Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

November 14, 2024
1731560057-election-leader-2-696x392.jpg

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும்.

அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
 

https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சுமந்திரன்... தனது பழைய  தொழிலுக்கு போக...  இப்பவே  வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂 அவரின்  பாராளுமன்ற கனவு... இம்முறை நக்கிக் கொண்டு போகப் போகுது.  😂   
    • ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை - மஹிந்த தேசப்பிரிய (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் காண்பித்துள்ள வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கண்காணிப்பின்போது ஒரேயொரு கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரமே ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிந்தது. ஏனைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதனை அவதானிக்க முடியவில்லை. எவ்வாறிருப்பினும் இது துரதிர்ஷ்டவசமான விடயமாகும். சிலரிடம் நாம் இது குறித்து வினவியபோது, எவருக்கும் இதில் ஆர்வமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குறித்த கட்சிகளும் கவலையடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பாரியளவிலான வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை. ஆனால் சில பிரதேசங்களில் கட்சி அலுவலகங்கள் நீக்கப்படாமலிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் இடம்பெற்றுள்ளது. 225 பேரும் வேண்டாம் என்ற கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறையும் நான் அதனை எதிர்த்திருந்தேன். ஆனால் எமக்கு தவறானவர் எனத் தோன்றுபவர்களை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் எமக்கிருக்கிறது. எனவே வாக்களிப்பின் போது வாக்காளர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/198734
    • கொஞ்சம் சிரிங்க பாஸ் ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார், பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் . பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் , ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..?? இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் . சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை . கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து , அவர்களிடம் பேசினார்கள் . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் . இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . அப்படி என்னதான் தீர்வு .." அது " ..?? சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் .... ........ " வாழ்க வளமுடன் " ..  
    • தமிழ் மீது தேவயற்ற சந்தேகம் இருக்கும் வரை அதாவது கொஞ்ச அதிகாரம்களை  கொடுத்தால் அதையே கயிறாக பாவித்து தனி நாடு உருவாக்கி சிங்களவர்களை இலங்கையை விட்டே கலைத்து விடுவார்கள் என்ற பயம் சந்தேகம் இருக்கும்வரை உங்க நினைப்பு ஈடேராது சாமியார் .
    • முதலாவது உத்தியோகபூர்வ தபால் முடிவுகள் வெளியாகின 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள் https://thinakkural.lk/article/312030 இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய; தேசிய மக்கள் சக்தி – 27,776 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,969 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி – 1,528 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,031 வாக்குகள் https://thinakkural.lk/article/312032
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.