Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்

அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்.

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1411299

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

ஒரு சின்ன அறிவுரை..
அந்த காலத்தில் ஊரில் கடை வைத்திருப்பவர்கள் கடையின் பின்பக்கம் சமையல் செய்து சாப்பிடுவார்கள் பின் இரவு நேரங்களில் கடையினுள் உறங்குவார்கள் இதனால் அவர்களுக்கு பல நன்மைகள் உண்டானது ..இரவு நேரத்தில் செக்யூரிட்டி ,வீட்டு வாடகை கொடுக்க தேவையில்லை ....

அதுபோல நீங்களும் கீழே அலுவலகம் மேல உங்கன்ட வீட்டை அமைத்து கொஸ்ட் கட்டிங் செய்யலாம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, putthan said:

EU ல் கடை வைத்திருப்பவர்கள் கடைக்கு மேல் இருக்கும் வதிவிடங்களில் வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். சரியோ? 

@தமிழ் சிறிதலையங்கத்தில் தவறு இருக்கிறது. 

""கட்டடங்களுக்கு ""

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kapithan said:

EU ல் கடை வைத்திருப்பவர்கள் கடைக்கு மேல் இருக்கும் வதிவிடங்களில் வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். சரியோ? 

@தமிழ் சிறிதலையங்கத்தில் தவறு இருக்கிறது. 

""கட்டடங்களுக்கு ""

பிறகென்ன ...புலம்பெயர்ஸ் செய்யும் பொழுது ஏன் சிறிலங்கன் செய்யக்கூடாது...எல்லாத்தையும் புலம் பெயர்ஸ் உடன் போட்டி போட்டு செய்பவர்கள்  இதையும் செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, putthan said:

பிறகென்ன ...புலம்பெயர்ஸ் செய்யும் பொழுது ஏன் சிறிலங்கன் செய்யக்கூடாது...எல்லாத்தையும் புலம் பெயர்ஸ் உடன் போட்டி போட்டு செய்பவர்கள்  இதையும் செய்யலாம்

தாராளமா,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Kapithan said:

EU ல் கடை வைத்திருப்பவர்கள் கடைக்கு மேல் இருக்கும் வதிவிடங்களில் வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். சரியோ? 

@தமிழ் சிறிதலையங்கத்தில் தவறு இருக்கிறது. 

""கட்டடங்களுக்கு ""

விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களிலேயே… கடையுடன் சேர்ந்த வீட்டில் வசிக்கின்றார்கள். எல்லா இடங்களிலும் அல்ல.

வீட்டுடன் இருக்கும் கடைகளில்… ஞாயிற்றுக் கிழமைகளிலும் பின் கதவால் போய் பொருட்கள் வாங்கலாம். 🤣

”கட்டடங்களாக” - ஆதவன் நியூஸ். 😂

Edited by தமிழ் சிறி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.