Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"வானுயர்ந்த கற்பனைகள்"


"வானுயர்ந்த கற்பனைகள் மனதில் ஓங்கட்டும் 
மண்ணுயிர் எங்கும் கருணை பொழியட்டும் 
வாட்டமற்ற செயல்கள் உலகைத் தழுவட்டும் 
கூட்டம்போடும் ஆடம்பரம் ஒழிந்து போகட்டும்
விண்ணில் தோன்றும் வானவில் போல் 
கண்ணில் காணும் கனவு ஒளிரட்டும்!" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468619875_10227532695525784_7584650508732346785_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=kDUnkGtUAZQQ7kNvgHS3BWO&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Aj24fNzF2YRWSYtMtn9PDIG&oh=00_AYD6c_QbQ_sbLDNCVD9KORyP0U3q7fTDEeCaboyqVV1bBA&oe=6754B3F0

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😂 இரு நாடுகள்  ஒரு இங்கையை கைவிடுவார் என்கின்றீர்கள்  ஆனால்  தமிழ் அரசியல்வாதிகளுக்கு வயது அதிகரிக்க தான் பேராசை கூடுமாம்
    • தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை   பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.  தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  “நாட்டில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான சில பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கவில்லை. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அங்கிகாரம் இலங்கை தமிழரசு கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயங்களை நான் கவனத்திற்குகொண்டு வருகின்றறேன்.  அந்த வகையில் பல அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது தற்போது பல்வேறு வழங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தற்போது அந்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.  இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  உண்மை கண்டறியப்படுவதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த விடயத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன. மேய்சல் தரையுடன் தொடர்புடைய மகாவலி அதிகார சபையுடைய பிரச்சினை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ளன. இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய வேண்டும்.  அதேபோல் தொல்பொருள் திணைக்களத்தால் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்கள சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பிரச்சினையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது நிர்வாக ரீதியான ஒரு பிரச்சினை. இது தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை. இந்நிலையில், அரசாங்கம் இதற்கொரு தீர்வை வழங்க வேண்டும். ஏனெனில் ஆளும் கட்சிக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆகையினால், அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மேலும், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். வடக்கில் உள்ள முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.  ஆனாலும், இந்த விடயத்தின் இன்னும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அதனை அகற்ற அரசாங்கம் முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியிருந்தார்.   https://oruvan.com/sri-lanka/2024/12/04/tamil-political-prisoners-should-be-released
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • 13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை: டில்வின் சில்வா விளக்கம் புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.  மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது. எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது." என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா, வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன். மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.   https://oruvan.com/sri-lanka/2024/12/04/i-did-not-say-that-the-13th-amendment-will-be-abolished-tillvn-silva-clarifies
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.