Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று!

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ள மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான, சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று மாலை 05.30 மணி தொடக்கம் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 05 மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1410944

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றம்

04 DEC, 2024 | 07:03 PM
image

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், புதன்கிழமை (04)  காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/200445



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.