தியா தோல்வியினை சந்திக்கும் நிலைதான் காணப்படுகிறது (படை வலுச்சமனிலையற்ற நிலையில் உள்ளது), இதனாலேயே பல சீண்டும் சீன செயல்களுக்கு இந்தியா அமைதியாக உள்ளது, சீனா வலிந்து ஓர் போர் ஒன்றினை நடத்தினால் இந்தியா வேறு வழியின்றி போருக்கு செல்ல வேண்டிய நிலை கருதியே பாதுகாப்பு செலவினை இந்தியா அதிகரித்து, போரினால் ஏற்படும் பெருமளவிலான நில இழப்பினை தவிர்க்க முற்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறான அமைதி பேச்சுவார்த்தை முயற்சி என்பது இந்தியாவிற்கு மாபெரும் வெற்றியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா – சீனா

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா கடந்த அக். 22-ம் தேதி அறிவித்தது. இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் (அக். 23) நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் உறுதிபூண்டனர். தற்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/311153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு

image

லோகன் பரமசாமி

மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர்.

பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன. 

அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. 

இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும்  கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள். 

இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது.

ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும்  முறுகல் நிலையிலேயே இருந்தன.

இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன.  கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும்  இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார். 

இதனைத்தொடர்ந்து  இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன்  நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும்  தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது.

இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர். 

அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார். 

இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது. 

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார்.

அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும்  தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர். 

அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி  கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு  ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது. 

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட  நாடுகளில் சீனா உள்ளது.

சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து  இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது. 

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது. 

ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில்  இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும்  மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.  

https://www.virakesari.lk/article/197258

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........!   😂
    • வலிமையான எதிரிகளோடு மோதி வெல்வாரா விஜய்? -சாவித்திரி கண்ணன்   மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்; இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை சிறப்பாகவே வெளிப்படுத்திவிட்டார். விஜய்க்கு இருக்கும் இந்த தெளிவுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட விதை தான் அடிப்படையாக இருக்க முடியும். இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்த சாயலில் அவர் படமெடுத்தவர். அந்த வகையிலும், ஒரு பெரும் திரைக் கலைஞன் என்ற வகையிலும் அரசியலைப் பற்றிய அடிப்படை புரிதல்களை விஜய் பெற்றுள்ளவர் தான் என்பது அவருடைய இன்றைய கன்னிப் பேச்சில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. விஜய்யின் 50 நிமிட பேச்சில் தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. மிகைப்படுத்தப்பட்ட  பிம்பங்களையோ, வாக்குறுதிகளையோ அவர் தரவில்லை. அலங்காரச் சொல் பிரயோகங்கள் எதுமில்லை. பெரியாரையும், காமராஜரையும், அம்பேத்கரையும், வேலு நாச்சியாரையும், அஞ்சலை அம்மாளையும் தங்கள் முன்னோடியாக ஏன் கருதுகிறோம் என்பதற்கு அவர் தந்த விளக்கங்களையே அவரது கொள்கை அறிவிப்பாக நாம் கருதலாம். தன்னுடைய கொள்கைகள் யாரது எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் பெற்றுத் தரும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அனைவரும் சமம், அனைவருக்குமான வாய்ப்பு, மதச்சாரபற்ற  கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் பண்பாடு என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார். அடுத்ததாக அவருடைய நெருங்கிய அரசியல் சகாக்களாக இன்று வெளிப்பட்டவர்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்களோ, புகழ் பெற்றவர்களோ, அறிவுத் தளத்தில் அறியப்பட்ட பிரபலங்களோ அல்ல, மிக சாதாரண நடுத்தர பிரிவினர், அசல் தமிழர்கள்! தலைவரைப் பற்றி மிகைப்பட புகழ்ந்து பேசுதல், மிகப் பெரிய பிம்பங்களை அவர்களைக் கொண்டு தன்னைக் குறித்து கட்டமைத்தல் ஆகியவற்றை விஜய் செய்யவில்லை. அந்த வகையிலும் இந்த மாநாடு கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து பேச்சாளர்களும் கொள்கை சார்ந்தே பேசினர். அதுவும் மிக அளவானவர்களே பேசினர். அவர்களே, இவர்களே என்று பேசிச் செல்லும் புகழ்ச்சி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நேரடியாக மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளுக்கு வந்தது சிறப்பு தான்! பொன்னாடை அணிவிக்கும் பன்னாடை கலாச்சாரத்திற்கும் , தோள் தாங்க முடியாத பெரிய மலர் மாலைகளை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவ்வளவு மாவட்ட செயலாளர்களும் பொன்னாடைகளையும், மலர் மாலைகளையும் வாங்கி வந்து வரிசையில் நின்று போட்டு போட்டோவுக்கு போஸும் தந்திருப்பார்கள். அதற்கே ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். வெற்றிக் கழகம் என்ற பெயருக்கேற்ப வெள்ளியில் வீரவாள் பரிசளிக்கப்பட்டிருக்கலாமோ, என்னவோ. ஆயினும், இது ஆடம்பரம் மட்டுமல்ல, வாள் என்பது வன்முறையை நினைவூட்டத்தக்கது என்பதால், அதை தவிர்த்திருக்கலாம். நிழ்ச்சியை அதிகமாக வளர்த்துச் செல்லாமல் ஏழு மணிக்குள் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டது பல வகைகளிலும் நல்லது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த பெண் தமிழை சரியாக உச்சரித்தார். உணர்ச்சி மேலோங்கப் பேசினார். சில நேரங்களில் சற்று மிகையாக பேசினார். மற்றும் ஒருவர் ‘தமிழ் நாட்டின் வருங்கால நிரந்தர முதல்வர்’ என விஜய்யை விதந்தோதினார்.இவை யாவும் வழக்கமான அரசியல் கலாச்சார மரபுகளில் இருந்து இவர்கள் இன்னும்  முற்றாக விடுபடவில்லை என்பதை சொல்லின. இன்றைய தினம் பணம் கொடுக்காமல் வாகனங்களை ஏற்பாடு செய்து தராமல், பிரியாணி, குவார்ட்டர் கொடுக்காமல் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடியதற்கு காரணம், விஜய்யின் சினிமா புகழ் மட்டுமல்ல, ஒரு மாற்று அரசியலை விரும்பும் மக்களின் மழுங்கடிக்க முடியாத எதிர்பார்ப்புகளும் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு மிகப் பெரிய அரசியல் மாநாட்டை  வசூல் வேட்டை நடத்தாமல் தான் சம்பாதித்த சொந்த பணத்தை கொண்டு மட்டுமே நடத்தியது. ‘சிறந்த கொள்கைகளை பேச்சளவில் மாத்திரமன்று, செயலிலும் காட்டுவேன்’ என்றது, ‘மதச்சார்பற்ற’ என்பதையும், ‘அனைவரும் சமம்’ என்பதை வலியுறுத்தியதால் ‘பாஜக தான் பிரதான எதிரி’ என்பதை புரிய வைத்தது, ‘ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்’ என்றதன் மூலம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடுத்த எதிரி என அடையாளம் காட்டியது, திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரண்டையும் ஏற்றது ஆகியவை அவரது அரசியல் பக்குவத்தை உணர்த்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தனித்தே தங்கள் கட்சியால் அனைத்து தொகுதிகளிலும் நின்று வெல்ல முடியும் என்றாலும், தகுதியானவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கவும், அதிகார பகிர்வு கொள்ளவும் முன் வந்தது மற்றொரு சிறப்பாகும் என்றாலும், தனியாக களம் கண்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை இருந்தால், அவ்விதமே செயல்படட்டும். கறைப்பட்டுள்ள இன்றைய அரசியல் கட்சிகள் எதனுடனும் கைகோர்க்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அடுத்ததாக ‘விஜய் பக்கம் காற்றடிக்கிறது’ என்றவுடன், மற்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அணிவகுத்து வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் விட்டால் விஜய்யின் ‘நல்லாட்சி’ என்பது நிறைவேறாத கனவாகிவிடும். இதுவும் பத்தோடு பதினொன்று என்றாகிவிடும் ஜாக்கிரதை. இன்றைய த.வெ.க மாநாடும், அதில் விஜய் பேச்சும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் தேர்தலுக்கு எஞ்சி இருக்கும் இன்னும் ஒன்றரை வருடங்களில்  விஜய் அரசியல் சார்ந்து மக்கள் பிரச்சினைகளில் என்னென்னெவெல்லாம் பேசுகிறார்..? எந்தெந்த பிரச்சினைகளுக்கு குரக் கொடுக்கிறார்..? எந்தெந்த விவகாரங்களில் களம் காண்கிறார். கட்சியின்  கிளை  அமைப்புகளை எவ்வாறு கட்டமைக்கிறார்..? என்பதைக் கொண்டே அவரது எதிர்காலம் இருக்கும். சாவித்திரி கண்ணன்   https://aramonline.in/19638/tvk-conference-vijay-speech/
    • இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார்.  எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைச்சரவை அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும். 16ஆவது உச்சி மாநாடு பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.  எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும். இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது.  https://tamilwin.com/article/brics-rejected-sri-lanka-s-request-1730023922
    • அண்மையில் அறுகம் குடா பகு­தியில் இஸ்ரேலிய சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்ள­தாக உளவுத்தக­வல் ஒன்று கிடைக்கப்பெற்­றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதன் விளைவுகளை கருத்திற் கொண்டு அதெனை மறைத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் முக்கிய தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/arugam-bay-issue-udaruppu-lankasri-1730045113
    • கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..! October 27, 2024     — அழகு குணசீலன் — இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு. அரசியல் கூட்டுக்களில் வெளியில் என்ன படம் காட்சிப்படுத்தப்பட்டாலும், பிரதான வகிபாகம் பலமான ஒரு கட்சியிடமே இருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜனபெரமுன, உள்ளிட்ட பல கூட்டுக்களை  குறிப்பிட முடியும்.  இந்த விதிக்கு ஜே.வி.பி. பிராதான பாத்திரம் வகிக்கின்ற என்.பி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியும் விலக்கல்ல . காரணம் இவை எல்லாம் கதிரை அதிகாரத்தை முதன்மையாகக் கொண்ட கூட்டுக்கள். கதிரைக்கு இடது, வலது என்ற வேறுபாடு இல்லை.  ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் பெற்ற வாக்குகள் 1,97,689. இதில்  திகாமடுல்ல, திருகோணமலையில் பெற்ற வாக்குகளில்( 1,08,971 + 49, 886 ) சிங்கள மக்களின் வாக்குகள் அதிகமானவை. அதே போன்று மட்டக்களப்பில் ஜனாதிபதி பெற்ற வாக்குகளிலும்(38,832)  தமிழர் வாக்குகுகளுடன் ஒப்பிடுகையில் சோனகர்களின் வாக்குகள் அதிகமானவை. ஏனெனில் சஜீத்பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்,சோனக கட்சிகளின் ஆதரவுடன் பெற்ற வாக்குகளில் தமிழர், சோனகர் வாக்குகள் அதிகபங்கை வகித்துள்ளன. இது ஜனாதிபதி தேர்தல் நிலவரம். மக்கள் தங்களுக்கு நேரடியாக தொடர்பற்ற, சமூக, பொருளாதார, அரசியல் உறவற்ற கொழும்பு தலைமைக்கு அளிக்கும் வாக்கு. இது பாராளுமன்ற பொதுத்தேர்தல் களத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலைப்பாடு.  இதனால்தான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு புள்ளி விபரங்களை கொண்டு  பல்லின பிரதிநிதித்துவ கிழக்கு மாகாண பாராளுமன்ற தேர்தலை எதிர்வு கூற முடியாது. இது  தபால் மூல வாக்களிப்பிலும் பிரதிபலிக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடிப்படையிலான மதிப்பீடு வடக்கு கிழக்கு மாகாணங்களை விடவும் அதிகம்  செல்வாக்கு செலுத்த  வாய்ப்புண்டு. ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார மந்தம், ஊழல் ஒழிப்பு, ஜனநாயக அரசியல் செயற்பாட்டு மறுப்பு, மனிதவுரிமைகள் மீறல்  போன்ற தேசிய ரீதியிலான நீதி, நிர்வாக சீர்திருத்தங்கள்  முக்கிய பேசுபொருளாக இருந்தன. இனப்பிரச்சினை மேற்குறிப்பிட்ட அனைத்து தேசிய பிரச்சினைகளோடும் தொடர்பு பட்டதாக இருந்த போதும் மற்றைய வேட்பார்களைப் போன்றே அநுரகுமாரவும் அதைப்பொருட்படுத்தவோ, உறுதியான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவோ இல்லை. எனினும் ஒரு இடதுசாரி கட்சி (?) என்ற நம்பிக்கையில், வழக்கத்திற்கு மாறான ஒரு மாற்றாக தமிழர்களும், சோனகர்களும் கணிசமான அளவு வாக்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியுள்ளனர். இதில் பொதுவான தேசிய சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கான ஆதரவு முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே  வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல்  முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும். இலங்கை சுதந்திரம் பெற்ற போது  ‘இலங்கை அரசு’ சுதேசிகளால் கட்டமைக்கப்பட்டது. அதனூடாக ஒரு ‘இலங்கைத் தேசியம்’ உருவானது. ஆனால் ‘இலங்கையர்’ என்ற ஒரு பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பை அது உருவாக்கவில்லை. இந்த மூன்று வார்த்தை பிரயோகங்களும் சிங்கள மேலாண்மையை குறித்து நிற்கின்ற வார்த்தைகளாகவே இன்றும் அடையாளப்படுத்துகின்றன. ஒட்டு மொத்தத்தில் இந்த வார்த்தைகள் சிங்கள பௌத்த மேலாண்மையின் பிரதிபலிப்பாக, அடையாளமாக உள்ளன. இதன் மிகப்பிந்திய வெளிப்பாடே இனப்பிரச்சினையை  பொருளாதாரப்பிரச்சினை என்பதும், அது அதிகாரப்பகிர்வை கோரவில்லை வெறுமனே அபிவிருத்தியை கோருகிறது என்ற ஆளுங்கட்சியான ஜே.வி.பி. யின் அதிஉயர் அந்தஸ்த்தையும், அதிகாரத்தையும் கொண்ட செயலாளர் ரில்வின் சில்வாவின் கூற்றாகும். இதற்கான பதிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் தங்கள் வாக்குகளால் வழங்குவதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில் விட்ட அரசியல் தவறை ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின்  ஊடாக திருத்திக்கொள்ள முடியும். ஜே.வி.பி.செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவிப்பு ஜனாதிபதி அநுரகுமாரவினால் அல்லது கட்சியின் வேறேந்த முக்கியஸ்தர்களாலும் வாரங்கள் கடந்தும் இதுவரை மறுதலிக்கப்படவில்லை. வடக்கும், கிழக்கும் அங்கு பரம்பரையாக வாழ்கின்ற தமிழர்களினதும், சோனகர்களினதும் பாரம்பரிய தாயகம் என்பதையும், பன்மைத்துவ இனத்துவத்தையும், அடையாளங்களையும் மறுதலித்துக்கொண்டு அரசியல் செய்தால் சிவப்பு சாயம் மிக விரைவாக வெளிறிப்போகும். ஒரு இடதுசாரி அரசியல் இயக்கத்தில் இது ஒரு அடிப்படையான முரண்பாடு. சுமந்திரன்  அமைச்சர் பதவிக்காக போட்டுள்ள டீலின்  இரு கோரிக்கைகளும் காலத்தால் கரைந்து விடும். வடக்கும், கிழக்கும் பாரம்பரிய தாயகம் என அங்கீகரிப்பதனால் அது சமஷ்டியை வழங்குவதாகவோ, அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதாகவோ கருதப்படவேண்டியதில்லை. அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களின் தனித்துவ அடையாளங்களையும், பிரதேசத்தையும், சமூக பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாகும். இது இடம்பெறாமல் இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகத்தைக் கொண்டது என்பது மேலாதிக்க பொய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதல்ல இது. இது அந்த சட்ட நோக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இன, மத, கலாச்சார, மொழி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் சமூகநீதியை மறுதலித்து கொண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஒருவகையில் அடக்கு முறையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது  ஒரு வழக்கில் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற வேறுபாடின்றி ஒரே குற்றத்திற்காக ஒரே தண்டனையை வழங்குவது.   ஆனால் பல்லின பன்மைத்துவ சமூகத்தில்  தனித்துவமான வழக்குகளும், மரபுகளும், நடைமுறைகளும் முக்கியமானவை. கொரோனா கால ஜனாஷா எரிப்பு  எல்லோருக்கும் ஒரே நியதி என்று கூறி தனித்துவங்களை நிராகரித்த செயல். இதனால்தான் இந்த “இலங்கையர்” என்ற வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. . சகல  இனத்துவ தனித்துவமான அடையாளங்களை, வாழ்வியல் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பது என்றால் சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும், அவை சார்ந்த கலாச்சார விழுமியங்களுக்கும் தனியான முன்னுரிமையும், பாதுகாப்பும் எதற்கு?. இதில்  சுதந்திர இலங்கையின் எந்த அரசாங்கமும் அநுரகுமார அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் விலக்கல்ல. ஒரு இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.க்கு ஒரு இளம் பிக்குகள் சங்கம் ஒன்று எதற்கு? தேவை தொழிலாளர் சங்கங்கள் அல்லவா? தமிழர்கள் ஜனாதிபதிக்கு அளித்த வாக்கை இந்த இலக்கில் மறுபரிசீலனை செய்யும் நிலையில், கிழக்கு சோனகர்கள் மத்தியில் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கை பிரித்து தந்திருக்கிறது,  அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரு பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. மறுபக்கத்தில்  சோனகர்கள் ஜே.வி.பி.க்கு ஆதரவளித்து வடக்கு, கிழக்கு இணைப்பை தடுக்கப்போகிறார்கள் என்று இணைப்புக்கு ஆதரவான தமிழ்த்தேசிய தரப்புக்களின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. மேலும்  ஜே.வி.பி . உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளின் சோனக வேட்பாளர்கள் தமிழர் வாக்குகளாலும், தமிழர் வேட்பாளர்கள் சோனகர் வாக்குகளாலும் வெல்லப்போகிறார்கள் என்ற பிரச்சாரங்கள் வேறு. தேர்தல் நெருங்க,நெருங்க எல்லாப்பூதங்களும் “அறுகம்பை பூதம்” போல் இன்னும் வெளிவரத்தான் போகின்றன.  இங்கு  முக்கியமாக  சோனக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு  துளியும் வாய்ப்பில்லை. அதை தமிழர்களில் ஒரு பகுதியினரும், சிங்களவர்கள் முழுமையாகவும் எதிர்க்கிறார்கள். இதை ஆதரித்து ஜனாதிபதி கூட பேசப்போவதில்லை. மாறாக   இரு சமூகங்களும் இனத்துவ அடையாளங்களையும்,வடக்கு , கிழக்கு பிரதேசங்களையும், அங்கீகரிக்க கோருகின்றன. இந்த அங்கீகாரம் தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்,சோனக மக்களுக்கும், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் ஒரு பன்மைத்துவ அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும், அமையவேண்டும். இந்த அச்சங்களும், முரண்பாடுகளும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் ஜே.வி.பி அலையின் வேகத்தை குறைத்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த சோனகர் சமூகத்தில் இஸ்ரேல் -பாலஸ்தீன போரில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் கிழக்கில் பேசுபொருளாகி இருக்கிறது. புதிய அரசாங்கம் இதுவரை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள-தமிழ் கிறிஸ்தவ வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்து இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பேராயர் மெல்ல, மெல்ல அநுர அரசின் பேச்சாளராக மாறி வருகிறார். இந்த பின்னணி கிழக்கு சோனகர் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ சமூகத்தில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாததும், அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களுக்கு பதவிகளை வழங்கியிருப்பதும்.  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதியை இழுத்தடிக்கும் செயல் என மக்கள் கருதுகின்றனர். ஆகக்குறைந்தது அறிக்கையில் பெயர்குறிபிடப்பட்ட இருவரையும் இடைநிறுத்தி புதியவர்களை நியமித்து விசாரணையை மீள மேற்கொள்ள ஜனாதிபதி பணித்திருக்க வாய்ப்பு இருந்தது. அதை அவர் பயன்படுத்தவில்லை என்ற விசனம் ஜே.வி.பி.குறித்த சந்தேகத்தை கிழக்கு கிறித்தவ வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அறுகம்பை குறித்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் சோனக சமூகத்தை அச்சுறுத்துவதற்கான கோத்தபாய பாணியிலான ஒரு தந்திரோபாயமா?   என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பயங்கரவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு கருவியாக ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோத்தபாய வரையுமான பல தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதி அநுகுமாரவும் அந்த வழி அமைப்பு ஒன்றின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். ஈஸ்டர் தாக்குதல் பாணியிலேயே தகவல்கள் வெளியாகின்றன.  ஒக்டோபர் 7ம்திகதி இந்திய புலனாய்வு துறையினால் இலங்கைக்கு தகவல் பரிமாறப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் , எடுத்திருந்தால் தூதரகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து மேற்கு நாடுகளின் உல்லாசப் பிரயாணத்தடையை தடுத்திருக்கலாம் என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.  இதன் மூலம்  பாரிய அந்நியச் செலாவணி இழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அமைச்சர் விஜயகேரத் இந்திய புலனாய்வு துறை தகவல் வழங்கவில்லை என்று மறுத்துள்ளார்.  அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுகின்ற மற்றொரு விடயம் ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல்.  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில்  2வது இடத்தில் இம்தியாஷ் பார்க்கீர் மார்க்கார், 4வது இடத்தில் சாகரன் விஜயேந்திரன், 5வது இடத்தில் நிசாம் காரியப்பர் இடம் பிடித்துள்ளனர். மேலும் 23, 24, 25 ம் இடங்களில் மூன்று தமிழர்களும், 27, 28 ம் இடங்களில் இரு சோனகர்களும் உள்ளனர்.  ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடனான புதிய ஜனநாயக முன்னணியில் 3வது இடத்தில் மொகமட் பைசர் முஸ்த்தபா, 7வது இடத்தில் செந்தில் தொண்டமான், 8வது இடத்தில் சுரேன் ராகவன் உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 10வது இடத்தில் பளீல் மர்ஷான் அஸ்மி உள்ளார். இதில் தமிழர் எவரும் இல்லை.  ஆனால் இலங்கை தேசியம், இலங்கையர் வார்த்தைகளை உரத்து உச்சரிக்கின்ற ஜே.வி.பி/என்.பி.பி. பட்டியலில்  10 வது இடத்திலேயே இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் 20 வது இடத்தில் அப்துல் ஃபதா முகமது இக்ராம் உள்ளார். 29 பேரைக்கொண்ட தேசிய பட்டியலில் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் மட்டும் அல்ல முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.  ஆக, கிழக்கிலங்கையில் ஜே.வி.பி.க்கு காற்று வளம் செப்டம்பரில் போன்று நவம்பரில் அடிக்காது போல்தான் உள்ளது.? அரசியல் காலநிலை மாறுவதும் ஒரு மாற்றம் தானே ! இல்லையா?.     https://arangamnews.com/?p=11370
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.