Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுவான் சுவாங், சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் பயணம் செய்தார்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

வில்லியம் டால்ரிம்பிள் எழுதி சமீபத்தில் வெளிவந்த புத்தகம் ஒன்று, பழங்கால தமிழக அரசர்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

நீண்டதூர பயணங்கள் என்பவை இப்போதே கடினமானவையாக இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கடினமாக இருந்திருக்கும். அந்த காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி, ஒரு குளிர் காலத்தில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். அவரது பெயர் யுவான் சுவாங்.

அது கி.பி. 629வது வருடம். யுவான் சுவாங்கிற்கு அப்போது வயது வெறும் 29 தான். நாளந்தா பல்கலைக் கழகத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்த தகவல்கள், அவரை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தன. நாளந்தாவில்தான் உலகிலேயே மிகப் பெரிய பௌத்த நூலகம் இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆகவே மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையெல்லாம் மீறி, அந்தப் பயணத்தை மேற்கொண்டார் அந்த இளைஞர். அவர் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய போது 17 ஆண்டுகள் கழிந்திருந்தன. சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் அவர் பயணம் செய்திருந்தார்.

 

இந்தப் பயணத்தில் தான் கண்டவற்றை The Great Tang Records on the Western Regions என்ற பெயரில் எழுதிவைத்தார். இந்த ஆவணத்தில் இருக்கும் வரலாற்றுத் தகவல்கள், பிற கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றை பழங்கால இந்தியா எப்படி உலகின் பிற பகுதிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என தன்னுடைய சமீபத்திய புத்தகமான ‘The Golden Road, How Ancient India Transformed the World’ல் விவரிக்கிறார் வரலாற்றாசிரியரான வில்லியம் டால்ரிம்பிள்.

யுவான் சுவாங்கை நாளந்தா வெகுவாக வசீகரித்தது. நாளந்தா பல்கலைக்கழகம் குறித்தும் அங்கிருந்த பௌத்த நூலகம் குறித்தும் வியந்துபோனார் யுவான் சுவாங். அவற்றைப் பற்றி விரிவாகவே எழுதிவைத்தார் அவர்.

 
யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,BLOOMSBURY PUBLISHING

படக்குறிப்பு, சோழர்கள் போர்களில் மிகக் கொடூரமாக நடந்துகொண்டதாகவும் வில்லியம் டால்ரிம்பிளின் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது

போதி தர்மரின் சீனப் பயணம் குறித்த தகவல்கள்

தென்னிந்தியா குறித்து அவர் எழுதிய குறிப்புகளை வைத்து பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார் வில்லியம் டால்ரிம்பிள். முதலாவது, சம்பவம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவுக்கு சென்றது குறித்து. இது சக்கரவர்த்தி வுதி (Wudi) காலத்தில் நடந்தது. வுதி, பௌத்தத் துறவிகளையும் மடாலயங்களையும் பெரிய அளவில் ஆதரித்தவர். பிற்காலத்தில் இவருக்கு சக்ரவர்த்தி போதிச்சத்வர் என்ற பெயரும் வந்தது.

இவருடைய காலத்தில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த போதி தர்மர், சீனாவுக்குச் சென்றடைந்ததாக சொல்லப்படுகிறது என்கிறார் டால்ரிம்பிள். போதி தர்மருக்கு அரசர் வுடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமையவில்லை. அந்தத் தருணத்தில் போதிதர்மருக்கு 150 வயது என்கின்றன இது தொடர்பான கதைகள்.

இதனால் ஆத்திரமடைந்த போதி தர்மர், ஒரு நாணலில் ஏறி, யாங்சீ ஆற்றைக் கடந்து சீனாவின் வட பகுதிக்குச் சென்றார். அங்கே சாங் எனப்படும் மலையில் இருந்த ஒரு குகையைச் சென்றடைந்தார். அங்கிருந்தபடி, தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டார். பிறகு 9 ஆண்டுகளுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த ஒன்பது ஆண்டுகளும் சுவற்றைப் பார்த்து அமர்ந்தபடி தியானம் மேற்கொண்டார். இதனால், இவரது நிழல் அப்படியே இந்தச் சுவற்றில் படிந்துவிட்டதாகவும் பல நூற்றாண்டுகளுக்கு அது தென்பட்டதாகவும் நம்புகிறார்கள். விரைவிலேயே, ஜென் பௌத்தத்தின் பிதாமகராக உருவெடுத்தார் போதிதர்மர்.

யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போதி தர்மர் இறந்த பிறகும் கூட, கையில் ஒற்றை காலணியை வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் பாமிர் பீடபூமியில் அவர் திரிந்ததாக நம்பப்படுகிறது

ஜென் கலைகளில், போதிதர்மரின் உருவம் நீண்ட தாடி, புருவம், கேசத்துடன் கூடிய, சிவப்பு ஆடை அணிந்த, சக்தி வாய்ந்த, சண்டையிடும் ஒரு துறவியாகக் காட்டப்படுகிறது. தற்காப்புச் சண்டைகளுக்கு என இவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் T வடிவ மூங்கில் இன்றும் இவரைப் பின்பற்றுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

போதிதர்மரின் போதனைகள் எந்த அளவுக்கு அவருக்கு சீடர்களை கொடுத்ததோ, அதேபோல எதிரிகளையும் உருவாக்கியது. முடிவில் அவரைப் பிடிக்காத இரண்டு துறவிகள், அவருக்கு விஷம் கொடுத்தார்கள்.

அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒரு சீனத் தூதர் கையில் ஒற்றை காலணியை வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் பாமிர் பீடபூமியில் திரிந்த அவரை சந்தித்ததாக நம்பப்படுகிறது.

போதிதர்மரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அங்கே மற்றொரு காலணி மட்டுமே இருந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே போதிதர்மருக்கு மரணமே இல்லையென்றும், இந்திய தற்காப்புக் கலையை கற்க விரும்பும் யாரும் தீவிர தியானத்தில் ஈடுபட்டால் அவரை வரவழைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

 
யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாளந்தா பல்கலைக்கழகம் குறித்தும் அங்கிருந்த பௌத்த நூலகம் குறித்தும் வியந்துபோனார் யுவான் சுவாங்

மிகப்பெரிய பௌத்த மையமாக இருந்த காஞ்சிபுரம்

யுவான்சுவாங் நாளந்தாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பௌத்த மையமாக இருந்த காஞ்சிபுரத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து யோகாசாரங்களைப் பயில இலங்கைக்குச் செல்ல விரும்பினார்.

ஆனால், அப்போது அங்கு யுத்தம் நடந்துகொண்டிருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என பலரும் கூறியதால், காஞ்சிபுரத்திலிருந்து அஜந்தாவைச் சென்றடைந்தார் யுவான் சுவாங். கி.பி. 641வாக்கில் மீண்டும் நாளந்தாவை வந்தடைந்தார் யுவான் சுவாங்.

யுவான் சுவாங்கின் ஆவணங்கள் தரும் தகவல்கள் போக, வேறு சில வரலாற்று ஆதாரங்களை வைத்து ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்லவ மன்னனாக இருந்த மகேந்திரவர்மப் பல்லவனின் ஆட்சி குறித்த சுவாரஸ்யமான சில தகவல்களைத் தருகிறார் வில்லியம் டால்ரிம்பிள்.

மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவு மற்றும் கலையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அறிவுரீதியான தேடல்கள் பௌத்த மடாலயங்களில் மட்டுமல்லாமல், கடிகை எனப்பட்ட வேதம் சார்ந்த மடாலயங்களிலும் நடந்தன. இதற்கு அரசின் தாராளமான பொருளாதார ஆதரவு இருந்தது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குன்றுகள் எல்லாம் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோவில்களாக உருவெடுக்க ஆரம்பித்தன என அந்தக் காலத்தை விவரிக்கிறார் டால்ரிம்பிள்.

மண்டகப்பட்டுவில் இருக்கும் குகைக் கோவிலில் மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் பிரம்மா - விஷ்ணு - சிவனுக்கான அந்தக் கோவிலை செங்கல், மரம், இரும்பு, சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் எப்படி அந்தக் கோவில் கட்டப்பட்டது என்பதை அந்தக் கல்வெட்டில் மகேந்திரவர்ம பல்லவன் இடம்பெறச் செய்துள்ளார்.

இதன் மூலம் மூங்கில், மரம், செங்கற்கற்கள் போன்றவை இல்லாமல், கற்கள் மூலம் கோவிலைக் கட்டிய முதல் மன்னங இவர்தான் என புரிந்துகொள்ளப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட பௌத்த கோவில்களின் பாணியை, இப்படியாக மகேந்திரவர்மனே சோழமண்டலக் கடற்கரைக்குக் கொண்டுவந்தார் என்கிறார் டால்ரிம்பிள்.

பல்லவ மன்னர்களில் மகேந்திரவர்ம பல்லவன்தான் முதன் முதலில் புராணங்கள் அடிப்படையிலான இந்து மதத்தை பின்பற்றிய மன்னனாக இருக்கலாம் என்கிறார் அவர். இவனது காலத்தில் இருந்தே தமிழில் பக்தி இலக்கியங்கள் வளர ஆரம்பித்தன. அசோகர் காலத்திலிருந்து பௌத்தமும் ஜைனமும் அதற்கு முன்பாக யுத்த நாயகர்களும் கோலோச்சிய தென்னிந்தியாவுக்கு பக்தி இலக்கியத்தை படைத்த அருளாளர்களே இந்து மதத்தைக் கொண்டுவந்தனர்.

 
யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுவான் சுவாங், தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபோது 17 ஆண்டுகள் கழிந்திருந்தன

யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது?

யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்தபோது மிக முக்கியமான பௌத்த மையமாக இருந்தது. நாளந்தாவுக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கான துறவிகள் இங்கே இருந்ததோடு, பெரும் அறிவுப் பாரம்பரியமும் இருந்தது. ஆனால், அந்த பகுதி மிக வேகமாக சைவமயமாகிவந்தது. பக்தி இயக்கப் புலவர்கள், சமணத்தையும் பௌத்தத்தையும் தங்கள் பாடல்களில் இகழ்ந்தனர். அம்மதங்கள் தமிழ்க் கலாசாரத்திற்கு விரோதமானது என்றார்கள்.

இந்தப் பின்னணியில்தான் மகேந்திரவர்மப் பல்லவன் இந்துக் கடவுளின் அற்புதமான சிற்பங்களோடு, கற்களால் ஆன கோவில்களைக் கட்ட ஆரம்பித்தான். இந்த காலகட்டத்தில்தான் தென்னிந்தியாவுக்கே உரிய வெண்கலச் சிலைகள் அரசின் அரவணைப்பைப் பெற ஆரம்பித்தன. அவனுடைய மகனான மாமல்லன் என்றழைக்கப்பட்ட நரசிம்மவர்மன், பல்லவ நாட்டை ஒரு வர்த்தக சக்தியாக மாற்றும் வேலையில் இறங்கினான்.

மேலை நாடுகளுடனான வர்த்தகத்திற்கே கவனம் செலுத்தப்பட்டுவந்த நிலையில், தென்கிழக்கு ஆசியா மீதும் அவனது கவனம் திரும்பியது. மாமல்லபுரம் அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. பெரிய கப்பல்கள் வரும் வகையில் துறைமுகத்தை ஆழப்படுத்தினான் என்கிறார் டால்ரிமபிள்.

இன்னொரு பல்லவ மன்னன் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த நூல் தருகிறது. கி.பி. 731வாக்கில் பல்லவர்களில் வாரிசுரிமைச் சிக்கல் ஏற்பட்டது. பல்லவ மன்னனாக இருந்த இரண்டாம் பரமேஸ்வரன், வாரிசு ஏதுமின்றி மரணமடைந்தான். மூன்றாண்டுகளுக்கும் குறைவாகவே அவன் ஆட்சியில் இருந்தான். சாளுக்கியர்களின் திடீர் தாக்குதலில் அவர் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவன் மரணத்தையடுத்து, அடுத்த வாரிசைத் தேர்வுசெய்ய அந்த நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் கூட்டம் கூடியது. அங்கிருந்து வெகு தூரத்தில் இருந்த ஒரு நாட்டில், பல்லவர்களின் வாரிசு இருப்பதாகவும், அவனை அழைத்துவந்து ஆட்சியைக் கொடுக்கலாமா என அவர்கள் விவாதித்தார்கள்.

ஐந்து தலைமுறைகளுக்கு முன்பாக, பல்லவ இனத்தைச் சேர்ந்த பீமா என்ற இளவரசன், கடல்கடந்து சென்றதாகவும் அப்படிச் சென்ற இடத்தில் உள்ளூர் இளவரசியை மணந்துகொண்டு, அந்த நாட்டின் மன்னாகவும் ஆனதாகவும் அவர்கள் நம்பினார்கள். அவனது வழத்தோன்றல்களில் ஒருவனை அழைத்துவந்து பல்லவ நாட்டின் அரசனாக்கலாம் என விரும்பினார்கள் அவர்கள்.

இதையடுத்து ஒரு குழு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று, பல காடுகள், நதிகள், மலைகளைக் கடந்துசென்று தொலைந்துபோன இளவரசனின் வழித்தோன்றலை அழைத்துவந்தது. விரைவிலேயே அந்த இளவரசன் தன் எதிரிகளை முறியடித்து, பல்லவ மன்னர்களிலேயே மிகக் குறிப்பிடத்தக்க மன்னனானான். அவன்தான் இரண்டாம் நந்திவர்மன்.

 
யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குன்றுகள் எல்லாம் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோவில்களாக உருவெடுக்க ஆரம்பித்தன என அந்தக் காலத்தை விவரிக்கிறார் டால்ரிம்பிள்

தென்கிழக்கு ஆசியாவுடனான பல்லவர்களின் பிணைப்பு

தென்னிந்தியாவின் மிக அற்புதமான கோவில்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியது இவனே. இரண்டாம் நந்திவர்மன் அங்கு வந்து சேர்ந்த கதை, அந்தக் கோவிலின் தென்பகுதி சுவற்றில் சிற்பத்தொகுதிகளாகவும் கல்வெட்டுகளாகவும் தெற்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

பல்லவ இனத்தின் கெமர் (கம்போடியா) பிரிவைச் சேர்ந்த ஒரு இளவரசன், பல்லவ நாட்டின் அரசனானதற்கு இந்த சிற்பத் தொகுதிகளே ஆதாரம் என பலர் கருதுகிறார்கள். ஆனால், இதில் சில ஆய்வாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த பல்லவ இளவரசன் காவரி டெல்டா பகுதியைச் சேராதவனாக இருந்தாலும் தென்னிந்தியாவின் வேறு பகுதியைச் சேர்ந்தவனாக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் தென் கிழக்கு ஆசியாவுடன் பல்லவர்களுக்கு பலமான கலாசார பிணைப்பு இருந்தது. இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டுகள் மலேசியாவின் கெடாவிலும் (கடாரம்) தாய்லாந்தின் தகுவா பகுதியிலும் காணப்படுகின்றன.

பல்லவ பாணியில் உருவாக்கப்பட்ட உயரமான விஷ்ணுவின் சிலையும் மண்டியிட்ட வடிவில் பூதேவியின் சிலையும் அங்கே இருக்கின்றன. இந்த பாணியிலான சிலைகள் தமிழகத்திற்கே உரியவை.

சோழர்கள் போர்களில் மிகக் கொடூரமாக நடந்துகொண்டதாகவும் வில்லியம் டால்ரிம்பிளின் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.