Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலுவில் பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

OLUVIL.jpg

அம்பாறை, ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.

இந்த பாலம் உடைப்பெடுத்துள்ளதனால் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியுடனான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதனால் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/312690

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்கள் பாதிப்பு

26 NOV, 2024 | 11:10 PM
image

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

IMG_20241126_212432697.jpg

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும்,சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

IMG_20241126_205421671.jpg

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

IMG_20241126_205449238_HDR.jpg

https://www.virakesari.lk/article/199786

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை, வெள்ளம்! - திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு 

27 NOV, 2024 | 01:04 PM
image

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, 532 குடும்பங்களைச் சேர்ந்த 1,621 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/199827

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காடாக மாறிய அம்பாறை மாவட்டம்

வெள்ளக்காடாக மாறிய அம்பாறை மாவட்டம்

  1.  
1732521192-amparai-3.jpg

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில்  உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன்  சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. 

வானிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196375

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு!

மட்டக்களப்பில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் பல வீதிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  வீடுகளுக்குள்  வெள்ளத்தினால் சிக்கியவர்களை படகு மற்றும் உழவு இயந்திரங்களின் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நகரை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கான படகு சேவை இடம்பெற்று வருகின்றது.

சீரற்ற கால நிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் மற்றும் ஆறுகள் நிறைந்து வெள்ள நீரில் மூழ்கி வெள்ள காடாகியது.

இந்த வெள்ளத்தினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கும், வவுணதீவுக்கும் புதூர் மற்றும் மட்டக்களப்பு நகருக்கும், மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும், மட்டக்களப்பு செங்கலடிக்கும் சித்தாண்டிக்கும் மற்றும் பட்டிருப்புக்கும் போரதீவுக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளுக்கிடையிலான படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டது.

அதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு புளியந்தீவை சுற்றிய களக்பை அண்டிய வாவிக்கரை வீதிகள் உள்ள பகுதிகள்,கோட்முனை, ஊறணி, இருதயபுரம், மாமாங்கம் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மட்டக்களப்பு பொதுசந்தைகட்டிடம், மாநகரசபை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், தனியர் பஸ்தரிப்பு நிலையம் விமான நிலையம், மற்றும் தாழ்நில பகுதிகளிலுள்ள வர்தகநிலையங்கள் வெள்ளத்தினால் முழ்கியது.

இதனையடுத்து துர இடங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் நகர் செயல் இழந்துள்ளதுடன் மட்டக்களப்பு கல்முனைக்கும் இடையிலான கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196518

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

27 NOV, 2024 | 06:59 PM
image

முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து விழுந்துள்ளது.

அதனையடுத்து வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

IMG-20241127-WA0269.jpg

IMG-20241127-WA0236.jpg

IMG-20241127-WA0275.jpg

IMG-20241127-WA0287.jpg

https://www.virakesari.lk/article/199877

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிப்பு

adminNovember 27, 2024
IMG_20241127_112819539-1170x781.jpg

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் ,43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது.  இரவு 7.30 வரையிலான நிலவரப்படி , 12 ஆயிரத்து 970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.  மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/208779/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

ஒலுவில் பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

OLUVIL.jpg

அம்பாறை, ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர்.

இந்த பாலம் உடைப்பெடுத்துள்ளதனால் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியுடனான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதனால் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/312690

 

உடைந்து விழுந்துள்ள பாலத்தை பார்த்தால் பாரம் தாங்கக்கூடியதாக தெரிய இல்லையே. பாலத்தின் குறுக்குவெட்டுமுகத்தை பார்த்தால் இப்படியான பாலங்களின் மேல் எப்படி நம்பி வாகனத்தை ஓட முடியும் என தெரியவில்லை. காபெட் ரோட் என்று கதைப்பார்கள். அந்த காப்பெட் படத்தில் வடிவாய் தெரிகின்றது. 

Edited by நியாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டைபறிச்சான் இறால் பாலத்தையும் அரபாநகர் பாலத்தினுடைய நிலைமைகளையும் ஆராய்ந்தார் கிழக்கு ஆளுநர்

28 NOV, 2024 | 10:07 AM
image
 

திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் இறால் பாலம் மற்றும் மூதூர்- அரபாநகர் பாலம் ஆகியவற்றின் நிலைமைகளை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர நேரில் சென்று ஆராய்ந்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் நேற்று புதன்கிழமை  (27) மாலை குறித்த இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன் போது பிரதேச மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

20241127_232514.jpg

https://www.virakesari.lk/article/199894

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎4 people and ‎text that says '‎8:49 Ummu Julaibeeb Like Comment Send Share Aleef Jamaldeen Rimz 4h هن · X Minnal24News Follow 8 Oct 2023 ஆற்றில் டிக்டொக் வீடியோ எடுக்க சென்ற 2பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு, 4 பேர் உயிருடன் மீட்பு மட்டக்களப்பில சம்பவம்! மின்னல் م ஆற்றில் டிக்டொக் வீடியோ எடுக்க சென்ற 2 பேர் நீரில்மூழ்கி உயிரிழப்பு 4 பேர் உயிருடன் மீட்பு மட்டக்களப்பில் சம்பவம் Areef Ilyas Like 1 comment 1 share 111K views Comment Send Share Safari Hypermarket a …‎'‎‎

மட்டக்களப்பில்...   ஆற்றில், "ரிக் ரொக்" வீடியோ எடுக்கச் சென்ற   இருவர் நீரில் மூழ்கி இறப்பு.
4 பேர் உயிருடன் மீட்பு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கடற்கரைப் பூங்கா கடலலையினால் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள பகுதியை, பாதுகாக்க வேண்டும் என்றால் கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் இன்னும் சில மாதங்களில் முழுமையாக கடல் அலைக்கு பூங்கா இரையாகி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு நாளாந்தம் செல்லும் போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பூங்கா ஓய்வளித்து, மகிழ்வூட்டுகின்ற ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக, ஏற்பட்ட கன மழையும், கடல் அலையின் சீற்றமும் இந்தப் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில், வெளிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்ன சேகர கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இந்தப் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ் இந்தப் பூங்காவின் அவசியம் குறித்து, முழுமையாக இவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

நிதிப் பற்றாக்குறையின் நிமிர்த்தம், உடனடியாக இதனை புனரமைக்க முடியாவிட்டாலும், அடுத்த கட்டத்தில் இந்தப் பூங்காவை கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது ஆளுநர் உறுதி அளித்தார்.

https://thinakkural.lk/article/312846

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.