Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Precocious puberty, சில சிறுமிகள் 6 வயதிலேயே பூப்படைவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், தீபாலி ஜக்தாப், சுசீலா சிங்
  • பதவி, பிபிசி

"எனது ஆறு வயது மகளுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று நினைத்து நான் பயந்தேன். சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட ஆரம்பித்தாள். இந்த மாற்றங்கள் என்னை கவலையடையச் செய்தன." என்று விவரித்தார் அர்ச்சனா.

ஆறு வயது மகளின் தாயான அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.

அர்ச்சனாவின் கணவர் ஒரு விவசாயி. இவர்கள் தங்கள் வயல் அருகே ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். மகள் மூத்தவள்.

அர்ச்சனா தன் ஆறு வயது மகளின் உடலில் வித்தியாசங்களை பார்த்தார். அந்த சிறுமி, ஆறு வயதுக்கு ஏற்ற வளர்ச்சியாக இல்லாமல், பதின் வயது பெண் போல் தோற்றமளிக்க ஆரம்பித்தார். இதனால் அச்சத்தில் உறைந்த அர்ச்சனா, தன் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

 

டெல்லியில் வசிக்கும் ராஷியும் தனது மகளின் உடலில் இதுபோன்ற பல மாற்றங்களைக் கவனித்தார், ஆனால் அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

ராஷியின் ஆறு வயது மகள் 40 கிலோ எடையுடன் இருந்ததை, 'ஆரோக்கியமான குழந்தையாக' கருதினார். ஒரு நாள் திடீரென ராஷியின் மகளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பார்த்த போது, அவரது 6 வயது மகளுக்கு மாதவிடாய் தொடங்கியிருப்பது தெரியவந்தது.

 

"அதை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது."

முன்கூட்டிய பருவமடைதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மருத்துவர் சுசித்ரா சர்வே கூறுகையில், முன்கூட்டிய பருவமடைதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதை ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

"எங்கள் மகளுக்கு மாதவிடாய் தொடங்கியதை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. என் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ராஷி கூறினார்.

அதே சமயம், மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுமாறு அர்ச்சனாவுக்கு உள்ளூர் மருத்துவர் அறிவுறுத்தினார்.

புனேவில் உள்ள `மதர்ஹுட்’ மருத்துவமனையில் மருத்துவர் சுஷில் கருட் (விங் கமாண்டர்) கூறுகையில், "அர்ச்சனா தனது மகளை எங்களிடம் கொண்டு வந்தபோது, பரிசோதனையில் அந்த சிறுமிக்கு பருவமடைவதற்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். சிறுமியின் உடல் அமைப்பு 14-15 வயதுடைய பதின் வயதினர் போல் இருந்தது. அவருக்கு மாதவிடாய் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்." என்றார்.

சிறுமியின் ஹார்மோன் அளவு அவரது வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்ததாகவும் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும் மருத்துவர் சுஷில் விளக்குகிறார்.

மருத்துவர் சுஷில் மேலும் கூறுகையில், "அர்ச்சனா தனது வீட்டில் இரண்டு கொள்கலன்களில் 5 கிலோ பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருப்பதாகவும், அவரது மகள் அதைச் சுற்றி வந்து விளையாடுவது வழக்கம் என்றும் கூறினார். எனவே இது அவரது ஹார்மோன் மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்." என்றார்.

"குழந்தைகளின் உடலில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதை மருத்துவ மொழியில் சிறு வயதிலேயே பூப்படைவது/பருவமடைவது (Precocious Puberty) என்று கூறப்படுகிறது” என்று சுஷில் விளக்குகிறார்.

 

உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் குழந்தை பருவத்தை கடந்து, பருவ வயதில் அடியெடுத்து வைப்பதையே பருவமடைதல் என்கிறோம்.

தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் (National Center for Biotechnology Information) இணையதளத்தின்படி, பருவமடைதல் என்பது ஒரு ஆண் அல்லது பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். அவர்களின் பாலியல் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெறுகின்றன.

அந்த இணையதள தகவலின் படி, 8 முதல் 13 வயது வரையிலான பெண் குழந்தைகளிலும், 9 முதல் 14 வயது வரையிலான ஆண் குழந்தைகளிலும் பருவமடைதல் பருவம் தொடங்குகிறது.

மகப்பேறு மருத்துவர் எஸ்.என்.பாசு கூறுகையில், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைதல் நிலையை எட்டுவார்கள். ஆனால் மருத்துவ புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சராசரி வயதுக்கு முன்னதாக பருவமடையும் போது, அது `முன்கூட்டிய பருவமடைதல்’ என்று அழைக்கப்படுகிறது.

இளம் பருவத்தினரின் ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழந்தை நல மருத்துவரும் நாளமில்லாச் சுரப்பி நிபுணருமான மருத்துவர் வைஷாகி ருஸ்தேகி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னதாக 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை உடல் மாற்றங்கள் நிகழ்ந்து முதல் அறிகுறிகள் காணப்படும். அதன் பின்னரே மாதவிடாய் வரும். ஆனால் இப்போது உடலில் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து 3 முதல் 4 மாதங்களுக்குள் பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது" என்றார்.

"இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பருவமடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் தாடி மற்றும் மீசையை வளர்க்கத் தொடங்குகிறார்கள், முன்பெல்லாம் பருவமடைந்த ஆண் பிள்ளைகளுக்கு மீசை, தாடி வளர 4 ஆண்டுகள் வரை எடுக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது அர்ச்சனா மற்றும் ராஷியின் மகள்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்கூட்டியே பருவமடைய காரணங்கள் என்ன?

Precocious puberty, சில சிறுமிகள் 6 வயதிலேயே பூப்படைவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காய்கறிகளை வேகமாக விளைய வைக்கவும், பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து அதிக பால் உற்பத்தியை பெறவும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தால் (NCBI) வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பருவமடைதல் சிறுமிகளுக்கு பல உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

மகாராஷ்டிராவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குழந்தை சுகாதார ஆராய்ச்சி துறையை சேர்ந்த மருத்துவர். சுசித்ரா, முன்கூட்டியே பருவமடையும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை தன் ஆய்வு மூலமாகக் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

2000 சிறுமிகளிடம் ICMR-NIRRCH நடத்திய ஆய்வில், மகள்களின் அம்மாக்கள் பெரும்பாலும் பருவமடைவதற்கான அறிகுறிகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது, இந்த அமைப்பு 9 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் முன்கூட்டிய பருவமடைதல் பிரச்னையுடன் தொடர்புடைய காரணங்கள் மற்றும் அபாயங்களை ஆய்வு செய்து வருகிறது.

மருத்துவர்களின் கூற்றுப்படி இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

"அர்ச்சனாவின் 6 வயது மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம்’’ என்று மும்பையில் உள்ள சிறுமிகளிடையே இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் மருத்துவர் பிரசாந்த் பாட்டீல் கூறுகிறார்.

இது ஒரு அரிதான காரணமாக இருக்கலாம் என்றாலும், நச்சுக்கள் நிறைந்த பூச்சிக்கொல்லிகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அவை முன்கூட்டியே பருவமடைவதற்கு வழிவகுக்கும்.

மும்பையில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான, மருத்துவர் அவினாஷ் போந்த்வே கூறுகையில், "பயிர்களை காக்க பல வகையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக நம் உடலுக்குள் நுழையும். பல பூச்சிக்கொல்லிகள் உணவின் மூலம் உடலுக்குள் நுழைகின்றன. அவை ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் மூளையில் உள்ள சுரப்பியை பாதிக்கின்றன.இது தவிர, காய்கறிகளை வேகமாக விளைய வைக்கவும், பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து அதிக பால் உற்பத்தியை பெறவும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மனித உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது." என்றார்.

 

மேலும் பல காரணங்கள்

``முன்கூட்டிய பருவமடைதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதால் யாரையும் குற்றம்சாட்ட முடியாது” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மும்பையின் பிஜே வாடியா மருத்துவமனை இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து 2020-ஆம் ஆண்டில் சிறுவயதிலேயே பருவமடைதல் தொடர்பான முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முகாம் 6 முதல் 9 வயதுடைய பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் சுதா ராவ் கூறுகையில், "முகாமில் கலந்து கொண்ட சிறுமிகளில் 6 முதல் 9 வயதுக்குட்பட்ட 60 பேர் முன்கூட்டியே பருவமடைந்துள்ளனர். சிலர் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் வரலாம் என்ற நிலையில் இருந்தனர்.” என்றார்.

உடல் பருமனான குழந்தைகள் மத்தியில் முன்கூட்டிய பருவமடைதல் காணப்படுவதாகவும், கொரோனா காலத்தில் குழந்தைகளிடையே அதிகரித்த உடல் பருமன் இந்த பிரச்னைக்கு வழிவகுத்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

Precocious puberty, சில சிறுமிகள் 6 வயதிலேயே பூப்படைவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சானிடைசர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்தத்தின் வழியாக சருமத்தில் நுழைந்து ஹார்மோன்களை பாதிக்கிறது.

உடல் பருமன் மட்டுமின்றி செல்போன், டிவி போன்ற மின்னணு சாதனங்களை பார்ப்பது, உடற்பயிற்சியின்மை போன்றவையும் முன்கூட்டியே பருவமடைவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் எஸ்.என்.பாசு கூறுகிறார்.

பூச்சிக்கொல்லிகள், உணவில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தும் ரசாயனங்கள் (preservatives), மாசுபாடு, உடல் பருமன் போன்றவை வெளிப்புற காரணங்களாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், உடலில் ஒரு கட்டி அல்லது மரபணு கோளாறு இருப்பதும் உடலின் சர்க்காடியன் ஒத்திசைவை சீர்குலைக்கிறது, இது இதை ஏற்படுத்துகிறது.

மருத்துவர் வைசாகி கூறுகையில், கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக, அவரது புறநோயாளிகள் பிரிவில் தினமும் ஐந்து முதல் ஆறு சிறுமிகள் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "சில அம்மாக்கள் ஏப்ரலில் தங்கள் மகளின் உடலில் மாற்றங்களை உணர்ந்ததாகவும், ஜூன்-ஜூலையில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதாக கூறுயுள்ளனர். குறுகிய இடைவெளியில் இது நடக்கிறது. தற்போது ஆண் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதாக பெற்றோர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்" என்றார்.

அதிகப்படியாக டிஜிட்டல் சாதனங்களில் நேரம் செலவிடுவது மறைமுகமாக முன்கூட்டியே பருவமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

அவரைப் பொருத்தவரை, "மூளையில் இருந்து வெளியாகும் மெலடோனின் ஹார்மோன் நாம் தூங்க உதவுகிறது. ஆனால் டிஜிட்டல் திரையின் நேரத்தை அதிகரிப்பது தூக்க சுழற்சியை அதாவது சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைக்கிறது. ஏனெனில் டிஜிட்டல் திரையின் ஒளி அதன் சமநிலையை சீர்குலைக்கிறது.”

"இந்த ஹார்மோன் நமது பாலியல் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது, ஆனால் மெலடோனின் சமநிலையின்மை காரணமாக, பாலியல் ஹார்மோன்கள் விரைவாக வெளியிடப்படுகின்றன" என்றார்.

சானிடைசர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்தத்தின் வழியாக சருமத்தில் நுழைந்து ஹார்மோன்களை பாதிக்கிறது.

நம் உடலில் கிஸ்ஸ்பெப்டின் (Kisspeptin) என்ற ஹார்மோன் இருப்பதாகவும், அது முன்கூட்டிய பருவமடைதலுக்கு காரணமாகிறது என்றும் மருத்துவர் எஸ்.என்.பாசு கூறுகிறார்.

மற்ற காரணங்களும் சேர்ந்து ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து, முன்கூட்டியே பருவமடைவதற்கு காரணமாகின்றன. ஆனால் இந்த காரணங்கள் அனைத்தும் இன்னமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அர்ச்சனா மற்றும் ராஷியின் மகள்களுக்கு குறிப்பிட்ட வயது வரை மாதவிடாய் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வளவு சிறிய வயதில் பெண் குழந்தைகள், மாதவிடாய் காலங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் பற்றியும் தெரிந்திருக்க வாய்பில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில், முன்கூட்டியே பருவமடைதலில் உளவியல் ரீதியான எதிர்மறையான விளைவுகள் காணப்படுகின்றன. சிறுமிகளை சுற்றியுள்ள பெண்கள் அவர்களை வித்யாசமாக பார்க்கும் நிலை ஏற்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.