Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

வாக்காளர்கள் மத்தியில் தேர்தல்  குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார்.

வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார்! எல்போர்ட் நாடாளுமன்றமும் உருவாகக்கூடாது என  அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198723

படத்தில் கடைசியாக உள்ள எழுத்து உள்குத்தாக இருக்குமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல தசாப்தங்கள் அரசியலிலிருந்து பல பதவிகளை ஆண்டு அனுபவித்து முடித்த இவர், உண்மையாகவே நாட்டின்மீது அக்கறையிருந்தால்  புதிதாக வந்தவர் நாட்டுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்க ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும். ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

அதவிட்டு எப்போபார் இரண்டாம் வகுப்பு பிள்ளைகள்போல குற்றம் சொல்லி கொண்டிருப்பதும் கேலி பண்ணூவதும், நாட்டு பிரச்சனையைவிட  பதவியை இழந்த துயர் அவரை வாட்டுது என்றே மக்கள் மனதில் தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 அந்த குடைக்கணக்கிலை ..ஒன்றைக்கூட எடுக்க நேரமில்லை போல...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

தேர்தல் குறித்த ஆர்வம் குறைவு - நிச்சயமற்ற நிலையேற்படலாம் - ரணில்

பாவம் சரியா கஷ்டப்படுகிறார்!😂



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.