Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"கடவுளைக் கண்டுபிடித்தது யார்?"
 
கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.?
 
"பயம்தான் கடவுளைக் கற்பித்தது."
 
பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான்.
ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள்.
 
மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது.
 
எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
எனவே நமது பயம்,கிலி,சாவு இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன.
 
எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான்.
மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழிகிடைத்து விட்டது.அவர்கள் தரகர்களாகி விட்டார்கள்.
 
உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது.அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி தத்துவங்களையும் சாத்திரங்களையும் கோவில்களையும் விக்கிரகங்களையும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கி நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான்.
 
கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு "நான் கடவுளோடு நேராகப் பேசுவேன் என்னிடம் என்னவென்று சொல் உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான்.
 
கடவுளை உன்னால் பார்க்க முடியாது.யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும் உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது.
 
"உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்."
 
ஆனால் பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே.விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில்.
"விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்."
 
அது இரண்டாவது தொழில்.முதல் தொழில் பூசாரியுடையது.பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான் பிற நோய்களும் இருக்கின்றன.
பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்.ஆனால் எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்.அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும்.
கடவுள் அவருடைய வியாபரம்.வியாபாரம் என்கிற போதே பிழைப்புஎன்றாகிப் போகிறது.
 
நன்றி 
No photo description available.    May be an image of 1 person, temple and textNo photo description available.
 
 
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் என்பது இயற்கையின் மறு வடிவம்..
பாமர மக்கள் இன்றும் இயற்கையை மதிக்கின்றார்கள். மன திருப்திக்காக  இயற்கையை வழிபடுகின்றார்கள்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.