Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம்

image

(நெவில் அன்தனி)

ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.

நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன.

பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன.

ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், ஜப்பான் ஆகியன 19 வயதுக்குட்பட்ட ஆசிய பிறீமியர் கிண்ணப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதன் மூலம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் நேபாளத்தை ஷார்ஜாவில் நவம்பர் 28ஆம் திகதியன்றும் ஆப்கானிஸ்தானை ஷார்ஜாவில் டிசம்பர் 01ஆம் திகதியன்றும் பங்களாதேஷை துபாயில் டிசம்பர் 03ஆம் திகதியன்றும் இலங்கை சந்திக்கவுள்ளது.

இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று முடிவடைந்தவுடன் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அரை இறுதிப் போட்டிகள்  துபாயிலும் ஷார்ஜாவிலும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள், 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் துபாய் விளையாட்டரங்கில் டிசம்பர் 8ஆம் திகதி விளையாடும்.

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ணப் போட்டி 1989இல் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 10 அத்தியாங்களில் இந்தியா 7 தடவைகள் சம்பியனானதுடன் பாகிஸ்தானுடன் ஒரு தடவை இணை சம்பியனானது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன தலா ஒரு தடவை சம்பயினாகியுள்ளன. இலங்கை ஐந்து தடவைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/198468

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன் | 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை அணியில் ஆகாஷ்

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கனிஷ்ட அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

கனிஷ்ட இலங்கை அணிகளில் ஒரே நேரத்தில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடடைவயாகும்.

சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.

5.jpg

யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாலிங்க பாணி வேகப்பந்துவீச்சாளர் கே.மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர்.

3_v_akash.jpg

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் வீ. ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறுகிறார்.

இந்த மூன்று வீரர்களும் தம்புள்ளை பிராந்திய அணியில் திறமையை வெளிப்படுத்தியதன் பலனாக இலங்கை கனிஷ்ட அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்வான்களில் ஒருவரான குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199324

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன், ஷாருஜன்

25 NOV, 2024 | 03:55 PM
image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் நியூட்டன் , குகதாஸ் மாதுளன், கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இந்த மூவரில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் ஷாருஜன் ஏற்கனவே கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்றவராவார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான ஷாருஜன், இந்த வருட முற்பகுதியில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ச்த இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

வடக்கின் சமர் மாபெரும்  கிரிக்கெட்  போட்டியின் கடந்த இரண்டு அத்தியாயங்களில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திறமையை வெளிப்படுத்திய நியூட்டன், தம்புள்ளை பிராந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் இலங்கை தெரிவாளர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

அதேவேளை, லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன், யோக்கர் பந்துவீசுவதில் தேர்ச்சிபெற்றவர். அவரது பந்துவீச்சுப் பாணியை சமூக வலைத்தளத்தில் பார்த்து பெரிதும் கவரப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம். எஸ். தோனி அவரை சென்னைக்கு அழைப்பித்து அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக தேர்ஸ்டன் கல்லூரி வீரர் விஹாஸ் தெவ்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை  அணி விபரம்

விஹாஸ் தெவ்மிக்க (தலைவர்), தனுஜ ராஜபக்ஷ (இருவரும் தேர்ஸ்டன்), புலிந்து பெரேரா, லக்வின் அபேசிங்க (இருவரும் தர்மராஜ), துல்னித் சிகேரா (மஹநாம), சண்முகநாதன் ஷாருஜன் (புனித ஆசீர்வாதப்பர்), ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விமத் தின்சார, ரமிரு பெரேரா (இருவரும் றோயல்), கவிஜ கமகெ (கிங்ஸ்வூட்), விரான் சமுதித்த (மாத்தறை புனித சர்வேஷியஸ்), ப்ரவீன் மனீஷ (லும்பினி) யெனுல தெவ்துச (புனித சூசையப்பர்), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்)

PHOTO-2024-11-25-15-47-19.jpg

https://www.virakesari.lk/article/199629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்தில் ஷாருஜன், லக்வின் அரைச் சதங்கள்; நேபாளத்தை வென்றது இலங்கை

29 NOV, 2024 | 07:09 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு கிரிக்கெட் போட்டியில் 55 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

sharujan_mom.jpg

சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ப்ரவீன் மனீஷ, ரஞ்சித்குமார் நியூட்டன், குகதாஸ் மாதுளன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 99 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

3ஆவது விக்கெட்டில் விமத் தின்சாரவுடன் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 4ஆவது விக்கெட்டில் லக்வின் அபேசிங்கவுடன் மேலும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

லக்வின் அபேசிங்க 50 ஓட்டங்களைப் பெற்றார்.

ஷாருஜன், லக்வின் ஆகியோரைவிட கவிஜ கமகே 37 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

234 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மயன் யாதவ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது.

பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாழ். மத்திய கல்லூரி வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சண்முகநாதன் ஷாருஜன்.

https://www.virakesari.lk/article/200043

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பைய‌ 

இந்தியா அல்ல‌து பாக்கிஸ்தான் வெல்லும்.......................

  • கருத்துக்கள உறவுகள்

சாருஜன் சண்முகநாதன் சதம் விளாசி அசத்தல்!

December 1, 2024  03:09 pm

சாருஜன் சண்முகநாதன் சதம் விளாசி அசத்தல்!

 

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி Sharjah இல் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக Sharujan Shanmuganathan 102 ஒட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் AM Ghazanfar 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=196700

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் இள‌ம் வீர‌ர் அப்கானிஸ்தான் அணிக்கி எதிராக‌ செஞ்செரி அடிச்சு இருக்கிறார்.............................

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய‌ கோப்பையில் 

பாக்கிஸ்தான் இந்தியாவை வென்று இருக்கு வ‌வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி விளையாடி முத‌ல் சுற்று போட்டிக‌ளில் வெற்றி..............பின‌லுக்கு போனால் ம‌கிழ்ச்சி🙏🥰......................................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அரங்கில் ஷாருஜன் கன்னிச் சதம்: ஆப்கானையும் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது  இலங்கை

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு போட்டியில் 131 ஓட்டங்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றி பெற்றது.

1_Sharujan_Shanmuganathan.jpg

அப் போட்டியில் சண்முகநாதன் ஷாருஜன் குவித்த அபார சதம் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றியதுடன் அணியின் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. 

சர்வதேச அரங்கில் ஷாருஜன் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

4_Sharujan_Shanmuganathan_of_Sri_Lanka_p

நேபாளத்திற்கு எதிரான முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்து ஆட்ட நாயகனான ஷாருஜன், இந்தப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இரண்டாவது தொடர்ச்சியான ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.

3_sl_bt_afghan.jpg

ஆரம்ப வீரர் துல்னித் சிகேரா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி தடுமாற்றம் அடைந்தது. (0 - 1 விக்.)

ஆனால், கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகவும் பொறுப்புணர்வுடன் அதேவேளை அனுபவசாலிபோல் துடுப்பெடுத்தாடி புலிந்து பெரேராவுடன் 2ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

132 பந்துகளை எதிர்கொண்ட ஷாருஜன் 7 பவுண்டறிகளுடன்  102 ஓட்டங்களைப் பெற்றார்.

புலிந்து பெரேரா 5 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரைவிட விமத் தின்சார 26 ஓட்டங்களையும் லக்வின் அபேசிங்க 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அல்லா கஸன்பார் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களுக்கு சுருண்டது

துடுப்பாட்டத்தில் நஸிபுல்லா அமிரி (33), ஹம்ஸா அலி கில் (32) ஆகிய இருவரே 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரஞ்சித்குமார் நியூட்டன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷாருஜன் சண்முகநாதன்.

https://www.virakesari.lk/article/200185

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை வீர‌ர்க‌ள் இனித் தான் ப‌ல‌மான‌ அணியுட‌ன் விளையாட‌ போகின‌ம்....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்:  தின்சார அபார சதம்;  பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

0312_asia_cup_sl_celebrate.jpg

விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன.

0312_asia_cup_vimath_dinsara_mom.jpg

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார்.

அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசை  துடுப்பாட்டத்தில்  அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர்  தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.)

ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை.

ஆட்டநாயகன்: விமத் தின்சார19இன் கீழ் ஆசிய கிண்ணம்:   தின்சார அபார சதம்;  பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார்.

அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசை  துடுப்பாட்டத்தில்  அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர்  தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.)

ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை.

ஆட்டநாயகன்: விமத் தின்சார

https://www.virakesari.lk/article/200359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் விளையாடவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பங்களாதேஷ் எதிர்த்தாடும்.

இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் வெற்றிபெற்றதை அடுத்து அரை இறுதிப் போட்டிகளில் எந்தெந்த  அணிகளை   எந்தெந்த  அணிகள்   எதிர்த்தாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது.

எட்டு அணிகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற இலங்கையும் ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தானும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

இந்த இரண்டு குழுக்களிலிருந்து முறையே பங்களாதேஷும் இந்தியாவும் தலா ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்கு முன்னேறின.

இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழு போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் முஹம்மத் ரெயான் (36), அக்சத் ராய் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் யூதாஹித் குஹா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

வைபவ் சூர்யாவன்ஷி 46 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் அயுஷ் முஹாத்ரி 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய ஏ குழு போட்டியில் ஜப்பானை 180 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.

முஹம்மத் ரியாஸுல்லா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைவும் ஷாஹ்பாஸ் கான் 45 ஓட்டங்களையும் பஹாம் உல் ஹக் 34 ஓட்டங்களையும் அஹ்மத் ஹுசெய்ன் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நிஹார் பாமர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 28.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது.

நிஹார் பாமர் மாத்திரமே (25) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். ஜப்பானின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக 10 உதிரிகள் அமைந்திருந்தது.

பந்துவீச்சில் மொஹம்மத் ஹுசெய்வா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அரை இறுதிப் போட்டிகள் நாளை 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி துபாயிலும் நாளை நடைபெறவுள்ளன.

https://www.virakesari.lk/article/200446

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி முத‌ல் சுற்று போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடி

சிமி பின‌லில் இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி

 

இந்தியா அணிக்காக‌ விளையாடின‌ 13வ‌ய‌து சிறுவ‌ன் இந்த சின்ன‌ வ‌ய‌தில் 5 சிக்ஸ் அடிச்ச‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு

 

இனி இந்த சிறுவ‌னை ஜ‌பிஎல் அடுத்த‌ ஜ‌பிஎல் ஏல‌த்தில் வேண்ட‌ முய‌ற்சிப்பினம்.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்தியா அணிக்காக‌ விளையாடின‌ 13வ‌ய‌து சிறுவ‌ன் இந்த சின்ன‌ வ‌ய‌தில் 5 சிக்ஸ் அடிச்ச‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு

இனி இந்த சிறுவ‌னை ஜ‌பிஎல் அடுத்த‌ ஜ‌பிஎல் ஏல‌த்தில் வேண்ட‌ முய‌ற்சிப்பினம்.........................

வாங்கிற்றாங்க பையா.

 

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ்

06 DEC, 2024 | 05:35 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவும் பங்களாதேஷும் தகுதிபெற்றன.

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் இந்தியாவும், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்களால் பங்களாதேஷும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை இளையோர் அணி 8 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். ஆனால், அது போதுமானதாக அமையவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை.

லக்வின் 69 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சேத்தன் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் றோயல்ஸினால் ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷி 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டியில் மிகவும் இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

ஏ குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பாரக்கப்பட்டது.

ஆனால், மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 22.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இறுதிப் போட்டி துபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/200609

  • கருத்துக்கள உறவுகள்

பின‌லில் இந்தியாவை வ‌ங்கிளாதேஸ் வென்று விட்டின‌ம்

வாழ்த்துக்க‌ள் வ‌ங்கிளாதேஸ் அணிக்கு🙏🥰.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பங்களாதேஷ்

08 DEC, 2024 | 11:58 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 195 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தது.

இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணிக்கு இலங்கையின் நவீத் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனானபோதும் நவீத் நவாஸ் பயிற்றுநராக இருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹம்மத் ஷிஹாப் ஜேம்ஸ் (40), ரிஸான் ஹொசெய்ன் (47) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 62 ஓட்டங்கள் பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டது.

அவர்களை விட பரித் ஹசன் 39 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யூதாஜித் குஹா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் ராஜ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சேத்தன் ஷர்மா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹம்மத் அமான் (26), ஹார்திக் ராஜ் (24),  கே.பி. கார்த்திகேயா (21), சி. அண்ட்றே சித்தார்த் (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸிஸுல் ஹக் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல் பஹாத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்;சாளர் இக்பால் ஹொசெய்ன் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/200760

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இள‌ம் வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ள் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையும் வென்று இப்போது ஆசியா கோப்பையும் வென்று விட்டின‌ம்

 

ஆனால் இல‌ங்கை அணி தூக்காத‌ ஒரே ஒரு கோப்பை 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பை ம‌ட்டுமே.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.