Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!

1075655740.jpg

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
 
https://newuthayan.com/article/மருத்துவர்களின்_ஓய்வு_வயது_63ஆக_அதிகரிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, கிருபன் said:

சத்தியமூர்த்திக்கும் இன்னும் ஒரு வருடம் கூடியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, RishiK said:

சத்தியமூர்த்திக்கும் இன்னும் ஒரு வருடம் கூடியுள்ளது. 

ஏழைமக்களுக்கு கஸ்ரகாலம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா?

அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது?

மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நியாயம் said:

இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா?

அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது?

மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?

தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம்.

இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன்.

பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம்.

போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.