Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory.

யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது.

வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள்.

இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள்.

அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….”

சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்

குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ணத்தை சொல்லுறது . .......!  😢



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.