Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

seeman-new.webp?resize=678,375&ssl=1

சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-

ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள்.

உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கி என்று கூறுபவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்க சென்றீர்கள் என கூறுவதில்லை… என்ன சந்தித்து உரையாடினீர்கள் என கூறுவதில்லை. இப்போது நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசியதை கூறுகிறேன்.. அதை ஏன் கூறுவதில்லை?. என்னை வந்து கேட்கிறார்கள் கள்ள உறவா என்று, நல்ல உறவே இருக்கிறது.

பொண் கொடுத்து பொண் எடுத்த சம்மந்திங்கள் போல பிரதமரும், முதலமைச்சரும் சந்திக்கின்றார்கள். ஆனால் வெளியில் வந்து எங்களை சங்கி என்கிறார்கள். இது என்ன கொடுமை? . திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால்,.. இதை எப்படி சொல்வது? … அப்படியாயின் பெருமையாக நாங்கள் சங்கி என்பதை ஏற்கதான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1409534

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/11/2024 at 06:30, தமிழ் சிறி said:

பொண் கொடுத்து பொண் எடுத்த சம்மந்திங்கள் போல பிரதமரும்

 நீங்கள் அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து விட்டு, பத்திரிகையாளரை சந்திக்க துணிவில்லாமல் பின் கதவால் ஓடியது….

தேர்தலில் வென்றதும் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி போட்டோ முன் கை கட்டி பவ்வியமாக நின்றது….

போல இதுவும் ஒரு டகால்டி வேலைதான் ப்ரோ🤣

On 23/11/2024 at 06:30, தமிழ் சிறி said:

சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம்.

Zombies என செல்லமாக அழைக்கப்படும் நா.த.க தம்பிகளை அண்ணன் மெல்ல மெல்ல நாக்பூர் நோக்கி வளைக்கும் உளவியல் இது.

யாழில் மேலும் சிலர் சீமானை டைவோர்ஸ் செய்யும் காலம் கனிகிறது என நினைக்கிறேன்.

ஆனால் இன்னும் சிலர் அப்போதும் முரட்டு முட்டு கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@goshan_cheநீங்கள் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதையே முழு நேர தொழிலாக கொண்டிருப்பதை கண்டிக்கிறேன். சங்கி என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருளை உணர்ந்தே அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். சங்கம், சங்க என்ற சொல்லின் மருவல் தான் சங்கி, அது பழமையான, ஆதி என்ற பொருளில் கூறப்படும் தூய தமிழ் சொல். தமிழர்களின் ஆதிகுடியின் நேரடி இளவலான எங்கள் அண்ணன், கருமைநிற கண்ணன் அப்பொருள்படவே கூறியிருக்கிறார். இதன் மூலம் உங்களைப் போன்ற வழி தவறி நடக்கும் யாழ் உறுப்பினர்கள் தெளிவடைந்து ,அண்ணன் வழி நடப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்றென்றும் சங்கியாய் நாம் தமிழர்!!!

Edited by செவ்வியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, செவ்வியன் said:

யார்ரா இது….. நமக்கே நம்ம பாணியில் டப் கொடுக்கும் ஒரு புதுமுகம்🤣.

ஆனால் அண்ணனை கண்ணன் என்பது சரிதான் செவ்வியன்.

தீராத விளையாட்டுப்பிள்ளை…அவன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை…🤣.

இணைந்திருங்கள்.

பிகு

தெளிவடைய முயல்கிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, goshan_che said:

யார்ரா இது….. நமக்கே நம்ம பாணியில் டப் கொடுக்கும் ஒரு புதுமுகம்🤣.

ஆனால் அண்ணனை கண்ணன் என்பது சரிதான் செவ்வியன்.

தீராத விளையாட்டுப்பிள்ளை…அவன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை…🤣.

இணைந்திருங்கள்.

பிகு

தெளிவடைய முயல்கிறேன்🤣

ஹாஹா வரவேற்கிறேன்😄

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.