Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி சம்பியனஸ் கிண்ணத்தில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துடுப்பாட்ட சாதனை

Published By: VISHNU

26 FEB, 2025 | 08:58 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் பி குழுவுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ஓட்டங்களைக் குவித்து ஒரு போட்டியில் தனிநபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற  சம்பியன்ஸ் கிண்ண  சாதனையை நிலைநாட்டினார்.

சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்களைக் குவித்து ஏற்படுத்திய சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் இன்று முறியடித்தார்.

இப்ராஹிம் ஸ்த்ரான் குவித்த அபார அதிரடி சதத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

ஒன்பதாவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழந்தப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை வெறும் 37 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துணிச்சலை வரவழைத்து அற்புதமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடி சாதனைமிகு சதம் குவித்து அணியை மீட்டெடுத்தார்.

2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் உபாதை காரணமாக சுமார் 11 மாதங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 23 வயதான இப்ராஹிம் ஸத்ரான் தனது மீள்வருகையில் இரண்டாவது போட்டியில் 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 177 ஓட்டங்ளைக் குவித்தார்.

இதனிடையே 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 102 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயுடன் 6ஆவது  விக்கெட்டில்  மொஹமத் நபியுடன் 111 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 16 ஓவர்கள்  நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/207773

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே?

Eng Vs Afg: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அணியின் வெற்றியை கொண்டாடும் ஒமர்ஸாய்

27 பிப்ரவரி 2025, 03:37 GMT

புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து. ஆனால், 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்த ஸ்கோரை அடைந்தார் ஜோ ரூட்.

அவருடைய காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, இறுதியில் 26 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் அவுட் ஆனார். ஜோ ரூட் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தானின் தோல்வி முகம் வெற்றியின் பக்கம் திரும்பியது.

இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மிக விரைவாகவே அவுட் ஆகினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில்ட் சால்ட் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பென் டக்கெட் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

ஜேமி ஸ்மித் 9, ஹேரி ப்ரூக் 25, கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியம் லிவிங்ஸ்டோன் 10, ஜேமி ஓவர்டன் 32, ஜோஃப்ரா ஆர்ச்சர் 14, அடில் ரஷித் 5 ரன்களை எடுத்தனர். மேலும், மார்க் வுட் 2 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார்.

இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஓவர்டன் 32 ரன்கள் அடித்த நிலையில், வெற்றி நோக்கி வந்த இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 14 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் அவுட் ஆனது.

Eng Vs Afg: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில், 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்

அசத்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபஸல்ஹக், ரஷித் கான் மற்றும் குல்பதின் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது.

அந்த அணி வீரர் ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் அடங்கும். இது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் இதுவரை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த அணி தோற்று விடுமோ என கருதப்பட்டது. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஹஸ்மத்துல்லா இருவரும் சேர்ந்து 103 ரன்கள் எடுத்து அணி அதிக ஸ்கோர் குவிக்க உதவினர்.

அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

Eng Vs Afg: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஸத்ரான்

சாதனை படைத்த ஸத்ரான்

ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

மேலும், உலகக் கோப்பைக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸத்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும்

ஏமாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி

போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டத்தோடு ஒப்பிட்டால் போட்டியின் முடிவு மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கினார்கள் வுட் மற்றும் ஆர்ச்சர். அதனைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சேதிக்குல்லா அதால் ஆகியோர் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார்கள். சில நிமிடங்களிலேயே ரஹ்மத் ஷாவும் அவுட்டானார். கடந்த 14 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, நேற்று பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது.

வுட் அவருடைய நான்காவது ஓவரில் காலில் பிரச்னை ஏற்பட்டு வெளியேற, இப்ராஹிம் தன்னுடைய அணிக்கான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இப்ராஹிமும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் சேர்ந்து 124 பந்துகளுக்கு 103 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்பு ஷாஹிதி ரஷித்தின் பந்தில் அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 30-வது ஓவரில் 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போதும் இங்கிலாந்து தான் போட்டியை கட்டுப்பட்டுத்தியது.

முகமது நபியும் இப்ராஹிமும் சேர்ந்து 9.1 ஓவர்களுக்கு 111 ரன்களை எடுத்தனர். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களத்துக்கு வந்த வுட் 4.2. ஓவர்களுக்கு 37 ரன்களை வாரி வழங்கினார். 47-வது ஓவரில் பந்து வீசிய ரூட் ஆப்கானிஸ்தானின் 6-வது விக்கெட்டை எடுத்தார்.

முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ஆடிய இப்ராஹிம் பவுண்டரிகளை விளாசினார். நான்கு நாட்களுக்கு முன்பு டக்கெட் புரிந்த சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனையை சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் அவர் பதிவு செய்தார்.

இங்கிலாந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது.

Eng Vs Afg: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போல் விளையாடுவது சரியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் வீரர் கருத்து

இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ் இது குறித்து பேசும் போது, "இது பிரபலமற்ற கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அத்தகைய போட்டி ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை தர இயலாது.

ஜோ ரூட்டைப் பாருங்கள். அவர் 50-ஓவர் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 விளையாட்டு அனுபவம் மற்றும் அதில் உள்ள திறன்களை மையமாக கொண்டு நீங்கள் அணியை உருவாக்கி இருந்தால், 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்," என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.

"இதில் கவனமும் மிக முக்கியம். பில் சால்ட் இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அது டி20க்கு என்று வரும் போது சரியாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் இதே போக்கு இருந்தால் அது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே வழிவகை செய்யும். அது அடுத்தடுத்து விளையாட வரும் பேட்ஸ்மென்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும்.

இது டி20-ல் இருந்து முழுமையாக மாறுபட்டது. நீங்கள் இதை வேறொரு விதத்தில் அணுக வேண்டும். இதனை பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பதாக தோன்றவில்லை," என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இது குறித்து பேசும் போது, "தொடரில் இருந்து வெளியேறியது வருத்தமே அளிக்கிறது. எங்களுக்கான வாய்ப்புகள் இருந்தது. இது சிறப்பான விளையாட்டு. ஆனால் போட்டி முடிவுகள் எங்களுக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது," என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, "ஒரு அணியாக இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் மொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் முதல்முறையாக இங்கிலாந்தை 2023 உலக கோப்பைப் போட்டியின் போது தோற்கடித்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. போட்டி முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgkmm1l0jlxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க.போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 1 மார்ச் 2025, 03:14 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பி பிரிவில் ஆஸ்திரேலியா தவிர, அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பதற்கான கோதாவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் எந்த அணி முதலிடம் பெறுவது என்பதில் இன்னும் போட்டி நீடிக்கிறது.

பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

அதேசமயம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும்.

ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முழுமையாக நடந்திருந்தால் உறுதியான நிலை கிடைத்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி தரப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்க அணியைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

லாகூரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேரத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நீண்ட நேரமாகியும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை நின்றபின் போட்டியை நடத்தும் சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால், மைதானத்தில் மழைநீர் வடியவில்லை என்பதால், ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, போட்டி ரத்து கைவிடப்படுவதாக போட்டி நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவுக்கு என்ன வாய்ப்பு?

தென் ஆப்ரிக்க அணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

  • இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், 5 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்வதுடன் பி பிரிவில் முதலிடத்தையும் தென் ஆப்ரிக்கா பிடிக்கும். தோல்வி அடைந்தாலும் மோசமான தோல்வியாக இல்லாமல் இருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கு உண்டு.

  • ஒருவேளை இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க ஆட்டமும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளிகள் மற்றும் வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி முன்னேறும்.

சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தானுக்கு நூலிழை வாய்ப்பு

பி பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி -0.99 நிகர ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வேண்டுமானால், அது இங்கிலாந்து அணியின் கரங்களில்தான் இருக்கிறது.

அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 301 ரன்களை சேஸிங் செய்யும் போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கும் 300 ரன்கள் இலக்கை 12 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆகவே, ஏதேனும் ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது தற்போதைய நிலை. இல்லாவிட்டால் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஏ பிரிவைப் பொருத்தவரை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன. எனினும், அந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்குப் பிறகு ஏ பிரிவில் எந்த அணி முதலிடம் என்பது தெரியவரும் . அதன் பிறகே, அரையிறுதியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதும் என்ற விவரம் தெரியவரும்.

https://www.bbc.com/tamil/articles/c5y0ll3xye7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானுடனான போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது

Published By: VISHNU

01 MAR, 2025 | 01:20 AM

image

(நெவில் அன்தனி)

லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிடப்பட்டதால் பி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

இதனை அடுத்து அவுஸ்திரேலியா 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவிலேயே ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியவரும்.

பி குழுவில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் டக்வேர்க் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்திருந்த அவுஸ்திரேலியா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.

மெத்யூ ஷோர்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் விக்கெட்டில் 27 பந்துகளில் 44 ஓட்டங்களை ட்ரவிஸ் ஹெட்டுடன் பகிர்ந்தார்.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது.

ட்ரவிஸ் ஹெட் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 59 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

மழை விட்ட போதிலும் மைதானம் ஈரலிப்பாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாது எனத் தீர்மானித்த மத்தியஸ்தர்கள் இரவு  9.00 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.

சிதிக்குல்லா அத்தல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஆப்கானிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் மழை பெய்ததால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

சிதிக்குல்லா அத்தல் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 17 வைட்கள் உட்பட 37 உதிரிகள் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/207957

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் அணிய‌ முன்னாள் வீர‌ர்க‌ள் விம‌ர‌ச‌ன‌ம் செய்யின‌ம்

அப்கானிஸ்தான் அணியிட‌. இருந்து பாட‌ம் க‌ற்றுக்க‌னும் என்று....................

தென் ஆபிரிக்கா வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஸ்ரேன் அப்கானிஸ்தான் அணிய‌ புக‌ழ்ந்து பேசி இருக்கிறார்................அப்கானிஸ்தான் அணி இன்னும் பொறுமையாய் விளையாடினால் அடுத்த‌ 10 வ‌ருட‌த்தில் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ கோப்பையை அப்கானிஸ்தான் அணி தூக்கும் என‌ சொல்லி இருக்கிறார்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க.போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.

துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.

விளம்பரம்

டாப்ஆர்டர் தோல்வி

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று 7 வது ஓவருக்குள்ளேயே விரைவாக ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது முறையாக டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். இதற்குமுன் 2023ல் ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்திலும் இந்த 3 பேட்டர்களும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர்.

15 ஓவர்களில் இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. 15 ஓவர்களில் இந்த அளவு குறைவாக ரன்கள் சேர்த்தது 2020ம் ஆண்டுக்குப்பின் இது2வது முறையாகும். 2022ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால் தொடக்கத்தில் மந்தமாக இந்திய அணி பேட் செய்தாலும், அடுத்த 25 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், நடுவரிசையில் அக்ஸர் படேல்(42), ஸ்ரேயாஸ் அய்யர்(79), ஹர்திக் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபத்பாந்தவன் ஸ்ரேயாஸ்

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூணாக கிடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். சிறந்த பேட்டராக இருந்தபோதிலும் இன்னும் "அன்சங் ஹீரோவாகவே" இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணியின் டாப்ஆர்டர்கள் சறுக்கிய போதெல்லாம் அணியை தூக்கி நிறுத்தியது ஸ்ரேயாஸ் பேட்டிங்தான்.

எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராகி, அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் பேட் செய்வது சிறப்பாகும். ஆடுகளம் மெதுவாக இருக்கிறது, டாப் ஆர்டர்கள் வீழ்ந்துவிட்டார்கள் எனத் தெரிந்தவுடன் ரன் சேர்க்கும் வேகக்தைக் குறைத்து ஆங்கர் ரோல் எடுத்து ஸ்ரேயாஸ் பேட் செய்தார்

அக்ஸர், ஸ்ரேயாஸ் இருவரும் 51 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 75 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும், இதற்கு முன் 2022ல் அகமதாபாத்தில் 74 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்திருந்தார்.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்துக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் இதுவரை 4 அரைசதங்கள், 2 சதங்கள் என 563 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சை பிரமாதமாக ஆடக் கூடியவராக ஸ்ரேயாஸ் உள்ளார். 8 முறையுமே வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் 394 ரன்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 175 பந்துகளில் 169 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் 2வது பிரதான பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தொடக்கத்திலேயே அப்பர் கட் ஷாட்டில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை சாய்த்து ஹர்திக் பலம் சேர்த்தரா். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்து சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார்.

வில்லியம்ஸன் ஆறுதல்

நியூசிலாந்து அணிக்கு நேற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் மாட் ஹென்றி எடுத்த 5 விக்கெட்டுகள், வில்லியம்ஸனின் போராட்ட பேட்டிங்தான். 120 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் தவிர வேறு எந்த பேட்டர்களும் 30 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் 43 ரன்களைக் கடக்காததும் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த பேட்டரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்காதது தோல்விக்கு பெரிய காரணம்.

இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று டேரல் மிட்ஷெல், லேதம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடியும் வரை நியூசிலாந்து வெற்றிக்கான பாதி இலக்கை கடந்துவிட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லேதம் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்டர்கள் விக்கெட்டை இழந்தவாறு இருந்தனர்.

சான்ட்னர் நேற்று வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான பந்தில் போல்டாகினார். ஆட்டமிழந்த பின் சில வினாடிகள் ஸ்டம்பையும், வருணையும் பிரமிப்புடன் பார்த்துவிட்டு சான்ட்னர் பெவிலியன் திரும்பினார். வருண் தனது 10-வது ஓவரில் சான்ட்னரையும், ஹென்றி விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்து வீச்சுக்கு சாதகம்

ஆடுகளம் நேரம் செல்லச்செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. அங்கே, பனிப்பொழிவும் இல்லாமல் இருந்ததால், பந்துவீச்சாளர்களுக்கு நல்ல 'கிரிப்' கிடைத்தது.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்ததாகவே தோன்றியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், வில்லியம்ஸன் இருவருமே அதிக பந்துகளை எதிர்கொண்டனர்.

நியூசிலாந்து அணி 133 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்ததால், ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றியது.

ஆனால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் நெருக்கடி அளித்ததால், அடுத்த 72 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 ஆண்டுகளுக்குப் பின்..

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, ஹர்திக் பாண்டியா இருவருமே 8 ஓவர்கள் மட்டுமே வீசினர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 2011-ம் ஆண்டுக்குப்பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அதேபோல நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை இழப்பது 3வது முறை, இதற்கு முன் இலங்கை அணியிடம் 1998, 2001 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்திருந்தது.

நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 25 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வருண் சக்ரவர்த்தி அறிமுகமே அசத்தல்

ஐசிசி சாம்பியன்ஸ் போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் வருண், இதற்குமுன் ஜடேஜா, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் வருண் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், முகமது ஷமி ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர்

நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வருண் சக்வர்த்தி, அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்.

அரையிறுதி புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியுள்ளது இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதி வரை இந்திய அணி வந்துள்ளது. இந்த முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது.

துபை ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம், ஆஸ்திரேலிய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது சாதகமான அம்சமாகும்.

மற்ற வகையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்திருந்தாலும், கடுமையான சவால்களை அளிக்கிறது ஆஸ்திரேலியா. இங்கிலாந்துக்கு எதிராக 350 ரன்களை சேஸ் செய்து தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.

ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதினாலே கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது.

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 7 முறை மோதியுள்ளன. ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை மோதியதில் ஆஸ்திரேலிய அணி 3 முறையும், இந்திய அணி ஒருமுறையும் வென்றது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றியும், ஆஸ்திரேலிய அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன.

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் 2003 காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியும், 2011 காலிறுதியில் இந்திய அணியும் வென்றன. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை ஆஸ்திரேலிய அணியும் வென்றன. ஆனால் இந்திய அணி பெற்ற இரு வெற்றிகளும் காலிறுதியில் நாக்அவுட் சுற்றில் பெற்றதாகும், ஆஸ்திரேலியா லீக் சுற்றில்தான் இந்திய அணியை வென்றுள்ளது.

புள்ளிவிவரங்களைப் பொருத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன.

38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 57 முறையும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை.

இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மெக்ருக், ஸ்மித், அலெக்ஸ் கேரெ, ஹார்டி ஆகியோர் பெரிய தலைவலியாக இருப்பார்கள்.

ஹெட் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் டிராவிஸ் ஹெட். இவரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்.

பந்துவீச்சில் அனுபவமான வீரர்கள் பெரிதாக யாருமில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ் தவிர மற்றவர்கள் பெரிதாக அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீசுவதில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் பலம் சேர்ப்பார்கள்.

ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை நம்புவதைவிட பேட்டர்களை நம்பியே களமிறங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள பேட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி பழகியதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும்.

துபை ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல்முறையாக ஆடுவதால், பிட்ச்சின் தன்மையை அறிந்து பந்துவீசுவது கடினம். ஆடுகளத்துக்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் மாற்ற வேண்டிய சவால்கள் உள்ளன.

அரையிறுதி ஆட்டம் துபையில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். இதுவரை 3 லீக் ஆட்டங்களையும் இதே மைதானத்தில் ஆடியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரியும், இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய பலமாக உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn52yqkkr2go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தடுமாறும் இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மார்ச் 2025

கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன?

சாதகமான அம்சங்கள்

இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் வலுவான சுழற்பந்துவீச்சுப் படை, பேட்டிங் வரிசை என மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கு சாதகமாக பல அம்சங்கள் இந்த முறை உள்ளன. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான துபை மைதானம், அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது, சுழற்பந்துவீச்சுக்கு திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஐசிசி தொடர்களில் வல்லவர்கள்

முக்கிய வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி வந்திருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 352 ரன்களை சேஸ் செய்து பேட்டிங்கில் மிரட்டல் விடுத்தது ஆஸ்திரேலியா.

அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் விரைவாகவே ஆட்டமிழந்தநிலையில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி தங்களின் பேட்டிங் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினர்.

அனுபவம் குறைந்த வீரர்களைத்தான் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு அனுப்பி இருந்தாலும், இதுபோன்ற ஐசிசியின் முக்கியமான தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி

2011ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானது. ஆனால் அதன்பின் இந்திய அணியை நாக்அவுட் சுற்றில் வீழ்த்திவந்தது ஆஸ்திரேலிய அணி.

2015 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இந்திய அணியின் கனவுகளை தகர்த்தது ஆஸ்திரேலிய அணி.

ஆனால், அந்தப் போட்டிகளில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி முழுவலிமையுடன், திறமையான பந்துவீச்சுப்படையுடன், பேட்டிங் வரிசையுடன் இருந்தது.

ஆனால், இந்தமுறை ஆஸ்திரேலியா அணி அவ்வாறே இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த அம்சத்தைத்தான் இந்திய அணி பயன்படுத்தலாம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப்படம்

எப்படி தயாராக வேண்டும்?

ஆஸ்திரேலிய அணியிடம் கடந்த 2015 முதல் 2024ம் ஆண்டுவரை அடைந்த தோல்விகளுக்கு எல்லாம் மொத்தமாக பதில் அளிக்கும் களமாக இந்த அரையிறுதியைப் பயன்படுத்த வேண்டும் இந்திய அணி நினைக்கலாம். இந்திய அணியிடம் என்னென்ன உத்திகள் உள்ளன?

இந்திய அணியின் வெற்றி பெறுவதற்கு முழுமையாக துணை செய்ய இருப்பது சுழற்பந்துவீச்சுதான்.

துபையில் நடக்கும் ஆட்டம் என்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவாக 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்தது.

துபை மைதானம் கருப்பு மண்ணால் உருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தொடக்கத்தில் 10 ஓவர்கள்வரைதான் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஆடுகளம் நெகிழ்வுத்தன்மை அடைந்து,பந்து தேயத்தொடங்கியதம், சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கும்.

பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினமாக இருக்கும். ஆதலால், ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆளப்போவது சுழற்பந்துவீச்சாளர்கள்தான் இவர்களை எவ்வாறு பயன்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றியை நெருங்குவது எளிதாக அமையும். டிராவிஸ் ஹெட் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஆஃப்ஸ்பின்னுக்கு திணறக்கூடியவர் என்பதால், வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவை இவருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இலங்கை சுழற்பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். ஆதலால், தரமான, துல்லியமான சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்வது உறுதி.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிஸ்ட்ரி ஸ்பின்னர் - வருண் சக்ரவர்த்தி

சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுக ஆட்டத்திலேயே வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். "மிஸ்ட்ரி ஸ்பின்னர்" என அழைக்கப்படும் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சை புதிதாக களத்துக்கு வரும் பேட்ஸ்மேன் அனுமானித்து ஆடுவது கடினம்.

ஆடுகளத்தில் பிட்ச்ஆகும் பந்து லெக் ஸ்பின்னாக வருகிறதா அல்லது ஆஃப் ஸ்பின்னாக வருகிறதா என்பதை பந்து நெருங்கிவரும்போதுதான் பேட்ஸ்மேன்களால் கண்டறிய முடிகிறது.

மேலும், வருணின் பந்துவீச்சு வேகம் குறைவாக இருப்பதால், பந்து நன்கு டர்ன் ஆகி, பெரிய ஷாட்களை அடிக்க பேட்ஸ்மேன்கள் சரியான இடத்தில் பந்தை பிக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலும் கேட்ச் ஆவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் வேரியேஷனோடு பந்துவீசுவதில் வருண் திறமையானவர்.

ஆதலால், நாளை ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு கைகொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

டாப் ஆர்டர் ஜொலிப்பது அவசியம்

இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே போட்டியில் அனைவருமே சிறந்த ஸ்கோரை அடித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. டாப் ஆர்டரில் யாரேனும் இருவர், அல்லது ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

டாப்ஆர்டரில் இந்த 3 பேட்ஸ்மேன்களும் சிறந்த பங்களிப்பை ரன்களாக வழங்கினாலே ஆட்டத்தின் பெரும்பகுதி இந்திய அணியின் ஆதிக்கத்தின் கீழ்வந்துவிடும். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7வது ஓவருக்குள் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்துவிட்டனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் குறைந்தபட்சம் 30 ஓவர்கள் விளையாடிக் கொடுத்து 200 ரன்களை சேர்த்தால் மிகப்பெரிய ஸ்கோருக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல முடியும்.

அடுத்துவரும் நடுவரிசை வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அழுத்தம் குறைந்து, பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்ல டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவது அவசியமாகும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபத்பாந்தவன் ஸ்ரேயஸ் ஐயர்

சாம்பியன்ஸ் டிராபியிலும் சரி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சரி ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பு சத்தமில்லாமல் அற்புதமாக இருந்து வருகிறது. இந்திய அணி தடுமாறும் நேரங்களில் தாங்கிப் பிடிக்கும் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக, சூழலுக்கு ஏற்ப ஆடும் பேட்ஸ்மேனாக ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நடுவரிசைக்கு தூணாகவும், பேட்டிங்கில் துருப்புச்சீட்டாகவும் இருக்கப்போவது ஸ்ரேயஸ் ஐயரின் ஆட்டமாக இருக்கும். ஆதலால், ஸ்ரேயஸ் ஐயர் நடுவரிசையில் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை பெற முடியும்.

முதல் 10 ஓவர்களை பயன்படுத்த வேண்டும்

இந்திய அணி நாளை நடக்கும் ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறதா அல்லது 2 வேகப்பந்துவீச்சாளர்கள் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என கணக்கில் விளையாடுகிறதா எனத் தெரியவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சிறப்பாகச் செயல்பட்டதால், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் பட்சத்தில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக வருண் சேர்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷமி இருவரும் விளையாடலாம்.

இல்லாவிட்டால் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே அணி மாற்றமில்லாமல் களமிறங்கும் எனத் தெரிகிறது.

துபை ஆடுகளத்தில் முதல் 10 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் ஒத்துழைக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம். அதன்பின் ஸ்விங் இருக்காது என்பதால், முதல் 10 ஓவர்களை ஷமி, அர்ஷ்தீப், ராணா ஆகியோர் பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது அவசியம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம்

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்து நடுப்பகுதி ஓவர்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

20 முதல் 40 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ரன்குவிப்பை கட்டுப்படுத்திவிட்டாலே கடைசி 10 ஓவர்களில் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள். இந்த நடுப்பகுதி 20 ஓவர்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தும்பட்சத்தில் ஆட்டம் இந்திய அணி பக்கம் இருக்கும். ஆதலால் நடுப்பகுதி ஓவர்களை பந்துவீசினாலும், பேட் செய்தாலும் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம்.

ஆஸ்திரேலிய அணியில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். கூடுதலாக தன்வீர் சங்காவை தேவைப்பட்டால் களமிறக்கலாம். ஆதலால் தேர்ச்சி பெற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். மேத்யூ ஷார்ட் கனுக்கால் காயத்தால் தொடரிலிருந்து விலகியிருப்பது கூடுதல் சாதகம்.

நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்களில் இந்திய அணியைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச தேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அவசியம். ஆனால், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை வைத்திருப்பது எந்த அளவு ஆஸ்திரேலியாவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியாது.

ஸ்மித், ஹெட், மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள் என்றால் அது ஸ்மித்,ஹெட், மேக்ஸ்வெல், லாபுஷேன் ஆகியோர்தான். இவர்கள் ஓரளவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சை ஆடக்கூடிய அனுபவம் கொண்டவர்கள். அதிலும் ஆபத்தான டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெலை மட்டும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே அனுபவம் கொண்டவர்கள், இவர்களால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஐசிசி தொடர்களில் கணிக்கவும், எடைபோட முடியாது.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணி அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தத் தொடரை சந்திக்கிறது. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், இங்கிலிஸ், ஷான் அபாட், பென் வார்சூஸ் என 20 ஒருநாள் போட்டிகளில்கூட விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள்.

துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை அறிந்துள்ள ஆஸ்திரேலிய அணி எந்தமாதிரியான வியூகத்தில் களமிறங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு இல்லை என்பது ஆறுதலானது. அதிலும் குறிப்பாக கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம்.

எளிதில் எடைபோட முடியாது

ஆஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி கடந்த காலங்களில் விஸ்வரூபமெடுத்து பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செயல்படும். ஆதலால் இந்திய பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையுடனே அணுக வேண்டும். சர்வதேச போட்டிகளில் அதிகமாக ஆடி அனுபவம் இல்லாவிட்டாலும்கூட, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்களை ஆஸ்திரேலிய அணி களமிறக்கியுள்ளது. 352 ரன்களை எளிதாக சேஸ் செய்துள்ளதால் பேட்டிங்கில் எளிதாக எந்த வீரரையும் எடை போட முடியாது.

இந்தியா, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வதுமுறையாக முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதிவரை இந்திய அணி வந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளநிலையில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது, ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியுடன் இருக்கிறது, ஒருபோட்டியில் முடிவு இல்லை.

ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன.

38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 போட்டிகளிலும், இந்திய அணி 57 போட்டிகளிலும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு இல்லை.

இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரெ, பென் வார்சூயஸ், நேதன் எல்லீஸ், பேரேசர் மெக்ருக், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா, கூப்பர் கான்லே

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c9vyg3mdmlmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஆல் அவுட்- இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியது எப்படி?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற, 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ள இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்யும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

இந்திய பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக, டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனொலி களமிறங்கினார். கூப்பர், தொடக்கம் முதலே சற்று தடுமாறி வந்த நிலையில், மூன்றாவது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பொறுப்பை உணர்ந்து விளையாடத் தொடங்கினார். ஸ்மித்- டிராவிஸ் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், எட்டாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் டிராவிஸ்.

அவர் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன், 33 பந்துகளில், 39 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், டிராவிஸ் எந்த ரன்னும் எடுக்காமல் இருந்தபோதே, அவர் கொடுத்த கேட்சை ஷமி தவறிவிட்டார்.

டிராவிஸ் வெளியேறிய பிறகு, மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 ஓவர்களுக்குள், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பின்னர், கிட்டத்தட்ட 13 ஓவர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களால், ஸ்மித்- மார்னஸ் ஜோடியை பிரிக்க முடியவில்லை. அதேசமயம், ஷமி, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் அதிக ரன்களையும் கொடுக்காமல் சிறப்பாகவே பந்துவீசினர்.

பிறகு 22-வது ஓவரில், ஜடேஜா வீசிய பந்தில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார் மார்னஸ். அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார் கேப்டன் ஸ்மித்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வருண் சக்கரவர்த்தி

ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் ஸ்மித்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார்

26வது ஓவரில், தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்மித். 68 பந்துகளில் 50 ரன்களை எட்டியிருந்தார். அதற்கு அடுத்த ஓவரில், ஆஸ்திரேலிய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. ஜடேஜா பந்தில், விராத் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ்.

சிறப்பாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஸ்மித் 36 ரன்களில் இருந்தபோதே கொடுத்த ஒரு கேட்சை ஷமி தவறவிட்டார்.

ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கிய நிலையில், ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அடுத்ததாக க்ளென் மேக்ஸ்வெல், 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து, அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது, 37.3 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய இரு விக்கெட்டுகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் ஸ்மித், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்

ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெலின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின என்றே கூறலாம். 50 ஓவர்களில் 270 ரன்களையாவது ஆஸ்திரேலியா எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. 45வது ஓவரில், வருண் சக்கரவர்த்தி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார்.

29 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸை அவர் வெளியேற்றினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் கேரியும் சற்று நேரத்தில் ரன் அவுட் ஆகியது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

அவர் 57 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரியத் தொடங்கின, குறிப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

49.3 ஓவர்களின் முடிவில், 10 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு, 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாஸை இழந்த இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இதுவரையிலான நான்கு ஆட்டத்திலும் இந்திய அணி டாஸ் வெல்லவில்லை

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இதுவரையிலான நான்கு ஆட்டத்திலும் இந்திய அணி டாஸ் வெல்லவில்லை. ஆனாலும், 3 ஆட்டங்களில் வெற்றியே பெற்றுள்ளது.

டாஸ் இழந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, "நான் இரண்டிற்கும் (பேட்டிங் மற்றும் பந்துவீச்சு) தயாராக இருந்தேன். இங்குள்ள விக்கெட்டுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. இரண்டு மனமாக இருக்கும்போது, டாஸை இழப்பது தான் நல்லது." என்று கூறினார்.

இந்த போட்டிக்கான தங்களது அணியில் (Playing 11) ஆஸ்திரேலியா இரண்டு மாற்றங்களைச் செய்தது. தொடக்க வீரர் மேட் ஷார்ட் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக கூப்பர் கோனொலியும், வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்காவும் சேர்க்கப்பட்டனர்.

கடந்த ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqx024z14p7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடக்கும் நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதும். வரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் இறுதிப் போட்டி நடக்கிறது.

இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியா-இலங்கை அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. மற்ற இருமுறையும் பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி 2017-ம் ஆண்டுக்குப் பின், இரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல், 2024 டி2உலகக் கோப்பை பைனல் ஆகியவற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 2024 டி20 உலகக் கோப்பையை மட்டும்தான் இந்திய அணி வென்றுள்ளது. மற்ற 3 ஐசிசி போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வெல்லவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின் அந்த பட்டத்தை வெல்ல இந்த வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்தும்.

துபையில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 264 ரன்களை அநாசயமாக சேஸ் செய்து இந்திய அணி அசத்தியது.

2011-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி நாக்அவுட்டில் முதன் முறையாக இந்தியா தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.

'சேஸ் மாஸ்டர்' கோலியின் ஆட்டம்

போட்டிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில் "ஒருநாள் போட்டிகளில் நான் பார்த்த வகையில் மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி மட்டும்தான். இதில் விவாதத்துக்கு இடமே இல்லை, அவரின் புள்ளிவிவரங்களே அவரின் முக்கியத்துவத்தை சொல்லும்" என புகழாரம் சூட்டியிருந்தார்.

உண்மையில் விராட் கோலியின் நேற்றைய முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து ஆகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய கோலி நேற்றும் மிகுந்த பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 84 ரன்கள் சேர்த்தார்.

விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் எந்தவிதமான பதற்றமோ, ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தமோ, தவறான ஷாட்களை அடிக்க முயன்றதோ என ஏதும் இல்லை. 30 ரன்களில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தவுடன் களமிறங்கிய கோலி, அணியின் சூழலை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்தார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி, அவர்களுடன் "மைண்ட் கேமில்" விளையாடிய கோலி, பவுண்டரி, சிக்ஸர் என பெரிதாக அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன் என ரன் சேர்த்தார்.

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தையும், இந்த ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸையும் விளையாடி பதில் அளித்துள்ளார். இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களின் 45 பந்துகளை சந்தித்து 44 ரன்களை எடுத்துள்ளார். அதில் 13 டாட் பந்துகளாகும். அதுமட்டுமல்லாமல் கிடைக்கின்ற இடைவெளியில் ஒரு ரன், இரு ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். கோலி 26 சிங்கிள்களையும், 3 இரு ரன்களையும் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி ஜொலித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

தன்னுடைய ஆட்டம் குறித்து கோலி பேசுகையில் " பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் போலத்தான் இந்த ஆட்டமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் சூழலை அறிந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என அறிந்து ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அரையிறுதி, பைனல் போன்றவற்றில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நம் கைவசம் அதிகமான விக்கெட்டுகள் வைத்திருந்தாலே எதிரணியினர் தாங்களாகவே ரன்களை நமக்கு வழங்குவார்கள். எனக்கு சதம் அடிப்பது முக்கியமல்ல, பீல்டர்களுக்கு நடுவே ஒரு ரன், 2 ரன்கள் எடுப்பதில்தான் மகிழ்ச்சி. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸ், இந்த இன்னிங்ஸில் என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

சர்வதேச அளவில் சேஸ் மாஸ்டர் என்று இன்றைய காலகட்டத்தில் விராட் கோலியை மட்டுமே அழைக்க முடியும். சேஸிங்கில் மட்டும் 8 ஆயிரம் ரன்களை கோலி கடந்து, சச்சினுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி சேஸிங்ஸில் 64 ரன்கள் சராசரி வைத்து ஏபி டிவில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்த 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை, சச்சின் அடித்ததைவிட 11 சதங்களை கூடுதலாக சேஸிங்ஸில் கோலி அடித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

ஹெட்டை சாய்த்த வருண் சக்ரவர்த்தி

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

இந்திய அணிக்கு எப்போதுமே தலைவலியாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட். கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக 1000 ரன்களுக்குமேல் அடித்து குடைச்சல் கொடுத்து வந்தவர் டிராவிஸ் ஹெட். ஐசிசி டெஸ்ட் சாம்பியஸ்ஷிப், உலகக் கோப்பை, பார்டர்-கவாஸ்கர் தொடர் என அனைத்திலும் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்தது.

இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி 11 பந்துகளில் ஒரு ரன் சேர்த்திருந்த ஹெட், அதன்பின் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கத் தொடங்கி, தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அக்ஸர், குல்தீப் பந்துவீசியும் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. 9-வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஸ்மித் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹெட்டிடம் வழங்கினார்.

சர்வதேச அரங்கில் வருண் பந்துவீச்சில் முதல் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த இந்த தருணம் இந்திய அணி அடுத்த அடி எடுத்துவைக்க நம்பிக்கையை அளித்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து உற்சாகத்துடன் பந்துவீசவைத்தது.

மீண்டு(ம்) வந்த ஷமி

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

காயத்திலிருந்து ஓராண்டுக்குப்பின் அணிக்குத் திரும்பிய ஷமியின் பந்துவீச்சு குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து தொடரில் பெரிதாக பந்துவீசாத ஷமி, சாம்பியன்ஸ் டிராபியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் ஷமியின் பந்துவீச்சு மெருகேறிக் கொண்டே வந்துள்ளது.

துபை மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது, அதிலும் முதல் 10 ஓவர்களுக்குப் பின் ஸ்விங் செய்ய சிரமமாக இருக்கும் நிலையில் 10 ஓவர்களுக்குள் ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார்.

இந்த ஆட்டத்திலும் தொடக்கத்திலேயே கனோலி விக்கெட், செட்டில் பேட்டர் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததுடன் நேதன் எல்லிஸ் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். அதிலும் முதல் இரு விக்கெட்டுகள், ஸ்மித்தை வெளியேற்றியது ஆகியவை ஷமியின் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சுக்கு உதாரணம். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப்

இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் விரைவாகவே சுப்மன் கில், ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்ததும் தடுமாறியது. அப்போது 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்திய அணியின் கையை ஓங்கச் செய்தனர். இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அமைத்த வியூகங்களை கோலி தகர்த்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சை அவர் எளிதாக சமாளித்து ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்துவீச்சை ஆடுவதில் வல்லவர் என்பதால் அவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வி அடைந்தனர். இருவரின் பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் இருந்து நிமிர்ந்தது.

ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின் அக்ஸர் படேலுடன் 44 ரன்கள், ராகுலுடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோலி, இந்திய அணியின் இன்னிங்சை அருமையாக கட்டியெழுப்பினார். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும்தான் இந்த ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பின.

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

நிரூபித்த ராகுல்

சாம்பியன்ஸ் டிராபிக்கு ரிஷப் பந்தை ப்ளேயிங் லெவனில் களமிறக்கலாமா அல்லது கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாமா என தொடக்கத்தில் இந்திய அணியில் பெரிய ஆலோசனை நடந்தது. ஆனால் ஐசிசி தொடர்களில் அனுபவம் மிகுந்த ராகுல் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை நேற்று கே.எல்.ராகுல் நிறைவேற்றிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியையும் செவ்வனே செய்து முடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல்.ராகுல், நடுவரிசையில் ஆங்கர்ரோல் எடுத்து விளையாடவும் முடியும் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்துள்ளார், இந்திய அணியின் பேட்டிங்கை நடுவரிசையில் வலுவாகக் கொண்டு செல்வதில் முக்கிய பேட்டராக ராகுல் இருந்து வருகிறார். 84 ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை நேற்று ராகுல் கடந்தார், இதில் ஸ்ட்ரைக் ரேட் 88ஆக வைத்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் 34 பந்துளில் 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் ஆடியுள்ள ராகுல், இதுவரை 919 ரன்களை குவித்து 61.26 சராசரி வைத்துள்ளார். ராகுலின் பொறுப்பான பேட்டிங், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தது, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் இருந்த அழுத்தத்தை குறைத்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce98x4z97xyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மேத்யூ ஹென்றி

  • பதவி, பிபிசி விளையாட்டுச் செய்தியாளர் துபை

  • 5 மார்ச் 2025, 07:42 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரன் எடுப்பது பற்றி விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் தன்னுடைய சிறந்த பேட்டிங் போட்டியாளரான விராட் கோலியை புகழ்வதில் அவர் தாமதிக்கவில்லை.

துபையில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணி வெற்றி இலக்கை எட்டும் வரை களத்தில் இல்லாது போயிருக்கலாம். ஆனால், இந்தியா மீண்டும் ஒரு முறை சிறந்த சேஸிங் மூலம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

"இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கும் பேட்டர்களில் சிறந்தவர் யார் என்று விவாதித்தால், அது அவர் தான்" என கோலி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆனால் இதில் விவாதத்திற்கே இடமில்லை. புள்ளிவிவரமே, கோலியே இதில் தலைசிறந்தவர் என்பதைக் காட்டுகிறது.

கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா?

கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா? என்ற கேள்விக்கு எளிமையான பதில் "ஆம்".

இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 84 ரன்கள் குவித்தார் கோலி. சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அவரது சராசரி 64.50. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க பேட்டர் ஏ.பி. டி வில்லியர்ஸைக் காட்டிலும் 8 ரன்கள் அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது வந்தவை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை விட கோலி 11 சதங்கள் அதிகம் அடித்துள்ளார்.

இந்தியா சேஸிங்கில் வெற்றியடைந்த போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 89.50 என மிகப்பெரியதாக உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோலி அடித்த 51 சதங்களில் 28 சேஸிங்கில் அடித்தவை

கோலி சொல்லும் சேஸிங் ரகசியம் என்ன?

போட்டியின் அழுத்தத்தை தனது தோள்களில் சுமந்தவாறே ரன்களை சேர்க்கும் அசாத்தியத் திறமை கோலியிடம் உள்ளது.

"இந்த போட்டி முழுமையாக அழுத்தத்தை தாங்குவதைப் பொருத்தது, குறிப்பாக அரையிறுதி, இறுதி போன்ற பெரிய போட்டிகளின் போது நிலைத்து நின்று நீண்ட இன்னிங்சை ஆடுகையில், அணியின் கைவசம் விக்கெட்டுகள் இருக்கும் பட்சத்தில், எதிரணியினர் தாமாகவே விட்டுக்கொடுத்து விடுவார்கள். போட்டியை வெல்வதும் எளிதாகிவிடும்" செவ்வாய்க்கிழமை நடந்த போட்டிக்குப் பின்னர் விராட் கோலி இவ்வாறு கூறினார்.

கோலியின் சிறந்த திறன் என்பது ஒன்றிரண்டு ரன்களாகச் சேர்ப்பது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை ஒன்றிரண்டாக எடுத்துள்ளார் கோலி. இவர் எப்போதுமே இடைவெளியை கவனித்து பேட்டிங்கை ரொட்டேட் செய்வதன் மூலம், பேட்டர்கள் மீது அழுத்தம் தருவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதில்லை.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோலியின் சிறந்த திறன் என்பது சிங்கிள் ரொட்டேட் செய்வது

"விளையாட்டின் போது உங்களைத் தூண்டும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்" என்கிறார் விராட் கோலி.

"என்னைப் பொருத்தவரையிலும் எத்தனை ஓவர்கள் எஞ்சியிருக்கின்றன, எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை அறிவது தூண்டுவதாக இருக்கும்"

"தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ரன்னாக இருந்தால் கூட, கையில் 6 அல்லது 7 விக்கெட்டுகள் இருந்தால் நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் உங்களுக்குத் தெரியும். களத்தில் நிலைத்து ஆடும் 2 பேட்டர்கள் போட்டியின் போக்கையே மாற்றி விடுவார்கள். கடைசி கட்டத்தில் எதிரணி விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து திருப்திப்பட்டுக் கொள்ளலாம். போட்டியை வெல்ல முடியாது." என்றார் கோலி.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் , கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசி வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்தில் இது இல்லை, ஆஃப் ஸ்டம்ப்-க்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலியின் சராசரி 50க்கும் மேலாக இருக்கிறது.

அவரை ஒரு திட்டமிடலோடு சீக்கிரமாக வீழ்த்தாவிட்டால், எதிரணிக்கு சிக்கல்தான்.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 6 ஆக இருந்தால் கூட, கைவசம் விக்கெட் இருந்தால் கவலை இல்லை

'இது அடிமேல் அடி வைத்து முன்னேறுவது'

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்றிரண்டு ரன்களாக ரொட்டேட் செய்வதில் கோலி சிறந்தவராக இருக்கிறார். தான் எதிர்கொண்டதில் 33% பந்துகளை மட்டுமே அவர் ரன் எடுக்காமல் விட்டுள்ளார்.

இதே மைதானத்தில் 250 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணியின், பேட்டர் வில்லியம்சனின் டாட் பால் 57.5% ஆகும்.

பவுண்டரியே அடிக்காமல் ஸ்கோரை உயர்த்தி கொண்டே இருந்திருக்கிறார் கோலி.

ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆடம் ஸம்பா போன்ற லெக் ஸ்பின்னர்களையும் தந்திரமாக எதிர்கொண்டு, ரன்களை கோலி சேர்த்தார். ஆடம் ஸம்பா இதற்கு முன்பு ஒரு நாள் போட்டிகளில் 5 முறை கோலி விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இந்த போட்டியிலும் 6வது முறையாக கோலி விக்கெட்டை ஸம்பா வீழ்த்தினார். ஆனால், அந்த நேரத்தில் இந்திய அணிக்கு வெற்றி எட்டிவிடும் தூரத்திலேயே இருந்தது.

விராட் கோலி, இந்தியா - ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,Getty Images

"சதம் பற்றி கவலை இல்லை"

முடிவில் ஒரே ஆச்சரியம் என்னவென்றால் அவர் மூன்றிலக்க ரன்களை எட்டவில்லை என்பது தான்.

"நீங்கள் தனிப்பட்ட இலக்குகளை பற்றி யோசிக்காவிட்டால், வெற்றி நிகழும் போது அதுவும் தாமாகவே நடக்கும்" என சதத்தை தவற விட்டது குறித்து கோலி பேசுகிறார்.

"என்னைப் பொருத்தவரை, வெற்றியில் பெருமை கொள்வது மற்றும் அணிக்கு சிறந்தது எதுவோ அதை செய்வது தான் முக்கியம். மூன்றிலக்க ரன்களை எட்டினால் சிறப்பு. இதுபோன்ற போட்டிகளில் சதத்தை எட்டும் முன் அவுட்டானாலும், அணிக்கு கிடைக்கும் வெற்றி, வீரர்களுடன் டிரெஸ்ஸிங் அறையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்" என்கிறார் கோலி.

"அதுபோன்ற விஷயங்கள் (சதம் அடிப்பது) இனி பெரிதல்ல. ஒரு படி மேலே சென்று அணிக்கான வேலையைச் செய்வது தான் முக்கியம்" என்கிறார் கோலி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly6mdl1g1mo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்?

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க.போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.

லாகூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது.

இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபையில் நடக்கும் ஃபைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது.

2வது முறை மோதல்

சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது.

ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது.

7-வது ஐசிசி ஃபைனல்

ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது.

நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

ரவீந்திரா 5வது சதம்

ரச்சின் ரவீந்திரா, NewZealand Vs South Africa, NZ Vs SA

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார்

நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர்.

சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும்.

ரவீந்திரா அடித்த 5 சதங்களும் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட தொடர்களில் அடிக்கப்பட்டவை. அதாவது, 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களும், இந்த தொடரில் 2 சதங்களும் ரவீந்திரா அடித்துள்ளார். இதுநாள் வரை, எந்த கிரிக்கெட் வீரரும் தனது முதல் 5 சதங்களை ஐசிசி தொடர்களில் மட்டும் அடித்தது இல்லை.

வங்கதேசத்தின் மகமதுல்லா 4 சதங்கள் மட்டுமே ஐசிசி தொடர்களில் அடித்தநிலையில் அதையும் ரவீந்திரா முறியடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபியில் மட்டும் ரவீந்திராவின் சராசரி 67 ஆக இருக்கிறது.

கேன் வில்லியம்ஸன், NewZealand Vs South Africa, NZ Vs SA

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நேற்று 3வது சதத்தை வில்லியம்ஸன் பதிவுசெய்தார்

வில்லியம்ஸனின் ஹாட்ரிக் சதங்கள்

கேன் வில்லியம்ஸன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சதத்தை பதிவுசெய்தார். ஏற்கெனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் சதத்தையும் (109), பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2வது சதத்தையும் (133), நேற்று 3வது சதத்தையும் வில்லியம்ஸன் பதிவுசெய்தார்.

அது மட்டுமல்லாமல், வில்லியம்ஸன் இந்த போட்டியில் முதல் 57 பந்துகளில் மெதுவாக பேட் செய்து 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் மட்டுமே சேர்த்து 70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அடுத்த 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து சதம் விளாசினார். இது தவிர, நடுவரிசை பேட்டர்கள் டேரல் மிட்ஷெல்(49), கிளென் பிலிப்ஸ்(49) இருவரும் கேமியோ ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.

பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லாகூரின் தட்டையான மைதானத்தை நன்கு பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும், கேப்டன் சான்ட்னர், முக்கிய விக்கெட்டுகளான பவுமா, வேன்டர் டூ சென், கிளாசன் விக்கெட்டுகளைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

நியூசி-தெ. ஆப்ரிக்கா பந்துவீச்சு ஒப்பீடு

நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 28 ஓவர்களை வீசி, 143 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய அளவு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைகூட சாய்க்கவில்லை, 93 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி 269 ரன்களை வாரி வழங்கினர். இதில், 3 ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 70 ரன்களுக்கு மேல் வழங்கினர்.

தென் ஆப்ரிக்க அணியின் டாப்ஆர்டர் பவுமா(56), வேன்டர் டூசென்(69) ஆகியோர் தவிர, நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு முக்கியக் காரணம். 21-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்தது, 116 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதேசமயம், இதே ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்து, டெத் ஓவர்களை அருமையாகப் பயன்படுத்தியது.

ஆறுதல் தந்த மில்லர் சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு நேற்று ஒரே ஆறுதலான அம்சம், டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தது மட்டும்தான். சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த பேட்டர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். இதற்கு முன் சேவாக் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அதை மில்லர், இதற்கு முன் ஜோஸ் இங்கிலிஸ் முறியடித்தனர்.

டெய்லெண்டர் லுங்கி இங்கிடியை வைத்துக்கொண்டுதான் மில்லர் தனது சதத்தில் 96 சதவிகித ரன்களையும் சேர்த்தார். 10-வது விக்கெட்டுக்கு இங்கிடி, மில்லர் 56 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 54 ரன்கள் சேர்த்தபோது இங்கிடி ஒரு ரன் சேர்த்தார். மில்லர் தனது கடைசி 26 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.

டேவிட் மில்லர், NewZealand Vs South Africa, NZ Vs SA

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தார்

தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு காரணம் என்ன?

தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் தோல்வியும் பிரிக்க முடியாததாகவிட்டது. இதுவரை பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்றிருந்தாலும், அரையிறுதி கடந்தது மிகச்சிலமுறைதான். அரையிறுதியோடு தென் ஆப்பிரிக்கா தனது போராட்டத்தை, பயணத்தை முடித்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

இதுவரை 11 முறை ஐசிசி நாக்அவுட் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அதில் 2 முறைதான் வென்றுள்ளது. 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இதைக் கடந்து பெரிதாக கோப்பையை வெல்லவில்லை. 2வது கோப்பையை நோக்கிய பயணம் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் தொடர்கிறது. கடைசி 5 அரையிறுதிகளில் ஒன்றில்கூட தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை.

வலிமையான வேகப்பந்துவீச்சு, விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் இதுபோன்ற முக்கியத்துவமான போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஆடுகளத்தைப் பயன்படுத்தி நேற்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யவில்லை, லைன் லென்த்தில்கூட பெரும்பாலும் வீசவில்லை, தட்டையான ஆடுகளத்தில் வேகத்தை அதிகப்படுத்தி, பவுன்ஸராக வீசியது நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எளிதானது.

தென் ஆப்பிரிக்க பேட்டிங்கும் தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கேப்டன் பவுமா, வேண்டர் டூ சென் ஆடினர். 143 ரன்களுக்கு 2 விக்கெட் என, நியூசிலாந்து ரன்ரேட்டுக்கு இணையாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது.

ஆனால், டூசென் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் தொடர்நது விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக 161 ரன்களில் இருந்து 218 ரன்களுக்குள், அதாவது 57 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணம். நடுவரிசை நம்பிக்கை பேட்டர்கள் மார்க்ரம் (31), கிளாசன்(3), முல்டர்(8), யான்சென்(3) ரன்கள் சேர்த்து ஏமாற்றினர்.

லாகூர் ஆடுகளம் தட்டையானது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்கூட நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் இருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். இதே மைதானத்தில்தான் இங்கிலாந்தின் 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. தென் ஆப்பிரி்க்காவின் கிளாசன், மார்க்கரம் ஆகிய இரு பெரிய பேட்டர்களும் நிலைத்து பேட் செய்திருந்தால் அடுத்தடுத்து அழுத்தத்தைக் கொடுத்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருக்கலாம்.

கிளாசன், NewZealand Vs South Africa, NZ Vs SA

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கிளாசன்

'பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம்'

தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், "நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு சற்று அதிகம்தான். நாங்களும் சிறப்பாகவே பேட் செய்தோம் என நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 350 என்பது அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். இன்னும் இரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், டூசென், எனக்கும் தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 35 ஓவர்கள் வரை நானும், டூசெனும் பேட் செய்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பேட்டிங்கில் நடுவரிசை ஏமாற்றமளித்தது" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vydkwx8ezo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை அச்சுறுத்தும் நியூசிலாந்தின் 5 வீரர்கள் யார்?

இந்திய அணியை அச்சுறுத்தும் நியூசிலாந்தின் 5 வீரர்கள்?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க.போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 33 நிமிடங்களுக்கு முன்னர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2000ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.

ஆனால், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது, 3 முறை நியூசிலாந்து அணி வென்று வலிமையாக இருக்கிறது.

3 தோல்விகள்

2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி, 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்று லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனங்களை நியூசிலாந்து நொறுங்கச் செய்தது.

ஆனால் 2023 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி பழிதீர்த்தது.

இந்நிலையில் மீண்டும் இரு அணிகளும் கோப்பைக்கான கோதாவில் இறங்கியுள்ளன. புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது இந்திய அணியைவிட நியூசிலாந்து அணி வலிமையாகவே இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் இந்திய அணி 60 வெற்றிகளும், நியூசிலாந்து 50 வெற்றிகளும் பெற்றுள்ளன. 7 போட்டிகளில் முடிவு ஏதும் எட்டவில்லை.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியும் கடைசியாக 2013ம் ஆண்டுக்குப்பின் வெல்லவில்லை, ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்லும் தாகத்தோடு இருக்கிறது, அதேபோல 25 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவும் நியூசிலாந்து போராடும்.

இந்திய அணி

பட மூலாதாரம்,Getty Images

சளைத்தவர்கள் இல்லை

இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமவலிமையோடுதான் இருக்கின்றன. இரு அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்திய அணியில் ஷமி, அர்ஷ்தீப், ஹர்திக் இருப்பதைப் போல் ஹென்றி, ரூர்க், ஜேமிஸன் உள்ளன. சுழற்பந்துவீச்சில் வருண், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் இருப்பதைப் போல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல், டேரல் மிட்ஷெல் என வரிசையாக வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கிலும் இந்திய அணியைப்போல் 8-வது வீரர் வரை பேட்டர்களை வைத்துள்ளது நியூசிலாந்து அணி.

ஆதலால், ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இந்திய அணியை எச்சரிக்கை செய்யும் விதத்தில், பந்துவீச்சு, பேட்டிங்கில் சவாலாக இருக்கக்கூடிய 5 வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

டேவன் கான்வே

டேவன் கான்வே

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டேவன் கான்வே

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை கான்வே இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பைனல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில், அதிலும் இந்தியாவுக்கு எதிராக கான்வேயின் ஆட்டம் தனித்துவமாக இருக்கும். 4 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கான்வே விளையாடியுள்ள நிலையில் இறுதி போட்டியில் களமிறங்கினால் இடதுகை பேட்டர் கான்வேயின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

இந்திய அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடிய கான்வே ஒரு சதம் உள்பட 230 ரன்கள் சேர்த்துள்ளார், 92 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தொடக்கத்திலேயே கான்வே விக்கெட்டை வீழ்த்துவது இந்திய அணிக்கு பாதுகாப்பானது, இல்லாவிட்டால் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிய சவாலாக இருப்பார்.

ரச்சின் ரவீந்திராவின் விஸ்வரூபம்

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,Getty Images

நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனாக ரவீந்திரா இருக்கிறார். இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பெரிய சவாலாக ரவீந்திரா இருப்பார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலயே ரவீந்திரா 2வது சதத்தை நிறைவு செய்து மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய ரவீந்திராவின் பேட்டிங் நிச்சயம் சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபில் 3 போட்டிகளில் 226 ரன்கள் சேர்த்து 75 சராசரி வைத்துள்ளார்.

பந்துவீச்சிலும் நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசக்கூடியவர். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திரா, மெதுவாக பந்துவீசி, பேட்டர்களை திணறடிப்பார். இந்திய அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் 3 ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ரவீந்திரா ஆட்டமிழந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் ரவீந்திரா எளிதாக ஆட்டமிழக்கமாட்டார், கடும் சவலாக இருப்பார் என நம்பலாம்.

நடுப்பகுதியில் சான்ட்னர் சுழற்பந்துவீச்சு

மிட்ஷெல் சான்ட்னர் பந்துவீச்சை சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய பேட்டர்கள் மறந்திருக்கமாட்டார்கள். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரிந்து வேகத்தைக் குறைத்து, பந்தை டாஸ் செய்து வீசுவதில் சிறந்தவர். நடுப்பகுதி ஓவர்களில் சான்ட்னர் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில்கூட சான்ட்னர் நடுப்பகுதியில் பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பந்துவீசுவதில் சான்ட்னர் வல்லவர். 4 போட்டிகளில் இதுவரை 7 விக்கெட்டுகளை சான்ட்னர் எடுத்துள்ளார். நடுவரிசையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், கோலி, ராகுல், அக்ஸர் ஆகியோருக்கு சான்ட்னர் பந்துவீச்சு சவாலாக இருக்கும்.

மிட்ஷெல் சான்ட்னர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மிட்ஷெல் சான்ட்னர்

வில்லியம்ஸன் பேட்டிங் ஃபார்ம்

முன்னாள் கேப்டன் வில்லியம்ஸன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலைதரக்கூடிய அம்சம்.

களத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டால் இவரின் விக்கெட்டை சாய்ப்பது கடினம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த வில்லியம்ஸன், இந்திய அணி்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் 81 ரன்கள் சேர்த்து தனது ஃபார்மை நிருபித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சை நன்றாகக் கையாளக்கூடிய வில்லியம்ஸன், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன், ரவீந்திரா இருவரும் சேர்ந்து 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சையும் அனாசயமாகக் கையாண்டனர் என்பதால் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்கக்கூடிய வீரர்களில் வில்லியம்ஸனும் ஒருவர்.

வில்லியம்ஸன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வில்லியம்ஸன்

ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக வில்லியம்ஸன் 2952 ரன்கள் சேர்த்து 47 சராசரியும், 86 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்து வலுவாக இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக 30 ஒருநாள் போட்டிகளில் ஆடிய வில்லியம்ஸன் 1228 ரன்கள் சேர்த்துள்ளார், 45 சராசரி வைத்து 75 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். வில்லியம்ஸன் இரு அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆயிரம் ரன்களை ஒருநாள் போட்டியில் கடந்துள்ளார், அதில் ஒன்று இந்திய அணி மற்றொன்று பாகிஸ்தான். ஆதலால் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே வில்லியம்ஸன் சிறப்பாக ஆடக்கூடியவர்.

ஹென்றியின் வேகப்பந்துவீச்சு

இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கிற்கு பெரிய அச்சுறுத்தலை தரக்கூடிய பந்துவீச்சாளர் மாட் ஹென்றி. கடந்த போட்டியில் முதல் 10 ஓவர்களுக்குள்ளே கில், கோலி விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹென்றி இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 10 ஓவர்கள்வரை ஹென்றியின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கல் சமாளித்து ஆடிவிட்டால் அதன்பின் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காது. இந்திய அணி சமாளித்துவிடும்.

ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் 7 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் ஹென்றி பாதியிலேயே வெளியேறினார். இன்னும் காயத்தால் முழுமையாக ஹென்றி குணமடையவில்லை என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஹென்றி இறுதிப் போட்டியில் பந்துவீசவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஹென்றியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜேமிஸன், ரூர்க் ஆகியோரிடம் துல்லியம், லைன்லெத் இருக்காது என்பதால் எளிதாக இந்திய பந்துவீச்சாளர்கள் சமாளித்து விடுவார்கள்.

ஹென்றி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹென்றி

மறக்க முடியாத தோல்விகள்

நியூசிலாந்திடம் ஐசிசி நாக்அவுட் போட்டிகளி்ல் இந்திய அணி அடைந்த அனைத்து தோல்விகளும் இன்னும் ஆறாத ரணமாக இருக்கின்றன.

குறிப்பாக 2000ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றியவர் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ்.

இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி(113), சச்சின்(69) இருவரும் 149 ரன்கள் சேர்த்து முதல் விக்கெட்டுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் ராகுல் திராவிட்(28), யுவராஜ் சிங்(18), வினோத் காம்ப்ளி(1), ராபின்சிங்(13) என அனைவரும் சொதப்பியதால் 269ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.

265 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 24 ஓவர்களில் 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அப்போது ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் கெயின்ஸ், கிறிஸ் ஹேரிஸ் இருவரும் அமைத்த 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.

இந்த பார்ட்னர்ஷிப்பை கடைசியில்தான் வெங்கடேஷ் பிரசாத் உடைத்தார். ஆனால், கிறிஸ் கெயின்ஸ் சதம் அடித்து 102 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வெற்றியின் விளிம்புவரை இந்திய அணி சென்றும், கெயின்ஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் கடைசி 2 பந்துகளில் தோல்வி அடைந்தது.

2019 தோனியின் ரன்அவுட்

2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி அடைந்த தோல்வியும் மறக்க முடியாதது.

நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்விக்குழிக்குள் சென்றது.

ஆனால், ரவீந்திர ஜடேஜா, தோனி இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தோனி களத்தில் இருப்பதால் வெற்றி குறித்த நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. 216 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றியை நெருங்கியது,ஆனால், 48.3 ஓவரில் தோனியை மார்டின் கப்தில் செய்த ரன்அவுட் ஆட்டத்தையே திருப்பிப் போட்டு வெற்றி நியூசிலாந்து வசமாகியது.

2019ம் ஆண்டு அணியில் இருந்த வில்லியம்ஸன், டாம் லேதம், ஹென்றி, சான்ட்னர் ஆகிய 4 பேருமே சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தோனியின் ரன்அவுட்

பட மூலாதாரம்,Getty Images

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி

2021ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது நியூசிலாந்து அணிதான். அந்த அணியில் இருந்த பலர் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுகிறார்கள். டாம் லேதம், டேவன் கான்வே, ஜேமிஸன், வில்லியம்ஸன் ஆகியோர் இப்போது விளையாடுகிறார்கள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய பேட்டர்களை வீழ்த்தியதில் ஜேமிஸன் பந்துவீச்சு முக்கியப் பங்கு விகித்தது. இங்கிலாந்து காலநிலை, சவுத்தாம்டன் சூழல், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் ஆகியவை நியூசிலாந்துக்கு சாதகமா அமைந்தது. ஜேமிஸ் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

அந்த போட்டியில் டேவன் கான்வே, வில்லியம்ஸன் பேட்டிங், பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மற்ற பேட்டர்களை விரைவாக வெளியேற்றியநிலையில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய நீண்டநேரம் எடுத்தனர். 2வது இன்னிங்ஸில் வில்லியம்ஸன் அரைசதம் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றும் கிடைத்த வாய்ப்பை நியூசிலாந்திடம் பறிகொடுத்தது இந்திய அணி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgj517z4lj7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத 2000: பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா? இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதல்

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க.போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 9 மார்ச் 2025, 02:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு என்பதை முடிவு செய்ய நாளை துபையில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளுமே ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் கடந்த காலங்களில் ஐசிசி கிரிக்கெட் பயணத்தைக் கடந்துள்ளனர். இந்த சாம்பியன்ஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி மீதும், ரோஹித் சர்மா மற்றும் கோலி மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஆனால், அவை அனைத்தும் போட்டித் தொடர் முடியும் தருவாயில் கரைந்துவிட்டன. இதுவரை 3 லீக், அரையிறுதி என 4 போட்டிகளிலும் வென்று இந்திய அணி வீறுநடை போடுகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும் மற்ற போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மறக்க முடியாத 2000

நியூசிலாந்தும், இந்தியாவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டு பந்துகள் மிச்சமிருந்தபோது இலக்கை எட்டி, இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போது மீண்டும் அதே நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பின் மோதுகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்த போட்டியை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

40 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வம் காணப்படுகிறது. துபை கிரிக்கெட் நிர்வாகம் டிக்கெட் விற்பனையைத் தொடங்கிய 40 நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதால், அரங்கு நிறைந்து ரசிகர்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள்

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

ஐசிசி தொடரில் யார் ஆதிக்கம்?

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 86 ஐசிசி போட்டிகளில் பங்கேற்று அதில் 70 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த இடத்தில் தலா 49 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 3 அணிகளுமே தலா 77 போட்டிகளில் விளையாடியுள்ளன.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள 14 ஐசிசி போட்டித்தொடர்களில் 12 முறை இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 4 முறை அரையிறுதியிலும், 5 முறை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்து அணியும் ஐசிசி தொடர்களில் நிலையாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 8 முறை நாக்அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, 4 முறை அரையிறுதியிலும் 3 முறை இறுதிப்போட்டியிலும் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியனானது.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

சுழற்பந்துவீச்சு பலம்

இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கிறது. இந்திய அணியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, அக்ஸர் படேல், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என வெவ்வேறு கோணங்களில் பந்துவீசக் கூடியவீரர்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியில் சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதிலிருந்து துபையை விட்டு வேறு எங்கும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியோ பாகிஸ்தான், துபை என இரு இடங்களிலும் மாறி, மாறி விளையாடிவிட்டது.

துபை மைதானத்தை நன்கு அறிந்திருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது. இதுவரை 4 போட்டிகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணிக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் கான்வே, வில் யங், சான்ட்னர், ஹென்றி ஆகிய 4 முக்கிய வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்,

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

ரோஹித், கோலி இருவரும் மீண்டும் சாதிப்பார்களா?

இந்திய அணியில் உள்ள வீரர்கள் வெற்றிக்கு பலமுறை பங்களிப்பு செய்துள்ளார்கள் என்றாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் மற்றவர்களை விஞ்சி நிற்கிறார்கள்.

2023 உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்கள் குவித்து கோலி சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் கெயில் சாதனையான 791 ரன்களை முறியடிக்க கோலிக்கு இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 7 சதங்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியுள்ளார். இதில் 5 சதங்கள் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா அடித்தவை.

டி20 உலகக் கோப்பைத்தொடரில் 50 சிக்ஸர்களை ரோஹித் விளாசியுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ரோஹித் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. ஒருவேளை இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் விஸ்வரூமெடுத்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும்.

சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜா அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தங்கப்பந்தையும் ஜடேஜா வென்றார் என்பதால் இந்த முறையும் இவரின் ஆட்டம் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் பாதியில் இருந்து ஆட்டங்களில் பங்கேற்ற ஷமி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த 4 பேரும் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவர்கள்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

கோலியும் லெக் ஸ்பின்னும்

விராட் கோலி சமீபகாலமாக லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின்னுக்கு தடுமாறுகிறார், திணறுகிறார் என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறுப்பதற்கில்லை. 2024 தொடக்கத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளி்ல் கோலி 5 முறை லெக் ஸ்பின்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி 48 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கூட கோலி சுழற்பந்துவீச்சை பெரிதாக அடித்தாடவில்லை. அவர் ஆடம் ஸம்பாவுக்கு எதிராக 24 பந்துகளில் 23 ரன்களும், தன்வீர் சங்கா பந்துவீச்சில் 12 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தார்.

தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி, இந்தத் தொடரில் ஒரு சதம், 84 ரன்கள் சேர்த்து பதில் அளித்துள்ளார். இருப்பினும் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்ற சந்தேக ஆயுதத்தை நியூசிலாந்து சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஆபத்தான நியூஸி. வீரர்கள்

நியூசிலாந்து அணி தனது சமீப வெற்றிகளில் வில்லியம்ஸன் இல்லாமல் கடந்து வந்திருக்க முடியாது. அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக அவர் கருதப்படுகிறார். ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தின் 6-வது பைனலில் வில்லியம்ஸன் விளையாடி வருகிறார்.

ஐசிசி வெள்ளைப் பந்துப் போட்டிகளில் வில்லியம்ஸன் போல் எந்த நியூசிலாந்து வீரரும் அதிக ரன்களைச் சேர்த்தது இல்லை. 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பைனல் வரை செல்லும்போது அதிக ரன்களை சேர்த்த வீரராக வில்லியம்ஸன் இருந்தார்.

அதேபோல மிட்ஷெல் சான்ட்னர் முதல்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை ஏற்று அணியை வழிநடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகளில் டேனியல் வெட்டோரிக்குப் பின், நியூசிலாந்துக்கு கிடைத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக சான்ட்னர் கருதப்படுகிறார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், அரையிறுதிவரை செல்ல உதவினார். இந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

ஹென்றியும் கடந்த 2019 உலக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் நியூசிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ஹென்றி தொடக்கத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளே முக்கிய காரணம். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் 10 விக்கெட்டுகளுடன் ஹென்றி முன்னணியில் இருக்கிறார்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

ஹென்றி விளையாடுவாரா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தோள்பட்டை வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

தோள்பட்டை காயத்திலிருந்து ஹென்றி முழுமையாக குணமாகவில்லை எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணி நிர்வாகமும் ஹென்றி உடல்நிலை குறித்து எதுவும் பேசாமல் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

நடப்புத் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஹென்றி ஒருவேளை பந்துவீச முடியாமல், விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

ஆடுகளம் எப்படி?

அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டன. துபை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு ஓரளவு ஒத்துழைக்கும் ஆனால், சிறப்பாக இருக்கும என்று கூற இயலாது.

துபாய் ஆடுகளங்கள் பெரும்பாலும் முதல் 10 ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும், அதன்பின் சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும், நடுவரிசை ஓவர்களில் ஆடுகளம் மெதுவாகிவிடுவதால் ஸ்கோர் செய்ய பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும்.

இரவில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், பந்துவீசுவதில் சிரமம் இருக்காது. இதனால், சேஸிங் செய்யும் அணி ரன் சேர்க்க போராட வேண்டியதிருக்கும். டாஸ் வெல்லும் அணி குறைந்தபட்சம் 270 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் வெற்றி எளிதாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg5der682q0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குல்தீப் யாதவின் அதிரடி சுழல்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

9 மார்ச் 2025, 08:40 GMT

புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது.

10வது ஓவரில் பந்து வீச வந்த குல்தீப் யாதவ், அவர் வீசிய முதல் பந்திலே ரச்சின் ரவீந்திராவை அவுட் ஆக்கினார். அதிரடியாக விளையாடிவந்த நியூசிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவுக்கு 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

13வது ஓவரை மீண்டும் குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை கேன் வில்லியம்சன் அடிக்க, அதை குல்தீப் யாதவ் எளிமையாக கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார். 15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. வீசிய முதல் மூன்று ஓவர்களிலே குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்து வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

எதிர்பார்ப்பை நிறைவேற்றிய வருண்

இந்திய அணி அடுத்த ஓவரிலேயே மாயாஜால பந்துவீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியை உள்ளே கொண்டு வந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவர், இந்த ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார்.

வருண் தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா கால் காப்பில் வாங்க இந்திய வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்ய, நடுவரும் விக்கெட் கொடுத்துவிட்டார். இதன் பிறகு, ரச்சின் ரிவியூ கேட்க, மூன்றாவது நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து அவுட் இல்லை என்று அறிவித்தார். இதனால், இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்த பந்திலேயே ரச்சின் ரவீந்திரா தூக்கி அடித்த பந்தை முகமது ஷமி கேட்ச் பிடிக்காமல் தவறவிட இந்திய ரசிகர்கள் வெகுவாக ஏமாற்றம் அடைந்தனர். எனினும், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் வருண் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் வில் யங் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

அந்த அணிக்காக ரச்சின் ரவீந்திரா - வில் யங் ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது. முதல் ஓவரை முழுமையாக எதிர்கொண்ட வில் யங் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார்.

அடுத்த இரு ஓவர்களில் இருவரும் நிதானம் காட்ட நியூசிலாந்து அணி முதல் 3 ஓவர்களில் 10 ரன்களை எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய நான்காவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா அதிரடியைத் தொடங்கினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்சருக்கு விளாசிய அவர், கடைசி இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஷமி வீசிய அடுத்த ஓவரிலும் ரச்சின் 2 பவுண்டரிகளை விளாசினார்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

முன்னதாக, நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை அவர் சமன் செய்திருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் தெரிக்கிறது.

நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்குப் பதிலாக நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி

நியூசிலாந்து அணி

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் யான்சென், வில்லியம் ஓ'ரூர்க்கி, நேதன் ஸ்மித்.

மொத்தம் 25 ஆயிரம் இருக்கைகள் கொண்ட துபை மைதானம் முழுமையாக நிரம்பி, ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 40 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் 2000-வது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அந்த போட்டியில் நியூசிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்தியா இம்முறை சாதிக்குமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்தியா கடந்து வந்த பாதை

நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இதுவரையிலான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து அணியையும் இந்தியா வென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

நியூசிலாந்து கடந்து வந்த பாதை

நியூசிலாந்தைப் பொருத்தவரை, நடப்புத் தொடரில் இந்தியாவிடம் மட்டும் தோல்வி கண்டுள்ளது. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் அந்த அணி வென்றது. அரையிறுதியில் வலுவான தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்து நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,Getty Images

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czjep77j4dpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா மூன்றாவது தடவையாக சுவீகரித்தது; இந்தியாவுக்கு 2ஆவது தொடர்ச்சியான ஐசிசி கிண்ணம்

Published By: VISHNU

09 MAR, 2025 | 10:20 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வெற்றி கொண்டு இந்தியா சம்பியனானது.

0903_man_of_the_match_rohit_sharma.jpg

இந்தியா வென்றெடுத்த இரண்டாவது தொடர்ச்சியான ஐசிசி கிண்ணம் இதுவாகும். ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தை இந்தியா கடந்த வருடம் வென்றிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சம்பியனானது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2002இல் இலங்கையுடன் இணைச் சம்பியனான இந்தியா, 2013இல் மீண்டும் சம்பியனாகி இருந்தது

அத்துடன் 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்த வருடம்  இந்த வெற்றியின் மூலம்  இந்தியா பதிலடி கொடுத்தது.

முந்தைய சம்பியன் பட்டங்களைவிட இந்த சம்பியன் பட்டம் இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகும்.

ஏனெனில், இம்முறை தோல்வி அடையாத அணியாக இந்தியா சம்பியனானதுடன் லீக் சுற்றிலோ, நொக் அவுட் சுற்றிலோ எந்த ஒரு அணியிடமும் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளவில்லை.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இன்றைய இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், ஷுப்மான் கில் (31), விராத் கோஹ்லி (1), ரோஹித் ஷர்மா ஆகியோர் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது.

ரோஹித் ஷர்மா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.

இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (203 - 5 விக்.)

ஷ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 29 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

கே. எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹார்திக் பாண்டியா 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (241 - 6 விக்.)

ஆனால், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

கே.எல். ராகுல் 34 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து சிரமத்திற்கு மத்தியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 38 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 12 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைக் குவித்த  நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைந்தது.

ஆரம்ப ஜோடியினரான வில் யங் (15), ரச்சின் ரவிந்த்ரா (37) ஆகிய இருவரும் 49 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், வில் யங், ரச்சின்   ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன் (11) ஆகிய மூவரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததும் ஓட்ட வேகம் குறைந்தது.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது டொம் லெதம் (14) ஆட்டம் இழந்தார்.

டெரில் மிச்செலும் க்லென் பிலிப்ஸும் 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்லென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அணித் தலைவர் மைக்கல் ப்றேஸ்வெல்லுடன் 6ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்த டெரில் மிச்செல் 63 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

மறுபக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கல் ப்றேஸ்வெல் 40 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரோஹித் ஷர்மா,

தொடர் நாயகன் ரச்சின் ரவிந்த்ரா

https://www.virakesari.lk/article/208741

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.