Jump to content

சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது: இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம் - சிறீதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது: இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம் - சிறீதரன்

Oruvan

சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை பங்களார்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள அரசியல் பேச்சுகளை சிங்கள மக்களுடன் நடத்த தயாரக உள்ளோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை

”ஜே.வி.பி இன்று தேசிய மக்கள் சக்தியாக மாற்றமடைந்திருந்தாலும் ஜே.வி.பியின் அரசியல் முயற்சிகள் 1971ஆம் ஆண்டு மற்றும் 1989ஆம் ஆண்டில் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. 55 வருடங்களின் பின்னர் அவர்கள் ஜனநாயக முறையின் ஊடாக இலங்கையின் ஆட்சியை கைபற்றியுள்ளமை வரலாற்றில் ஓர் அடையாளமாகும். 

அதேபோன்றுததான் ஜனநாயக ரீதியாக உரிமைகள் ஆயுத முனைகொண்டு மழுங்கடிக்கப்பட்ட போதும் தடுக்கப்பட்ட போதும் தமிழர்கள் ஆயுத ரீதியான போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வன்முறை ரீதியாக தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட போது எமது இளைஞர்கள் துப்பாக்கிகளை தூக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

தமிழர்களும் 80 வருடங்களுக்கு மேலாக நீண்ட போராட்டத்தை கொண்ட ஓர் இனமாகும். எமது உரிமைகள் இன்னமும் பெறப்படாத நிலையில் ஜே.வி.பியை போன்று ஒரு வரலாற்றை கொண்ட இனமாக உள்ளோம். 

ஜனாதிபதியின் கொள்கை பிரடகன உரையில் நாட்டில் 80 வருடங்களாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு, இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது ஒரு துர்பாக்கியமான விடயம். சிங்கப்பூராகவும் மலேசியாவாகவும் மாறியிருக்க வேண்டிய நாடு ஏன் இத்தகைய பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு என்றால், யுத்தம் காரணமாக வாங்கிய கடன்களாகும். அந்த கடன்கள் இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றுள்ளது. 

எமது கரங்களை கோர்த்து பயணிக்க விரும்புகிறோம்

அதனை மறுக்கக்கூடிய வகையிலும் அல்லது இல்லை என்றது போன்றும் ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது. கோட்டாய ராஜபக்சவும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட தமது சிம்மாசன உரையில் பேசியிருக்கவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை மீட்டிபார்க்க வேண்டும். 

தேர்தலில் மக்களின் ஜனநாயக தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். சிங்கள சகோதரர்கள் தமிழர்கள் மீது நடத்திய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீர் சிந்தியவர்கள் நாம். யுத்ததால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இனம் நாம். காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அகதி முகாம்களில் எமது வாழ்கை முறை உள்ளது. நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் இனம். இந்த நிலையிலும்கூட உங்களோடு எமது கரங்களை கோர்த்து பயணிக்க விரும்புகிறோம். 

சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை

பலமான மாற்றங்களோடு தமிழ் மக்கள் தமது மாற்றங்களை நோக்கி பயணிக்க விரும்புகின்றனர். சமஷ்டி பற்றி முதலில் பேசிய சிங்கள தலைவராக பண்டாரநாயக்க இருக்கிறார். தமிழர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் கிழித்தெரியப்பட்டுள்ளன. இதில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் மிக முக்கியமானது. 

13ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்று. அது இன்றுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட வகையில் காணப்படுகிறது. 

இன்று எதையும் செய்யக் கூடிய வகையில் பலம் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 1972, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் விருப்பதுக்கு மாறாக கொண்டுவரப்பட்டது. அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 

புதிய அரசியலமைப்பை கொண்டுவர சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பொன்று புதிய அரசியலமைப்புக்கு நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும். புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்காக நீதி எவ்வாறு நிலைநாட்ட போகிறது. 

நீண்டகாலமாக தமிழர்கள் போராடி வருகின்றனர். 4 இலட்சம் வரையான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. 

எமது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம்

இவற்றையெல்லாம் இழந்து நம்பிக்கையோடு எழுந்த நிற்கிற ஓர் இனம், உங்களோடு கைகோர்க்க தயார் என்று இன்றும் எமது சமாதான கதவுகளை திறந்தபடி உங்களுடன் பேசுகிறோம். உங்கள் கரங்களோடு சேர்ந்து செல்லவும் தயாராக இருக்கிறோம். 

நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் வாழ வேண்டுமென்ற உண்ணதமான எண்ணங்களோடுதான் பேசுகிறோம். 

நாம் சிங்கள மக்களின் மொழி, கலாசார, இன அடையாளங்களை மதிக்கிறோம். எமது இனம், மொழி, கலாசாரம் அடையாளங்களை பாதுகாத்து இரண்டுபட்ட இனக்குழுமாக வாழ விரும்புகிறோம்.

சமவுரிமை, சமாதாம் அவசியம். அதனை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால், ஓர் இனத்தின் அடையாளம், உரிமை மற்றும் அந்த இனத்தின் இருப்பு என்பது வித்தியாசமானது. அதனை சம உரிமையாக சொல்ல முடியாது. சம உரிமை அவசியம். ஆனால், அது இனத்தின் அடையாளத்தை விட்ட சம உரிமையாக இருக்க முடியாது. 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம் என்பது ஒரு இனத்துக்கானத்துக்கு குறிப்பதாக அமைய முடியாது. இது பல்தேசிய இனங்கள் வாழும் ஒரு நாடு. இரண்டுபட்ட தேசத்தில் இரண்டு பட்ட இனக் குழுவாக எமது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம். 

சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி வேண்டும்

தமிழ் தேசிய இனத்தின் தனித்துவங்களை மதித்து செயல்படுவதன் ஊடாக எதிர்காலம் கைகூடும் என்பதுடன் சமத்துவத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்கள் என்பதையும் இணை பங்காளர்களார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் புதிய அரசியலை அணுக வேண்டும். 

எப்போது இரண்டு இனங்களும் இணைந்து இந்த தேசத்தை கட்டியெழுப்ப முடியும். சிங்கள இளைஞர்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனவாதம் வேண்டாம் என அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் பேசுகின்றனர். அதனை வரவேற்கிறோம்.

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளும் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சியை பெற்றுக்கொள்ளும் பேச்சுகளை நடத்த எமது சமாதான கதவுகளை நாங்கள் எப்போதும் திறந்தே வைத்திருக்கிறோம்.” என்றார்.

 

 

https://oruvan.com/sri-lanka/2024/12/03/tamils-door-to-peace-remains-open-for-talks-with-sinhalese-people-sridharan

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர்ஸ் என்ன சொல்லப் போகினம்,..? 

😁



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.