Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருட்டு

damithDecember 3, 2024
02-3-1.jpg

பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழுவினர் பங்களாதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை பங்களாதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் 836 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 ட்ரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஹசீனாவின் அரசாங்கம் இத்திட்டங்களின் செலவுகளை 1.95 ட்ரில்லியன் டாக்காவாக அதிகபடுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(புளும்பேர்க்)

 

https://www.thinakaran.lk/2024/12/03/world/99851/ஹசீனா-ஆட்சியில்-ஆண்டுக்க/

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.